இன்னும் 3 நாட்களே தேர்தலுக்கு உள்ளது.
திமுக, அதிமுக என இரு பெரும் கட்சிகளின் கூட்டணிகளும், த.வெ.க, நா.த.க என இரு கட்சிகளும் தனித்தனியாகவும் மோத நாலு முனைப் போட்டி என்பது முடிவாகி உள்ளது.
தமிழ்நாட்டில் காலூன்ற பாஜக பல முயற்சிகளை தொடர்ந்து செய்து வருவதை நாம் அனைவரும் அறிவோம்.
ஒவ்வொரு முறையும் புதிய புதிய வியூகங்களுடன் வந்து கொண்டே இருக்கிறது.
இந்த முறை அதிமுகவையும் இன்னும் சில கட்சிகளையும் மிரட்டி பணிய வைத்து கூட்டணியாக்கி மற்றவர்களின் தோளில் ஏறிக் கொண்டு வந்து நிற்கின்றது
50 வருட பாரம்பரிய அதிமுகவையும், பல வருட அரசியல் அனுபவம் பெற்ற எடப்பாடி மற்றும் மற்ற அதிமுக தலைவர்களையும் தன்னிடம் பணிய வைக்கத் தெரிந்த பாஜகவுக்கு,
எந்த அரசியல் அனுபவமும் இல்லாத, எப்படி கட்சி நடத்துவது என்ற அடிப்படை அறிவும் கூட இல்லாத விஜய்யை கையும் களவுமாக கரூர் விஷயத்திலும், இன்னும் பல விஷயங்களிலும் கைது செய்து பணிய வைக்க முடியாததில்லை.
பாஜகவின் திட்டம் வேறு. ஒரு புறம் திமுகவை எதிர்த்து அதிமுக மற்றும் மற்ற கட்சிகளுடன் இணைந்து கூட்டணி,
மறுபுறம் அதே திமுகவை எதிர்த்து விஜய், சீமான் போன்றோரை வெளியில் வைத்து தனியாக களமாட வைத்து ஓட்டைப் பிரிப்பது.
சீமான், விஜய் இருவரும் பாஜக கூட்டணிக்குள் வந்தால் இவர்களுக்கு இப்பொழுது கிடைக்கும் ஓட்டுக்களும் குறைந்துதான் போகும் என்பது தெரிந்து, தனியாக நிற்க விட்டிருக்கிறார்கள்
தேர்தல் முடிந்த பிறகு தேவைப்பட்டால் இவர்கள் பாஜகவுக்கு ஆதரவு தருவார்கள்.
இப்பொழுது நாம் வேறு ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
*பாஜக இரண்டு பேர்களிடமிருந்து வாக்குகளை எதிர்பார்ப்பதில்லை.*
அதில் ஒன்று *தமிழ்நாடு மற்றும் கேரளா மாநில மக்களின் ஓட்டுக்கள்*
அதேபோல் இரண்டாவது *முஸ்லிம்களின் ஓட்டுக்கள்.*
பாராளுமன்றத்துக்கு தென்னிந்தியாவிலிருந்து கிடைக்கும் சீட்டுக்கள் 23%தான்.
மீதி 77% சீட்டுக்கள் வட இந்தியாவிலிருந்து அவர்களுக்கு கிடைத்து விடுவதால் தென்னிந்தியாவின் சீட்டுக்களை எதிர்பார்ப்பதில்லை.
அதே போல் அதில இந்திய அளவில் மொத்த மக்கள் தொகையில் முஸ்லீம்களின் சதவீதம் 14.2%, தமிழ்நாட்டில் 5.86%.
மொத்த வாக்காளர்களிலும் முஸ்லீம் வாக்காளர்களின் சதவீதமும் கிட்டத்தட்ட இதையொட்டியே இருக்கிறது.
*இந்த வாக்குகளையும் பாஜக எதிர்பார்ப்பதில்லை.*
இன்னும் சொல்லப்போனால் *முஸ்லீம்களின் வாக்குக்கள் எங்களுக்கு வேண்டாம்* என்று சொன்ன பாஜக தலைவர்களும் இருக்கிறார்கள்.
*பிறகு எதற்காக பாஜக இத்தனை திட்டங்களைப் போட்டு தமிழ்நாட்டில் வேலை பார்க்கிறது ?*
*ஒன்று கவுரவப் பிரச்னை* .
அகில இந்தியா முழுவதுமே பாஜகவை ஏற்றுக் கொண்டிருக்கிறது, எல்லா மாநிலங்களிலும் பாஜக பங்கு பெற்ற ஆட்சிகள் நடக்கிறது, நடந்திருக்கிறது.
ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் நுழைய முடியாமல் போவது அவர்களுக்கு ஒரு கௌரவ குறைச்சலாகவே தோன்றுகிறது.
*இரண்டு பாஜகவின் மூலக் கட்சியான ஆர்எஸ்எஸ்-சின் முக்கிய லட்சியம், அகண்ட இந்துஸ்தானத்தை அமைப்பது* .
அதற்கு தமிழ்நாடு ஒரு இடைஞ்சலாக இருக்கிறது.
ஒரு மளிகை கடையில் 20 பொருட்கள் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்
அதில் எல்லாம் பொருட்களும் எல்லா நாளும் விற்பனையாகும் என்று சொல்ல முடியாது.
அதில் ஒரு இரண்டு பொருட்கள் எப்பொழுதாவதுதான் விற்கும்.
அதற்காக கடைக்காரர் அந்த பொருளை வாங்கி வைத்துத்தான் ஆக வேண்டும்.
ஏனெனில் அவை இல்லாமல் போனால் மற்ற பொருட்களின் விற்பனை பாதிக்கப்படும் அதுபோல்தான் இதுவும்.
இதுபோலத்தான் தமிழ்நாட்டின் வாக்குகளை *எதற்கும் இருக்கட்டும்* என்று வைத்திருக்கிறார்கள்.
*எதற்காக முஸ்லிம்கள் தேவைப்படுகிறார்கள் ?*
இதைவிட இன்னொரு ஸ்பெஷல் ஐட்டம் இருக்கிறது.
அதுதான் *மத ஒற்றுமை*
.
முஸ்லிம்களுக்கு எதிராக சட்டங்களையும் அல்லது பிரச்சினைகளையும் வேண்டுமென்றே பாஜக கொண்டு வரும்
அதை எதிர்த்து முஸ்லிம்கள் ஒன்று திரண்டு குரல் கொடுப்பார்கள். போராடுவார்கள்.
இப்படி முஸ்லீம்கள் திரளுவார்கள் என்பது பாஜகவுக்கும் தெரியும்.
எதற்காக முஸ்லிம்கள் ஒன்று திரண்டார்கள் என்கிற காரணத்தை மறைத்து, நியாயமான அந்தப் போராட்டத்தை தங்கள் மீடியாக்கள் மூலம் பாஜகவினர் வெளி உலகத்துக்கு " *பார்த்தீர்களா, ஒரு முஸ்லீமுக்கு ஒன்று என்றாலும் எல்லா முஸ்லீம்களும் ஒன்று சேர்ந்து கொள்கிறார்கள்* " என்று தவறாகக் காட்டுவார்கள்.
அதன் தொடர்ச்சியாக " *இந்துக்களே ஒன்றுபடுங்கள்* " என்ற கோஷத்தை முழங்குவார்கள்
வெளிப்படையாக இதில் தவறேதும் தெரியாது.
இந்துக்களின் ஒற்றுமையை முஸ்லிம்கள் எந்த காலத்திலும் தவறாக பார்க்கப் போவதில்லை. அப்படி பார்க்க வேண்டிய அவசியமும் இல்லை.
*இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக சேர்ந்து வாழ வேண்டும் என்பதே பெரும்பான்மை இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் விருப்பம்.*
' *நானும் வாழ்கிறேன் நீங்களும் வாழுங்கள்* 'என்பது முஸ்லிம்களின் கொள்கை, பெரும்பான்மை இந்துக்களின் கொள்கையும் அதுதான்.
ஆனால் ' *நாங்கள் மட்டும் இங்கு வாழ வேண்டும், நீங்கள் வாழக்கூடாது* ' என்பது ஆர் எஸ் எஸ் இன் சித்தாந்தம்.
இந்து, முஸ்லீம் இருவரும் சேர்ந்து வாழ்ந்தால், அதை வைத்து பாஜக அரசியல் செய்ய முடியாது என்பதற்காக இந்துக்களை தனியாக பிரித்து முஸ்லிம்களுக்கு விரோதமாக சிந்திக்கவும் செயல்படவும் தூண்டவே முஸ்லிம்கள் ஒற்றுமையை எதிர்பார்க்கிறார்கள்.
*முஸ்லீம் எதிர்ப்பு* என்ற ஒன்று இல்லாவிட்டால் பாஜகவுக்கு சொல்லிக் கொள்ள பெரிதாக வேறு கொள்கை ஏதும் இல்லை.
ஒன்றை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பெரும்பான்மை சகோதர சமுதாய மக்களின் நல்லுறவோடு நாம் இங்கு பாதுகாப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதற்கு எந்த விதத்திலும் பங்கம் வந்துவிடக்கூடாது.
அதனால் நண்பர்களே இப்பொழுது சமூக வலைதளங்களில் பதிவுகளை இடுவதிலும், பேசுவதிலும், கருத்துக்களைப் பகிர்வதிலும் நாம் மிக எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
எல்லோருக்குமான நல்லதைக் கூட இப்பொழுது சொல்வதற்கு யோசிக்க வேண்டியிருக்கிறது.
கொஞ்சம் பொறுப்புணர்வோடு சகோதர சமுதாய மக்களுடனும் ஒன்றுபட்டு நாம் வாழ முயலுவோம்
வல்ல அல்லாஹ் நம் அனைவரின் மீதும் சாந்தியையும், சமாதானத்தையும் இறக்கியருள்வானாக.
வாட்ஸ் அப்பில் பகிர்ந்தது 20.04.2026
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக