*முஸ்லீம்களிடையே ஒற்றுமை வேண்டும்* என்னும் உயரிய நோக்கம் ஆதங்கமாக நம்மில் பலரிடமும் இருக்கிறது..
இப்பொழுது இந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொடுத்திட்ட *வல்ல அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.*
சன்னி, ஷியா, மத்ஹபுகள், சிம், JAQH, தவ்ஹீத், தமுமுக, SDPI என்று பல்வேறு அமைப்புக்களாக இயங்கி வந்த அனைத்து முஸ்லீம் ஜமாஅத்-துகளையும் ஒன்றிணைத்த பணியை இப்போது நடிகர் விஜய் செய்துள்ளார்.
இதற்கு அவருக்கும் ஒரு பாராட்டை முஸ்லீம் சமுதாயம் பதிவு செய்ய வேண்டும்.
ஏனெனில் *தங்களுக்கு எதிராக ஒரு பொது எதிரி உருவாகி வரும் போது அந்த எதிரியை சமாளிக்கவும், தோற்கடிக்கவும் தாங்களாகவே எல்லோரும் ஓரணியில் திரள்வார்கள்* என்பது உலக நடைமுறை வரலாறு.
அதுதான் இப்போது நிகழ்ந்து கொண்டு இருக்கிறது.
ஒட்டு மொத்த அனைத்து ஜமாத் தலைவர்களும், மார்க்க அறிஞர்களும் ஒரே குரலில் விஜய்யின் அரசியலை கண்டிக்கிறார்கள்.
இஸ்லாமிய அமைப்புக்கள் மட்டுமல்ல சிறுபான்மையினர் அமைப்புக்களும் குறிப்பாக கிறிஸ்தவ பேரவையினரும் இதே கருத்தில் பேசுகிறார்கள்.
இதற்கு முன் NRC, CRI விஷயத்தில் அனைத்து முஸ்லீம்களும் ஒன்றிணைந்தோம்.
ஆனால் இந்த முறை மற்ற சிறுபான்மையினர் அமைப்பினரும் விஜய் என்ற அந்த நடிகரை எதிர்க்கிறார்கள்.
இன்னும் சற்று கவனித்துப் பார்த்தால், *தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும்* (பாஜக, அதிமுக கூட்டணி கட்சிகள் தவிர) *இதே கருத்தில் வெளிப்படையாக பேசி வருகின்றன* . மூர்க்கமாக எதிர்ப்பவர்களும் இவர்களில் உண்டு.
இவர்கள் அனைவரிலும் சில விதிவிலக்கு (Exemptions) களும் இருக்கிறார்கள்.அவர்கள் சொந்த நலனுக்காகவும், வேறு சொந்த காழ்ப்புணர்ச்சிகளினாலும் ஆதரவாக செயல்படுபவர்கள்.
இவ்வளவு பேரும்.அந்த நடிகரைப் பற்றி அறிவுபூர்வமான தங்களது கேள்விகளை எழுப்பியும், தங்களது விளக்கமான கருத்துக்களைப் எதிர்த்துப் பேசியும் அவற்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
ஆனாலும் இன்றைய இளம் தலைமுறையினர் ஆண்களும், பெண்களுமாக பலர் அந்த நடிகனுக்கு வால் பிடித்துக் கொண்டும் கண் முடித்தனமாக ஆதரித்துக் கொண்டும்தான் இருக்கிறார்கள்.
*இவர்கள் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிறார்கள்.* ஓட்டுப் போடும் வயது வராதவர்களும், முதல் முறையாக வாக்களிக்கப் போகிறவர்களுமாக அவர்கள் அதிகம் இருக்கிறார்கள்.
*இளங்கன்று பயமறியாது* என்பது போல இவரை ஆதரித்தால் என்னவெல்லாம் நடக்கும் என்று கற்பனை உலகில் இருந்து கொண்டிக்கிறார்கள்.
நிஜமாகவே என்னவெல்லாம் நடக்கும் என்பதை அறியாதவர்களாகவே இருக்கிறார்கள்.
அவர்களளில் பெரும்பாலானோர் *பள்ளிவாசல் தொடர்பில் இல்லாதவர்களாகத்தான் இருக்கிறார்கள்* . *ஈமான், இஸ்லாம் தெரியாத முஸ்லீம் பெயர்தாங்கி* களாக இருந்து கொண்டிக்கிறார்கள்.
சினிமா போதையில் வெறியூட்டப்பட்டிருக்கும் அவர்கள் கண்ணை மூடிக் கொண்டு அந்த நடிகன் சொல்வதை முழுமையாக நம்புபவர்கள். (அவன் சொல்வதே அரைகுறை)
நிலைமை இப்படியிருக்க, இவர்கள் கண்களுக்கும், காதுகளுக்கும், கல்புகளுக்கும் இந்த வீடியோ, ஆடியோ, வாட்ஸ் அப் பதிவுகள் போனாலும் *அவற்றை ஆழ்ந்து கேட்பார்களா ? பார்ப்பார்களா ? என்பது நிச்சயமில்லை.*
அப்படியே பார்த்தாலோ, படித்தாலோ அது பற்றி *கொஞ்சமாவது ஆழ்ந்து யோசிப்பார்களா ? என்றால் அதுவும் நிச்சயமில்லை.*
*வேறு என்னதான் செய்வது ?*
*குடும்பத்தில் உள்ளவர்கள் மற்றும் விபரமான அவர்களின் நண்பர்கள்* ஆகியோர் அவர்களை நெருங்க அவர்களிடம் *அழகான முறையில் பேச வேண்டும்* .
நம் சமுதாயத்திற்கு எதிரான கட்சி அது, அதன் பின்னணியில் பாஜக இருக்கிறது, நாளை இவர்கள் வந்தால் என்ன நடக்கும் ? என்பதை பற்றி பேசுங்கள்.
*முறைப்பார்கள், கோபப்படுவார்கள் இவை எல்லாம் நடக்கும்.*
ஆனாலும் கோபப்படாமல் விளக்க வேண்டியது நம் கடமை.
பாஜகவின் திட்டத்தின்படி சமூக வலைதளங்களிலும், பத்திரிக்கைகளும் போலியாக பல கருத்துக் கணிப்புக்களும்,
பொய் செய்திகளும் தொடர்ந்து பரப்பப்பட்டு கொண்டே வருகிறது.
இவை யாவும் திட்டமிட்டு பரப்பப்படும் கருத்துத் திணிப்புக்கள்.
நம்மை நம்ப வைக்க செய்யப்படும் திட்டமிட்ட விளம்பர உத்திகள். இவற்றைக் கண்டு யாரும் கவலை கொள்ளத் தேவையில்லை.
அல்காரித அடிப்படையில் செயல்படும் AI உலகில் கட்டமைக்கப்பட்ட தந்திரங்கள் இவை என்பதையும் அவர்களிடம் சொல்லுங்கள்.
*தீமை நடைபெறக் கண்டால் அதை உங்கள் கரங்களால் தடுங்கள், அது முடியா விட்டால் நாவினால் தடுங்கள். அதுவும் முடியா விட்டால் தீமை எனக் கருதி அதை வெறுத்து ஒதுக்குங்கள்* என்றார் கண்மணி நாயகம் (ஸல்)
" *விதைகளை கொண்டு போய் தெளியுங்கள். அது உங்கள் கடமை. அதை விளைவிப்பது எனது பொறுப்பு"* என்று தேவன் சொல்வதாக பைபிள் சொல்கிறது.
" *இறைவன் மீது நம்பிக்கை வையுங்கள். அதே சமயம் ஒட்டகத்தையும் கட்டி வையுங்கள்* " என்பதும் நபிமொழி
ஆக முயற்சி நம்முடையதாக இருக்கட்டும்
முடிவு இறைவன் வசம் இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக