வியாழன், 20 நவம்பர், 2025

கலைஞர் பத்து கேள்வி பதில்கள்

கலைஞர்! பத்து கேள்வி பதில்கள்


கலைஞர் பற்றி கலைஞரே சொன்னது! 

அத்தனையும் தமிழனின் சொத்துக்கள்!


1. ஒன்றே குலம் என்பது சரி. ஆனால், ஒருவனே தேவன் என்ற கருத்து உங்களுக்கு ஏற்புடையதா?


அது தேவனோ தேவியோ? சக்தி ஒன்று இருக்கிறது. அதுதான் இயற்கை. அதற்கு கை, கால் இருக்கிறது. வரம் கொடுக்கும் ஆற்றல் இருக்கிறது என்பதையோ அது ஒருவரை வாழவைக்கும் அல்லது கெடுக்கும் என்று சொல்வதையோ என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. 


2. உங்கள் வீட்டிற்கு அருகிலேயே வேணுகோபாலன் கோயில் ஒன்று இருக்கிறது என்றைக்காவது அங்கு சென்றது உண்டா?


 நான் வெளியூர் செல்லும்போது யாராவது அன்பின் காரணமாக வேல்கள், விநாயகர், அம்பாள் சிலைகளை பரிசாக தந்தால் அவற்றை இந்த கோவிலுக்கு அனுப்பி உள்ளேன். நான் அனுப்பிய அந்தப் பொருட்கள் இந்த கோயிலுக்கு போயிருக்கின்றன. நான் போனதில்லை.


3. உங்கள் கட்சியில் பலர் ஆத்திகர்களாக இருக்கிறார்களே?


என் குடும்பத்திற்கு உள்ளேயும்தான் இருக்கிறார்கள். அதையே நான் அனுமதிக்கிறேன். நேரு நாத்திக தலைவர்தான். ஆனால் அவருடைய காங்கிரஸ் இயக்கம் நாத்திக இயக்கம் இல்லையே?


4. தொல்காப்பியம், சங்க இலக்கியம் தொடர்பாக சிலாகித்து பேசியுள்ள நீங்கள் பக்தி இயக்கியங்கள் தொடர்பாக எதுவும் சொல்வதே இல்லை. கடவுள் நம்பிக்கையை முன் நிறுத்துகிறது என்பதாலேயே அவற்றை புறக்கணித்து விட முடியுமா?


 தொல்காப்பியம், சங்க இலக்கியம் பெரும்பாலும் சாதி சமயம், பக்தி இவற்றுக்கு அப்பாற்பட்ட மிக உயர்வான இலக்கண, இலக்கியங்களாகும். அவற்றுக்குப் பிறகு வந்தவை பக்தி இலக்கியங்கள். அவற்றை நான் புறக்கணித்ததும் இல்லை. புறம் தள்ளியதும் இல்லை. அவ்வகை இலக்கியங்களில் நான் படித்து தோய்ந்து இருக்கிறேன். அவை கடவுள் நம்பிக்கையை முன்னிறுத்துகின்றனவோ இல்லையோ தமிழ் மொழியின் நீள அகலத்தை நிச்சயமாக முன்னிறுத்துகின்றன.


5. நல்ல இலக்கியவாதியால் பெரிய அரசியல்வாதியாக இருக்க முடியாது என்பது பொதுவான கருத்து. உங்களால் எப்படி இருக்க முடிகிறது?


இதற்கு விதிவிலக்கு உண்டு. ஜவகர்லால் நேரு அடிப்படையில் இலக்கிய உள்ளமும் படைப்பாளிக்கான பண்பட்ட திறனும் கொண்டிருந்தவர். சிறையில் இருந்து கொண்டு தனது அருமை மகள் இந்திராவுக்கு அவர் எழுதிய கடிதங்கள் அனைத்தும் இலக்கிய செறிவு கொண்டவை. மூதறிஞர் ராஜாஜி அவர்கள் எழுத்திலும், பேச்சிலும், இலக்கியத்தின் குணாதிசயங்கள் இயங்கிக்கொண்டு இருப்பதை காணலாம்.


பேரறிஞர் அண்ணா இலக்கியப் பேரரசன். அப்படிப்பட்டவர்களோடு என்னை ஒப்பிட்டுக் கொள்வதற்காக இதை நான் சொல்லவில்லை. அரசியல் எனக்கு பிராணவாயு என்றால் இலக்கியம் எனக்கு தெம்பு ஊட்டும் சரிவிகித உணவு.


6. ஆட்சிப் பணி, கட்சிப் பணி, எழுத்துப்பணி என்று ஓய்வில்லா வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள். மனதையும், உடலையும் சோர்வடையாமல் வைத்துக் கொள்ள தாங்கள் கடைப்பிடிக்கும் பழக்கங்கள் என்ன?


 அதிகாலையில் 5 மணிக்கு எல்லாம் உதயசூரியனை காண்கிறேன். என் சோர்வு போக்க அது ஒன்று போதாதா?


7. தலைசிறந்த 10 புத்தகங்களை பட்டியல் இடுங்களேன்?


 ஒன்று திருக்குறள்.

 இரண்டு தொல்காப்பியம்.

 மூன்று புறநானூறு.

 நான்கு சிலப்பதிகாரம்.

 ஐந்து பெரியார் ஈவேரா சிந்தனைகள். 

ஆறு அண்ணா எழுதிய பணத்தோட்டம்.

ஏழு கார்க்கியின் தாய்.

எட்டு நேருவின் உலக வரலாறு.

ஒன்பது அண்ணல் காந்தியின் சத்திய சோதனை. 

பத்து ராகுல் சங்கருத்தியாவின் வால்கா முதல் கங்கை வரை.


8. எந்த நோக்கத்துக்காக நீங்கள் அரசியலுக்கு வந்தீர்களோ அது நிறைவே நிறைவேறிவிட்டதா?


 பெரும் அளவுக்கு நிறைவேறி உள்ளது. நிறைவேறியது. அனைத்தும் முழுமையான அளவுக்கு மன நிறைவை தந்துவிட்டது என்று என்னால் சொல்ல முடியவில்லை. இன்னும் நிறைவேற வேண்டியவை நிறைய உள்ளன. அந்த நோக்கங்களையும் நிறைவேற்றிடத்தான் நான் இன்னும் உழைத்துக் கொண்டு இருக்கிறேன்.


9. செய்ய நினைத்து செய்ய இயலாமல் போன காரியங்கள் என்னென்ன?

 மத்தியில் தமிழும் ஆட்சி மொழி. 

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழும் பயன்பாட்டு மொழி. 

மாநில சுயாட்சி. 

இவைதான் இன்னும் முழுமையாக முடியாமல் இருக்கின்ற காரியங்கள்.

 

10. திமுகவின் இறுதி லட்சியம்?


 சமுதாயத்துறையில் சமத்துவம், பகுத்தறிவு. 

பொருளாதாரத் துறையில் சமதர்மம்.

 அரசியலில் ஜனநாயகம்.


-தலைவர் கலைஞர் 🔥🔥🔥

புதன், 19 நவம்பர், 2025

அப்பன் வீட்டு சொத்தா ?

அப்பன் வீட்டு சொத்தா ?


 #13வயதிலேயே 

பத்திரிக்கை உன் அப்பன் வீட்டு சொத்தான்னு பத்திரிக்கை துறையில் நுழைகிறான் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து ஒரு சிறுவன் 


#22வயதில் 

சினிமா எழுத்து துறை உன் அப்பன் வீட்டு சொத்தானு நுழைந்து சினிமா துறையின் எழுத்து போக்கையை மாற்றி காட்டுகிறான் இளைஞன் 


#24வயதிலேயே 

அரசியல் உன் அப்பன் வீட்டு சொத்தானு அரசியலில் கோலாச்சுகிறான் இளைஞன் 


#32வயதில் 

எம்எல்ஏ என்ன பணம் படைத்தவர்களின் அப்பன் வீட்டு சொத்தா என வெற்றியை பெறுகிறான் இளைஞன் 


#44வயதில் 

முதல்வர் பதவி உன் அப்பன் வீட்டு சொத்தா என முதல்வர் ஆகிறான்


#ஒட்டு மொத்த நிர்வாகம் மத்தியரசின் அப்பன் வீட்டு சொத்தா என மாநில சுயாட்சி பெறுகிறான் 


#கல்வி 

வேலைவாய்ப்பு 

உங்கள் அப்பன் 

வீட்டு சொத்தா என அனைவருக்கும் கல்வி வேலைவாய்ப்பில் சமூக நீதியை நிலை நாட்டுகிறார் 


#இந்தசமூகம் 

ஆணாதிக்கத்தின் அப்பன் வீட்டு சொத்தா என பெண்ணுரிமையை நிலைநாட்டுகிறார் 


#மனுதர்மத்தை 

தூக்கி போட்டு இது என்ன உங்கள் அப்பன்வீட்டு சொத்தா என மனுநீதி(குறைகேட்பு) நாளை அமல்படுத்துகிறார் 


#போக்குவரத்து 

உன் அப்பன் வீட்டு சொத்தா என்று அரசுடமையாக்குகிறார் 


#மருத்துவமும் 

சட்டமும் உங்கள அப்பன் வீட்டு சொத்தா என நுழைவுத்தேர்வை ரத்து செய்கிறார் 


#நவீனதமிழகத்தை 

கட்டமைத்து நில உச்சவரம்பு கொண்டு வந்து சொத்து என உங்கள் அப்பன் வீட்டுச் சொத்தா என பகிர்ந்தளிக்கிறார் 


#எழுத்து 

பத்திரிக்கை 

சினிமா 

#அரசியல் 

இலக்கியம் 

கவிதை 

#நிர்வாகம் என 

கோலாட்சிய 

#கலைஞர்........


யாரு: ... ..  

நான் "யாரு" ..... 

எஜமான்(#ஆரியம்) 

கிட்ட கை கட்டிட்டு 

சொல்லுங்க எஜமான்னு 

சொல்ற ஆரிய பாப்பான நானா..... 

#திராவிட பெருங் கிழவனின் மகன்டா....❗


நன்றி : சரண்

ஞாயிறு, 12 அக்டோபர், 2025

திமுக - பாஜக (வாஜ்பாய் காலம்) கூட்டணியின் வரலாறு

திமுக - பாஜக (வாஜ்பாய் காலம்) கூட்டணியின் வரலாறு மற்றும் சம்பந்தப்பட்ட அரசியல் நிகழ்வுகள்

திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) மற்றும் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) இடையேயான கூட்டணி, குறிப்பாக அத்வானி பிஹாரி வாஜ்பாயின் பிரதமர் காலத்தில் (1998-2004), தமிழ்நாடு அரசியலில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. 

இது திமுகவின் முதல் மற்றும் ஒரே முறை பாஜகவுடன் நேரடி கூட்டணி ஆகும். இந்தக் கூட்டணி, திமுகவின் திராவிட-சமூகநீதி சார்ந்த கொள்கைகளுக்கும், பாஜகவின் இந்துத்துவா சார்ந்த அணுகுமுறைக்கும் இடையிலான முரண்பாடுகளைத் தாண்டி, தேர்தல் அரசியல் தேவைகளுக்காக உருவானது. 


இந்தக் கூட்டணி உருவான வரலாறு, அதற்கு முன் மற்றும் பின் ஏற்பட்ட அரசியல் நிகழ்வுகளை இன்றைய தலைமுறை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் .

கூட்டணியின் வரலாறு

திமுக மற்றும் பாஜக இடையேயான கூட்டணி 1999 லோக்சபா தேர்தலுக்கு முன் உருவானது. இது தேசிய ஜனநாயகக் கூட்டமைப்பு (NDA)யின் ஒரு பகுதியாக இருந்தது. 

வாஜ்பாயின் தலைமையிலான பாஜக அரசு 1998-ல் உருவானாலும், திமுக இந்தக் கூட்டணியில் சேர்ந்தது 1999-ல் மட்டுமே.

 இதற்கான காரணங்கள்: 

தமிழ்நாட்டில் முதன் முறையாக பாஜகவுடன் கூட்டணி அமைத்தார் ஜெயலலிதா . அத்தேர்தலில் பாஜக வென்று அதிமுக தயவுடன் ஆட்சியில் அமர்ந்தது (வாஜ்பாய் பிரதமரானார்)

ஆனால் திடீரென,திமுக அரசைக் கலைக்க வேண்டும் , இல்லையேல் ஆதரவை வாபஸ் பெறுவேன், பாஜக அரசைக் கவிழ்ப்பேன் என்று கொக்கரித்தார் ஜெயலலிதா.

திமுக அரசை கவிழ்க்க மறுத்து விட்டார் வாஜ்பாய். ஆதரவை வாபஸ் பெற்றார் ஜெயலலிதா பாஜக அரசு கவிழ்ந்தது . இன்று இரவு தான் நிம்மதியாய் தூங்கப் போகிறேன் என பேட்டி கொடுத்தார் வாஜ்பாய்.. (ஜெயலலிதா கொடுத்த டார்ச்சர் அந்தளவுக்கு  இருந்தது)

திமுக அரசைக் கவிழ்க்க மறுத்து ஜனநாயகத்தைக் காப்பாற்றிய வாஜ்பாய்க்கு நன்றி செலுத்தும் விதமாக பாஜகவுடன் கூட்டணி அமைத்தார் #கலைஞர் அதற்காக குறைந்த பட்ச செயல் திட்டம் உருவாக்கப்பட்டது . 

அதில் இருந்த ஷரத்துக்கள் மிக மிக முக்கியமானவைகள்.

RSS மற்றும் பாஜகவிற்கு சில இலட்சியங்கள் உள்ளது . அதில் முக்கியமானது மூன்று 

1) காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது.

2) அயோத்தியில் இராமர் கோவில் கட்டுவது 

3) பொது சிவில் சட்டம் கொண்டு வருவது.

ஆனால் கலைஞர் உருவாக்கிய குறைந்த பட்ச செயல் திட்டத்தில் இந்த மூன்று விடயங்கள் பற்றிய எந்த முயற்சியும் கூட்டணி அரசில் இருக்கக் கூடாது என்ற முக்கிய கடிவாளம் போடப்பட்டது .

அதை ஏற்று கையெழுத்து போட்டது பாஜக, அதற்கு ஒப்புதல் கொடுத்தது RSS அதை கடைசி வரை நடைமுறையில் காப்பாற்றினார் வாஜ்பாய் . 

மேற்கண்ட மூன்று விஷயங்கள் பற்றியும் வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு மூச்சு கூட விடவில்லை கூட்டணி அரசின் காலம் முடியும் வரை..

1998 லோக்சபா தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) பாஜகவுடன் கூட்டணி வைத்து 30/39 தமிழ்நாடு பாராளுமன்றத் தொகுதிகளை வென்றது. 

ஆனால், அதிமுக தலைவர் ஜெ. ஜெயலலிதா, தன்னுக்கு எதிரான ஊழல் வழக்குகளைத் தள்ளுபடி செய்யவும், திமுக அரசை (கருணாநிதி தலைமை) கலைக்கச் செய்யவும் வாஜ்பாயின் மீது அழுத்தம் கொடுத்தார். 

வாஜ்பாய் இதை நிறைவேற்றத் தவறவிட்டதால், ஜெயலலிதா 1999 ஏப்ரலில் அதிமுகவை NDA விலிருந்து விலகினார். இதனால் வாஜ்பாய் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்து (ஒரு வாக்கு வித்தியாசத்தில்) வீழ்ச்சியடைந்தது.

திமுக சேர்க்கை: 

அதிமுக விலகிய பிறகு, பாஜகவின் மூத்த தலைவர் பிரமோத் மகாஜன், திமுக தலைவர் மு. கருணாநிதியின் உறவினர் முரசொலி மாறனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மாறன் "எந்தக் கட்சியும் தீண்டப்படாத கட்சி அல்ல " என்று கூறி, கூட்டணிக்கு வழிவகுத்தார்.


இதன்படி, திமுக 1999 ஜூலையில் NDA .வில் சேர்ந்தது. கூட்டணியில் திமுக, பட்டாளி மக்கள் கட்சி (பிஎம்கே), மருமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (எம்டிஎம்கே) போன்ற கட்சிகள் இடம்பெற்றன.

தேர்தல் வெற்றி மற்றும் ஆட்சி: 1999 லோக்சபா தேர்தலில், இந்தக் கூட்டணி தமிழ்நாட்டில் 26/39 தொகுதிகளை வென்றது.

 திமுக 18 தொகுதிகளைப் பெற்றது. இதன் விளைவாக, வாஜ்பாய் 1999 செப்டம்பரில் மீண்டும் பிரதமரானார். திமுகவினர் மத்திய அமைச்சரவையில் 7 இடங்களைப் பெற்றனர் (எ.கா., முரசொலி மாறன் - தொழில்துறை அமைச்சர்). கருணாநிதி வாஜ்பாயுடன் நெருக்கமான உறவைப் பேணினார்; மாறன்-வாஜ்பாய் உறவும் சிறப்பாக இருந்தது.

கூட்டணியின் முடிவு: 

2003-04-ல், திமுக பாஜகவின் "இந்தியா சைனிங்" பிரச்சாரத்தை விமர்சித்து, ஊழல் குற்றச்சாட்டுகள் (எ.கா., TV9 சேனல் விவகாரம்) மற்றும் கொள்கை முரண்பாடுகளால் NDA விலிருந்து விலகியது.

2004 லோக்சபா தேர்தலுக்கு முன் (பிப்ரவரி 2004) இது உறுதிப்படுத்தப்பட்டது. கூட்டணி 5 ஆண்டுகள் (1999-2004) நீடித்தது.

கூட்டணிக்கு முன்பு (1999-க்கு முன்) ஏற்பட்ட அரசியல் நிகழ்வுகள்

திமுக-பாஜக உறவு 1999-க்கு முன் பொதுவாக எதிர்மறையானது. திமுகவின் திராவிட-இந்தி எதிர்ப்புக் கொள்கை, பாஜகவின் இந்தி-இந்துத்துவா அணுகுமுறையுடன் மோதியது. 

2004: திமுக NDA விலிருந்து விலகி காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தது.        2004 லோக்சபாவில் திமுக-காங்கிரஸ் 39/39 தொகுதிகளையும் வென்றது.

 வாஜ்பாய் அரசு வீழ்ச்சியடைந்தது.

இக்காலம் திமுகவுக்கு மத்திய அரசின் ஆதரவுடன் (எ.கா., தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து) பயனளித்தது, ஆனால் உள்ளூர் அரசியலில் அதிமுக ஆதிக்கம் அதிகரித்தது. 

கூட்டணிக்கு பின் (2004-க்குப் பின்) ஏற்பட்ட அரசியல் நிகழ்வுகள்2004-க்குப் பின் திமுக-பாஜக உறவு மீண்டும் எதிர்மறையானதாக மாறியது. 

திமுக காங்கிரஸ்-ஒன்றிய முற்போக்குக் கூட்டமைப்புடன் (UPA) இணைந்தது

2004-2009 ல் UPA ஆட்சி

திமுக-காங்கிரஸ் கூட்டணி 2004, 2009 லோக்சபாவில் வெற்றி. திமுக 7 அமைச்சர் பதவிகள் பெற்றது.

2006 ல் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி வென்று கருணாநிதி 5-வது முறை முதலமைச்சர்.

2011 ல் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக மீண்டும் வெற்றி; ஆனால் 2ஜி ஊழல் வழக்குகள் தொடங்கின.

2013 ல் இலங்கைத் தமிழர் பிரச்சினை காரணமாக திமுக UPAவிலிருந்து வெளியேறியது.

திமுக - பாஜக(வாஜ்பாய் ) உடன் கூட்டணி வரலாறு

திமுக - பாஜக(வாஜ்பாய் ) உடன் கூட்டணி வைத்ததை வரலாறு தெரியாத அறிவிலித்தனமாக மதவாதத்தை திமுக வளர்த்தது குற்றச்சாட்டு வைக்கும் @LoyolaMani அவர்களே.... 


ஏன் / எந்த சூழ்நிலையில் கூட்டணி வைத்தது என்று தெரிந்து கொள்ள வேண்டும்.


சினிமா மோகத்தில் இருக்கும் உங்களுக்கு அதெல்லாம் தெரிய வாய்ப்பில்லை .. 


வரலாறு சொல்கிறேன் கேளுங்கள்... 


1998 - ஜெயா - பாஜக உடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்றத்தில் போட்டி இட்டு கூட்டணி அரசு மத்தியில் அமைகிறது (அதிமுக 18 MP).


மாநிலத்தில் திமுக ஆட்சி 1996 - 2001.


ஜெயா மீது பல ஊழல் குற்றச்சாட்டு வழக்கு இருந்த நேரம்.


ஜெயா - பாஜக கூட்டணி வைத்து போட்டி போட்டு.. வெற்றி பெற்ற பிறகு... வாஜ்பாய் க்கு ஆட்சி அமைக்க கூட்டணி கட்சி சார்பாக கடிதம் கொடுக்க மறுக்கிறார். 

18 MP கள் இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது என்ற சூழ்நிலை. ஜெயா தனது வேலை காட்ட தொடுங்குகிறார்!!!


ஜெயா தன் மீது உள்ள ஊழல் வழக்குகள் இருந்து தப்பிக்க ... சட்ட துறை அமைச்சர் அதிமுக விற்கு வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார் ... அனால் வாஜ்பாயி - பல ஊழல் வழக்கு உங்கள் மேல் இருப்பதால் சட்டத்துறை வழங்க முடியாது என்று சொல்லி மறுக்கிறார் ...


கடுப்புடன் ஜெயா மற்ற துறை வாங்கிக்கொண்டு பாஜக ஆட்சி அமைக்க கடிதம் கொடுக்கிறார்...


மத்தியில் ஆட்சி அமைத்த பிறகு ... மாநிலத்தில் உள்ள திமுக ஆட்சியை 356 பிரிவு பையன் படுத்தி கலைக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கிறார் !!!!


அனால் வாஜ்பாய் -- ஜெயா வின் இந்த கோரிக்கையை ஏற்க மறுக்கிறார் ... அதிமுக வின் 18 MP கள் இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது என்று தெரிந்தும் ஜெயா வின் கோரிக்கை ஏற்க மறுக்கிறார்.


ஜெயா கொடுத்த அத்துணை அழுத்தங்களுக்கும் ... பணியாமல் நேர்மையாக இருக்கிறார்.


திமுக ஆட்சியை கலைக்க மறுக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக ... 13 மாதங்களில் ... வாஜ்பாய் கு கொடுத்த ஆதரவை காங்கிரஸ் உடன் இணைந்து .... திரும்ப பெறுகிறார் .... 


நாடாளுமன்றத்தில் வாக்கு எடுப்பு நடக்கும் பொது ... தங்களுக்கு ஆதரவு தருமாறு திமுக விடம் ... பாஜக கோரிக்கை வைக்கிறது ....


திமுக விடம் 5 MP கள் இருந்தனர்.


திமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்காமல் ... வாஜ்பாயி மிகவும் நேர்மையாக நடந்து கொண்டார்... அதனால் கலைஞர் வாஜ்பாய் அரசை காப்பாற்ற திமுக - மத்திய பாஜக அரசுக்கு ஆதரவாக ஓட்டு அளிக்க முடிவு செய்து ஆதரவாக வாக்கை அளித்தனர் ...


இருந்தாலு வாஜ்பாய் அரசு 1 வாக்கு குறைவாக பெற்று ... மத்தியில் அரசு கவிழ்த்தது !!!


தனது கோரிக்கை ஏற்க படவில்லை என்ற ஒரு காரணத்திற்காக... 13 மாதங்களில் பாஜக அரசு கவிழ்த்தார் ஜெயா !!!


அடுத்து வந்த நாடாளுமன்ற தேர்தல் 1999 அந்த கூட்டணி தொடர்ந்தது. குறைந்த பட்ச செயல் திட்டங்கள் அடிப்படியில் திமுக - பாஜக விற்கு ஆதரவு கொடுத்தது.


       திமுக - பிஜேபி 

      அதிமுக - காங்கிரஸ் 


1999 நடந்த தேர்தல் திமுக - பாஜக கூட்டணி வெற்றி பெற்று 2004 வரை நீடித்தது. அன்று மக்கள் திமுக / பாஜக கூட்டணி ஆதரவு இருந்தது. ஒரு நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்று !!!!


அனால் இன்று மோடி என்ற ஒரு மத கலவரம் தூண்டி பேசிக்கொண்டு இருக்கும் போது கூட.........

பாஜகவின் உதவியை நாடி கொண்டு இருக்கிறார்.. இது உனக்கு தெரிந்தும் கொஞ்ச கூட கூச்சம் இல்லாமல் பதிவு போட்டு கொண்டு இருக்க??? 


வெள்ளி, 12 செப்டம்பர், 2025

எஸ்_ஜே_சாதிக்பாஷா

 எஸ்_ஜே_சாதிக்பாஷா


சரித்திரமும், பூகோளமும் பொக்கிஷத்தின் வரலாற்றை எடுத்துரைக்க மறந்த கதை..! 


 ஹஜ் பயணம் செல்ல பணம் இல்லாத ஒரு வருவாய்துறை அமைச்சரின் வரலாற்றை விவரிக்ககிறது இந்த தொகுப்பு.? 

உடுமலைப்பேட்டையில் தொடங்கிய அந்த அமைதி ஆயிரம்விளக்கு வரை எப்படி நீடித்தது.? அந்த வரலாற்றுக்குச் சொந்தகாரர் யார்? மிக நீண்ட வரலாற்றை மறந்த இன்றைய தலைமுறை..! ஆம், அவர்தான் எளிமையின் மறுஉருவம் எஸ்_ஜே_சாதிக்பாஷா..! 

திமுகவை உருவாக்கிய முக்கியத் தலைவர்களில் ஒருவர். அண்ணாவின் அன்புத் தம்பி, தலைவர் கலைஞரின் அமைதி நிறை, திமுகவின் கண்டிப்பான பொருளாளர் , 1967, 1971, 1977 மற்றும் 1989ல் நடந்த சட்டமன்ற தேர்தல்களில் வெற்றியை தனதாக்கிய தடம்மாறாத் தொண்டன் தான் அய்யா சாதிக் பாஷா அவர்கள்..! 


 மகோரா இந்த இயக்கத்தை விட்டு வெளியேறிய போது அவரோடு சில பித்தளைகளும் வெளியேறியது. அப்போது, கலைஞருக்கும் திமுகவிற்கும் ஏற்பட்ட சோதனையின் போது கலைஞரின் கரம்பிடித்து நின்றவர் தான் இந்தசாதிக் பாஷா அவர்கள்..! அண்ணா அமைச்சரவையில் மக்கள் நல்வாழ்வு துறையின் அமைச்சராகவுவேவ், தலைவர் கலைஞர் அமைச்சரவையில் வருவாய்த்துறையின் அமைச்சராகவும் திறம்பட கையாண்டார்..! 


1977 முதல் 1994 வரை திமுகவின் பொருளாளராகவே இருந்தார். கட்சியின் தேவையற்ற செலவுகளையும் குறைத்து. அதிகளவில் பொதுமக்களிடம் நிதி திரட்டி கட்சியை வளர்த்த தலையாய தொண்டன் அய்யா சாதிக் பாஷா அவர்கள்..! 


ஒருமுறை இவரின் மனைவி புனித ஹஜ் பயணம் செல்ல விரும்புவதாக இவரிடம் முறையிட்டார். 

அதற்கு நீ ஹஜ் பயணம் செல்ல வேண்டுமென்றால் நான் எங்கையாவது கொள்ளை தான் அடிக்க வேண்டும் என்று கோபமாக கூறினார்.

 பின்னர்,உடுமலைபேட்டை சென்ற கலைஞரிடம் அவர் மனைவி நடந்ததை கூறவே..! உடனே கட்சியின் உயர்நிலை மட்டக் குழுவின் ஆலோசனை பெற்று அன்று முதல் திமுகவின் பொருளாளர் பதவிக்கு ஊதியத்தை அறிவித்தார். பின்பு அவர் மனைவியிடம் அந்த ஊதிய கவரை வழங்கினார் தலைவர் கலைஞர்...! அன்று முதல் திமுகவில் ஒரே ஒரு பதவிக்கு மட்டும் தான் ஊதியம் ஆம், அந்த பதவியின் பெயர் பொருளாளர்..


அது மட்டும் இல்லாமல் திமுகவின் உயர்பதவிகளில் கொடிகட்டி பறந்தாலும் இவ்வளவு ஏன் மூன்று முறைக்கு மேல் அதும் வருவாய்த்துறை அமைச்சராக இருந்த போதிலும் எளிமையின் சிகரமாகவே வாழ்ந்து மறைந்தார் நம் கழகத் தூண் சாதிக் பாஷா அவர்கள்..! 

காமராஜரையும், கக்கனையும் நேர்மையானவர்களாக காட்டிய இந்த பார்ப்பானிய ஊடகங்களும், ஆதிக்க சாதி வெறியர்களும் சாதிக் பாஷாவை காட்ட மறந்தே போனார்கள். காரணம், அவர் திமுக.! 

 MGR எங்களை ஊழல் செய்ய சொல்கிறார் என்று மகோராவின் அமைச்சரவையியே இருந்த SD சோமசுந்திரம் அணுகுண்டை வீசிய அந்தகாலகட்டத்தில் கூட பரபரப்பாக பேசப்பட்ட போதிலும் MGRஐ வள்ளல், கொடையாளி, சிவந்த கரம் என்று போற்றி புகழ்ந்தது பார்ப்பன ஊடகங்கள். ஆனால், சாதிக் பாஷாவை நாம் கொண்டாடத் தவறிவிட்டோம் என்பது நிதர்சன உண்மை..!  

தன்னுடைய கடைசி காலகட்டத்தில் தமிழ்நாடு அரசின் குடிசை மாற்று வாரியத்தில் வாழ்ந்தார் அந்த நேர்மையின் சிகரம். இவரின் கழக உணர்வின் இலக்கணத்தை நாடறியும் வகையில் 1986ஆம் ஆண்டு நடந்த திமுகவின் முப்பெரும் விழாவில் "கலைஞர் விருதை "வழங்கி சிறப்பித்தார் தலைவர்க கலைஞர்..! 

ஒரு வழக்கறிஞராக, ஒரு சட்டத்துறையின் அமைச்சரகா, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக, வருவாய்துறை அமைச்சராக, நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக, 20 ஆண்டுகாலம் திமுகவின் பொருளாளராக, தான் எடுத்துக் கொண்ட கொள்கையில் உறுதியாக போரிட்டு வென்ற ஒருசமநிலைத் தலைவனை நாம் கொண்டாடியேத் தீரவேண்டும்..! 

அவர் மறைந்த போது தலைவர் கலைஞர் எழுதிய இரங்கற்பா " கழத்தின் சோதனையிலும், சாதனையிலும், வேதனையிலும், பங்குபெற்று ஊசலாடத இதயத்தை வென்ற ஒரு தலைவனாக நம்மை விட்டு நீங்கா துயில்கொள்ளப் போகும் அந்த அமைதியின் நிறையாம் சாதிக் பாஷாவை நினக்கும் போது என் இதயம் நொறுங்கி விட்டது" என்று கண்ணீர் மல்க விடையனுப்பினார்..! 

திமுக நூற்றாண்டை நோக்கிய தனது பயணத்தில் அறைநூற்றாண்டு வெற்றியை அய்யா சாதிக்பாஷாவே உருவாக்கி விட்டுச் சென்றார்..! 


இந்த சாதிக் பாஷாவை கொண்டாட பல திமுக தொண்டர்கள் வருவார்கள் என உறுதியாக நிற்போம்.!  


வாழ்க உன் புகழ் 🔥🔥🔥



வியாழன், 28 ஆகஸ்ட், 2025

தமிழ்நாடு முதல்வர்களின் போராட்ட வரலாறுகள்

தமிழ்நாடு முதல்வர்களின் போராட்ட வரலாறுகள்



ஸ்ட்ரெய்ட்டா ஹீரோதான், இந்த அமெரிக்க மாப்பிள்ளை, தம்பி, மச்சான்னுல்லாம் கேரக்டர் பண்ண மாட்டீங்களா ?


இல்ல சார்.  

நடிச்சா ஹீரோவாத்தான். அப்படியே கொஞ்சம் கொஞ்சமா டெவலப் ஆகி சூப்பர் ஸ்டார், அரசியல், சி எம் பதவின்னு போறதுதான் என் இலட்சியம்.


மேற்கண்ட உரையாடல் காதல் திரைப்படத்தில் வந்த பிரபலமானக் காட்சி.


தமிழக வெற்றிக் கழகத்தின் விஜய்தான் அந்த ஸ்ட்ரெய்ட்டா சி.எம்தான் கேரக்டர்.


தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றியாத அந்தத் தற்குறி கூட்டத்துக்காகச் சில தரவுகள் 


தமிழ்நாட்டில் மக்களால் விரும்பித் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சர் ஆனவர்களின் பட்டியலில் ஒரே ஒருவர் கூட ஸ்ட்ரெய்ட்டா C M ஆனவர்கள் எவருமில்லை.


மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சராக ஆன சிலரைக் காண்போம்.


1.) காமராசர்

2.) அண்ணா

3.) கலைஞர்

4.) எம் ஜி ஆர்

5.) ஜெயலலிதா

6.) ஸ்டாலின்


இந்தப் பட்டியலில் இராஜகோபால், பக்தவச்சலம், ஜானகி, பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி போன்றோரெல்லாம் வர மாட்டார்கள். காரணம் அவர்களெல்லாம் நியமன முதலமைச்சர்கள். அந்தப் பதவிக்கு அவர்கள் தகுதியற்றவர்கள் என மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள்.  


நிற்க.


காமராஜர் திடுக்கென முதலமைச்சர் ஆனவர் இல்லை. முப்பது வருடங்களுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியின் அடிமட்டத் தொண்டனாக இருந்து, கடுமையான களப்பணிகளைச் செய்து, பல தோல்விகள், அவமானங்கள், புறக்கணிப்புகளைச் சந்தித்து படிப்படியாக மேலேறி சிகரத்தை அடைந்தவர் !


அண்ணாவின் அரசியல் வரலாறு, காமராசருக்கு நிகரானது. தேர்தல் அரசியலல்லாது சமூகசேவை இயக்கங்களில் களப்பணி ஆற்றியவர்.  

தினமும் எழுதினார். தினமும் பொதுக்கூட்டங்களில் பேசினார். சாலை வசதி, வாகனப்போக்குவரத்து குறைந்திருந்த அந்தக் காலத்திலும் தினமொரு ஊருக்கு சொற்பொழிவாற்ற பயணித்தவண்ணமிருந்தார்.  


இந்தி எதிர்ப்பு போராட்டக் களங்களில் நேரடியாக இறங்கி, பெரியாரோடு கொடுஞ்சிறைகள் கண்டவர் அண்ணா !


திமுகவை ஆரம்பித்தவுடன் தேர்தல் அரசியலுக்குள் குதித்துவிடவில்லை அண்ணா.


பின்னொரு நாளில் குதித்தாலும் உடனே நேரடியாக சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து முதலமைச்சர் ஆசை கொண்டதில்லை.


சென்னை மாநகராட்சி, இடைத்தேர்தல்கள், உள்ளாட்சி அதிகாரங்களைத்தான் முதலில் திமுக கைப்பற்றியது. கட்சி ஆரம்பித்து எட்டு வருடங்களுக்குப் பின்தான்(1957) முதல் சட்டமன்றத் தேர்தலில் அண்ணா தலைமையிலான திமுக போட்டியிட்டது. அன்றிருந்த அனைத்து தொகுதியிலெல்லாம் போட்டியிடவில்லை. 50 தொகுதிகளைத் தேர்ந்தெடுத்து, திறமையானவர்களை அவற்றில் போட்டியிடச் செய்தார் அண்ணா !


அண்ணா தலைமையிலான திமுக கட்சி, தான் பங்கெடுத்த முதல் சட்டமன்றத் தேர்தலிலேயே போட்டியிட்ட தொகுதிகளில் கிட்டத்தட்ட பாதி தொகுதிகளை வென்று சட்டமன்றத்துக்குள் நுழைந்தனர். கலைஞரும் அதிலிருந்தார். அண்ணாவின் சட்டமனறப் பேச்சுக்களும், கேள்விகளும், வாதங்களும்தான் தமிழ்நாட்டு மக்களை பெரிதும் ஈர்த்தன.


1962 ல் திமுக எதிர்கட்சி.


1967 ல் ஆளுங்கட்சி.  


கணக்கு போட்டால் 18 வருடங்கள் கழித்தே அண்ணாவுக்கு முதலமைச்சர் பதவியை மக்கள் பரிசளித்திருக்கின்றனர் என்கிறது வரலாறு !


அதன் பின் கலைஞர்.  


நெடுஞ்செழியனின் முதுகில் குத்தி, எம்ஜிஆரை கைக்குள் போட்டுக் கொண்டு கலைஞர் முதல்வராக நியமிக்கப்பட்டார் என்பார்கள் வவுத்தெரிச்சல் மிக்க துக்ளக் சோக்கள். 


உண்மையில் 1962 ல் சட்டமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக இருந்த நெடுஞ்செழியனை விஞ்சி மக்களை பெரிதும் ஈர்த்தவராக சட்டமன்றத்தில் செயல்பட்டிருந்தார் கலைஞர். அண்ணா தோற்றிருந்த அந்த சட்டசபைத் தேர்தலுக்குப் பின் கட்சி உடைந்திருந்தது. இருந்தும் கட்சியைச் சிதறவிடாமல் கட்டிக் காத்த சாதுர்யம் கலைஞரிடத்தில் இருந்தது. அந்தத் தகுதிகள்தான் அவருக்கு 1969 ல் முதலமைச்சர் பதவியைத் தந்தனவே அன்றி ஆரிய காண்டுகள் சொல்வது போல் அல்ல.


ஆனால் 1971 ல், கலைஞர்தான் முதலமைச்சர் என்று சொல்லி குதித்த தேர்தலில், எந்தக் கட்சியும் அதுவரை கண்டிராத வெற்றியை ;


திமுக இதுவரை கூட கண்டிராத வெற்றியை கலைஞர் அன்று பெற்றார்.  


அந்த ஆட்சியில் கலைஞர் கொண்டுவந்த எண்ணிலடங்கா நலத்திட்டங்கள் உலகளவில் புகழ்பெற்றவை !


கலைஞர் முதலமைச்சர் ஆக இருபது வருடங்கள் பிடித்தன. இத்தனைக்கும் அவர் தமிழர்களிடையே 1949 லியே பெரும்புகழ் பெற்றவர். 1952 ல் பராசக்திக்கு அவர் எழுதிய வேளையில், சிவாஜியை நிராகரிக்கத் துடித்த மெய்யப்பச் செட்டியாரிடமே சிவாஜிக்குத்தான் எழுதுவேன் என்று பிடிவாதம் காட்டி, சிவாஜியை நீடிக்கச் செய்யுமளவு வல்லமை மிக்கவர் (இதற்கு முன்பே நாயகர்கள் நடுங்கும் தயாரிப்பாளரான டி ஆர் சுந்தரத்திடமும் வாதிட்டு எம் ஜி ஆருக்கு கதாநாயகன் வாய்ப்புகளை தக்க வைத்துக் காத்தவர் கலைஞர்)

மலைக்கள்ளன் படத்தில் எடுத்தவுடன் திரையில் ஹீரோ பெயரோ, தயாரிப்பாளர் பெயரோ, இயக்குனர் பெயரோ வராமல் உரையாடல் எழுதிய கலைஞர் பெயரைத்தான் முதலில் காட்டினார்கள்.  


மனோகரா, பூம்புகார் எல்லாம் கலைஞரின் உரையாடலுக்காகவே ஓடிய படங்கள்.  


திரைக்கதை & உரையாடல் எழுதுவதில் இந்தளவு மக்கள் மனத்தைக் கொள்ளையடித்தவராக ஒரு கழகத் தலைவர் கூட அன்றில்லை.  


இத்தனைக்கும் அன்று சினிமாவில் திராவிட இயக்கங்களைச் சார்ந்த பல தலைவர்கள் (அண்ணா உட்பட) இருந்தும், கலைஞர்தான் அதில் பெருவல்லவர். பிரமிக்கத்தக்க வெற்றிகளை ஈட்டியவர். அப்படி இருந்துமே அவர் முதலமைச்சராக இருபது வருடங்கள் தேவைப்பட்டன. அதற்குள் மும்முறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, அனைத்திலும் வென்று சட்டமன்ற உறுப்பினாரகத் தொடர்ந்தவர் கலைஞர்.


சரி. எம் ஜி ஆர் 1972 ல் கட்சியை ஆரம்பித்தார். 1977 ல் முதலமைச்சர் ஆகிட்டார்ல்ல ?


அட கேக்கூக்களா ?


அவர் திமுகவுக்காக எத்தனை வருடங்கள் உழைத்தவர், எத்தனை பரப்புரைகளில் கலந்துக் கொண்டவர், தன் படங்கள் அனைத்திலும் வாய்ப்பு கிட்டும் போதெல்லாம் கட்சியின் கொள்கைகளைச் செருகியவர், திமுகவில் கட்சிப் பதவி, சட்டமன்ற உறுப்பினர் பதவிகளையெல்லாம் எம் ஜி ஆர் வகித்தார் என்கிற வரலாற்றை வாசிக்க வேண்டாமா ?  


அந்த அடிப்படைதானே அவர் கட்சியைத் தொடங்கியதும் வெற்றிகளைத் தந்தன ?  


ஒரு வெற்றியா ?  


ஹாட்ரிக் வெற்றிகள்.  


எம் ஜி ஆர் இறந்ததும் மீண்டும் முதலமைச்சர் ஆனார் கலைஞர்.


இடைப்பட்டக் காலத்தில் கலைஞர் எவ்வளவு மோசமானத் தோல்விகளை சந்தித்தார் ?  


எப்படி தாங்கினார் ?  


எப்படி அவருடைய அவ்வளவு பெரிய கட்சி உடையாமல் நீடித்தது ?


அவைகளெல்லாம் அரசியல்வாதிகளுக்கு எவ்வளவு அற்புதமான பாடங்கள் தெரியுமா ?  


அதையெல்லாம் வாசிக்காமல், களத்தில் ஒன்றையும் புடுங்காமல், தோல்விக்கு அஞ்சி, ஸ்ட்ரெய்ட்டா சி எம் தான் என வரும் காமெடி பீஸ்களை என்னவென்று சொல்வதம்மா ?


ஜெயலலிதாவின் கதைகளும் உங்களுக்குத் தெரியும்.   

பத்து வருடங்களுக்கும் மேலாக கட்சியில் உழைத்துத்தான் மேலே வந்தார். பெருவெற்றி பெற்று உடனே பெருந்தோல்வியும் பெற்றார். ஆனால் மீண்டெழுந்தார். அரசியல் களம் என்பது இப்படியான மேடு பள்ளங்களைக் கொண்டதுதான். மண்டபத்தில் எவனோ எழுதித்தரும் அறிக்கைகளை மட்டுமே விட்டெல்லாம் தமிழ் மக்களை ஈர்த்துவிட முடியாது.  


கண்ணெதிரே அதற்கான சாட்சி ம நீ ம கமல்ஹாசன்.  


உழைப்புக்கஞ்சாத அவர் உள்ளே வந்த போதே எச்சரித்தேன். அவரைக்காட்டிலும் அவர் பின்னால் போன மூடர்கள் மீதுதான் கவலை எனக்கு. காலம் வெகுவிரைவில் யதார்த்தம் என்னவென்று அவர்களுக்கு உணர்த்திவிட்டது !


சரி. நாம் இறுதியாக பார்க்கவிருப்பது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.


கலைஞருக்காவது கட்சிக்குள் வந்த இருபது வருடங்களுக்குள் முதலமைச்சர் ஆக முடிந்தது. ஆனால் டீனேஜிலேயே கட்சிக்குள் வந்த ஸ்டாலினுக்கு இருபது வருடங்கள் கழித்துத்தான் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட வாய்ப்பே கிட்டியது. கிட்டிய வெற்றியும் இரண்டு வருடங்கள் கூட நிலைக்கவில்லை. அடுத்த தேர்தலில் தோல்வி.  


இப்படி தொடர்ந்த இவருடைய அரசியல் பயணம்தான் பரமபத விளையாட்டைப் போல் ஆகி, முந்தா நேத்து மேயர், நேற்று எதிர்கட்சித்தலைவர், இன்று முதலமைச்சர் என்கிற ஏணியில் ஏற்றிவிட்டுள்ளது !


என்னதான் Paid Medias மூலம் நீங்கள் செயற்கையாக போலிப் பிம்பங்களை ஊதிப் பெருக்கி கட்டமைத்தாலும், மக்கள் தெளிவானவர்கள். ஆட்டுப்புழுக்கை கதி தெரியும்ல்ல ?  


அணில் புழுக்கை கதியும் தெரிந்துவிடும்.


அதுவரை கோமாளிகள் போடும் குட்டிக்கரணங்களை ரசிப்போம் !


உயிர்மை இதழுக்காக 01/07/2024 அன்று எழுதியவர் திரு. ராஜா ராஜேந்திரன்🙏




திங்கள், 25 ஆகஸ்ட், 2025

பாஜக அனுதாபிகளிடம் சில கேள்விகள்

பாஜக அனுதாபிகளிடம் சில கேள்விகள்


இதில் கேட்டிருக்கும் கேள்விகளுக்கு பதில் தெரிந்தால் சொல்லவும்

பாஜக ஆதரவாளர்கள் அனுதாபிகளாகவே இருந்தாலும், இந்த கேள்விகளின் நியாயம் புரியுமென்று நினைக்கிறேன்!

மோடி உலகப் புனிதர் போலவும் பாஜக தான் உலகத்திலேயே மிகவும் யோக்கியர்களின் கட்சி என்பது போலவும் பீத்திக் கொள்பவர்கள் யாரிடமாவது பதில் இருக்கிறதா?

1. எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கப் பயன்பட்ட, பயன்படும் பணம் யாருடைய நேர்மையான சம்பாத்தியம்?

2. ரபேல் கோப்புகள் ஏன் மாயமாகின?

3. பாஜகவை கேள்வி கேட்கும் நீதிபதிகள் மீது மட்டுமே கற்பழிப்புப் புகார்களும் கொலை மிரட்டல்களும் வருவதும், கொலை செய்யப்படுவதும் ஏன்?

3. மோடியை பிரமோட் செய்யப் பயன்படுத்தப்பட்ட 10,000 கோடி பணம் யாருடையது? பிரசாந்த் கிஷோர் சம்பளம் உட்பட. அல்லது பத்தாயிரம் கோடிகளை ஒரு கட்சிக்கு வாரி வழங்கி டொனேஷன்கள் தருமளவு பணக்காரர்கள் ஏன் முன்வந்தார்கள் ?

4. அத்தனை ஊழல்வாதிகளும் பாஜகவில் இணைந்தவுடன் பரிசுத்தமாவது எப்படி?

5. எதிர்க்கட்சிகள் பாஜக மீது குற்றச்சாட்டுக் கூறியவுடன், பாஜக மீது குற்றம் கூறியவர்கள் மீது மட்டும் வருமான வரித்துறை அமலாக்கத்துறை ரெய்டுகள் பாய்ந்து பாய்ந்து நடப்பது ஏன்? குற்றச்சாட்டுகள் கூறியவர் அமைதியானவுடன் அந்த வழக்குகளும் அமைதியாவது எப்படி?

6. பாஜக ஆட்சிக்கு வருவதற்கு மிக முக்கியமான காரணமான 2ஜி வழக்கு ஏன் மேல் முறயீடு செய்யப்படவில்லை? அதை ஜோடித்த வினோத் ராய்க்கு ஓய்வு பெற்ற பின்னர் பாஜக அரசிலேயே பதவி வழங்கியதேன்?

7. வெளிநாடுகளில் பதுக்கியதாகச் சொல்லப்பட்ட பல லட்சம் கோடி கருப்பு பணத்தில் இதுவரை ஏன் ஒரு பைசா கூட மீட்கப்படவில்லையே? குறைந்த பட்சம் கருப்புப் பணம் பதுக்கியவர் பட்டியலைக் கூட வெளியிட முடியவில்லையே... ஏன் ஏன்? இந்தியாவில் பாதையோரம் கடை வைத்து சுருக்குப்பையில் சில ஆயிரங்களிலிருந்து, சில லட்சங்கள் என்று சேர்த்து வைத்த ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தின் சேமிப்புப் பணங்களை டீமானடைசேஷன் செய்து கள்ளப்பணமாக ஆக்கி வேட்டையாடியது தான் கறுப்புப் பண ஒழிப்பின் லட்சணமா ?

8. பாஜக ஆட்சிக்கு வரும்வரை கருப்புப் பணமாக இருந்தவை, பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் முதலீட்டுப் பணமாக மாறும் மர்மம் என்ன? ஜீ பூம்பா சொன்ன சூத்திரதாரி யார்?

10. ஏன் நாட்டின் பாதுகாப்புத் துறை உட்பட அத்தனை துறைகளும் தனியாருக்கு விற்கப்படுகின்றன? ராணுவம் என்பது தேச பாதுகாப்பு சம்பந்தப்பட்டது இல்லையா ? 

11. கடந்த தேர்தலில் கைப்பற்றபட்ட 3 கண்டெய்னர் பணம் யாருடையது என்பதை ஏன் வெளிப்படையாக இதுவரை அறிவிக்க முடியவில்லை? பத்திரிக்கைகளில் இவ்வளவு வெட்டவெளிச்சமான கண்டெயினர்களின் கதியே இதுவென்றால் தெரியாமல் கைமாறிய கண்டெயினர்களின் எண்ணிக்கை என்ன?

12. மோடி பல்லாயிரம் கோடி அரசுப் பணத்தை செலவழித்து வெளிநாடுகளுக்குச் செல்வது முதலீடுகளை ஈர்க்கத்தான் என்றால், ஏன் இதுவரை ஒரு பைசா கூட வெளிநாட்டு முதலீடு இந்தியாவிற்கு வரவில்லை?

13. மோடியின் வெளிநாட்டுப் பயணங்களில் அவரோடு செல்லும் தொழிலதிபர்கள் மட்டும் வெளிநாடுகளில் பல லட்சம் கோடிகள் முதலீடு செய்வது எப்படி?

14. மோடியின் வெளிநாட்டுப் பணம் இந்தியாவிற்கு முதலீடுகளைக் கொண்டு வரவா? அல்லது அவரது நண்பர்கள் மட்டும் வெளிநாடுகளில் முதலீடு செய்ய முகவராகச் செல்கிறாரா? அவரது நண்பர்கள் உள்நாட்டு இந்திய வங்கிகளில் பல்லாயிரம் கோடிகள் வாங்கி வெளிநாடுகளில் முதல் செய்து, கடனை அடைக்காமல் கைவிட்டு, அதை மோடி அரசு தள்ளுபடி செய்தது எப்படி ? இதே வேலையை முந்தைய காங்கிரஸ் அரசும் செய்ததாலா ? காங்கிரஸ் அரசு செய்ததால் மோடி அரசு செய்வதும் நியாயமாகிவிடுமா ?

15. இந்தியாவின் முக்கிய ஊழல்வாதியாக கூறப்பட்டு தண்டனை அனுபவிக்கும் லாலுவின் காலத்தில் நல்ல லாபத்தில் இயங்கிய ரயில்வே, தனியாருக்கு விற்கும் அளவிற்கு நஷ்டம் அடைந்து எப்படி? இன்று ரிலையன்ஸூக்கும், அதானிக்கும் விற்கப்படுவது எப்படி ? அரசு ஏர்ப்போர்ட்டுகளும், துறைமுகங்களும் இன்று அதானி ஏர்ப்போர்ட்டுகளும், துறைமுகங்களுமாக மாறியது எப்படி ?

16. பெட்ரோல் மீதான 300 சதவீத இலாபம் அரசுக்கு மட்டுமே என்றால், இன்னமும் 50 சதவீதத்திற்கு மேலான பெட்ரோல் தனியார் வசம் இருப்பது ஏன்? அந்த லாபங்கள் மக்களுக்கு என்னவாக செலவிடப்பட்டிருக்கின்றன ?

17. தேசிய நெடுஞ்சாலைகள் அமைத்து 15 ஆண்டுகள் கடந்த பின்னரும் டோல் கட்டணம் வசூலிக்க தனியாருக்கு தொடர்ந்து அனுமதி வழங்குவது ஏன்? இந்த ஆண்டு கட்டணத்தை உயர்த்தவும் செய்திருக்கிறார்கள். பாஸ்டேக் என்று ஆன்லைன் கொள்ளையடிப்பதை கட்டாயமாக்கியிருக்கிறார்கள். யாரிடம் அனுமதி கேட்டார்கள் ?

18. யாரிடமும் கொடுக்காமல் மிக ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்று பொதுமக்களிடம் உறுதியளிக்கப்பட்டு பெறப்பட்ட ஆதார் தகவல்கள் ரிலையன்சின் ஜியோ நிறுவனத்திற்கு முழுவதுமாக வழங்கப்பட்ட காரணம் என்ன?


19. ஏழை விவசாயிகளுக்கும் மாணவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் கூட தள்ளுபடி செய்யப்படாத கடன்கள், பெருநிறுவனங்களுக்கு மட்டும் பல்லாயிரக் கணக்கான கோடிகள் தள்ளுபடி செய்யப்படுவதன் மர்மம் என்ன?

20. பல்லாயிரம் கோடிகள் உபரிபணம் இருக்கும் எல்ஐசி பங்குகள் தனியாருக்கு விற்கப்படும் காரணம் என்ன? எல்ஐசியில் எந்த விதமான நஷ்டம் ஏற்பட்டது? இதேபோல பல்லாயிரம் கோடி மதிப்புள்ள பொதுத்துறை நிறுவனங்கள் சில நூறு கோடி ரூபாய்களுக்கு தனியாரிடம் விற்கப்படும் மர்மம் என்ன ? இதன் பின்னுள்ள பொருளாதார அறிவு என்ன ?

21. மாநிலங்களின் GST பங்குகள் எங்கே மயமானது? 

22. கொள்ளையர்கள், ரவுடிகள் தொடர்ந்து பாஜகவில் இணைந்து வருகிறார்களே ஏன் ?ரவுடிகளின், கற்பழிப்பு காவாளிகளின் கடைசி புகலிடம் பாஜகதானா?

இன்னும் பல புதிரான கேள்விகளுக்கு விடையே இல்லை. 
ஆனால் நம்புங்கள்..
 
மோடி புனிதர், வலுவானவர்.

பெரியார் செய்த மாற்றம் பற்றி MR இராதா

பெரியார் செய்த மாற்றம் பற்றி MR இராதா

1973 ஆம் ஆண்டு தந்தை பெரியார் மறைந்து விடுகிறார். சென்னைப் பல்கலைக் கழக ஆராய்ச்சி மாணவர்கள் சங்கத்தின் சார்பில் பெரியாருக்கு நினைவேந்தல் கூட்டம் நடந்தது. 


அன்றைய கல்வி அமைச்சர் நாவலர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஏ.எஸ்.கே., நடிகவேள் எம்.ஆர்.ராதா ஆகியோர் கலந்து கொண்டனர். பல்கலைக் கழக, கல்லூரி மாணவர்கள், பொது மக்கள் என எதிர்ப்பார்த்ததிற்கு மேல் அதிக அளவில் கலந்து கொண்டனர்.


நடிகவேள் ராதாவின் பேச்சு அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. நாவலர், ஏ.எஸ்.கே. ஆகியோர் ஆற்றிய உரைகள் ஒருவரை ஒருவர் விஞ்சும் அளவில் இருந்தன.


நடிகவேள் இவ்வாறு பேசினார்.


"படிக்காத என்னை ஏன் அழைத்தீர்கள் என்று உரையைத் தொடங்கியவர், 1920 களில் பெரியார் முதல் வலம் வருகிறார். அப்போது நாடகக்குழுவில் சிறுவனாக வேலை செய்து வந்தேன். காலையில் நாடகக் குழுவினருக்கு காபி தேநீர் வாங்கச் செல்வேன்.


அய்யர் கடையில் 20 அடி தூரத்திலிருந்து "அய்யா சாமி" என்று உரத்தக் குரலில் கத்துவேன். "டேய் வரேன்டா" என்று கூறிவிட்டுப் பாத்திரத்தில் காபியை அய்யர் எடுத்து வருவார். நான் எடுத்துவந்த பாத்திரத்தையும், பணத்தையும் மண் தரையில் வைக்கச் சொல்வார். நீண்ட கைப்பிடியுடன் உள்ள அவரது பாத்திரத்திலிருந்து காபியை ஊற்றுவார்.

1930களில் தமிழ்நாடெங்கும் பெரியார் மீண்டும் வலம் வருகிறார். காபி கடைக்கு மிக அருகில் செல்ல முடிகிறது. "சாமி காபி கொடுங்கள்" என்று கூறியவுடன் "இதோ வரேன்டா!" பாத்திரத்தையும் பணத்தையும் உணவகத்தின் மேஜை மீது வைக்க முடிந்தது. "டேய்" என்ற ஆணவச் சொல் காணாமல் போய்விட்டது.


1940களில் பெரியார் வலம் வருகிறார். உணவகத்தின் நாற்காலியில் அமர்ந்து கொண்டு "அய்யரே! காபி கொடு, காசு கொடுக்கிறன்" என்று மிடுக்கோடு பேச முடிந்தது. "இதோ தரேன்! வாங்கிக்கப்பா" இப்படியாக, படிப்படியாக அனைவருக்கும் மரியாதையும், சம உரிமையும் கிடைக்கிறது. இதை யார் வாங்கித்தந்தது?


அய்யா சாமி: டேய் வரேன்டா: ... 

சாமி : வரேன்டா 

அய்யரே : வாங்கிக்கப்பா


மாணவர்களே! சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். ஒரு முறை இந்தச் சொற்களைச் சொல்லிப்பாருங்கள், இந்த ஒலி சத்தத்தின் வேறுபாடுகளில் தந்தை பெரியாரின் உழைப்பும், சீர்திருத்தமும் பிரிக்க முடியாதபடி ஒட்டிக்கொண்டிருக்கும்" என்று குறிப்பிட்டு, அவரின் குரலில், அவருக்கே உரித்தான பாணியில் நடித்துக் காட்டினார். மண்டபமே அதிரும்படியான கையொலி சத்தம்.


நடிகவேள் ராதாவின் பகுத்தறிவுப் பணி என்றும் போற்றப்படும்.

வியாழன், 21 ஆகஸ்ட், 2025

தலைவர் கலைஞர் தமிழ்நாட்டின் அடையாளம்

தலைவர் கலைஞர் 
தமிழ்நாட்டின் அடையாளம்



முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் தமிழுக்கு புதிய புதிய அடையாளங்களை வாழ்நாள் முழுக்க உருவாக்கிக் கொண்டே இருந்தார்


✅பாரிஸ் கார்னரை பாரிமுனை என மாற்றினார்


✅பிராட்வே தொடக்கத்தை குறளகம் ஆக்கினார்


✅ஜெமினி நிறுத்தத்தை அண்ணா மேம்பாலம் ஆக்கினார்


✅ஏஜிஎஸ் நிறுத்தத்தை அறிவாலயம் ஆக்கினார்


✅லேக் பகுதியை வள்ளுவர் கோட்டம் என மாற்றினார்


✅தேனாம்பேட்டை நிறுத்தத்தை வானவில் ஆக்கினார்


✅வாலாஜா முனையை எழிலகம் ஆக்கினார்


✅டிரைவ் இன் நிறுத்தத்தை செம்மொழிப்பூங்கா ஆக்கினார்


✅மவுண்ட் ரோடை அண்ணாசாலை என்று மாற்றம் செய்தார்


✅கடற்கரை சாலையின் ஒவ்வொரு நிறுத்தமும் ஒவ்வொரு அறிஞர் பெயரை சூட்டினார்


✅கண்ணகி சிலை நிறுத்தம் என்கிறார் நடத்துநர்


✅காவிரி கடலோடு கலக்கும் இடத்தில் பூம்புகார் பட்டினத்தை மீண்டும் படைத்தார்


✅குமரியிலே ஐயன் திருவள்ளுவருக்கு சிலை அமைத்து தெற்கை அடையாளப்படுத்தினார் 


✅தமிழ்நாடெங்கும் பல நூறு மேம்பாலங்கள்


✅தமிழ்நாடெங்கும் பல நூறு சுரங்கப்பாதைகள்


✅தமிழ்நாடெங்கும் பல நூறு சமூக கூடங்கள்


✅தமிழ்நாடெங்கும் பல நூறு உழவர் சந்தைகள்


✅தமிழ்நாடெங்கும் பல நூறு பெரியார் நினைவு சமத்துவபுரங்கள்


இதற்கிடையே குறளோவியம் படைக்கிறார்


பூம்புகார் படைக்கிறார்


தொல்காப்பிய பூங்கா படைக்கிறார்


ரோமாபுரி பாண்டியன், தென்பாண்டி சீமையிலே, பொன்னர் சங்கர்,

பாயும் புலி பண்டாரக வன்னியன் போன்ற சரித்திர நாவல்கள் ஒரு பக்கம்


அம்மையப்பன், ஒரே ரத்தம் போன்ற சமூக நாவல்கள் இன்னொரு பக்கம்


தினந்தோறும் உடன்பிறப்புக்கு கடிதம்


கரிகாலன் பதில்கள்


நாள் தவறா மேடைப்பேச்சுகள்


திருவிழா நாளெல்லாம் கவியரங்க ஊற்று


அமைச்சரவை பணிகள்


தொண்டர்களுக்கு அன்புக்கட்டளைகள்


கூட்டணி கட்சிகளுடன் கூட்டணி வியூகங்கள்


ஒருசேர கொள்கை முழக்கங்கள்


இவற்றின் இடையே 70 படங்களுக்கு மேல் திரைக்கதை, வசனம்


இத்தனைக்கும் இடையில் எதிர்க்கட்சிகளோடு மல்லு கட்டுதல்


சொந்த கட்சி தொண்டர்களை கட்டுக்கோப்பாக அரவணைத்து செல்லுதல்


சிலப்பதிகாரத்தை படியுங்கள் என்றார்


எந்த நாட்டு மொழியில் மொழி பெயர்த்தாலும் அந்த நாட்டின் திருமறையாக மாறும் தன்மை கொண்ட திருக்குறளை படியுங்கள் என்றார்


80 ஆண்டுகள் பொதுவாழ்வு 


60 ஆண்டுகள் மக்கள் பிரதிநிதி 


50 ஆண்டுகள் கட்சித் தலைவர் 


20 ஆண்டுகள் தமிழ்நாடு முதலமைச்சர்


நினைக்க நினைக்க ஆச்சரியமாக இருக்கிறது


கலைஞர் தன் அரசியல் பயணத்தில்


தமிழ்நாட்டில் உருவாக்கிய அடையாளங்கள் ஏராளம்


இன்று தலைவர் கலைஞரே தமிழ்நாட்டின் அடையாளம்


KalaignarForever 🖤❤️🔥

வியாழன், 7 ஆகஸ்ட், 2025

ஹார்ட் அட்டாக் - மாரடைப்பு விசித்திரமான வரலாறு

ஹார்ட் அட்டாக் - மாரடைப்பு
 விசித்திரமான வரலாறு 

இப்போதெல்லாம் நெஞ்சுப் பகுதியில் வலி ஏற்பட்டால்  

- உடனே மருத்துவமனைக்கு விரைந்து சென்று ஈசிஜி எனும் இதய சுருள் படம் எடுத்துப் பார்க்க வேண்டும் என்பது 

பெரும்பான்மையினருக்கு தெரியும்


இதய ரத்த நாள அடைப்பை ஹார்ட் அட்டாக் என்கிறோம். அடைப்பு ஏற்பட்டதில் இருந்து மூன்று மணிநேரமே பொன்னான நேரம் என்று கணக்கில் கொள்ளப்படுகிறது


அதற்குள் சிகிச்சை செய்து அடைப்பை நீக்க வேண்டும். 


நிற்க


 இங்கிருந்து செப்டம்பர் 23,1955 

அமெரிக்காவுக்கு செல்வோம்


பனிப்போர் காலம்


இரண்டாம் உலகப்போரை வென்ற அதிபர் ட்ரூமன் இறக்க 

இரண்டாம் உலகப்போரில் நேச நாடுகள் படையை தலைமை ஏற்று நடத்திய போர்த்தளபதி எய்ஸன்ஹோவர் அமெரிக்காவின் அதிபரானார். 


தனது அலுவலக பணிகளில் இருந்து ஒரு நாள் ஓய்வு எடுத்துக் கொண்ட அவர் செப்டம்பர் 23,1955 அன்று காலை கோல்ஃப் விளையாடிக் கொண்டிருக்கும் போது 

நெஞ்செரிச்சலாக இருப்பதை உணர்ந்தார். 


அவரது சிறப்பு மருத்துவர் டாக்டர் ஹோவார்ட் ஸ்நைடர்

நெஞ்செரிச்சலுக்கான மருந்துகளை வழங்கினார். 


எனினும் நெஞ்செரிச்சல் அதிகமானதேயன்றி குறைந்தபாடில்லை. 


இது வயிற்றுப் பிரச்சனை இல்லை. இதய ரத்தநாள அடைப்பாக இருக்கக்கூடும் என்று உணர்ந்த மருத்துவர் ஸ்நைடர் 

  அதிபரை மருத்துவமனைக்கு பத்து மணிநேரங்களுக்குப் பிறகு அன்றிரவு பரிந்துரைத்தார். 


பரிந்துரைக்கும் போது இதய ரத்த நாளத்தை விரிவடையச் செய்யும் அமைல் நைட்ரேட் மற்றும் நெஞ்சு வலியை குறைக்க உதவும் மார்ஃபின் ஆகியவற்றை தந்தார். 


மார்ஃபின் விளைவால் அதிபர் நன்றாக உறங்கி விட்டார். 

மறுநாள் காலை எழுந்தும் நெஞ்சு வலி விட்டபாடில்லை. 


அருகில் உள்ள மற்றொரு மருத்துவமனையில் இருந்து ஈசிஜி எடுக்கும் உபகரணம் கொண்டு வரப்பட்டு ஈசிஜி எடுக்கப்பட்டது. 


முந்தைய நாள் அறிகுறி தோன்றிய அதிபருக்கு 

அடுத்த நாள் காலை எடுக்கப்பட்ட ஈசிஜியில் இதய ரத்த நாள அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. 


அப்போதெல்லாம் இதய ரத்த நாள அடைப்பு ஏற்பட்டாலும் 

இப்போது இருப்பது போல 


எக்கோ கிடையாது 

ஆஞ்சியோ கிடையாது 

ஸ்டெண்ட் கிடையாது 

இதய தசைகள் காயமாகியுள்ளதை அறியும் நொதிகள் பற்றி அறிவியல் அறிந்திருக்கவில்லை


இதய ரத்த நாள அடைப்புக்கு வழங்கப்படும் லோடிங் டோஸில்

உள்ள ஆஸ்பிரின் அப்போது காய்ச்சலுக்கும் மூட்டு வலிக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த மருந்தாகும். 


ரத்த நாள அடைப்புக்கு வழங்கப்படும்

க்லோபிடோக்ரெல் / ஸ்டேடின் போன்ற மாத்திரைகள் கண்டறியப்படவில்லை


அப்போது இதய ரத்த நாள அடைப்பு வந்தால் 30-40% மரணம் தான் 

உயிர் பிழைத்தாலும் பலம் குன்றிய இதயத்துடன் சில காலம் வாழ்ந்து மரணிக்க வேண்டியது தான். 


உலகின் வல்லரசின் அதிபராக இருந்தாலும் அதே நிலைமை தான். 


இதய ரத்த நாள அடைப்பு என்பது நெஞ்சு வலி அன்றி நெஞ்செரிச்சல் / கழுத்து வலி / தாடை வலி என்றும் ஏற்படலாம் என்ற அறிவும் அப்போது இருந்திருக்கவில்லை


 இதய ரத்த நாள அடைப்புக்கு 

நைட்ரோ க்ளிசரின் ( ரத்த நாள விரிவடையச் செய்யும் மருந்து) மற்றும் வலியைக் குறையச் செய்யும் மார்ஃபின் மட்டுமே இருந்த சிகிச்சைகள்


நிற்க 

மீண்டும் 2023 க்கு வந்து விடுவோம் 


இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்று மெடிக்கல் இண்சூரண்ஸ் இல்லாமல் ஒருவர் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்


அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு ஈசிஜி எடுத்துப் பார்க்க வேண்டுமென்றால் 

ஒரு ஈசிஜி எடுத்துப் பார்க்க 

$450 முதல் $1200 டாலர் செலவாகும் என்பதை அறிந்து அதிர்ந்தேன். 


இந்திய மதிப்பில் குறைந்தபட்சம் ₹36000 வருகிறது. 


இதை எடுப்பதும் எளிதன்று 

கட்டாயம் மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே எடுக்க முடியும். 


அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவரை சந்தித்து ஈசிஜி எடுக்க வேண்டும். 


இந்தியாவில் 

தமிழ்நாட்டில் 


ஒருவருக்கு அவர் நம் மாநிலத்தை சேர்ந்தவராக இருப்பினும் சரியே 

வெளிமாநிலம் வெளி நாட்டினராக இருப்பினும் சரியே 

இண்சூரன்ஸ் தேவையில்லை 


நெஞ்சு வலி என்றால் அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு சென்றால் உடனடியாக 

ஈசிஜி இலவசமாக எடுக்கப்படும். 


பணம் கொடுத்து ஈசிஜி எடுக்க வேண்டுமென்றாலும் ₹300 க்கு எடுத்து விட முடியும். 

மருத்துவ பரிந்துரை தேவையில்லை. 

ஈசிஜி எடுத்து விட்டு மருத்துவரை படத்துடன் சந்திக்க முடியும். 


வல்லரசு நாட்டில் 70 வருடங்களுக்கு முன்பு அதிபருக்கு நேர்ந்த அதே விசயம் தான் இப்போதும் நேருகிறது 

மருத்துவம் சாமானியர்களிடம் இருந்து தூரமாக நிற்கிறது. 


இந்தியாவில் தமிழ்நாட்டில் சாமானியனுக்கும் எட்டக்கூடிய அளவில் மருத்துவ வசதி எளிமையாகக் கிடைக்கிறது என்பது தெரிகிறது. 


நாம் வாழும் காலம் 

வாழும் இடம் போன்றவை 

நமது இருப்பை முடிவு செய்யும் ஆற்றல் பெற்றிருக்கின்றன என்பது புலனாகிறது 


இந்த நிலை தொடர வேண்டும் என்பதே ஆவலாக உள்ளது. 


Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 

சிவகங்கை

வெள்ளி, 25 ஏப்ரல், 2025

பஹல்காம் படுகொலைகள் - ஒரு பார்வை

 பஹல்காம் படுகொலைகள் 

ஒரு பார்வை


இரண்டு நாட்களுக்கு முன்பு (22.04.2025) காஷ்மீர் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகளின் மீது பயங்கரவாதிகள்  நடத்திய துப்பாக்கி தாக்குதல் மூலம் 27 அப்பாவி பயணிகளை கொலை செய்திருக்கிறார்கள்.

 இதற்கு "லஷ்கர் இ தொய்யிபா"வின் சக அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (The Resistance Front - TRF) என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது என்று செய்திகள் வெளி வந்திருக்கின்றன. 

அப்பாவி மக்களின் மீதான் இந்த கொடும்  தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது. இதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை.

ஆனால் 

1..இந்த தாக்குதல் மூலம் அந்த பயங்கரவாதிகள் உலகிற்கு என்ன சொல்ல வருகிறார்கள் ? 

2.. இதனால் அவர்கள் அடையும் இலாபம் என்ன ?

3.. இப்படி செய்யச் சொல்லி இவர்கள் பின்பற்றும் இஸ்லாம் வழிகாட்டுகிறதா?

4.. இந்த தாக்குதலால் இந்தியாவில் குறிப்பாக காஷ்மீரில் ஏற்படும் பின் விளைவுகள் எப்படி இருக்கும் ?

5.. இந்த தாக்குதல் மூலம் யாருக்கு அதிக பாதிப்பு  இருக்கும் ? 

6.. இதனால் அதிக இலாபம் யார் அடைவார்கள்?

இவற்றை எல்லாம் இப்போது யோசிக்க வேண்டியிருக்கிறது


இந்த தாக்குதல் மூலம் பயங்கரவாதிகள் தாங்கள் பெரிய 'பிஸ்தாக்கள்' என உலக மக்களை அச்சுறுத்துகிறார்கள். ஆனால் உண்மையில் இவர்கள் உலக மக்களின் பார்வையில் இருந்து, அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு பயந்து ஒளிந்து வாழும் கோழைகள். 

இதனால் அவர்கள் எந்த நன்மையும் அடையப் போவதில்லை. 

மாறாக துன்பங்கள்தான் தொடரப் போகின்றன. வேட்டையாடப்படுவார்கள். 

தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் ஓடி ஓடி ஒளிந்து கொண்டால், அகப்படுபவர்கள் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டு பலி / பழி வாங்கப்படுவார்கள்.

மற்றபடி இந்த தாக்குதலால் பத்து பைசா பிரயோஜனம் கூட அவர்களுக்கு இருக்காது. 

ஒரு வேளை பாகிஸ்தான் மூலம் ஆதாயம் கிடைக்கலாம்.

இஸ்லாம் தன் வரலாற்றில் போர்களை எதிர் கொண்டிருக்கிறது. போர் நெறிகளை கடைப்பிடித்திருக்கிறது. எந்த காலத்திலும் இப்படி அப்பாவி மனிதர்களை கொல்ல அனுமதித்ததில்லை.

போர்கள், தண்டனை இவற்றைக் தவிர ஒரு உயிரை எடுப்பதற்கு இஸ்லாம் அனுமதிப்பதில்லை. 

இஸ்லாமிய கோஷங்களோடு ஒரு பயங்கரவாத தாக்குதலை செய்வதால் அது இஸ்லாம் அனுமதித்த முறையாகாது.



இந்த தாக்குதலால் ஏற்பட இருக்கும் பின் விளைவுகளை பற்றி அந்த பயங்கரவாதிகள் யோசித்துப் பார்த்திருந்தால் இதைச் செய்திருக்க மாட்டார்கள். 

மூளைக் சலவை செய்யப்பட்டவர்கள் யோசிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

ஏற்கனவே காஷ்மீரில் இராணுவ கண்காணிப்பு பலமாக இருக்கிறது. இப்பொழுது இந்த தாக்குதலுக்குப் பிறகு அது இன்னமும் நெருக்கப்படும். அனைவரும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்படுவார்கள். 

ஏனெனில் இராணுவ உடமைகளையும், உயிர்களையும், பொது மக்களையும் பொதுச் சொத்துக்களையும் தங்கள் உயிர்களையும் பொருட்படுத்தாது பாதுகாக்க வேண்டிய 'ரிஸ்க்'கும் பொறுப்பும் துணை நிலை பாதுகாப்பு படைகளுக்கு உள்ளது. 

இதனால் பொது அமைதி, வெகுஜன சுதந்திர வாழ்க்கை சீர் குலையும். நிம்மதியின்மை, ஸ்திரமற்ற தன்மை நிலவும்.

பெரும்பான்மை இஸ்லாமியர்களின் வாழ்க்கை வருமானம் சுற்றுலா பயணிகளின் மூலமே இருக்கிறது.

பயணிகள் வருகை தடை பட, வருமானம் குறைந்து, அடிப்படை வாழ்க்கை ஆட்டம் காணும். 

ஒரு புறம் இராணுவ துணை நிலைப் படையினர், மறு புறம் பயங்ரவாதிகள் என இரு பக்க அச்சுறுத்தல்களோடு வாழ்வது நரக வாழ்க்கையாக இருக்கும்.

ஆகவே இது போன்ற தாக்குதல்களால் தங்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது என்பதால் எந்த காஷ்மீர் மக்களும் இதை ஆதரிப்பதில்லை. 

அதே போல் எந்த இந்தியக் குடிமகனும் இது போன்ற தாக்குதல்களை ஏற்பதுமில்லை. 

ஏனெனில் பஹல்காமில் தாக்குதல் நடந்தால் ஒட்டு மொத்த தேசமுமே பாதுகாப்பை நோக்கி நகர வேண்டியிருக்கிறது. தங்களது இயல்பு வாழ்க்கைகள் ஊருக்குத் தகுந்தாற்போல் பாதிப்பை அடைகின்றன.

இந்த நிகழ்வால் யாருக்கு இலாபம் ? யார் அதிக பயனடைவார்கள் ? என்பதை யோசிக்கத் தெரிந்த எந்த இந்தியக் குடிமகனாலும் எளிதில் சொல்லி விட முடியும்.

இந்த பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியவர்கள் இஸ்லாமியர்கள் என்பதாலும், தாக்குதலுக்கு உள்ளானவர்கள் இந்துக்கள் என்பதாலும் இது இந்து - முஸ்லீம் விரோத செயல்பாட்டு கருத்தாக வெகுஜன மக்களிடம் பரப்பப்படுகிறது. 

தேசம் முழுவதும் இஸ்லாமிய வெறுப்புணர்வு பிரச்சாரம் முடுக்கி விடப்பட்டிருக்கிறது.

மோர்பி பாலத்தில் 141 பேர் இறந்தபோது வராத, 

புல்வாமாவில் 40 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட போது வராத, 

பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்டிருந்த தமிழ்நாட்டைக் காணவராத, 

வன்முறைகளால் பற்றி எரிந்த, எரிந்து கொண்டிருக்கும் மணிப்பூருக்கு  வராத, 

மகாராஷ்ட்ரா, உ.பி மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு மோசமடைந்து பெரும் கலவரங்கள் நடந்து போதும் வராத 

-- பிரதமர் மோடியும் அமித்ஷாவும் பதறுவதும் உடனடியாக ஜம்முகாஷ்மீர் போவதும் வித்தியாகமாக படுகிறது.

சவுதி அரேபியாவின் சுற்றுப் பயணத்தை பாதியில் முடித்து விட்டு மோடி காஷ்மீர் திரும்புகிறார்.

சிவப்புக் கம்பள வரவேற்போடு வரும் அமித்ஷா 26 உடல்களையும் வெள்ளைப் பெட்டியில் வைத்து அஞ்சலி செலுத்தி அதை மீடியாவில் காட்டச் செய்கிறார்.

முந்தைய காங்கிரஸ் ஆட்சிகளில் இது போன்ற சம்பவங்கள் நடந்தால் அது ஆளும்கட்சியின் கவனக் குறைவு, 

ஆட்சியின் திறமையின்மை என எழுதிய பத்திரிக்கைகள் இன்று 

'அமித்ஷா கண் சிவந்தார், 

மாஸ்டர் பிளான் போட்ட மோடி, 

*பாக். எல்லை மூடப்பட்டது*.

*பாகிஸ்தானின் X - தளப் பக்கம் மூடப்பட்டது*' 

என்று தலைப்பில் பிரேக்கிங் நியூஸ் வெளியிடுகின்றன.

இந்துவா ? முஸ்லீமா ? எனக் கேட்டு பார்த்து சுட்டார்கள் என பரபரப்புச் செய்திகள் வெளியிட்ட மீடியாக்கள் பல வெளியூர் சுற்றுலா பயணிகளை உள்ளூர் முஸ்லீம் மக்கள்தான் காப்பாற்றினார்கள் என பல பொதுமக்கள் கொடுத்த பேட்டிகளை செய்திகளாக வெளியிட தயங்குவது ஏனோ?

தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால்  இந்த பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து உள்ளூர்வாசிகள் கடையடைப்பும், போராட்டமும் செய்வது அரசை எதிர்த்து செய்வதாக இந்த ஊடகங்கள் செய்திகள் வெளியிடுகின்றன.

வக்பு சட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பும், உச்சநீதி மன்றத்தின் கடும் விமர்சனமும் எழுந்த வேளையில்.. காஷ்மிரில் இந்த தீவிரவாத தாக்குதல் நடைபெற்று இருக்கிறது! 

எப்போதெல்லாம் ஆளுங்கட்சிக்கு பிரச்னை வருகிறதோ அப்போதெல்லாம் எல்லையில் தீவிரவாதி ஆளுங்கட்சியை காப்பாற்ற வந்து விடுகிறான்.

நாலு நாதாரி நாய்கள் செய்யும் வெறிச் செயல்களால் நாடு முழுவதும் இருக்கும் இஸ்லாமியர்கள் தங்கள் தேசபக்தியை மெய்ப்பித்துக் காட்டிக் கொண்டே இருக்க வேண்டி இருக்கிறது.

ஆனால் மற்ற இந்தியக் குடிமகன்கள் தங்கள் தேசபக்தியை வெளிக்காட்ட வேண்டிய அவசியமே இல்லாமல் இருப்பது அவர்களுக்கு ஒரு உரிமை, சவுகரியம் என்பது ஒரு நகைமுரண்.

இந்தியாவில்  பின்வரும் மாநிலங்களில் அடுத்து தேர்தல்கள் நடைபெற உள்ளன:

பிகாரில் 2025 நவம்பரிலும், 

2026, ஏப்ரல்-மே - யில் 

அசாம்,கேரளா, மேற்கு வங்காளம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலும் சட்டமன்றத் தேர்தல்கள் வரவிருக்கின்றன.

முந்தைய வரலாற்றைப் பார்த்தால் 2019 பிப்ரவரியில் *புல்வாமா தாக்குதல்* நடந்த பிறகு, இந்தியாவில் ஏப்ரல், மே யில் பொதுத் தேர்தலும் கூடவே ஆந்திரா, அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் மற்றும் ஒடிசா ஆகிய நான்கு மாநில சட்டமன்றங்களுக்கும் தேர்தல்கள் நடைபெற்றன

புல்வாமா தாக்குதல் மக்களவை மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல்களின் பின்னணியில் முக்கிய அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தியது, 

குறிப்பாக தேசிய பாதுகாப்பு மற்றும் தீவிரவாத எதிர்ப்பு விவாதங்களை மையப்படுத்தியது என்றும்,

மேலும், இது இந்தியாவின் அரசியல் களத்தில் குறிப்பிடத்தக்க நிகழ்வாக இருந்தது என்றும் Groke சொல்கிறது


அதற்கு பிறகு

2019 அக்டோபர் - நவம்பரில்

ஹரியானா: மகாராஷ்ட்ரா, ஜார்க்கண்ட்ஆகிய மாநிலங்களிலும் தேர்தல்கள் நடைபெற்றன. 

இதில் நாட்டின் வளர்ச்சி பற்றிய பிரச்சாரத்தை விட தேசிய பாதுகாப்பு மற்றும் தீவிரவாத எதிர்ப்பு பற்றியே இங்கும் பாஜகவால் பிரச்சாரம் செய்யப்பட்டது. 

இதில் பாஜக பெருமளவில் வெற்றியும் கண்டது.

இதனடிப்படையில் பார்த்தால் இந்த தாக்குதலால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள்  உயிரை இழந்த சுற்றுலா பயணிகள்,  அவர்கள் குடும்பத்தார்கள், காஷ்மீரின் உள்ளுர்வாசிகள் மற்றும் துணை நிலைப் படையினர்கள் ஆகியோராவார்கள். 

இவர்கள் யாருக்கும் எந்த ஆதாயமும் இல்லை.

இதில் எந்த அரசியல் கட்சிக்கும் எந்த ஆதாயம் இல்லை பாஜகவைத் தவிர.

பாஜக மட்டுமே இதைக் காட்டி ஆதாயம் அடைய முயலும்

தேசத்தின் எங்கோ ஒரு மூலையில் ஒரு பாதிப்பு நிகழ்ந்தாலும் அதை அறுவடை செய்ய ஒரு கூட்டம் காத்திருக்கும்போது, நடந்தவைகளைப் புரிந்து கொண்டு அதற்கு பதில் வினையாக அனைவரிடமும் அன்பையும், அமைதியையும், ஆறுதலையும் செலுத்த வேண்டியது நம் அனைவரின் மீதும் கடமையாக இருக்கிறது.

24.04.2025

வெள்ளி, 18 ஏப்ரல், 2025

தோஹா WTO மாநாட்டில் முரசொலி மாறன்

தோஹா WTO மாநாட்டில் 

முரசொலி மாறன் 

தோஹாவில் 142 நாடுகள் கலந்து கொண்ட WTO மாநாடு. மூன்றாம் உலக நாடுகளுக்கு எதிரான ஒப்பந்தம் என இந்தியாவின் காமர்ஸ் அமைச்சர், கலைஞரின் மனசாட்சி முரசொலி மாறன் கடுமையாக எதிர்த்து அந்த மாநாட்டையே ஸ்தம்பிக்க வைத்தார்.


பிறகு அமெரிக்கா பணிந்து, கேட்ட திருத்தமெல்லாம் செய்த பிறகே இந்தியா கையெழுத்திட்டது வரலாறு.


ஒரு மத்திய அமைச்சர் எத்தனை ஆழமாக தனது துறை சார்ந்த விஷயங்களைப் படித்து அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு உலகிற்கே எடுத்துக்காட்டு முரசொலி மாறன்.


பல துறை சார்ந்த நிபுணர்களால் வடிவமைக்கப்பட்ட ஒப்பந்தத்தை தனி ஆளாக படித்து, திருத்தங்கள் செய்து அசத்தினார்


அவரை அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தோஹா மாநாட்டுக்கு இந்தியக் குழுவை தலைமையேற்று செல்லுமாறு பணித்தார். அதுவரை பிரதமரே செல்வதாக திட்டம். திடீரென இவரை போகச் சொன்னவுடன், அந்த இரவு புறப்படும் முன் பிரதமரை சந்தித்து, நாளைய மாநாட்டில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன? என மாறன் கேட்டார்.


What My Commerce Minister Mr.Maran says is the policy of this country என்றார் பிரதமர். மேலும் மற்ற நாட்டு அதிபர்களுக்கு இணையான கவுரவத்துடன் இந்தியப் பிரதிநிதி செல்ல வேண்டும் என தனது தனி விமானத்தைத் தந்து அனுப்பினார்.


விமானத்திலேயே அதிகாரிகளுடன் டிராஃப்ட் ஒப்பந்தத்தை ஒவ்வொரு


பக்கமாக எடுத்து விவாதிக்கத் தொடங்கினார் மாறன். இதை எதிர்பாராத துறை அதிகாரிகள் சரியான முன்னேற்பாடு இன்றி திணற, முழு ஒப்பந்தத்தையும் இறுதி செய்யும் பொறுப்பை தானே ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார் மாறன்.


அந்த நிமிடத்தில் இருந்து அடுத்த இரண்டு நாட்கள் தூக்கம் இன்றி, துறை வல்லுநர்களிடம்


விவாதித்து இந்தியாவுக்குப் பாதகமான அம்சங்களை தனியே ஒரு பட்டியலிட்டார்.


மாநாட்டில் வாக்கெடுப்பு நடக்கும் சில மணி நேரம் முன்பு பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, மலேசியா, என பல நாட்டு அமைச்சர்களை அழைத்து மாநாட்டுக்குள்ளேயே தனிக்கூட்டம் நடத்தி அந்த ஒப்பந்தத்தின் பாதகங்களை விளக்கினார்.


அத்தனைத் தலைவர்களும் திகைத்து நிற்க, நம்மைப் போன்ற வளரும் நாடுகளுக்கு பாதகமான எந்த ஒப்பந்தத்தையும் WTO முன்னெடுக்கக் கூடாது என ஒற்றை வரித் தீர்மானத்தை மாறன் முன் மொழிய, மற்ற மூன்றாம் நாடுகள் வழி மொழிய அமெரிக்கா கடும் அவமானப்பட்டு தலைகுனிந்து நின்றது.


நேரடியா பிரதமர் வாஜ்பாயிடம்


அமெரிக்க அதிபரே பேச முயல, பிரதமர் எனது அரசுக்கு தனி மெஜாரிட்டி இல்லை. மாறன் முடிவுக்கு எதிராக நான் செயல்பட்டால் அரசே கவிழ்ந்து விடும் என சொல்லி விட்டார்.


தோஹா மாநாடுதான் இதுவரை உலகில் நடந்த சர்வதேச ஒப்பந்த மாநாடுகளில் முதன்முறையாக டிராஃப்ட் ஒப்பந்தங்கள் முழுமையாக மாற்றப்பட்டது.


தங்களது ஒப்புதல் இல்லாவிட்டால், அமெரிக்காவே நினைத்தாலும் எந்தவொரு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகாது என மூன்றாம் உலக நாடுகள் நம்பத் தொடங்கியது அன்றுதான்.


உலக அரங்கில் இந்தியா தன்மானத்துடன் விஸ்வரூபம் எடுத்து நின்றது. அரசியல் காழ்ப்புணர்வுகளை விடுத்து, ஒரு இந்தியனாக, தமிழனாக நாம் கொண்டாட வேண்டிய ஆளுமை முரசொலி மாறன்.


அவர் உன்னிப்பாக கவனித்து செய்த ஒப்பந்தத்தின் விளைவுதான் இன்று அமெரிக்க அதிபர் அத்தியாவசிய மருந்து ஏற்றுமதிக்கு அனுமதி கேட்டு நிற்பது. இல்லாவிடின் அது ஒருவழிப் பாதையாக இருந்திருக்கும். இன்று மோடிக்கு அந்த தொலைபேசி அழைப்பும் வந்திருக்காது.

வெள்ளி, 4 ஏப்ரல், 2025

வக்ஃப் திருத்த மசோதாவை எதிர்ப்பதற்கு சொல்லப்படும் காரணங்கள்:

வக்ஃப் திருத்த மசோதாவை எதிர்ப்பதற்கு சொல்லப்படும் காரணங்கள்:


1. அரசியலமைப்பு உரிமைகளுக்கு எதிரானது:
இந்த மசோதா இந்திய அரசியலமைப்பின் பிரிவுகள் 14 (சமத்துவம்), 15 (பாகுபாடு தடை), மற்றும் 25 (மத சுதந்திரம்) ஆகியவற்றை மீறுகிறது. இது முஸ்லிம் சமூகத்தின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் முயற்சியாகும்.

2. மத சுதந்திரத்தில் தலையீடு:
வக்ஃப் என்பது இஸ்லாமிய மரபில் தொண்டு நோக்கத்திற்காக அர்ப்பணிக்கப்படும் சொத்து. இதை நிர்வகிக்கும் / முடிவெடுக்கும் அதிகாரத்தை வக்ஃப் வாரியங்களிடமிருந்து மாவட்ட ஆட்சியர்களின் கட்டுப்பாட்டிற்கு மாற்றுவது, மத விவகாரங்களில் அரசு தலையிடுவதாகும்.

3. பாகுபாடு மற்றும் ஒருதலைப்பட்சம்:
மசோதா பாகுபாட்டுடன் ஒருதலைப்பட்சமாக முஸ்லிம் சமூகத்தை மட்டும் குறிவைத்து, அவர்களது சொத்து உரிமைகளையும் தனிச்சட்டங்களையும் பறிக்க முயல்கிறது.
இராணுவத்திற்கும், இந்திய ரயில்வே - யுக்கும் அடுத்த நிலையில் அதிகமாக சொத்துக்களை வைத்திருக்கும் அமைப்பாக வக்ஃப் வாரியத்தை பாஜக அரசு காட்டுகிறது.
இது இந்தியா முழுவதும் உள்ள அனைத்து  மசூதிகள், தர்காக்கள், கல்வி சாலைகள் போன்றவற்றின் பொதுச் சொத்துக்களைக் தொகுத்து காட்டும் மதிப்பாகும்.
இதே போல் இந்தியா முழுவதும் உள்ள கோயில் சொத்துக்களையும் ஒரு கணக்கில் தொகுத்தால் அது நிச்சயம் ராணுவத்தையும், ரயில்வேயையும் விட அதிகமான அளவு சொத்து மதிப்புடையதாக இருக்கும்.
வக்ஃப் சொத்துக்களை மதிப்பிடும் பாஜக அரசு அவற்றை ஏன் தொகுத்து மதிப்பிடவில்லை ? ஏன் அந்த சொத்துக்களின் மேல் அக்கறை காட்டுவதில்லை ?

4. வெளிப்படைத்தன்மை மற்றும் ஆலோசனை இல்லாமை:
இந்த மசோதாவை உருவாக்குவதற்கு முன் முஸ்லிம் சமூகத்திடமிருந்து போதுமான ஆலோசனை பெறப்படவில்லை. மாறாக எதிர்கட்சிகள் வழங்கிய திருத்தங்கள் அனைத்தையும் புறந்தள்ளி விட்டு பாஜகவும், அதன் கூட்டாளிகளும் வழங்கிய திருத்தங்களை மட்டும் முழுவதுமாக ஏற்றுக்கொண்டு இந்த மசோதா ஒருதலைப்பட்சமாக பாஜக அரசால் திணிக்கப்படுகிறது.

5. சொத்து உரிமை மீதான அச்சுறுத்தல்:
வக்ஃப் சொத்துகளை மாவட்ட ஆட்சியர்களின் கட்டுப்பாட்டிற்கு மாற்றுவது, அரசு நிலங்களை உரிமை கோருவது போன்ற முன்மொழிவுகள், இது ஒரு "நில ஆக்கிரமிப்பு முயற்சி"யாகும். இதனால் முஸ்லிம் சமூகத்தின் சொத்துகள் அரசால் அபகரிக்கப்படலாம். பிறகு மற்ற நண்பர்களுக்கு தாரை வார்க்கப்படலாம்

6. நிர்வாகத்தில் பிரதிநிதித்துவக் குறைபாடு:
வக்ஃப் வாரியங்களில் முஸ்லிம் அல்லாதவர்களையும், பெண்களையும் சேர்க்க வேண்டும் என்று புதிய மசோதா கூறுகிறது.
ஏற்கனவே பெண்கள் பிரதிநிதித்துவம் அமலில் உள்ளது. இம்முறை 2 பேர் வரையிலும் என்று Maximum limit குறிப்பிடப்பட்டுள்ளது.
முஸ்லீம் அல்லாதவர்களை முஸ்லீம் வக்ஃப் சொத்துக்களை நிர்வகிக்க சேர்க்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றால் மத நல்லிணக்கத்தின் அடிப்படையில் கோயில்களின் அறங்காவல் குழுக்களில் முஸ்லீம்களை, கிறிஸ்தவர்களை இதர தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன இந்துக்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதை சட்டமாக கொண்டு வர  வேண்டும்
புதிய மசோதாவில் மத்திய வக்ஃப் கவுன்சிலுக்கு நியமிக்கப்படும் உறுப்பினர்கள் :
தலைவர் (முஸ்லீம்) -1, MP க்கள் - 3 max, மாநில வக்ஃப் போர்டு பிரநிதிகள் (சுழற்சி முறையில்) - 3 Max, நீதிபதி / வழக்கறிஞர்- 2 Max, முஸ்லீம் மத அறிஞர்கள் - 2 Max, மத்திய அரசு அலுவலர்கள் -2 Max
பெண்கள் - 2 Max
இதில் மொத்தம் 15 பேரில் 3 பேர் மட்டுமே முஸ்லீம்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே போல் மாநில வக்ஃ போர்டுக்கு நியமிக்கப்படும் உறுப்பினர்கள் :
தலைவர் (முஸ்லீம்). -1, MLA.க்கள் 1 - 2., நியமன முஸ்லீம் உறுப்பினர்கள் - எண்ணிக்கை குறிப்பிடப்படவில்லை
நீதிபதி / வழக்கறிஞர்- 1 , முஸ்லீம் மத அறிஞர்கள் 1 - 2, கலெக்டர் IAS கிரேடு - 1
பெண்கள் - 2 Max
இதில் மொத்தம் 11 பேரில் 5 பேர் மட்டுமே முஸ்லீம்கள் ( நியமன உறுப்பினர்கள் 2 உட்பட)  என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்வது மத்திய, மாநில அரசுகளே.
பாஜக ஆளும் மாநிலங்களில் யாரை நியமனம் செய்வார்கள் என்பது ஊரறிந்தது..
மொத்தத்தில் முஸ்லீம்கள் எண்ணிக்கை குறைவதால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் முஸ்லீம்களுக்கு பாதகமாக அமையும் என்பது அச்சத்தை தருகிறது

7. அரசியல் நோக்கம்:
இந்த மசோதா முஸ்லிம்களை அடக்குவதற்கும், அவர்களை ஆதிக்கம் செலுத்துவதற்கும், அரசியல் லாபம் தேடுவதற்கும் கொண்டுவரப்பட்டுள்ளது
நாட்டில் எத்தனையோ பிரச்னைகள் இருக்க ஆளும் பாஜக தன் RSS தலைமையின் Agenda வை எடுத்துக் கொண்டு குடியுரிமை சட்டம் CIA, முத்தலாக் சட்டம், ஹிஜாப் கட்டுப்பாடு, பசு வதை சட்டம், மதமாற்ற தடை சட்டம், ஹலால் உணவு பிரச்னை, நகர் பெயர்கள் தெருப் பெயர்கள் மாற்றம், மசூதிகளை இடித்து கோயில்களாக்குவோம் என்ற கூச்சல், ரம்ஜான் பண்டிகை விடுமுறை ரத்து, மசூதிகளை போர்வையால் மூடி விட்டு வீட்டிலேயே தொழுது கொள்ள யோகிநாத் உத்தரவு, எதிர்த்து குரலெழுப்பும் முஸ்லீம் வீடுகளை மட்டுமே இடித்துக் தள்ளும் புல்டோசர் நடவடிக்கைகள் என்று தொடர்ந்து முஸ்லீம் விரோத செயல்களையே மேற்கொண்டு வரும் பாஜக சொல்லும் காரணங்களை யாராலும் நம்ப முடியாது.
இது முஸ்லீம்கள் நலனுக்காக, முஸ்லீம் பெண்களின் நலனுக்காக என்று பாஜக அரசு சொல்வது ஆடு நனைகிறதே என்று ஓநாய் நீலிக் கண்ணீர் வடிக்கும் கதைதான்


8. நீதித்துறை அதிகாரத்தில் மாற்றம்:
வக்ஃப் தீர்ப்பாயங்களின் அதிகாரத்தைக் குறைத்து, அவற்றின் தீர்ப்புகளை இறுதியானதாகக் கருதாமல், உயர்நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்ய அனுமதிப்பது, நீண்டகால வழக்குகளை அதிகரிக்கும்.

இன்னும் இந்த வக்ஃப் திருத்த மசோதாவை எதிர்க்க பல காரணங்கள் இருக்கின்றன. கட்டுரை நீளும் என அஞ்சி தவிர்க்கிறேன்

AM நூர்தீன்

வியாழன், 3 ஏப்ரல், 2025

ஜெயலலிதா நிரபராதியா ?

 ஜெயலலிதா நிரபராதியா?




பார்ப்பனியத்துக்கும் பணத்துக்கும் கைப்பாவையே நீதிமன்றம்!


நீதியை நிலைநாட்ட ஒரே வழி மக்கள் அதிகாரம்!


அன்பார்ந்த உழைக்கும் மக்களே,

ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டு விட்டார். இது விலைக்கு வாங்கப்பட்ட தீர்ப்பு என்பது உலகத்துக்கே தெரியும். இருந்த போதிலும், தான் புடம் போடப்பட்ட சொக்கத் தங்கமாக வெளியே வந்திருப்பதாக கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் சொல்லிக் கொள்கிறார் ஜெயலலிதா.


மிகுந்த அக்கறையுடனும் நேர்மையாகவும் நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை, திமிர்த்தனமாகவும் அலட்சியமாகவும் ரத்து செய்திருக்கிறார் குமாரசாமி. மொத்தம் 900 பக்க தீர்ப்பில், சாட்சிகள் சொன்னது, குன்ஹாவின் தீர்ப்பு, அன்பழகன் தரப்பு வாதம், கர்நாடக அரசின் வாதம், சு.சாமியின் வாதம் எல்லாம் சேர்த்து 870 பக்கம். குமாரசாமியின் சொந்த சரக்கு வெறும் 30 பக்கம்தான். அந்த 30 பக்கங்களிலும் வாங்கின காசுக்கு மேல் கூவி விட்டார் குமாரசாமி.


குன்ஹாவின் தீர்ப்புப்படி வருமானத்துக்கு மேல் 540 சதவீதம் அதிகமாக சொத்து சேர்த்திருக்கிறார் ஜெயலலிதா. ஆனால் வருமானத்துக்கு மேல் 8.12 சதவீதம் அளவுக்குத்தான் ஜெயலலிதா சொத்து சேர்த்திருக்கிறார் என்பது குமாரசாமி போட்டிருக்கும் கணக்கு. 540 சதவீதத்தை 8 சதவீதமாகக் குறைத்து கணக்கு கட்டுவதற்காக, நகைகள், கட்டிடம் எஸ்டேட் போன்ற பல சொத்துக்களின் மதிப்பை வேண்டுமென்றே அவர் குறைத்துக் காட்டியிருக்கிறார். அரசு ஊழியர் அன்பளிப்பு வாங்குவதில் தவறில்லை என்று கூறி சட்டத்தை வளைத்திருக்கிறார்.வளர்ப்பு மகன் கல்யாண செலவுக்கும் ஜெயாவுக்கும் சம்மந்தமேயில்லை என்று சாதித்திருக்கிறார்.

இப்படிப் பல தகிடுதத்தங்கள் செய்தும் அவரால் சொத்து மதிப்பை குறைக்க முடியவில்லை. வாங்கின காசுக்கு வேலையை முடிக்க வேண்டும் என்ற அவசரத்தில் ஜெயலலிதா வாங்காத கடன் 13.5 கோடி ரூபாயை வாங்கியதாகக் காட்டி கணக்கை முடித்து தீர்ப்பை எழுதியிருக்கிறார் குமாரசாமி.


உலகறிந்த ஒரு ஊழல் வழக்கில் 'அஞ்சும் மூணும் ரெண்டு' என்று குமாரசாமி ஒரு கணக்கு போட்டிருக்கிறார். இப்போது பொய்க்கணக்கு அம்பலமாகிவிட்டது. இதன் காரணமாக, 'யானோ மன்னன் யானே கள்வன்' என்று குமாரசாமி நெஞ்சுவலி வந்து உருண்டு விழவில்லை. பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறாரா என்றால் அதுவும் இல்லை.


குமாரசாமியின் கணக்கு சரியா தப்பா என்பதை நாம் சொல்லக் கூடாதாம். அதை உச்ச நீதிமன்ற நீதிபதிதான் சொல்ல வேண்டுமாம். அஞ்சும் மூணும் எவ்வளவு என்று சுப்ரீம் கோர்ட்டில் ராம் ஜெத்மலானி, நாரிமன் போன்ற வக்கீல்கள் வாதாடி, அதுக்கு பத்து வாய்தா வாங்கி, அப்புறம் அப்புறம் தீர்ப்பு சொல்வார்களாம். அதுவரை 'அஞ்சும் மூணும் ரெண்டு' என்ற குமாரசாமி தீர்ப்பின் அடிப்படையில் அம்மா முதலமைச்சராக இருக்கலாமாம். குமாரசாமியை யாரும் குற்றம் சொல்லக் கூடாதாம். சொன்னால் நீதிமன்ற அவமதிப்பாம். இந்தக் கேலிக்கூத்துக்குப் பெயர் சட்டத்தின் ஆட்சியாம்.


பதினெட்டு ஆண்டு காலம் நடைபெற்ற இந்த சொத்துக் குவிப்பு வழக்கின் வரலாறு முழுவதுமே கேலிக்கூத்துதான். குன்ஹாவின் தீர்ப்பையும், கர்நாடக உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் அரிதான சில தீர்ப்புகளையும் தவிர, மற்றெல்லா சந்தர்ப்பங்களிலும் போயஸ் தோட்டத்தின் செக்யூரிட்டியாகவே உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இருந்திருக்கிறார்கள்.


அரசு வழக்குரைஞர் ஆசார்யா மிரட்டி துரத்தப்பட்டார். உச்ச நீதிமன்றம் வேடிக்கை பார்த்தது. அரசு வழக்குரைஞராக பவானிசிங் தான் இருக்க வேண்டும் என்று ஜெயலலிதா ஆசைப்பட்டார். 'அவ்வண்ணமே ஆகுக' என்று தீர்ப்பளித்தார்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள். ஜெயாவுக்கு உடனே பெயில் கொடுத்து, மூன்றே மாதத்தில் மேல் முறையீட்டை உயர்நீதிமன்றம் முடிக்க வேண்டும் என்று உத்தரவும் போட்டார் தலைமை நீதிபதி தத்து. கர்நாடக உயர்நீதி மன்றத்தில் தனக்கு எதிராக வழக்கு நடத்த, பவானிசிங்கை ஜெயலலிதாவே நியமித்துக் கொண்டார். பச்சையான இந்த அயோக்கியத் தனத்தை அங்கீகரித்து, வழக்கை நடத்தினார் குமாரசாமி.


பிறகு பவானி சிங் நியமனமே செல்லாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதி லோகுர் தீர்ப்பளித்தார். அதனை நிராகரிக்க முடியாததால், "பவானி சிங்கை நியமித்தது சட்ட விரோதம்தான், இருந்தாலும் அரசு தரப்பு வக்கீல் இல்லாமல், குமாரசாமியே நீதி வழங்குவார்" என்று உலகில் எங்குமே கேள்விப்பட்டிராத ஒரு கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பை வழங்கினார்கள் தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.


எல்லா அயோக்கியத்தனங்களுக்கும் சிகரம் வைத்தாற்போன்றதொரு தீர்ப்பை இப்போது குமாரசாமி வழங்கியிருக்கிறார். தத்து குமாரசாமியின் நண்பர் என்றும், சில ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து குமாரசாமியை காப்பாற்றி விட்டிருக்கிறார் என்றும் இப்போது செய்தி வெளியாகியிருக்கிறது. தலைமை நீதிபதி தத்துவின் ஊழல் சொத்துப் பட்டியலை வெளியிட்டிருக்கிறார் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கட்ஜு.


ஜெயாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் சொத்து விவரம் பற்றி ஒரு விசாரணை நடத்தினால், டஜன் கணக்கிலான நீதிபதிகளுக்கு எதிராக சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்ய வேண்டி வரும்.

ஜெயலலிதாவைக் காட்டிலும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகள் இந்த நீதிபதிகள்தான் என்பது அப்போது தெரியும்.


ஜெயலலிதா வழக்கில் மட்டுமல்ல. சங்கராச்சாரியில் தொடங்கி, மோடி அத்வானி, அமித் ஷா உள்ளிட்ட எல்லா பார்ப்பன பாசிசக் கொலையாளிகளையும், முஸ்லிம்களை நரவேட்டையாடிய போலீசு, ராணுவ அதிகாரிகளையும், தலித் படுகொலைக் குற்றவாளிகளையும் நீதிமன்றங்கள் அடுத்தடுத்து விடுதலை செய்கின்றன. சல்மான் கான் போன்ற பணக்காரப் பொறுக்கிகளுக்கும், சத்யம் ராமலிங்க ராஜு போன்ற கார்ப்பரேட் கிரிமினல்களுக்கும்தான் நீதிமன்றங்கள் ஆடுகின்றன. இதுதான் நீதித்துறையின் யோக்கியதை.


உயர்நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கையும் களவுமாகப் பிடிபட்டாலும். நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் அவர்களைத் தண்டிக்க முடியாது. எனவே மிகவும் துணிச்சலாக லஞ்சம் வாங்கும். குற்றவாளிகள், நீதிபதிகள்தான் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.


குமாரசாமியின் குருநாதர்கள்தான் உச்ச நீதிமன்றத்தில் அமர்ந்திருக்கின்றனர். குன்ஹாவைப் போன்றோர் விதிவிலக்குகள். நீதிபதிகளில் ஆகப் பெரும்பான்மையோரும் குமாரசாமிகள்தான். 45% கமிசன் என்று பொதுப்பணித் துறை காண்டிராக்டர்கள் சொல்கிறார்களே, அதுதான் விதி, முத்துக் குமாரசாமி ஒரு விதிவிலக்கு. விதிவிலக்குகள் ஒருபோதும் விதியாகி விடாது.


எனவே ஜெயலலிதாவை மட்டுமல்ல. ஊழல் பேர்வழிகளையும் மக்கள் விரோதிகளையும் நீதி மன்றத்தின் மூலம் தண்டித்து விட முடியும் என்ற மயக்கத்துக்கு நாம் ஆளாகக் கூடாது. நீதித்துறையே குற்றவாளிகளின் கூடாரமாகவும், தீர்ப்பு என்பது விலைப்பேசி விற்கப்படும் பொருளாகவும் மாறி வெகு காலமாகி விட்டது.அங்கே மக்களுக்கு ஒருக்காலும் நீதி கிடைக்காது.


நீதிமன்றம் மட்டுமல்ல. சட்ட மன்றம். நாடாளுமன்றம், போலீசு, இராணுவம் உள்ளிட்ட இந்த அரசுக் கட்டமைப்பு முழுவதும் கிரிமினல்களே நிறைந்திருக் கிறார்கள். போலீசு ஐ.ஜி காப்பியடித்து மாட்டிக் கொள்கிறார். டி.ஐ.ஜி மீது பாலியல் வன்முறை வழக்கு. இன்ஸ்பெக்டர்கள் வழிப்பறி செய்கிறார்கள். இராணுவமோ கஞ்சா கடத்துகிறது. அரசியல்வாதிகளைப் பற்றி சொல்லத் தேவையில்லை. மொத்தத்தில் இந்த அரசுக்கட்டமைப்பு தோற்றுவிட்டது. திவாலாகி விட்டது.


குமாரசாமி தீர்ப்பின் மூலம் ஜெயலலிதா பெற்றிருக்கும் வெற்றி என்பது இந்த அரசுக் கட்டமைப்பின் தோல்விக்கு ஒரு சான்று. இங்கே முதல்வர் முதல் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். நீதிபதிகள் வரை அனைவரும் கிரிமினல்கள் தான். இந்த அரசுக் கட்டமைப்பையே குற்றவாளிகள்தான் கட்டுப்படுத்துகிறார்கள். இந்த அமைப்புக்குள் குற்றவாளிகளை ஒருபோதும் தண்டிக்க முடியாது என்பதை புரியாதவர்களுக்கும் புரியும்படி ஜெயலலிதா நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.


நீதியை நிலைநாட்ட வேண்டுமானால், இந்தக் கட்டமைவுக்கு வெளியே, மக்கள் அதிகாரத்துக்கான அமைப்புகளைக் கட்டியமைப்பது ஒன்றுதான் வழி, மக்கள் திரளின் வலிமை கொண்டு மாற்று அரசியல் கட்டுமானங்களை உருவாக்குவோம்! ஜெயலலிதா உள்ளிட்ட குற்றவாளிகளைத் தண்டிப்போம்!


மக்கள் கலை இலக்கியக் கழகம் விவசாயிகள் விடுதலை முன்னணி புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி பெண்கள் விடுதலை முன்னணி


சென்னை - காஞ்சிபுரம் - திருவள்ளூர் மாவட்டங்கள் 9551869588-9445112675

9444834519-9841658457

புதிய ஜனநாயகம்

புதிய தொழிலாளி 

மே 2015


வியாழன், 20 மார்ச், 2025

யார் இந்த MGR? மறைக்கப்பட்ட உண்மைகள்

இளம் தலைமுறையினரே.....
யார் இந்த MGR?
மறைக்கப்பட்ட உண்மைகள் 

கலைஞருக்கு எதிரா சர்க்காரியா கமிசன் மட்டுமே.

ஆனா MGR க்கு எதிராக 

பால்கமிசன், 

ரே கமிசன் எரிசாராய முறைகேடு,

 மருத்துவ கல்லூரி சீட்டு முறைகேடு,

 பால்டிகா கப்பல் நிலக்கரி பேர முறைகேடு,

ராபின் மெயின் முறைகேடு, 

அத்தோடு பாஸிச அடக்குமுறை ஆட்சி, ஏகப்பட்ட துப்பாக்கி சூடுகள், பொருளாதார நாசம், பத்திரிக்கை சுதந்திரம் பறிப்பு, நீதித்துறை மிரட்டல் என எண்ணற்ற குற்றச்சாட்டுகள். ஆனால் எதுவுமே பேசப்படவில்லையே ஏன்? 

இவர் சினிமாவில் நடிகராக உத்தமர், வீரர், மக்கள் போராளி, குடியை எதிர்ப்பவர் என பல வேசங்களில் வலம் வந்தவர். ஆனால் உண்மையில் அவர் யார்? 

திமுகவின் பொருளாளராக அனைத்து அதிகாரத்துடன் இருந்த MGR கணக்கு கேட்டாராம். ஆனா கலைஞர் கணக்கு தரவில்லையாம். அவரை கட்சியை விட்டு நீக்கிவிட்டார்களாம்.

வேடிக்கையா இருக்குமே? ஆனால் ஊரெல்லாம் இதே பேச்சுதான். எல்லோரும் நம்பினர். 

ஆனால் இந்திராவின் மிரட்டல்தான் MGR ரின் இந்த பேச்சுக்கும் நடத்தைக்கும் காரணம். MGR ஒன்னாம் நம்பர் பயந்தாங்கொள்ளி. மத்தியில் யார் பிரதமரோ யாரிடம் வருமானவரித்துறை இருக்கிறதோ அவர்களை கண்டாலே நடுக்கம்தான். அப்படித்தான் இந்திராவின் அடிமையாக மாறி திமுகவை பிரித்தார்.  

MGR ன் அடிமைத்தனத்தால் கச்சத்தீவை இந்திரா கொடுத்தபோது திமுக மட்டுமே அதை எதிர்த்தது. அதிமுக அனைத்து துவாரங்களையும் மூடிக்கொண்டது. சட்டமன்ற தீர்மானத்தை கூட ஆதரிக்கவில்லை.

2016 ல் ஜெ சட்டமன்றத்தில் கச்சத்தீவை பற்றி வாய்கிழிய பேசியபோது MGR ன் கோழைத்தனத்தை பற்றி பேசாதது ஏன்? 

மேலும் ஜெ பேசும்போது 2008 ல் தான் கச்சத்தீவை மீட்க வழக்கு போட்டதாக சொல்லியிருக்கிறார்.

1977 ல் ஆட்சிக்கு வந்த MGR ஏன் வழக்கு போடவில்லை?

1991 இல் ஜெ ஆட்சிக்கு வந்ததும் ஏன் வழக்கு போடவில்லை?

ஏனென்றால் இதெல்லாம் ஊரை ஏமாற்றும் வேலை என்பது ஜெ க்கு நன்கு தெரியும். இனி கச்சத்தீவை மீட்க வழியே இல்லை.

1974 ல் திமுகவுடன் காங்கிரஸ் மற்றும் அதிமுக சேர்ந்து மத்திய அரசின் முடிவை எதிர்த்திருந்தால் அப்போதைய கச்சத்தீவு தாரை வார்ப்பை தடுத்திருக்கலாம்.

ஆனா அப்போது பொத்திக்கொண்டு இருந்த அதிமுகவும் ஜெ யும் பிறகு வாய்கிழிய பேசுவது உச்சகட்ட நகைச்சுவை

1976 இல் எமர்ஜென்சி நேரத்தில் கலைஞர் மீது எண்ணிலா வழக்குகளை போட்டார் இந்திரா.

அவரது நோக்கம் கலைஞரை ஊழல்வாதியாக ஒரு பிம்பத்தை உருவாக்குவதே.

அத்தனை பத்திரிக்கைகளும் ஊடகங்களும் 2G விவகாரத்தை எப்படி ஊதி பெருக்கினார்களோ அதே மாதிரிதான் அன்றும் அவாள் சார்பு பத்திரிக்கைகள் தினம் தினம் சர்க்காரியா விசாரணை செய்திகளை பரப்பின. எமர்ஜென்சி என்பதால் ஒரு தரப்பான கலைஞருக்கு எதிராக செய்திகள் பரப்பப்பட்டது.

கலைஞர் தரப்பு நியாயங்கள் மக்களுக்கு போய் சேராமல் பார்த்துக்கொண்டன.

மக்கள் குறிப்பாக அடித்தட்டு மக்கள் அப்படியே நம்பினார்கள். இன்றும் கலைஞர் மீது அன்று குத்தப்பட்ட ஊழல் முத்திரை விலகவில்லை.

ஆனால் இறுதிவரை சர்க்காரியா கமிசனால் எதையும் நிரூபிக்க முடியவில்லை. ஆனால் மக்களிடத்தில் திமுக மீது வெறுப்பு வந்தது.

விளைவு... 1977 ல் அதிமுக + இந்திரா கூட்டணி பெரும் வெற்றி.

ஆனால் மத்தியில் காங்கிரஸ் தோல்வி.

வழக்கம்போல வடிகட்டிய கோழை MGR மத்திய அரசு பக்கம் சாய்ந்ததுடன் தனித்து நின்று தமிழகத்தில் ஆட்சியை பிடித்தார்.

மத்திய அரசுக்கு பயந்துக்கொண்டு தஞ்சை MP இடைத் தேர்தலில் இந்திரா போட்டியிட விரும்ப MGR அதை ஏற்கவில்லை.

இந்திரா கர்நாடகா சிக்மக்ளூரில் நின்று வென்றார்.

மத்தியஅரசின் நிர்ப்பந்தம் காரணமாக தன்னை நிராகரித்த கோழை MGR மீது கடும் கோபம் கொண்ட இந்திரா தான் கலைஞருக்கு செய்த கொடுமைகளுக்கு வருந்தி கலைஞருக்கு தூது அனுப்பி பின்பு மெரினாவில் மக்களிடம் தனது ஆட்சியின் எமெர்ஜென்சி கால தவறுகளுக்கு வருத்தம் தெரிவிக்க திமுக- காங்கிரஸ் உறவு ஏற்பட்டு 1980 ல் தமிழகத்தில் ஒரு இடம் தவிர அனைத்து MP தொகுதிகளிலும் அந்த கூட்டணி வென்றது.

ஆனால் அதே ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் MGR மீண்டும் வெல்ல அதன் பிறகே MGR ன் உண்மை முகம் வெளியானது.

1980 தேர்தலில் வென்ற பிறகுதான் எம்ஜிஆர் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை ரத்து செய்தார். சாராயக் கடைகளை கொண்டு வந்தார். அந்த சாராயக்கடைகள் ஏலம் எடுப்பதன் மூலம் அந்த வருவாய் கட்சிக்காரர்களுக்கே இருக்க வேண்டும் என்று கருதினார்.

அதற்காக சாராயக்கடை ஏலம் கோருபவர்கள் தங்கள் கட்சி உறுப்பினர் சீட்டு விவரங்களை குறிக்க வேண்டும். அவர்களுக்கே முன்னுரிமை தரவேண்டும் என்று அதிகாரிகளுக்கு எழுதப்படாத ஆணை பிறப்பித்தார். அது முறையாக நடக்கிறதா என்பதை உளவுத்துறை மூலம் கண்காணித்து நடைமுறைப்படுத்தவும் செய்தார்

சாராயக்கடைகள் திறக்கப்பட்ட வேளை. சாராயக் கம்பெனி நடத்த ஒரு குறிப்பிட்ட தொழிலதிபருக்கே அனுமதி வழங்கப்பட்டது.

1975-80 வரை அரசின் மொத்த வரி வருமானத்தில் கலால் வரியின் பங்களிப்பு வெறும் 1 சதவிகிதம் மட்டுமே.

1980-81 அஇஅதிமுக அரசு தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக மதுப் பயன்பாட்டின் மீதான தடையை நீக்கியது. இதனால் குறிப்பிடத்தகுந்த அளவில் கலால் வரி வருவாய் அதிகரித்தது.

மாநிலத்தின் மொத்த வரி வருவாயில் குறிப்பிடத்தகுந்த அளவாகக் கலால் வரியின் மூலம் 13.9 சதவிகித வருமானம் 1980-85 வருட காலத்தில் பெறப்பட்டது.

இந்தக் கலால் வரியில் 80 சதவிகிதம் நகர்ப்புற, கிராமப்புற ஏழைகள் பரவலாக அருந்தும் நாட்டுச் சரக்குகளான பட்டைச் சாராயம், கள் மூலம் பெறப்பட்டது என்பது பெரும்பாலான கலால் வரியை இவர்களே செலுத்தினார்கள் என்பதை விளக்குகிறது.

இந்தக் கலால் வரி வருமானமானது 1981-82 காலத்தில் ரூ.110 கோடியில் இருந்து 1984-85 வருட காலத்தில் ரூ.202 கோடியாக உயர்ந்து கிட்டத்தட்ட இரு மடங்கு அளவுக்கு அதிகரித்திருப்பது கவனத்துக்குரியது.

இதெல்லாமே MGR ரால் ஏழைகள் உழைப்பு எப்படி உறிஞ்சப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள்

எம்.ஜி.ஆரின் தயவால் பணக்காரர்கள் பெற்றது அதிகம். பட்ஜெட் புள்ளிவிவரங்கள் சொல்வதைவிட அதிகமாகவே அவர்கள் பயன்பெற்றார்கள்

சட்ட ரீதியாகவும், சட்டத்துக்குப் புறம்பாகவும் பல கோடி ரூபாய் பொதுப் பணத்தைச் சாராய உற்பத்தியாளர்கள், நகர்ப்புற ரியல் எஸ்டேட் ஒப்பந்ததாரர்கள் ஆகியோரின் தனிப்பட்ட நலன்களுக்காகக் கைமாற்றிக் கொண்டார்கள்.

MGR ரின் அஇஅதிமுக அரசு முறையற்ற மோசடியான மதுக் கொள்கையை வகுத்தது

தமிழக அரசின் ஒட்டுமொத்த மது விற்பனையைக் கவனித்துக்கொள்ள டாஸ்மாக் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.

இந்தியாவில் உற்பத்தியாகும் வெளிநாட்டு மதுவகைகள் (IMFLs) விநியோகம் செய்யும் மது உற்பத்தியாளர்களுக்கே மது விலையை நிர்ணயிக்கும் உரிமையை வழங்கியது.

இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத

வகையில் தமிழ்நாட்டில் மட்டுமே IMFL மதுவகைக்கு உற்பத்தியாளர்களுக்குப் பதிலாக டாஸ்மாக் வழியாகத் தமிழக அரசே கலால் வரி செலுத்தியது.

சுத்திகரிக்கப்பட்ட ஸ்பிரிட் மீதான எல்லா வகையிலான கலால் வரியிலிருந்தும் மது உற்பத்தியாளர்களுக்குத் தமிழக அரசு வரிவிலக்கு வழங்கியிருந்தது.

இவை அனைத்தும் தமிழக அரசின் கஜானாவுக்கு ஒவ்வொரு வருடத்துக்கும் 100 கோடி ரூபாய் என்கிற அளவில் ஏழு வருடங்கள் தொடர்ந்து பெருத்த வரி இழப்பை உண்டு செய்தன.

லாபத்தில் இயங்கிக்கொண்டிருந்த அரசு நிறுவனங்கள் தனியாருக்கு அற்பத் தொகைக்குக் கைமாற்றப்பட்டன மற்றும் அரசுக்குச் சொந்தமான நகர்ப்புற நிலங்கள் மிக மலிவான தொகைக்குத் தனிப்பட்ட நபர்களின் நலன்களுக்காக வழங்கப்பட்டன.

1977-85 இடைப்பட்ட காலத்தில் அடிமைத் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்கு மத்திய அரசு 26.70 லட்சம் நிதி ஒதுக்கியது. இதில் அஇஅதிமுக அரசு 17.04 லட்சம் நிதியைச் செலவு செய்யாமலும், 3.68 லட்சம் நிதியைத் தேவையில்லை என்றும் திருப்பிச் செலுத்தியது.

1983இல் இருந்து விவசாயக் கூலிகளுக்கான குறைந்தபட்ச ஊதியத்தைத் திருத்தியமைக்கவேயில்லை. ஒவ்வோர் இரண்டு வருடத்துக்கு ஒருமுறை ஊதியத்தை ஏற்ற வேண்டும் என்கிற மத்திய அரசின் அழுத்தத்துக்குப் பிறகும் அரசு இப்படி நடந்துகொண்டது.

வறுமைக் கோட்டுக்குக் கீழே தமிழகத்தின் 40 சதவிகித மக்கள் வாடிக்கொண்டிருந்தார்கள். 1977-87 வரை அவர்களின் நிலைமை முன்னேறவே இல்லை.

மாநிலத்தின் வேலைவாய்ப்பின்மை அளவு மேலும் அதிகரித்தது.1975- 83–க்கு இடைப்பட்ட காலத்தில் கிராமப்புற வேலைவாய்ப்பின்மை அளவு 86 சதவிகிதம் அதிகரித்தது.

இது ஒட்டுமொத்த தேசிய அளவான 17.8 சதவிகிதத்தை விட மிகவும் அதிகமாகும்.

நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை அளவு 1977-78 – 1983 காலத்தில் அகில இந்திய அளவில் குறைந்தபோது தமிழகத்தில் அதிகரித்தது.

விவசாயிகளின் தோழனாக பல படங்களில் நடித்த எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்தவுடன் வாகைக்குளத்தில் விவசாயிகளைச் சுட்டுக் கொன்றார்.

மீனவனின் நண்பனாக படகோட்டியில் நடித்த எம்.ஜி.ஆர் அப்பாவி மீனவர்களை சுட்டு வீழ்த்தினார்.

வட ஆற்காடு, தர்மபுரி மாவட்டங்களில் கொடுமையான நிலச்சுவான்தார்களை எதிர்த்துப் போராடிய மார்க்சிய- லெனினிய அமைப்பைச் சேர்ந்த அப்பாவி இளைஞர்களை துடிக்க துடிக்க என்கவுன்டர் செய்தார்.

ஒரு வருடத்திற்கும் மேலே முதல் தகவல் அறிக்கையே தராமல் 1.5 லட்சம் மக்களை சிறையில் அடைத்து சித்தரவதை செய்தார்.

எம்ஜிஆரின் ஆட்சி காலத்தில் பத்திரிக்கையாளர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள், இயக்கவாதிகள் இப்படி அனைத்து தரப்பினருக்கும் அடக்குமுறை அனுபவத்தை தந்தது

இதற்காக குண்டாஸ் போன்ற புதிய சட்டங்கள் இயற்றப்பட்டன

காவல்துறைக்கு தன்னிச்சையான அதிகாரம் கொடுக்கப்பட்டு அரசை விமர்சிப்பவர்கள் ஒடுக்கப்பட்டனர்.

விசாரணைக் கைதிகளின் மரணம் வருடம்தோறும் அதிகரித்தது.

1980-களில் நாராயணசாமி நாயுடு தலைமையிலான விவசாயிகள் சங்கம், மாநிலம் தழுவிய கடையடைப்பு நடத்தியது.

Part 2

வேடசந்தூர் உட்பட பல கிராமங்களில் நடந்த துப்பாக்கிச்சூட்டில், பல்வேறு காலகட்டங்களில் 14 விவசாயிகள் பலியாகினர்.

* 1980 டிசம்பர் 31-ம் தேதி, குருஞ்சாக்குளம் விவசாயப் போராட்டத்தின்போது, 8 விவசாயிகள் போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியாகினர்.

* 1985-ம் ஆண்டு, சென்னையில் மீனவர் போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில், 3 மீனவர்கள் பலியானார்கள். பரமக்குடி துப்பாக்கிச்சூட்டில், 5 பேர் பலியானார்கள்.

*1987 வன்னியர் சங்க போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்கள் 21 பேர்

1980-ல் வடஆற்காடு மற்றும் தர்மபுரி மாவட்டகளில் மார்க்சிய லெனினிய கட்சியை சேர்ந்த 15 பேரும் 1981-ல் நான்குபேரும் எங்கவுண்டரில் கொல்லப்பட்டனர். இந்த கொலைகளை உயர் நீதிமன்றம் கண்டித்தும் இதில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு பாராட்டும் பதக்கங்களும் வழங்கப்பட்டன.

எம்.எல்.ஏக்களையும் அமைச்சர்களையும் விமர்சிக்கும் திரைப்படங்களை தடை செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

1981-ல் பத்திரிக்கைகளை ஒடுக்கும் விதமாக சட்டம் கொண்டுவரப்பட்டது. 

எந்த வகையிலும் விமர்சனம் என்பது இல்லாமல் பார்த்துக்கொண்டது எம்ஜிஆர் அரசு. உதாரணமாக கொமல் சுவாமிநாதனின் ‘தண்ணீர் தண்ணீர்’ நாடகம் தமிழக கிராமங்களின் அவலத்தை சொல்லும் நாடகமாகும். இந்த நாடகம் தணிக்கை செய்யப்பட்டது. 

இதைத் தழுவி எடுக்கப்பட்ட K. பாலசந்தரின் ‘தண்ணீர் தண்ணீர்’ திரைப்படத்தை தடைசெய்ய்யக்கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்தது. 

மத்திய அரசு தடைவிதிக்காத் சூழலில் காவல்துறை மூலம் அத்திரைப்படம் ஓடும் திரையரங்கு உரிமையாளர்கள் மிரட்டப்பட்டனர்.

திட்டங்கள் கூட தொடர்ந்து 13 வருடம் ஆட்சியில் இருந்தும் சத்துணவை தவிர வேறு எதையும் பெரிதாக கொண்டு வர வில்லை என்பதும் உண்மை......

மக்களின் ஆதரவிருந்தும் ‘தண்ணீர் தண்ணீர்’ ஒரு சில வாரங்களிலே திரையிலிருந்து விலகியது....

மொத்தத்தில் அடக்குமுறையாலும் பார்ப்பணீயத்தாலும் மூடி மறைக்கப்பட்ட மிக மிக மோசமானவர் தான்

இந்த ம.கோ.இராமச்சந்திரன்.......

அதில் சில ஆதாரங்கள்.......

எரிசாராய ஊழலும் ரே கமிசனும்

ரே கமிஷன் பற்றி வாசிக்க - https://t.co/kYcGuyTuPX

பால் கமிஷன் பற்றி வாசிக்க

 https://t.co/jRZfMav5Rq

ரே கமிஷன்

எம்ஜிஆரின் பால்டிகா நிலக்கரி கப்பல் பேர ஊழலும் மருத்துவ சீட்டு முறைகேடும். 

https://t.co/MnWYPrWBHi..

Medical seat 


MGR ம் ஈழமும்

எம்ஜிஆர் புலிகளை ஆதரிக்க காரணம் இரண்டு

1) கலைஞர் சபாரத்திணத்தை ஆதரித்தார். அவருக்கு எதிரா புலிகளை ஆதரித்தார்

2) இந்திரா அப்போது ஈழப்போராளிகளுக்கு தமிழகத்தில் பயிற்சி தந்தார்

இல்லாவிடில் பொத்திக்கொண்டு       மௌ னமாகத்தான் இருந்திருப்பார்.

எம்ஜிஆர் பணம் கொடுத்தார் என்பது உண்மைதான்

ஆனால் மத்திய அரசு ஒப்புதல் பெற்றுதான் கொடுத்தார்.

சார்க் மாநாட்டுக்கு ஜெயவர்த்தனே வந்தபோது சென்னையில் இருந்த பிரபாகரனை வீட்டுகாவலில் வைத்தது எம்ஜிஆர்.

டெல்லி அசோகோ ஹோட்டல் விவகாரத்தில் பிரபாகரன் எம்ஜிஆரிடம் உதவி கேட்டார் எம்ஜிஆர் கண்டு கொள்ளவில்லை.

1987இல் ராஜிவ் இந்திய அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பிய போதும், 1987 செப்டம்பரில் 20க்கும் அதிகமான போராளிகளை இந்திய கடற்படை சிங்கள அரசிடம் ஒப்படைத்த போதும், திலிபன் உண்ணாவிரதம் இருந்து மறைந்த போதும், தமிழ் நாட்டில் அதிகாரத்தில் இருந்தது எம்ஜிஆர்தான் 

ஆதாரங்கள்

Ray commission உதயம் ஏன்?

கலைஞரை ஊழல்வாதி என முத்திரை குத்திய உத்தமர் எம்ஜியாரின் சாராய ஊழல் பற்றிய முழு விபரங்கள் 👇

சாராய ஊழல்

நன்றி :  @keerthanaram142 in twitter




திங்கள், 3 மார்ச், 2025

கண்டா வரச் சொல்லுங்க...

கண்டா வரச் சொல்லுங்க...


உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஓடும் ரயில்களில் டீ விற்கும் தமிழனைக் கண்டதுண்டா...?

கண்டா வரச் சொல்லுங்க..!

மத்தியப் பிரதேசத்தில் போக்குவரத்து சிக்னல்களில் கார் ஸ்டிக்கர் விற்கும் தமிழனைக் கண்டதுண்டா..?

கண்டா வரச் சொல்லுங்க...!

ஜார்கண்ட் மாநில ரயில் நிலைய வாசல்களில் கைக்குழந்தைகளோடு பொம்மை விற்கும் தமிழனைக் கண்டதுண்டா..?

கண்டா வரச் சொல்லுங்க...!


பீஹார் மாநிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புக் கட்டுவதில் வேலை செய்யும் தமிழனைக் கண்டதுண்டா..?

கண்டா வரச் சொல்லுங்க...!

ராஜஸ்தான் செங்கல் சூளைகளில் குடும்பத்தோடு வேலை செய்யும் தமிழனைக் கண்டதுண்டா..?

கண்டா வரச் சொல்லுங்க...!


சத்தீஸ்கர் மாநில அரசுப் பணிகளை ஆக்கிரமித்த தமிழனைக் கண்டதுண்டா..?

கண்டா வரச் சொல்லுங்க...!


குஜராத் கிரானைட் கடைகளில் குடும்பத்தோடு தங்கி கூலி வேலை செய்யும் தமிழனைக் கண்டதுண்டா..?

கண்டா வரச் சொல்லுங்க...!


வடமாநில டிராபிக்களில் ஹிந்தி தெரியாமல் பிச்சை எடுக்கும் தமிழனைக் கண்டதுண்டா..?

கண்டா வரச் சொல்லுங்க...!


ஹிந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்று சொல்வோரே, புலம் பெயர் தொழிலாளிகளாய்

வடமாநிலங்களிலிருந்து தமிழகம் நோக்கி கூட்டம் கூட்டமாக நடந்து வந்த தமிழனைக் கண்டதுண்டா..?

கண்டா வரச் சொல்லுங்க...!


அரசாங்க சொத்தை விற்றதன் விளைவு

கேரள முதல்வர் திரு.பினராயி விஜயன் எவ்வளவோ கேட்டும் பிரதமர் மோடி கொடுக்காமல் அதானிக்கு விற்ற திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வாகனங்கள் நிறுத்தும் கட்டணத்தை அதிகரித்துள்ளனர்..

அதிகமாக அல்ல..! 

முப்பது நிமிடத்திற்கு பிறகு ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஏழு ரூபாய் அதிகரித்துக் கொண்டிருக்கும்..

உதாரணமாக மூன்று மணி நேரம் விமானம் வர தாமதித்தால் 1237 ரூபாய் மட்டுமே....

அரசாங்க சொத்தை விற்றதன் விளைவு...

எந்த முகத்துடன் இவர்கள் வாக்கு கேட்கிறார்கள்..

எனத்தெரியவில்லை..!

மேலே சொன்னது அனைத்தும் உண்மை...

👉🏿எந்த வடிவிலும் பாஜக கூட்டணி தமிழகத்தில் வென்றால் தமிழகம் வட மாநில வேட்டைக்காடாக மாற்றப்படும்.    

👉🏿டிஎன்பிஎஸ்ஸி (TNPSC) கலைக்கப்படும்.   

👉🏿அனைத்துப் பல்கலைக் கழகங்களும் மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்லப்படும்.

👉🏿சமூக நீதி கொள்கையின் மணி மகுடமான 69 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும்.   

ஆனால் 

👉🏿அனைத்துத் துறைகளிலும் அரிய வகை உயர்சாதி ஏழை என்ற பெயரில் தேவையற்ற 10 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும்.   

👉🏿தமிழகத்தின் நீர் வளங்கள் அனைத்தும் மத்திய அரசின் நிர்வாகத்திற்கும் செல்லும்.

👉🏿தமிழ்நாடு மின்சார வாரியம் தனியார் மயமாக்கப்படும்.   

👉🏿மின் கட்டணம் மூன்று மடங்கு உயரும்.

👉🏿தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தனியார் மயமாக்கப்படும். 

👉🏿ஆரம்பக் கல்வியிலிருந்து கலை அறிவியல் கல்லூரிகளுக்கு செல்வதற்கான உயர்கல்வி வரை அனைத்து இடங்களிலும் நீட் தேர்வு புகுத்தப்படும்.

👉🏿தமிழக காவல்துறையில் முழுக்க முழுக்க வட மாநில அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள்.

👉🏿தமிழகத்தில் உள்ள அனைத்து கடற்கரைகளும் தனியார் மயமாக்கப்பட்டு அதானி வசம் ஒப்படைக்கப்படும்.

👉🏿மீனவர்களின் மீன்பிடி உரிமையை தனியார் வசம் செல்லும்.

👉🏿சிறு குறு தொழில்கள் அனைத்தும் நசுக்கப்பட்டு சுயதொழில் வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டு அனைவரையும் குலத்தொழில் நோக்கி செல்லும் வகையில் திட்டங்கள் அமல்படுத்தப்படும். 

👉🏿அமைதிப் பூங்காவான தமிழகம் சாதி மத கலவரங்கள் தூண்டப்பட்டு கலவர பூமியாக மாறும் ....


 இதற்கெல்லாம் தயாரா?✍🏼🌹


நன்றி: சிந்தனை@mdunis in X pages 


ரஜினியின் குடும்பம்

ரஜினியின் குடும்பம் காமெடி நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் அப்பா ஒய்.ஜி.பார்த்தசாரதி. புகழ்பெற்ற அமெச்சூர் நாடகக் குழுவை நிறுவி நடத்திய நடிகர். ப...