சனி, 25 ஏப்ரல், 2026

போலியோ ஒழிப்பில் திமுக செய்த சாதனை

போலியோ ஒழிப்பில் திமுக செய்த சாதனை




1972 ஆம் ஆண்டு, திமுக அமைச்சரவையில் க. அன்பழகன் சமூக நலத்துறை அமைச்சர். அவர் அப்போது ஒரு கருத்தரங்கிற்காக வெளிநாடு சென்றிருந்த போது, போலியோவை ஒழிக்க சொட்டு மருந்து இருப்பதாக அறிந்து, அதனை இறக்குமதி செய்தார். 

ஆனால் அதனை சுகாதாரப் பணியாளர்கள் மூலம் மாநிலம் முழுவதும் எப்படி கொடுப்பது என்று விவாதித்த போது, முதலமைச்சர் கலைஞர் அவர்கள், இது ஊசி மருந்து இல்லைதானே, மற்றவர்கள் மூலமும் ஊற்றலாமே என்று கேட்டுவிட்டு ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள் மூலமும் கொடுக்கலாம் என்றார். அப்படியும் தேவைப்பட்ட ஆள் பலம் கிடைக்கவில்லை. 

எனவே இதனை விவாதிக்க தலைமை செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் என பல அரசு அதிகாரிகளுடன் கூட்டம் நடந்தது. அதில் கலைஞர், ஏன் ரோட்டரி கிளப் போன்ற என் ஜி ஓக்களை பயன்படுத்தக்கூடாது? எனக் கேட்டார். 

அதற்கு தலைமை செயலாளர், மற்ற அரசுத்துறை பணியாளர்களை பயன்படுத்தலாம், 

ஆனால் தனியாரையும் பயன்படுத்தினால் அரசாங்க இயந்திரம் சரியில்லை,இவர்களுக்கு நிர்வகிக்கத் தெரியவில்லை. என்ற அவப்பெயர் அரசுக்கு ஏற்படும் என்றார். 

ஆனால் கலைஞரோ அரசாங்கம் ஊனம் ஆகலாம் ஆனால் மக்கள் ஊனம் ஆகக்கூடாது.என சொல்லிவிட்டு ரோட்டரி சங்க ஆட்களை அழைத்துப் பேசி, போலியோ சொட்டு மருந்துகொடுக்க ஏற்பாடு செய்தார். 

தமிழகம் முழுவதும் இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டது

ரோட்டரி சங்கங்கள் தங்கள் தலைமையகத்துக்கு ஆண்டு தோறும் அறிக்கை அனுப்புவார்கள். 
அதில் தமிழக ரோட்டரி சங்கங்கள், தாங்கள் போலியோ ஒழிப்பில் ஈடுபடுவதையும் சேர்த்து அனுப்ப, மற்ற மாநில, நாடுகளிலும் ரோட்டரி சங்கங்கள் இந்த சேவையை தொடரத் துவங்கின. 

நான் 1974 ஆம் ஆண்டு பிறந்தவன். என் செட்டில் இருந்தே ஒரு போலியோ நோயாளியை கண்டதில்லை. 
ஆனால் தெருக்களில், பள்ளியில் எனக்கு மூத்த நிறையப் பேர், போலியோவால் அவதிப்படுவதைக் கண்டுள்ளேன். 

 அது இல்லாமல் இங்கே ஒழிந்ததற்கு அன்பழகனும், கலைஞரும் மூல காரணம்.

அன்பழகன், நான் இரண்டாம் இடத்தில் இருக்கிறேன் என்பார்கள். எனக்கும் கூட ஆரம்பத்தில் மனச்சங்கடம் அது குறித்து உண்டு. எனக்குத் தோன்றியது ஒரு பொறிதான். 
ஆனால் அதை செயலாக்கம் செய்தவர் கலைஞர். அப்படிப்பட்ட செயலூக்கம் உள்ளவரிடம் இரண்டாம் இடத்தில் இருப்பது எனக்கு மகிழ்ச்சியே என்று குறிப்பிட்டிருக்கிறார்

பின் குறிப்பு: 
 1983 ஆம் ஆண்டு தமிழகம் போலியோ இல்லாத மாநிலமாக அறிவிக்கப்பட்டது.
 2019ஆம் ஆண்டில் தான் இந்தியா போலியோ இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டது


நன்றி: டீக்கடையார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஜும்மா பயான்களில் அரசியல் கருத்துக்கள்

ஜும்மா பயான்களில் அரசியல் கருத்துக்கள் தேர்தல் முடிந்த மறுநாள் (24.04.2026 ) வெள்ளிக்கிழமை தமிழ்நாட்டின் பெரும்பாலான பள்ளிவாசல்களில் இமாம்...