09.04.2026 - ல் நாற்பதும் நமதே என்கிற ஒரு வாட்ஸப் குழுவில் பாளை சையது என்பவர்
பதிந்த பகிர்வு 👇👇👇
இஸ்லாமிய பயங்கரவாதிகள் என முதல் முதலில் பெயர் வைத்தது யார் கருணாநிதி அல்லவா ?
கோயம்புத்தூர் சிறைவாசிகளை இவ்வளவு நாட்களாக 27 வருடங்களாக சிறையில் வைத்து அழகு பார்ப்பது யார் கருணாநிதி ஆட்சி அல்லவா ?
வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்ற கலிமா சொன்ன இஸ்லாமியர்களை கோயில் குளங்களாக ஏறி இறங்க வைத்தது கருணாநிதி அல்லவா ?
தமிழ்நாட்டில் முஸ்லிம் லீக் என்ற ஒரு கட்சி 27 எம்எல்ஏ சீட்டுகளை வைத்து ஏணிச் சின்னம் என்ற ஒரு தனி அடையாளத்துடன் இருந்தது அதை இன்றும் மாற்றி அமைத்தது கருணாநிதி கட்சி அல்லவா ?
இஸ்லாத்திற்கு ஆறாவது கடமை திமுகவிற்கு வாக்களிப்பது என இஸ்லாமியர்களை சொல்ல வைத்தது கருணாநிதி கட்சி அல்லவா ?
இஸ்லாமியர்கள் ஒன்று சேர்ந்தால் 30 சீட்டுக்கு மேல் வருவார்கள் எம்எல்ஏக்கள் ஆனால் அவர்களை ஒன்று சேரக்கூடாது என்று இன்றுவரை கங்கணம் கட்டி உனக்கு ஒன்று உனக்கு ஒன்று என்று பிச்சை எடுக்க வைத்த இந்த கருணாநிதி கட்சி அல்லவா ?
எம்எல்ஏ சீட்டுகளை சிறுபான்மையினர் அணி என்று நம்மளை இஸ்லாமியர்களை சிறுபான்மையினராக ஆக்கி எனக்கு ஓட்டு போடவில்லை என்றால் பிஜேபி உள்ளே வந்துரும் என்று பயமுறுத்தி வைத்திருக்கும் கருணாநிதி கட்சி அல்லவா ?
கோயம்புத்தூர் கலவரத்தின் போது மூன்று நாள் மௌனம் சாதித்து 19 இஸ்லாமியர்களை கொன்று ஒழித்தது இந்த கருணாநிதி கட்சி அல்லவா ?
ஒவ்வொரு தேர்தல் வாக்குறுதிகளிலும் கோவை சிறைவாசிகளின் விடுதலை செய்வோம் என்று கூறிவிட்டு இன்றுவரை அதை நிறைவேற்றாதது இன்று கருணாநிதி கட்சி அல்லவா ?
அவர்களுக்கு விசுவாசம் ஆக இருப்பது இஸ்லாமிய இயக்கங்கள் இயக்கங்கள் இஸ்லாமியர்களுக்கு செய்யும் துரோகம் இது
***********************
10.04.2026 அன்று கள்ளக்குறிச்சியிலிருந்து கமாலுதீன் அவர்கள் ஆடியோ வாயிலாக இதற்கு பதில் கொடுத்தார். அதில் நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை என ஒத்துக் கொள்கிறேன்.
ஆனால் வேறு வழி இல்லாததால் திமுகவை ஆதரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
நாம் திமுகவை ஆதரித்தால் கை வெட்டப்படும். திமுகவை விட்டு வேறு யாரை ஆதரித்தாலும் அது பாஜகவை ஆதரிப்பதாகவே ஆகும். அதனால் தலை வெட்டப்படும்.
வெட்டுக் கொடுப்பதில் கையா ? தலையா ? என பார்க்க வேண்டும் என்கிற ரீதியில் பேசியிருந்தார்.
அதற்கும் சேர்ந்து என் பதிலை 11. 04.2026 அன்று பகிர்ந்தேன்.
எனது அந்த பதில் பதிவு இதோ 👇👇
அஸ்ஸலாமு அலைக்கும்
தங்கள் கருத்துக்கு நானும் உடன்படுகிறேன்
எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி என்று பார்த்து எடுத்துக் கொள்கிற ஜனநாயக கட்டமைப்பில் நாம் இப்பொழுது இருக்கிறோம்.
புறத்திணை சுயம்வர மண்டபத்தில்
போலி நளன்களின் கூட்டம்
கையில் மாலையுடன் குருட்டு தமயந்தி
என்று தேர்தலை பற்றி பாடியிருந்தார் கவிக்கோ அப்துல் ரகுமான்
இன்றைய கால குழலில் நம் முன் நிற்கிற அனைவருமே போலி நளன்கள்தான்
ஆனால் கையில் வாக்குச்சீட்டுடன் நிற்கும் நாம் யாவருமே குருடர்களாகத்தான் இருக்கிறோம்
எப்படியும் நாம் தேர்ந்தெடுக்கப் போவது ஒரு போலி நளன் ஆசாமிதான்.
குறைந்த பட்ச நல்லவனைத்தான் நாம் தேர்ந்தெடுக்க முடியும் என்கிறது நம் ஜனநாயக அமைப்பு.
ஓட்டலுக்கு சாப்பிடப் போகிறோம்.
வேறு ஓட்டல் எதுவுமில்லை.
நமக்கு கடும் பசி.
சாப்பிட்டே ஆக வேண்டிய கட்டாய நிலை.
அப்போது அந்த ஓட்டலில் என்ன விற்பனைக்கு இருக்கிறதோ அதைத்தான் நாம் சாப்பிட்டாக வேண்டும்.
அதாவது ஓட்டல்காரன் நம் முன் காட்டும் மெனு கார்டில் இருக்கும் ஏதாவது ஒரு உணவைத்தான் நாம் சாப்பிட்டாக வேண்டும். "எனக்கு இதில் எதுவும் பிடிக்கவில்லை" என்று வேறு கேட்க முடியாது.
மறுத்து எழுந்து வந்தால் பட்டினிதான் கிடக்க வேண்டும்.
*இதுதான் தேர்தல் ஜனநாயகம்.*
இப்பொழுது நம் முன் இருவர் இருந்தால் நாம் யாருக்கு ஆதரவளிப்பது என்று பார்க்கலாம்.
அதற்கும் *இஸ்லாத்தில் வழிகாட்டல்* இருக்கிறது
*நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காலத்தில் (கி.பி. 570-632) உலகில் இருந்த இரு பெரும் பேரரசுகள்:* இருந்தன.
1. *பைசாந்தியப் பேரரசு* (Byzantine Empire / Eastern Roman Empire) – கிழக்கு ரோமானியப் பேரரசு என்றும் அழைக்கப்படும்.
இது கிறிஸ்தவ நம்பிக்கையைப் பின்பற்றியது. தலைநகர் கான்ஸ்டான்டினோபிள் (தற்போதைய இஸ்தான்புல்).
2. *சசானியப் பேரரசு* (Sasanian Persian Empire) – பாரசீகப் பேரரசு..
இது ஜோராஸ்ட்ரியன் (நெருப்பு வழிபாடு) மதத்தைப் பின்பற்றியது. தலைநகர் க்டேசிபான்.
இவை இரண்டும் அப்போது உலகின் மிகப் பெரிய சக்திகளாக இருந்தன.
அரேபியா (அரபு நாடு) இரு பேரரசுகளுக்கும் இடையில் இருந்ததால், அரபுகளிடம் இரு பக்கமும் செல்வாக்கு செலுத்த முயன்றன.
கி.பி. 602 முதல் 628 வரை *பைசாந்திய-சசானியப் போர்* நடைபெற்றது (Byzantine–Sasanian War of 602–628).
இந்தப் போர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்ந்த காலத்திலும் நடைபெற்றிருக்கிறது.
அப்போது பைசாந்தியர்களுக்கு (ரோமானியர்களுக்கு) நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆதரவு தெரிவித்து இருந்தார்கள்.
பாரசீகர்கள் *மஜூஸி* (நெருப்பு வழிபாட்டாளர்கள்) – பலதெய்வ வழிபாட்டு போன்று கருதப்பட்டதாலும்,
பைசாந்தியர்கள் *“வேதம் பெற்றவர்கள்” (Ahl al-Kitab)* – கிறிஸ்தவர்கள். ஒரே கடவுளை (அல்லாஹ்வை) நம்புபவர்கள்.
அதனால் இஸ்லாமுக்கு மிக நெருக்கமானவர்கள் என்பதாலும் ரோமானியர்களுக்கு அவர்கள் ஆதரவு தந்தார்கள்.
பாரசீகர்கள் (சசானியர்கள்) முதலில் ரோமானியர்களைத் தோற்கடித்தனர்.
ஆனால் மீண்டும் அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று திருக்குர்ஆன் அறிவித்தது.
இது குர்ஆனின் அர்ரூம் (ரோமானியர்) அத்தியாயம் 30, வசனங்கள் 1-5 (குறிப்பாக 2-4) இல் குறிப்பிடப்பட்டுள்ளது. அரபியில்:
الٓمٓ ۚ غُلِبَتِ الرُّومُ ۙ فِىۡۤ اَدۡنَى الۡاَرۡضِ وَهُمۡ مِّنۡۢ بَعۡدِ غَلَبِهِمۡ سَيَغۡلِبُوۡنَ ۙ فِىۡ بِضۡعِ سِنِيۡنَ ؕ لِلّٰهِ الۡاَمۡرُ مِنۡ قَبۡلُ وَمِنۡۢ بَعۡدُ ؕ وَيَوۡمَئِذٍ يَّفۡرَحُ الۡمُؤۡمِنُوۡنَ ۙ بِنَصۡرِ اللّٰهِؕ يَنۡصُرُ مَنۡ يَّشَآءُ ؕ وَهُوَ الۡعَزِيۡزُ الرَّحِيۡمُۚ
தமிழ் மொழிபெயர்ப்பு :
“ரோமர்கள் தோற்கடிக்கப்பட்டனர். (அவர்கள் தோற்கடிக்கப்பட்டது) பூமியின் அருகிலுள்ள (கீழ்ப்பகுதியான) பகுதியில்.
அவர்கள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் (விரைவில்) வெற்றி பெறுவார்கள். சில வருடங்களுக்குள். முன்னும் பின்னும் அதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது.
அந்நாளில் முஃமின்கள் மகிழ்வார்கள். அல்லாஹ்வின் உதவியினால்.
அவன் தான் நாடியவர்களுக்கு உதவி புரிகிறான்.
அவன் மிகைத்தவன், மிக்க கிருணையுடையவன்.”
இந்த வசனங்கள் இறங்கியபோது (கி.பி. 615-616 அளவில்) ரோமானியர்கள் தோற்ற நிலையில் இருந்தனர்.
ஆனால் கி.பி. 622-628 இல் ஹெராக்லியஸ் பேரரசரின் தலைமையில் ரோமானியர்கள் பாரசீகர்களை தோற்கடித்து வெற்றி பெற்றனர்.
இது குர்ஆனின் முன்னறிவிப்பை உறுதிப்படுத்தியது.
நபிகள் நாயகம் (ஸல்) ரோமானியர்களின் வெற்றியை முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சியுடன் அறிவித்தார்.
*இது குர்ஆனில் நேரடியாக “நபி யாரை ஆதரித்தார்” எனக் கூறப்படவில்லை* என்றாலும், தஃப்சீர்கள் (விளக்கவுரைகள்) மற்றும் வரலாற்றுச் சான்றுகளின்படி நபியின் (ஸல்) ஆதரவு ரோமானியர்களுக்கே இருந்தது என்பதாக சொல்லப்படுகிறது.
இதனடிப்படையில் இன்ஷா அல்லாஹ் எல்லா காலத்திலும் எல்லா விஷயங்களிலும் நாமும் செயல்படலாம் என்று இதை ஒரு வழிகாட்டலாய் நான் கருதுகிறேன்.
மாற்று கருத்தோ, விளக்கமோ இருந்தால் நண்பர்கள் பகிரலாம்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக