திங்கள், 23 மார்ச், 2026

ரஜினியின் குடும்பம்

ரஜினியின் குடும்பம்



காமெடி நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் அப்பா ஒய்.ஜி.பார்த்தசாரதி. புகழ்பெற்ற அமெச்சூர் நாடகக் குழுவை நிறுவி நடத்திய நடிகர்.



பார்த்தசாரதியின் சகோதரி வசுந்தராதேவி அந்தகாலத்து புகழ்பெற்ற சினிமா நடிகை.

வசுந்தராதேவியின் மகள்தான் தமிழில் இருந்து பாலிவுட் வரை சென்று வெற்றிக்கொடி நாட்டிய வைஜயந்திமாலா. இவருடைய மகன் சுசிந்தீராவும் நடிகர்தான்.


ஒய்.ஜி.மகேந்திரனின் அம்மா ராஜலட்சுமி, சென்னையின் புகழ்பெற்ற பத்மாசேஷாத்ரி பள்ளிகளின் நிறுவனர்.

பள்ளி ஆரம்பிப்பதற்கு முன்பாக குமுதம், இந்து பத்திரிகைகளில் பணிபுரிந்த த்திரிகையாளர் இவர். ராஜலட்சுமியின் பாட்டனார் ரங்கச்சாரி அவர்கள்தான் இந்தியாவில் சென்ஸார் போர்டையே கொண்டுவந்தவர்.

ராஜலட்சுமியின் சகோதரர் கே.பாலாஜி, புகழ்பெற்ற நடிகர் மற்றும் தயாரிப்பாளர்.




பாலாஜியின் மகன் சுரேஷ்பாலாஜியும் அப்பாவை போலவே புகழ்பெற்ற தயாரிப்பாளர்.


கே.பாலாஜியின் மகள் சுசித்ரா, மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலை திருமணம் செய்துக் கொண்டிருக்கிறார்.


மோகன்லாலின் மகன் பிரணவ்வும் இப்போது ஹீரோவாகி இருக்கிறார். கமல்ஹாசனின் ‘பாபநாசம்’ படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் இவர்.

Y G மகேந்திரன் மகள் மதுவந்தி, ஒரு நடிகை, நாடகக் கலைஞர், நடன அமைப்பாளர் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் (BJP) மாநில நிர்வாகக் குழு உறுப்பினர்

Y G மகேந்திரனின் மனைவி சுதாவின் தங்கை லதா.


இவர்தான் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை மணந்துக்கொண்டு லதாரஜினிகாந்த் ஆனார். சென்னையின் புகழ்பெற்ற ஆஸ்ரம் பள்ளியின் நிறுவனர் இவர்.


லதாவின் மகள் ஐஸ்வர்யா, இளம் நடிகர் தனுஷை மணந்து பிறகு பிரிந்து விட்டார். ஐஸ்வர்யாவும் சினிமா இயக்குகிறார்.


லதா ரஜினிகாந்தின் இன்னொரு மகள் செளந்தர்யாவும் தயாரிப்பு, இயக்கம்என்று திரைத்துறையில் ஈடுபட்டிருக்கிறார்.

தனுஷின் அண்ணன், செல்வராகவன், தமிழகத்தின் முன்னாள் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமனின் மகள் கீதாஞ்சலியை மணந்து பிறகு பிரிந்து விட்டார்


லதாரஜினிகாந்தின் தம்பி ரவிராகவேந்திராவும் நடிகர்.


ராகவேந்திராவின் மகன் அனிருத், இப்போது பிரபலமான இசையமைப்பாளர்


அனிருத்தின் சித்தி மகன் ரிஷிகேஷும் நடிகரே. ரிஷிகேஷ் 2017-ல் வெளியான 'ரம்' (Rum) திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர்


 ரிஷிகேஷின் அப்பா எஸ்.வி.ரமணன், அந்தகாலத்தில் ரஜினியை பேட்டியெடுத்து தூர்தர்ஷனில் ஒளிப்பரப்பிய பத்திரிகையாளர்.


எஸ்.வி.ரமணின் அப்பா கே.சுப்பிரமணியம், தமிழ் சினிமாவின் ஆரம்பகால இயக்குநர்களில் முக்கியமானவர்.


கே.சுப்பிரமணியத்தின் மகள் புகழ்பெற்ற நடனக்கலைஞர் பத்மா சுப்பிரமணியம்.


கே.சுப்பிரமணியத்தின் இன்னொரு மனைவிக்குப் பிறந்தவர் இசைக்கலைஞர் ‘அபஸ்வரம்’ ராம்ஜி.


கே.சுப்பிரமணியத்தின் இன்னொரு மகளான பாமாவின் மகன்தான் நடன இயக்குநர் ரகுராம் மாஸ்டர்.


ரகுராம் மாஸ்டரின் மனைவி கிரிஜாவும் நடன இயக்குநர்தான்.

கிரிஜாவின் சகோதரிகள் ஜெயந்தி, கலா, பிருந்தா ஆகியோரும் நடன இயக்குநர்களே.


ரகுராம் – கிரிஜா தம்பதியினரின் மகள் நடிகை காயத்ரி ரகுராம். இப்போது பாஜகவில் முக்கியப் பிரமுகராக இருக்கிறார்.


ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் மதுவந்தி, ஜெமினி - சாவித்திரி தம்பதியரின் மகள் டாக்டர் சாமூண்டிஸ்வரியின் மகன் அருணை மணந்திருக்கிறார்.

தலை சுத்துதா?


மன்னார்குடி ஃபேமிலியே தேவலாம் என்றுகூட தோன்றுமே?

ரஜினியை வலுக்கட்டாயமாக அரசியலுக்கு வரச்சொல்லி வற்புறுத்தியது எந்தப் பின்னணி என்று புரிகிறதா?

இதெல்லாம் நமக்கு வெளிப்படையாக தெரிந்த லிங்க். வெளிப்படையாக

தெரியாமல் படர்ந்த வலை எவ்வளவோ?

வைஜயந்திமாலா, தன்னுடைய சுயசரிதையில் தங்கள் குடும்பத்தை மைசூர் பரம்பரை என்கிறார். புகழ்பெற்ற அறிஞர்களும், அர்ச்சகர்களும் இவர்களது முன்னோர்களாம். இவர்களது முன்னோர் வந்தால் மைசூர் அரசர்களே எழுந்து நின்று வரவேற்பார்களாம். ஒருவேளை

ஜெயலலிதாவும் இதே குடும்பத்தின் வேறொரு கிளையில் உதித்தவரோ என்னமோ?

                                        ..........  ..........  ..........  ..........  ..........  ..........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ரஜினியின் குடும்பம்

ரஜினியின் குடும்பம் காமெடி நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் அப்பா ஒய்.ஜி.பார்த்தசாரதி. புகழ்பெற்ற அமெச்சூர் நாடகக் குழுவை நிறுவி நடத்திய நடிகர். ப...