நான்கு நாட்களுக்கு முன்பு 16.04.2026 அன்று பாராளுமன்றத்தில் பாஜக அரசு அவசர அவசரமாக மகளிர் இட ஒதுக்கீடு மசோதா போர்வையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் மசோதாவையும் இணைத்துக் கொண்டு வந்து தாக்கல் செய்தது.
அந்த மசோதா பலத்த எதிர்ப்புக்கிடையில் வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது. இது நாம் அனைவரும் அறிந்ததுதான்.
மசோதாவை கொண்டு வந்த போதும்,
அதற்கு பின்பும் பாஜகவும், அதன் கூட்டணி கட்சிகளும் ஒரு கணக்கை சொல்லி இதனால் *எந்த மாநிலத்துக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது* என்று விடாமல் கூவிக் கொண்டே இருந்தார்கள்.
அவர்கள் காட்டிய கணக்கைப் பார்த்தால், ' *சரியாகத்தானே சொல்கிறார்கள், இதிலெதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பலத்த எதிர்ப்பைக் காட்ட வேண்டும்* ?' என்றுதான் தோன்றியது.
விபரமில்லாமல் இவ்வளவு பேர் மக்களவையில் எதிர்த்துக் குரல் கொடுக்க மாட்டார்களே,
அதிலும் அதற்கு சரியான பதில் விளக்கத்தை ஒன்றிய பாஜக அரசின் அமைச்சர்கள் ஏன் கொடுக்க முடியாமல் மசோதாவை தோற்றுப் போக விட்டார்கள் ? என எமக்குள் ஒரு கேள்வி வந்தது.
இது சம்பந்தமாக இணையத்தில் தேடினேன்.
அப்போது prsindia என்ற வலைதளத்தில் ஒன்றிய அரசின் அதிகாரபூர்வ கணக்குகளைக் கொண்ட பட்டியலோடு எனக்கு விளக்கமும் கிடைத்தது.
*பாஜகவினர் சொன்னது பாதி, சொல்லாமல் விட்டது மீதி* என்பதும் புரிந்தது.
அதை மற்றவர்களுக்கும் புரியும் வகையில் விளக்குகிறேன்.
இப்போது நடைமுறையில் இருக்கும் சீட்களின் எண்ணிக்கை
*வடக்கு : தெற்கு ஒதுக்கீடு* என்பது *77 : 23 என்ற ratio* வில்தான் இருக்கிறது
இதுவே தொகுதி *மறுவரையறைக்குப் பிறகும் அதே 77 : 23 என்பதாகவே இருக்கும்* என்று Project செய்யப்பட்டிருக்கிறது.
இது சரிதானே என்று தோன்றுகிறது.
*இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை*
இனி அடுத்தடுத்து இதில் உள்ள சிக்கல்களைப் பார்க்கலாம்.
*மகளிர் இட ஒதுக்கீடு திருத்த மசோதா:*
22.09.2023-அன்று நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்புத் திருத்தச் சட்டம், மக்களவை மற்றும் மாநிலச் சட்டமன்றங்களில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடங்களை ஒதுக்கீடு செய்யும் முறையை அறிமுகப்படுத்தியது.
இந்த இட ஒதுக்கீடானது, 2023-ஆம் ஆண்டைய இச்சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு மேற்கொள்ளப்படும் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் அமையும். அடுத்த மக்களவைத் தேர்தல்கள் 2029-ஆம் ஆண்டில் நடைபெறும்போதும் இந்த இட ஒதுக்கீடு பொருந்தாது என்றும் சொல்கிறது
அதாவது மகளிர் இட ஒதுக்கீடு மசோதா 2029 இல் செல்லாது என்று ஏற்கனவே சட்டத்தில் இருப்பதால் அதை திருத்தம் செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசு சொல்கிறது
இதைக் காரணம் காட்டியே பாஜக அரசு இதில் ஒரு amendment போட்டு திருத்தம் செய்வதற்காக அவசர அவசரமாக மக்களவையைக் கூட்டியிருக்கிறது. கூடவே இன்னும் இரு மசோதாக்களையும் நிறைவேற்ற கொண்டு வந்தது
மக்களவையில் இடங்களின் *மறுவரையறை திருத்த சட்ட மசோதா* :
மக்களவையில் உள்ள இடங்கள், மாநிலங்களின் மக்கள் தொகைக்கு விகிதாசார அடிப்படையில் ஒதுக்கப்பட வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது.
ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்குப் பிறகும் தொகுதிகள் மறுவரையறை (அல்லது எல்லை நிர்ணயம்) செய்யப்பட வேண்டும் என்றும் இச்சட்டம் வலியுறுத்துகிறது.
*இப்போது 1971 population-ஐ கணக்கில் எடுத்துக் கொண்டு மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கையே நடைமுறையில் இருக்கிறது.*
உதாரணமாக 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தமிழ்நாட்டிற்கு 39 இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
ஒன்றிய அரசின் மறுவரையரை திருத்தச் சட்டத்தில், லேட்டஸ்ட் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் வரும் *சீட்களின் எண்ணிக்கையோடு பிளஸ் 50% சேர்த்து ஒதுக்கப்படும்* என்று சொல்கிறது
அதாவது 39 + 50% = 58 வரும் என்று சொல்கிறது.
இதுதான் *பாஜக சொன்ன பாதி விஷயம்.*
இனி *சொல்லாமல் விடப்பட்ட மீதி விபரத்தை பார்ப்போம்*
இதன் பிறகு 2011 ல் எடுக்கப்பட்ட சென்ஸஸ் கணக்கின்படி தமிழ்நாட்டில் மக்கள் தொகை 7, 21,47,030.
அடுத்த தொகுதி மறுவரையறைக்கு 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பயன்படுத்தப்படும் என்றும்,
அதன் அடிப்படையில் சீட்கள் ஒதுக்கப்படும் என்றும் சட்டம் விளக்குகிறது.
இதைக் கணக்கில் எடுத்துக் கொண்டு பார்த்தால் *32 இடங்களே தமிழ்நாட்டிற்கு வரும்* என்கிறது ஒன்றிய அரசு. அதாவது 7 சீட் குறைகிறது.
கேரளாவிற்குரிய இடங்கள் 20-லிருந்து 15-ஆகவும் குறையும்.
அதே வேளையில், உத்தரப் பிரதேசத்தின் இடங்கள் 80-லிருந்து 89-ஆகவும்,
பீகாரின் இடங்கள் 40-லிருந்து 46-ஆகவும்,
ராஜஸ்தானின் இடங்கள் 25-லிருந்து 30-ஆகவும் அதிகரிக்கும்.
இந்த *எண்ணிக்கையுடன் ஒன்றிய அரசு சொல்லும் 50% ஐ சேர்த்தால்*
*தமிழ்நாட்டிற்கு* 32 + 16 = *48 சீட்கள்* வரும்.
*கேரளாவிற்கு 15+7 = 22* ம்,
*உ.பி.க்கு* 89 + 44 = *133* ம்,
*பீகாருக்கு* 40 + 23 = *69* ம்,
*ராஜஸ்தானுக்கு* 30 + 15 = *45 (அ) 46* ம் கிடைக்கும்.
அதாவது *சீட்களின் எண்ணிக்கை இப்படி அதிகரிக்கும்:*
தமிழ்நாட்டிற்கு 39 லிருந்து 48 ஆகும் (+9) (23%) ,
கேரளாவுக்கு 20 லிருந்து 22 ஆகும் (+2) (10%).
உ.பி.க்கு 80 லிருந்து 133 ஆகும் (+53) (60%),
பீகாருக்கு 40 லிருந்து 69 ஆகும் (+29)(72.5%,),
ராஜஸ்தானுக்கு 25 லிருந்து 46 ஆகும் (+21)(84%)
மேலே சொல்லியுள்ள ஐந்து மாநிலங்களின் தரவுகளின் கணக்குகள் ஒரு உதாரணத்திற்குத்தான்.
அனைத்து மாநிலங்களின் தரவுகளின் முழு விளக்கத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அட்டவணையைப் பார்க்கவும். .
*மக்கள் தொகையை சிறப்பாக கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு குறைவான இடங்களும்* ,
எந்த திட்டங்களும் இல்லாமல் *மக்கள் தொகையைப் பெருக்கிய மாநிலங்களுக்கு அதிக இடங்களும் அதிகரிக்கப்பட்டு இருப்பது* தான் பிரச்சனைக்குரியதாக இருக்கிறது.
இத்தோடு இந்த விஷயம் முடியவில்லை
இந்த மசோதா அடுத்து இப்போது துவங்கப்பட்டிருக்கும் *மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்த பிறகு (2027 - 2029) அதன் அடிப்படையில் அதைக் கொண்டு மீண்டும் தொகுதி மறுவரையரை செய்யப்படும்* என்கிறது சட்டம்.
அப்படியானால் சிறப்பாக மக்கள் தொகையை கட்டுப்படுத்தி வரும் *தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் இடங்களின் எண்ணிக்கை இன்னும் குறையும்* அபாயம் இருக்கிறது.
அதாவது கிடைக்கப் போகும் 48 சீட்டுகளில் இருந்து 2029 தேர்தலில் இன்னும் சீட்டுகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்பிருக்கிறது.
இது நம் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல
நம்மைப் போன்று மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்திய எல்லா மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசிடமிருந்து கிடைக்கும் வெகுமதி.
வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணாமல்,
இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டுதான் ' *வரும் முன் காப்போம்* ' என்ற அடிப்படை நோக்கத்தோடு திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் பெரும் எதிர்ப்பை மக்களவையில் தெரிவித்தன.
அந்த எதிர்ப்பைக் கொண்டே அந்த மசோதாவை தோல்வியடையவும் செய்தனர்
இந்த மீதி பாதி விபரத்தை ஒன்றிய அரசு சொல்லாமல் மறைத்தாலும் திமுக போன்ற கட்சியினர் மேற்படி சட்ட விபரங்களை அறிந்துதான் செயலாற்றினார்கள்.
இந்த முழு விபரத்தையும் நம் சக தோழர்களுக்கும் தெரியபடுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த பதிவு.
prsindia வலைதளத்தின் முகவரியும்,
அதிலிருந்து எடுக்கப்பட்ட அட்டவணையும் தனியே அடுத்தடுத்த பதிவுகளில் படிக்கிறவர்கள் தேவைக்காக கொடுக்கப்பட்டுள்ளது.
நன்றி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக