வியாழன், 28 நவம்பர், 2024

ஏன் இந்தி திணிப்பை எதிர்க்கிறோம்?

ஏன்  இந்தி திணிப்பை எதிர்க்கிறோம்?



இன்னொரு மொழியைக் கற்றுக்கொள்வது நல்லது தானே? ஏன் எதிர்க்கிறார்கள்? என்பதாகச் சிலர் பேசிவருவதைக் காண முடிகிறது. நிச்சயம் நல்ல கேள்வி தான். இன்னொரு மொழியைக் கற்றுக்கொள்வதில் தவறில்லை. அது இந்தியோ, சமஸ்கிருதமோ, கன்னடமோ, ஜாவாவோ, பைத்தானோ,பாரசீகமோ, பதினாறாம் வாய்ப்பாடோ!

ஆனால், இந்தியைக் கற்றுக்கொண்டே தீர வேண்டும் என்பதில் இருக்கும் பிரச்னைகள் புரியாமல் நம் முன்னேற்றத்தைத் தடுக்கவே அதனை எதிர்க்கிறார்கள் என்பதாகப் புரிந்து கொள்வது ஆபத்தானது. முதலில், நம் முன்னேற்றம் என்பதில் இருக்கும் நாம் யார் என்பது முக்கியமானது.

உயர் சாதி, FC மக்களில் அந்த நாம் இல்லையென்பது முக்கியமானது. அவர்கள் ஏற்கெனவே ஆங்கிலத்தை ஆங்கிலேயர்களை விடவும் தெளிவாகக் கற்றுக்கொண்டு IELTS, TOEFL என்று போய்விட்டார்கள். அவர்களுக்கு இந்தித் திணிப்பைப் பற்றியெல்லாம் கவலை கொள்ள ஒன்றுமில்லை.

மேலும், இந்தியை இந்தியாவிற்கான ஒரு பொது மொழியாக மாற்றுவதில் அவர்களுக்கு நிச்சயமாகப் பெரும் பலன்களும் இருக்கின்றன. அதனைப் பின்னால் பார்க்கலாம்.

பொருளாதார மற்றும் சாதிப் படிநிலையில் நடுத்தர மற்றும் அடிமட்ட நிலையில் இருக்கும் மக்கள் தான் அந்த நாம்.

நமக்கு இந்தித்திணிப்பால் நேரப்போகும் பிரச்னைகள் என்னவாக இருக்கும் என்பதை முதலில் புரிந்து கொள்வோம். நாமும், நம் அப்பா, அம்மா, தாத்தா அவரது தாத்தா என்று நமக்குத் தெரிந்த ஒரே மொழி தமிழ் தான்.

நானூறு ஆண்டுகளாக ஆங்கிலம் இருந்தாலும் இப்பொழுதுதான் நாம் அதனைக் கடுமையான இலக்கணப் பிழைகளுடன் மெதுவாகக் கற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறோம்.

கிட்டத்தட்ட நானூறு ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த ஒரு மொழியை இப்பொழுதுதான் எழுதவும், கொஞ்சம் கொஞ்சமாகப் பேசவும் கற்றுக் கொள்கிற ஒரு தலைமுறை உருவாகிவருகிறது.

கிராமப்புற மற்றும் மத்திய நகர்ப்புற அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இப்பொழுதும் ஆங்கிலம் என்றால் பயம்தான். அந்தப் பயத்தையும் தாண்டித்தான் அவர்கள் ஆங்கிலம் கற்றுக் கொள்கிறார்கள். அது அவசியமானதும் கூட.

அவர்கள் பின்னாளில் படிக்கவிருக்கும் அனைத்துப் பட்டமேற்படிப்பு, ஆராய்ச்சிப் படிப்புகள் எல்லாமே ஆங்கிலத்தின் வாயிலாகத்தான் இருக்கும் என்பதால் ஆங்கிலம் தவிர்க்க இயலாதது மற்றும் தவிர்க்கக் கூடாததும் கூட.

கிட்டத்தட்ட LKG வகுப்புக்களில் இருந்து பத்துப் பதினைந்து வருடங்கள்…

…ஆங்கிலத்தை முறையாகக் கற்றுக் கொண்ட பின்பும், பள்ளிக் கல்வியைத் தாண்டி, தாய்மொழி வழிக் கல்வியைத் தாண்டி, ஆங்கிலத்தில் பட்டப் படிப்புப் படிக்கச் செல்லும் பெரும்பான்மை மாணவர்களுக்கு இப்பொழுதும் ஒரு பயம் இருக்கத்தான் செய்கிறது.

ஆங்கில வழி நுழைவுத் தேர்வுகள், ஆங்கில வழிப் போட்டித் தேர்வுகள் என்று எல்லா இடங்களிலும் ஆங்கிலத்தை எதிர்கொள்ளும் போதும் இந்தப் பயம் இருக்கிறது.

ஆனால், ஆங்கிலம் உலகப் பொது மொழி என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை; நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் ஆங்கிலத்தை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். சந்தேகமே இல்லாமல் பொருளாதார வளர்ச்சிக்கு ஆங்கிலம் அவசியம்.

ஆங்கிலம் சிரமமாக இருக்கிறது என்பதை எளிமையாக இப்படித் திரிக்கலாம். இருபது வருடங்கள் ஆங்கிலத்தில் படித்தும் அதில் எழுதத் தெரியாமல், அதனைப் புரிந்து கொள்ளாமல் இருப்பது மாணவர்களின் திறன் இல்லாமை தானே, அவர்களின் விருப்பமில்லாமை தானே என்பதாகச் சொல்லலாம்.

அல்லது அவர்களுக்குச் சரியாகச் சொல்லிக் கொடுக்காத பள்ளிகளை, கல்விக் கொள்கைகளைக் குறை கூறலாம். பயிற்றுவிக்கும் முறையிலோ அல்லது கல்விக் கொள்கைகளிலோ மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலமாக எல்லோரையும் ஒரு மொழியில் திறன் மிக்கவராக்கிவிடலாம் என்று கூறலாம்.

இதனை ஒரு அரசு செய்யும் புரட்சியாகவும், முன்னேற்றத்திற்கான அடிக்கல் என்பதாகவும் பிரச்சாரம் செய்யலாம். அதில் உண்மை இருப்பதைப் போலவே தான் தோன்றும். ஆனால், நாம் அந்நிய மொழிகளை நம் சுற்றத்தில் எங்கும் பயன்படுத்துவதே இல்லை. பேச்சு வழக்கில் இல்லை.

நாம் பேசுகிற, நம்மோடு பேசுகிற எல்லாமே தாய்மொழியில் இருப்பதால் அந்நிய மொழிகளில் விற்பன்னராவது எளிதானதல்ல. மேலும் தேவையுமல்ல. தேவைப்படும்போது தேவைப்படுபவர் கற்றுக் கொள்ளவும் செய்வார்!

இந்தியை மொத்த நாட்டிற்குமான பொதுமொழி என்று சொல்வதை நாம் ஆங்கிலத்தை வைத்துப் புரிந்து கொள்வோம்.

இப்பொழுது ”இந்தியும் ஒரு மொழிதான சார், அதையும் சேர்த்துப் படிச்சுட்டா இன்னும் வடக்க போய் நிறைய சம்பாதிக்கலாம்ல, திராவிடக் கட்சிகள் அதை எதிர்த்து அரசியல் செய்யுறாங்க, நம்மை முன்னேறவே விட மாட்டாங்க” என்பதைப் பார்ப்போம்.

இத்தனை ஆண்டுகளாக ஆங்கிலம் இங்கே ஊன்றியிருந்தும் நம்மால் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவோ எழுதவோ முடியாததற்குக் காரணம் அதன் மேலுள்ள வெறுப்போ, அரசியல் காரணங்களோ அல்ல. அது நம் அன்றாட வாழ்வில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

இத்தனைக்கும் நாம் பேசுகிற, புழங்குகிற கருவிகள் எல்லாவற்றிலும் ஆங்கிலம் கலந்திருந்தாலும். தவிரவும் இப்பொழுதுதான் நம் பெரும்பான்மை கல்வி கற்க வருகிறது.

அவர்களுக்கு அவர்கள் பேசுகிற, புழங்குகிற, அவர்கள் மொழியில் பாடங்களும், கேள்விகளும், தேர்வுகளும், அரசின் அறிவிப்புக்களும் இருப்பதுதான் அறம். அப்பொழுதான் போட்டித் தேர்வுகளை அச்சமின்றி அணுக முடியும்.

அதுவல்லாமல், திடீரென அறிமுகமற்ற ஒரு மொழியைக் கட்டாயமாக்கி, இனி உங்கள் தேர்வுகள் இந்த மொழியில் தான் இருக்கும் என்று கூறி வடிகட்டுவது ஜனநாயக முறையல்ல. இதைத்தான் திணிப்பு என்கிறோம். ஆனாலும், நாம் ஆங்கிலத்தை ஏற்றுக் கொள்கிறோம்.

இத்தனை தடைகள் இருந்தாலும் ஆங்கிலம் பெரும் திறவுகோல் என்பதால் அதனை ஏற்றுக் கொள்கிறோம்.

இப்பொழுது இந்தி மொழியை மூன்றாம் மொழியாக இந்தி பேசாத மாநிலங்களில் கட்டாயமாக்குவதை ஏன் கடுமையாக எதிர்க்க வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.

இந்தியாவின் அலுவலகத் தொடர்பு மொழியாக இந்தியும், ஆங்கிலமும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இந்தியாவின் பெரும்பான்மை மக்கள் கிட்டத்தட்ட 50 கோடி மக்கள் இந்தி பேசுகிறார்கள்.

அந்த ஐம்பது கோடி மக்களிலுமே அந்தந்த மாநிலத்தின் சொந்த மொழியின் அடிப்படையில் பிரித்தால் இந்தியை மட்டுமே தாய்மொழியாகக் கொண்ட மாநிலங்கள் என்று எதுவுமே இல்லை. ஆனாலும், இந்தியாவில் அதிக அளவில் பேசப்படும் மொழி இந்தி என்பது உண்மைதான்.

பிராந்திய மொழிகளுடன் இந்தியும் சுமார் ஐம்பது கோடி மக்களால் பேசப்படுகிறது. மீதமிருக்கும் 80 கோடி மக்களுக்கு இந்தி தெரியாது. அவர்கள் பிராந்திய மொழிகளுடன் ஆங்கிலத்தைப் பேசுகிறார்கள். அதாவது படித்தவர்கள், மற்ற இந்திய மாநிலங்களுடன் தொடர்பு கொள்ள, ஆங்கிலத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

உலகத்துடன் தொடர்பு கொள்ளவும் ஆங்கிலம் தான்.

அதிகமான மக்கள் பேசுகிற மொழியான இந்தியை இந்தியா முழுவதற்குமான பொது மொழியாக உருவாக்கும் முன்னெடுப்புகள் வெற்றியடைந்தால், அதன் பாதகங்கள் நம்மை மிகக் கடுமையாகப் பாதிக்கும். எப்படிப் பாதிக்கும்?

NEET விவகாரத்தை வைத்துப் புரிந்து கொள்வோம்.

ஒருவேளை இந்தியா முழுமைக்கும் இந்தியைக் கற்றுத் தேர்வது கட்டாயம் என்ற நிலை வருமாயின், அடுத்தடுத்து பெரும்பான்மை அரசுகள் அமைகையில் உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வுகள் நாடு முழுவதும் இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே தேர்வுகள் அமையும் என்ற சட்டம் வரலாம்!

பிராந்திய மொழிகளை மட்டுமே பேசி, அதனைப் புரிந்து கொள்கிற மாநிலங்களில் உள்ள மாணவர்களின் எதிர்காலம் மிகக் கடுமையாகப் பாதிப்படையும்.

இந்தியை நாம் ஏற்றுக் கொண்டோமானால், இது நேரலாம். அதனை நம்மால் எதிர்க்கவும் முடியாது. எதிர்த்தால் அதே பழைய தர்க்கத்தை நம் முன்னால் வைப்பார்கள்.

இந்தியை எல்லாப் பள்ளிகளிலும் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தாயிற்று. இன்னமும் கற்றுக் கொள்ளாதது மாணவர்களின் தவறு. அவர்கள் படிக்கும் மொழியில் இருந்துதான் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. முட்டாள் மாணவர்களுக்காக அரசின் கொள்கையை மாற்றிக் கொள்ளக் கூடாது.

அறிவிருக்கும் மாணவர்களைத் தேர்ந்தெடுக்கவே தேர்வுகள். அறிவில்லாத மாணவர்களுக்காகப் போராடுவது சட்டத்திற்கு எதிரானது என்பதாக வாதங்கள் வைக்கப்படும். அப்பொழுதும் இதெல்லாம் சரிதானே என்று தோன்றும். நன்றாகப் படித்துப் பாருங்கள்.

பள்ளிகளில் சொல்லிக் கொடுக்கப்பட்ட மொழியில் இருந்துதானே கேள்வி கேட்கிறோம் என்பதை எப்படி எதிர்க்க முடியும்? படிக்காதது யார் தவறு என்ற கேள்விக்கு எப்படிப் பதில் சொல்வீர்கள்? எளிமையாக உங்களைச் சோம்பேறி என்றும், சட்டத்தை எதிர்க்கும் போராளி என்றும் கூறிவிட முடியும்.

இத்தனைக்கும் நாம் நம் சொந்த நாட்டில், சொந்த மொழியில் என் தேர்வுகளை எழுதவும், போட்டித் தேர்வுகளில் பங்கேற்கவும் விரும்புகிறேன் என்கிற அடிப்படை உரிமையையே சட்டத்திற்கு எதிரானது என்பதாக உருவாக்க முடியும்.

ஆயிரம் ஆண்டுகளாக ஒரு மொழியைப் பயின்று, அதைப் பேசி வரும், அந்தச் சுற்றத்தில் வாழும் ஒரு மாணவனும், ஒரு சில வருடங்களாக இந்தியை வெறும் பாடப்புத்தகங்களில் மட்டும் படிக்கும் மாணவனும் ஒரே தேர்வெழுதி அதில் திறமையை நிரூபித்தல் என்பது எந்தவகையிலும் அறம் ஆகாது இல்லையா?

சரி, இதெல்லாம் ஒரு பேச்சுக்குத்தான, நிஜமாவே எந்த அரசும் இப்படிச் செய்யாது என்று தோன்றலாம். அப்படியே வைத்துக் கொள்வோம். நானும் அப்படியே நம்புகிறேன்.

சரி, ஒரு மூன்றாம் மொழியாக இந்தியைக் கற்றுக் கொள்ளலாம் தானே, ஏன் எதிர்க்க வேண்டும் என்கிற கேள்விக்கு வரலாம்.

பெருவாரியான மக்கள் பேசும் மொழி என்பதும், வடக்கிந்தியா முழுவதும் பேசுகிற மொழி என்கிற தர்க்கமும் நியாயமானதுதான். இந்தியைக் கற்றுக் கொள்வதை இப்பொழுது வரையிலும் யாரும் எதிர்க்கவே இல்லை என்பது முதலில் புரிந்து கொள்ள வேண்டியது.

அதனைக் கல்விக் கூடங்களில் கட்டாயப் பயிற்று மொழியாக, அரசு அலுவலங்களில் இன்னொரு மொழியாக சேர்ப்பதைத்தான் எதிர்க்கிறார்கள். காரணம் எளிமையானதுதான். கல்வி என்பது மகிழ்ச்சியானதாக இருக்க வேண்டும்.

கிட்டத்தட்ட எல்லா முன்னேறிய தேசங்களுமே தாய்மொழி வழியிலான கல்வியைத்தான் ஆதரிக்கிறார்கள்; கடைப்பிடிக்கிறார்கள். உண்மையை ஒப்புக் கொள்ள வேண்டுமானால், தமிழிலேயே எல்லாமும் இருக்குமானால் நமக்கு ஆங்கிலம் கூட அவசியமில்லை தான்.

ஜெர்மானியர்களைப் போல, ரஷ்யர்களைப் போல எல்லா தொழில்நுட்பமும் தாய்மொழியிலேயே கற்றுக் கொள்ளும் வசதியிருப்பின், எக்ஸ்ட்ராவாக இன்னொரு மொழியின் தேவையே நமக்கு இல்லை. உலகோடு தொடர்புகொள்ள மட்டும் ஆங்கிலம் கற்றுக் கொள்ளலாம்.

இங்கேயும் திரும்பவும் ஆங்கிலம் தான் தேவையாக இருக்கிறதே ஒழிய இந்தியோ, வேறு வடக்கிந்திய மொழிகளோ அல்ல.

யாரும் தாமாகப் போய் எதையும் கற்றுக் கொள்ள மாட்டார்கள், அரசுதான் கற்றுத் தர வேண்டும். அதைப் பள்ளியில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும் என்றும் தோன்றலாம்.

இங்கே இந்தி கற்றுத் தந்து, அதில் தேர்வெழுதுவதில் ஏற்படும் பிரச்னைகளையும் கணக்கில் கொள்வது அவசியமாகிறது. ஏற்கெனவே நாம் ஆங்கிலத்தைத் திக்கித் திணறிக் கற்றுக் கொண்டிருக்கிறோம். அது அத்தியாவசியம் என்றாலும் அது சுமைதான்.

இதன் பொருள் சோம்பேறித்தனமோ, கற்றுக் கொள்வதில் இருக்கும் ஆர்வமின்மையோ அல்ல. நமக்குத் தொடர்பே இல்லாத ஒன்றை உள்வாங்குவதில் இருக்கும் பிரச்னைகளைச் சொல்கிறேன். பிதாகரஸ் தேற்றத்தையோ, ஆர்க்கிமிடிஸ் தத்துவத்தையோ நாம் எளிமையாக விளங்கிக் கொள்ளலாம். அதெல்லாம் இயற்பியல். கணிதவியல்.

அவையெல்லாம் நம் வாழ்வோடு தொடர்புள்ளவை. அவற்றை அன்றாடம் பார்க்கிறோம். ஆனால், ஒரு மொழியானது அப்படி அல்ல. அதன் தேவை தொடர்பு கொள்வது மட்டும் தானே தவிர வேறெந்த அவசியமும் அதற்கு இல்லை. அது ஐந்தாயிரம் வருட தமிழானாலும், மூன்றாயிரம் வருட இந்தியானாலும் ஒன்றுதான்.

அறிவுக்கும் மொழிக்கும் தொடர்பில்லை. தொடர்பு கொள்ளல் என்பதற்கும், வேலைவாய்ப்பு, பொருளாதார அடிப்படையிலான முன்னேற்றம் என்பதற்காகவும் தான் நாம் கற்றுக் கொள்கிறோம்.

இதில் ஆங்கிலம் முக்கியமா இந்தி முக்கியமா என்ற கேள்வி வருமாயின் கண்ணை மூடிக் கொண்டு ஆங்கிலத்தைத் தான் தேர்ந்தெடுக்க முடியும்.

ஏனென்றால், நாம் ஆங்கிலத்தை விடுத்து இந்தியைக் கற்றுக் கொள்கிறோம் என்று கொண்டால், அவர்கள் ஆர்க்கிமிடிஸ் தத்துவத்தை ஆங்கிலத்தில் இருந்து இந்திக்குக் கொண்டுவந்து அங்கிருந்து தமிழுக்கு கொண்டு வர வேண்டியிருக்கும்.

இதற்கு நேராக ஆங்கிலத்தில் நாமே படித்துக் கொள்ளலாமே என்பது தான் தர்க்கம்.

சரி, இந்தி படித்தால் ஆங்கிலம் கற்றுக் கொள்ள வேண்டாம் என்று யார் சொன்னார்கள் என்று கேட்கத் தோன்றும். சரியான கேள்விதான்.

இப்பொழுதுதான் படிக்கவே வந்திருக்கிற பெரும்பாலான மக்களிடம் இந்தியை ஒரு கட்டாயப் பாடமாகத் திணிப்பது அவர்கள் மேலும் மிரட்சி கொள்ளவே வழிவகுக்கும். யோசித்துப் பாருங்கள்; ஆங்கிலம் அல்லாது இந்தியை மட்டும் படித்துத் தெளிவதில் எந்தவிதமான நன்மையும் இல்லை.

நாம் இந்தி படித்தாலும் படிக்காவிட்டாலும் ஆங்கிலம் படித்துத்தான் ஆக வேண்டும். சிரமப்பட்டுக் கற்றுக் கொள்வது என்பது வேறு. அத்தனை சிரமப்பட்டு ஒன்றைக் கற்றுக் கொள்வதால் விளையும் நன்மைகள் என்ன?

பெரும்பான்மைக்கு எந்தவிதத்திலும் பெரும் நன்மைகளைத் தராத ஒரு மொழியை ஏன் கட்டாயமாக ஏற்க வேண்டும் என்பதுதான் இங்கே கேள்வி. இந்தி படிக்காமல் என் வாழ்க்கை வீணாகிவிட்டது என்று நினைப்போர் நிச்சயமாகத் தனியாகப் படித்துக் கொள்ளலாம் தானே? அவர்களை யார் இங்கே எதிர்க்கிறார்கள்?

இந்தித் திணிப்பை எதிர்த்தது நாம் பாராட்ட வேண்டிய சமூக நீதி முன்னெடுப்பு என்பதை முதலில் புரிந்து கொள்வது அவசியம்.

1970 களில் ஒருவேளை இந்தியாவில் இருக்கும் எல்லா மாநிலங்களும் இந்தியை கட்டாயமாகக் கற்க வேண்டும் என்கிற முடிவு எட்டப்பட்டிருக்குமாயின், இப்பொழுது நிச்சயமாக மத்திய அரசின் எல்லா அலுவல்களும், மத்திய அரசின் தேர்வுகளும் இந்தியிலேயே நடத்தபடுகின்ற சூழலுக்கு வந்திருக்கும்.

எப்படியாயினும், நமக்கு நானூறு வருட ஆங்கிலம் எப்படி இத்தனை நாட்களாகப் புரிபடாமல் இருக்கிறதோ அதே போலத்தான் இந்தியும் இருந்திருக்கும். அதாவது, இந்தி பேசாத மாநிலங்களுக்கு அது பெரும் மொழித் தடையாகத்தான் இருந்திருக்கும்.

அந்தச் சூழலில் மத்திய அரசின் எல்லாப் பணிகளிலும் இந்தி தெரிந்த, இந்தியை முதன்மை மொழியாகக் கொண்ட மாநிலத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே இருந்திருப்பார்கள்.

நம் மக்கள் சாதாரணமாக, இந்தி ஒரு மொழி என்பதைக் கூடப் புரிந்து கொள்ளாமல், ”அறிவிருக்கறவன் பரீட்சைல பாசாகி வேலைக்குப் போறான், உனக்கு பொறாமை அதான் அவனைக் குறை சொல்லிட்டு இருக்க” என்பதாக முடித்துக் கொள்வார்கள்.

வேலை வாய்ப்பை வழங்காத ஒரு கல்வியை ஏன் கற்க வேண்டும் என்று ஒரு பெரும்பான்மை நிச்சயமாக படிக்கவே வரமாட்டார்கள். மிக மிகச் சிரமப்பட்டுத்தான் நாம் நம் அடித்தட்டு மக்களைப் படிக்க அழைத்து வருகிறோம். இதெல்லாம் எலைட்டிச மனப்பான்மையில் இருந்து பார்த்தால் புரியாது.

எட்டாம் வகுப்பு வரையிலும் எல்லோரும் தேர்ச்சி என்பது எல்லோரையும் திறன் குறைந்தவர்களாக மாற்ற வேண்டும் என்கிற நோக்கில் அல்ல.

நான்காம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பில் தேர்வு பெறாத இளம் குழந்தைகளை, அந்தத் தோல்வியைக் காட்டி, அவனை எதேனும் மெக்கானிக் ஷெட்களில் வேலைக்கு விட்டுவிடக்கூடாதே என்கிற அக்கறைதான். அறிவுக்கும் சமூக நீதிக்கும் இருக்கும் இடைவெளியைப் புரிந்து கொள்ளுங்கள்.

வேலைவாய்ப்பு, கல்வி இவைகள்தான் ஒரு தேசத்தின் வளர்ச்சிக்கு அவசியமானவை என்றால் அந்த தேசத்தின் எல்லா மக்களுக்கும் அதில் பங்கேற்கும் உரிமை இருக்க வேண்டும். அந்த உரிமையை நேரடியாகப் பறிக்க முடியாத நிலையில், இப்படி நமக்குத் தொடர்பல்லாத ஒரு மொழியின் மூலமாகப் பறிப்பதும் அநீதி தான்.

இந்தித் திணிப்பை எதிர்ப்பது ஏதோ பொழுதுபோக்காகவோ, அரசியல் காரணங்களுக்காகவோ என்று நினைப்பது அறியாமையின் உச்சம். அது அடிப்படை உரிமைகளைப் பறிக்க நினைக்கும் ஒரு அரசின் தவறினைச் சுட்டிக்காட்டும் போராட்டம். நம் நாட்டில், நம் மொழியில் படிக்கவும், தேர்வெழுதவும் நமக்கு உரிமைகள் உள்ளன.

அதனைக் காப்பதற்கான எதிர்ப்புக்குரல்கள் தான் இந்தித் திணிப்பை எதிர்ப்பது. ஏன் தேர்வெழுதுதல் வரைக்கும் போக வேண்டி இருக்கிறது என்றால், அதன் நீட்சி அப்படி இருக்கலாம் என்பதால் தான். இந்தித் திணிப்பை எதிர்ப்பதால் தமிழகம் மட்டும் நன்மை பெறவில்லை.

இந்தி பேசாத ஏனைய மாநிலத்தின் உரிமைகளுக்கும் சேர்த்தே தான் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். நமக்குத் தெரிந்த மொழியில் நம் அரசு செயல்படுவது நம் அடிப்படை உரிமை. அந்த உரிமையைக் காக்கத்தான் குரல் கொடுக்கிறார்கள்.

நமக்குத் தமிழ் தான் தெரியும் என்பதற்காக நாம் மத்திய அரசும் தமிழிலேயே இயங்க வேண்டும் என்று சொல்லவில்லை. இந்த வேறுபாட்டைப் புரிந்து கொள்ளுங்கள்.

இந்தியா என்கிற இந்த தேசத்தின் அழகியல் என்பதே அது ஒற்றைத் தேசியம் இல்லை என்பது தான்.

ஒரே மொழி பேசுகிற மக்கள் என்கிற அடையாளமோ, ஒரே மதத்தைப் பின்பற்றுகிற மக்கள் என்கிற அடையாளமோ இல்லாமல் ஒரு நாடாக இணைந்திருப்பதன் அழகியல் உலகில் வேறெங்கும் காணமுடியாது. இதனைப் புரிந்து கொள்வோம்.

இந்தி கற்பதால் தான் நம் வாழ்க்கை மேம்பாடடையும் என்று நம்புகிற எவரும் இப்பொழுதே இந்தி கற்கத் துவங்குங்கள். தமிழைப்போல, ஆங்கிலத்தைப் போல அதுவும் ஒரு மொழி. ஆனால், அதனை எல்லோரும் கற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்பதில் இருக்கும் வன்முறையையும் புரிந்து கொள்ளுங்கள்


நன்றி :  செல்வகுமார் பழனிசாமி

திங்கள், 18 நவம்பர், 2024

இந்திய அரசு ரகசியங்களை திருடி 6 நாடுகளுக்கு விற்ற கோவை தொழிலதிபர்

இந்திய அரசு ரகசியங்களை திருடி பல வெளிநாடுகளுக்கு விற்ற குமார் நாராயண்

இந்திய பிரதமர் அலுவலகத்தின் ரகசியத் தகவல்கள் பிரான்ஸ், போலந்து, செக்கோஸ்லோவாகியா போன்ற நாடுகளின் ஏஜெண்டுகளுக்கு விற்கப்பட்டன.

கடந்த 1985-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்திய அரசியலில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது.

பிரதமர் ராஜீவ் காந்தியின் முதன்மை செயலாளர் பி.சி.அலெக்சாண்டர் ராஜினாமா செய்தார்.

இந்தியாவின் வேண்டுகோளுக்கு இணங்க, பிரான்ஸ் டெல்லியில் இருந்து தனது தூதரை திரும்பப் பெற்றது. செக்கோஸ்லோவாகியா, போலந்து மற்றும் கிழக்கு ஜெர்மனியைச் சேர்ந்த தூதர்கள் டெல்லி தூதரகங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

உளவு ரீதியிலான முறைகேடு ஒன்று, இதன் பின்னணியில் இருந்தது. அந்த முறைகேடு, இந்தியாவின் பிரதமர் அலுவலகத்துடன் தொடர்பானது. 'பிரதமர் அலுவலகத்தில் இதுவொரு கரும்புள்ளி' என இந்திய ஊடகங்கள் எழுதின.

இதில், ராஜீவ் காந்தியின் முதன்மைச் செயலாளர் பி.சி. அலெக்சாண்டரின் தனிச் செயலாளர் என்.டி.கேர், பி.ஏ. மல்ஹோத்ரா மற்றும் அவரது பணியாள் கூட சம்பந்தப்பட்டிருந்தனர்.


ஜனவரி 16-17 அன்றைய தின இரவு, புலனாய்வுப் பணியகத்தின் (IB) 'உளவு பார்த்தலை தடுக்கும் பிரிவு' (Counter Intelligence Department) என்.டி.கேரை முதலில் கைது செய்தது.

காலையில், பிஏ மல்ஹோத்ரா மற்றும் பிரதமர் அலுவலக பணியாள் கைது செய்யப்பட்டனர்.


தமிழ்நாட்டின் கோவையில் பிறந்தவரான தொழிலதிபர் குமார் நாராயண் மூலம் ரகசிய அரசு ஆவணங்களை வெளிநாட்டு ஏஜெண்டுகளுக்கு அனுப்பியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

பிரதமர் அலுவலகத்தை சேர்ந்த சில ஊழியர்கள், இந்திய தொழிலதிபர் குமார் நாராயண் மூலம் வெளிநாட்டு முகவர்களுக்கு அரசாங்கத்தின் ரகசிய ஆவணங்களை அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டது


சுருக்கெழுத்தர்கள், தனிச் செயலாளர்களிடம் ஏராளமான தகவல்கள் இருந்தன

கடந்த 1925 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் பிறந்த குமார் நாராயண் 1949 ஆம் ஆண்டு டெல்லியில் வெளியுறவு அமைச்சகத்தில் சுருக்கெழுத்தராக தனது பணியைத் தொடங்கினார்.

பின்னர் அவர் ராஜினாமா செய்து பொறியியல் உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனமான எஸ்எம்எல் மானெக்லால் (SML Maneklal) நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கினார்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட'எ சிங்குலர் ஸ்பை தி அன்டோல்ட் ஸ்டோரி ஆஃப் குமார் நாராயண்' (A Singular Spy The Untold Story of Kumar Narayan) என்ற புத்தகத்தில், எழுத்தாளர் கல்லோல் பட்டாச்சார்ஜி, "உரிம அனுமதி ஆதிக்கத்தின் போது (லைசென்ஸ் பெர்மிட் ராஜ்), ​​அரசாங்கத்தின் பின்னணியில் பணிபுரியும் சுருக்கெழுத்தர்களுக்கு பல்வேறு அமைச்சகங்களில் ரகசியத் தகவல் கிடைத்தது" என எழுதியுள்ளார்.

மேலும், "சுருக்கெழுத்தர்கள் தங்களுக்குக் கிடைக்கும் தகவல்களை விற்பனை செய்யத் தயாராக இருந்தால், அவர்கள் வெறும் தட்டச்சு செய்பவர்களாக மட்டும் இருக்க மாட்டார்கள் என்பதை நாராயண் அறிந்திருந்தார்" என எழுதுகிறார்.

குமார் நாராயணுக்கு முக்கிய அமைச்சகங்களில் நட்பு

கடந்த 1959 இல் அரசு வேலையை விட்டு வெளியேறிய பிறகு, குமார் அரசாங்கத்தில் சிறிய பதவிகளில் பணிபுரியும் நபர்களின் ரகசிய வலையமைப்பை உருவாக்கினார்.

இதுமட்டுமின்றி, பிரான்ஸ், கிழக்கு ஜெர்மனி, மேற்கு ஜெர்மனி, செக்கோஸ்லோவாகியா, சோவியத் யூனியன் மற்றும் போலந்து ஆகிய ஆறு நாடுகளின் தூதரகங்களுடனும் தொடர்பை ஏற்படுத்தி, அவர்களுக்கு ரகசிய மற்றும் முக்கிய ஆவணங்களை வழங்கத் தொடங்கினார்.

ஜனவரி 28, 1985 இன் 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' செய்தித்தாளில் குமார் நாராயண், "வெளிநாட்டில் ரகசிய தகவல்களை சேகரிப்பதற்காக பயிற்சி அளிக்கப்பட்டார்" என்று தெரிவிக்கப்பட்டது.

கடந்த 1985 ஆம் ஆண்டில், இந்தியாவில் உள்ள பல்வேறு கார்பரேட் நிறுவனங்களின் தொடர்பு அதிகாரிகளாக சுமார் இரண்டாயிரம் பேர் பணிபுரிந்தனர், அவர்களில் குமார் நாராயணும் சேர்க்கப்பட்டார்.

"குமாருக்கு பிரதமர் மற்றும் குடியரசு தலைவரின் அலுவலகங்கள் உட்பட ஒவ்வொரு முக்கிய அமைச்சகத்திலும் நண்பர்கள் இருந்தார்கள். அவர் கைது செய்யப்படுவதற்கு முன்பு பல சொத்துக்களை வாங்கினார். அவர் தனக்கு நெருக்கமானவர்களுக்கு விலை உயர்ந்த பரிசுகளை வழங்குவார்" என, கல்லோல் பட்டாச்சார்ஜி எழுதுகிறார்.

இந்த வழக்கு விசாரணையில், பிரதமர் அலுவலகத்தில் பணிபுரியும் பி.கோபாலன், அவரிடம் ஒரு தந்தையை போன்று நடந்துகொண்டதாக கண்டறியப்பட்டது.

பாஸ்போர்ட் அலுவலகத்தில் தாக்கல் செய்த ஆவணத்தில், தான் இறந்தால், அதுகுறித்து குமார் நாராயணுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று எழுதியிருந்தார் அவர்.

தகவல் கசிவு வெளியே வந்தது எப்படி?:

டெல்லியில் இந்தியா மற்றும் இலங்கை அதிகாரிகள் கூட்டம் நடந்த போதுதான் பிரதமர் அலுவலகத்தில் இருந்து தகவல்கள் கசிந்ததாக முதல் தகவல் கிடைத்தது.

கூட்டம் தொடங்கியவுடன், இலங்கை அதிகாரிகள் இந்திய அதிகாரிகளிடம் 'ரா' உளவு முகமையின் மிக ரகசிய ஆவணத்தை காண்பித்தனர். அதில், இலங்கை பற்றி இந்திய அரசு என்ன நினைக்கிறது என்று கூறப்பட்டிருந்தது.

வினோத் சர்மா மற்றும் ஜி.கே. சிங் ஆகியோர், பிப்ரவரி 17, 1985 இல் 'தி வீக்' இதழில், "இந்தியாவுக்கு அதுவொரு சங்கடமான ஆவணம். இந்தியாவின் மிக உயர்ந்த பதவிகளில் இருப்பவர்களுக்காக எழுதப்பட்ட ஆவணம், எப்படி இலங்கையை சென்றடைந்தது என புலனாய்வு அதிகாரிகள் திகைத்துப் போயிருந்தனர்" என எழுதினர்.

அந்த ஆவணம் மூன்று பிரதிகள் மட்டுமே எடுக்கப்பட்டிருந்தன. இரண்டு பிரதிகள் ரா உயர் அதிகாரிகளிடம் இருந்தது, ஒரு பிரதி பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது.

அந்த உயர் ரகசிய ஆவணம் எப்படி கொழும்புவை அடைந்தது என்பதை அறிய உளவுத்துறை அதிகாரிகள் ஆர்வம் காட்டினர்.

வினோத் சர்மா மற்றும் ஜி.கே. சிங், "பிரான்ஸ் அதிகாரி ஒருவர் அந்த ஆவணத்தைப் பெற்று, நாராயணின் தொடர்புகள் மூலம் இலங்கைக்கு வழங்கியது பின்னர் விசாரணையில் தெரியவந்தது." என்று கூறுகின்றனர்.

குமார் நாராயணுக்கு பிரான்ஸ் உளவுத்துறையுடன் தொடர்பு :

பிரதமர் அலுவலகம், பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சகங்கள் அமைந்துள்ள 'சென்ட்ரல் விஸ்டா' கட்டடத்தின் இடது புறத்தில், சவுத் பிளாக் அருகே போலீஸ் தடுப்புகள் போடப்பட்டுள்ளன

இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பிறகு, டெல்லியில் உச்சக்கட்ட உஷார் நிலை செயல்பாட்டில் இருந்தது. அதிகாரத்திற்கு கீழ் உள்ள ஒவ்வொரு நபரும் சந்தேகத்திற்குரியவர்களாக இருந்தனர்.

பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் அலுவலகத்தின் மூத்த அதிகாரிகளின் செயல்பாடுகளும் கண்காணிக்கப்படும் காலம் தொடங்கியது.

ஆனால், அதையும் மீறி பிரதமர் அலுவலகத்துடன் குமார் நாராயணின் தொடர்பு வெளியே தெரியவரவில்லை. குமார் நாராயண் தற்செயலாக போலீசாரிடம் சிக்கினார்.

சிபிஐயில் பணிபுரிந்த வேத் பிரகாஷ் சர்மா, தனது நண்பர் சுபாஷ் சர்மாவின் புகைப்பட நகல் எடுக்கும் கடைக்கு அடிக்கடி செல்வது வழக்கம்.

கடையில் வெளிச்சம் அதிகமாக இருந்தது. திடீரென அவரது கண்கள் மத்திய புலனாய்வுப் பணியகம் என்று எழுதப்பட்டிருந்த ஒரு பக்கத்தின் நகலை பார்த்தது.

புலனாய்வுப் பணியகம் அதன் ஆவணங்கள் எதையும் வெளியே எடுத்துச் செல்ல அனுமதிக்காது என்பதை வேத் பிரகாஷ் தனது அனுபவத்தில் அறிந்திருந்தார்.

புலனாய்வுப் பணியகத்தின் முக்கியமான ஆவணங்களின் நகல்கள்

"வேத் பிரகாஷ் அறையின் மூலையில் ஒரு நாற்காலியில் அமர்ந்தார். அதனை நகலெடுத்த சுபாஷ் ஷர்மா அவருக்கு எதிரே அமர்ந்திருந்தார். உளவுத்துறையின் ஆவணங்களில் பிரதமர் அலுவலகம் மற்றும் குடியரசு தலைவர் மாளிகை என குறியிடப்பட்டிருப்பதை அவர் பார்த்தார். இந்த ஆவணங்கள் அசாம், காஷ்மீர், கனரக தொழில்துறை மற்றும் பாகிஸ்தான் தொடர்பானவை" என கல்லோல் பட்டாச்சார்ஜி எழுதுகிறார்.

இதையடுத்து, அந்த ஆவணத்தை நகல் எடுத்தவரை சந்திக்கும் நம்பிக்கையுடன் தினமும் தனது நண்பரின் கடைக்கு செல்ல ஆரம்பித்தார் வேத் பிரகாஷ்.

இது பல நாட்களாக தொடர்ந்தது. இந்த ஆவணங்களில் இந்தியாவின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சவால்கள் பற்றிய உளவுத்துறையின் தகவல்கள் அடங்கியிருந்தன.

இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்த ரகசிய ஆவணங்கள் டெல்லியின் மையப்பகுதியில் உள்ள கன்னௌட் பிளேஸ் எனும் பகுதியில் நகலெடுக்கப்பட்டன.

"வேத் பிரகாஷ் முழு நம்பிக்கையுடன் இருந்தபோது, ​​புலனாய்வுப் பிரிவின் கூடுதல் இயக்குநருமான ஜே.என். ராயைத் தொடர்பு கொண்டு எல்லாவற்றையும் கூறினார்" என பட்டாச்சார்ஜி எழுதுகிறார்.

ராய், அதிகாரிகள் சிலரை அக்கடைக்கு விசாரணைக்காக அனுப்பினார். ஆனால் உறுதியான தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.

உளவு மோசடியில் ஈடுபட்டுள்ள அனைவரையும் அடையாளம் காணுதல் :

ஹெய்லி சாலையில் உள்ள ஒரு அலுவலகத்தில் இருந்து ஆவணங்கள் வந்தன

இதற்கான ஆதாரங்களை சேகரிக்க வேத் பிரகாஷ் விரும்பினார். ஒருநாள் அந்த பணியாள் கொண்டு வந்த ஒரு தாளை திருடி தன்னுடைய மேல்சட்டையின் பாக்கெட்டில் போட்டுக்கொண்டார்.

அந்த தாளை படித்தபோது அது புலனாய்வுப் பிரிவு பற்றியது என தெரிந்தது. இப்போது அவர் தனது சந்தேகம் சரியானது என்பதில் உறுதியாக இருந்தார்.

அங்கிருந்து நேராக தனது முன்னாள் உயரதிகாரி ஜே.என்.ராயிடம் சென்றார். இதைப் பார்த்து துள்ளிக் குதித்த ராய், முழு விஷயத்தையும் விசாரிக்க முடிவு செய்தார்.

அவர்களிடம் வேத் பிரகாஷ், 'கடையின் உரிமையாளர் இந்த பணியில் ஈடுபடவில்லை, எனவே அவரை தொந்தரவு செய்ய வேண்டாம்' என்று கூறினார். புலனாய்வுப் பிரிவினர் சாதாரண உடையில் அக்கடையைக் கண்காணிக்கத் தொடங்கினர்.

"அடுத்த நாள் பணியாள் நகலெடுத்துக் கொண்டு கடையை விட்டு வெளியேறியபோது, ​​வேத் பிரகாஷ் உளவுப் பணியகத்தை சேர்ந்த நபரை அவருக்குப் பின்னே அனுப்பினார்" என பட்டாச்சார்ஜி எழுதுகிறார்.

மேலும், "அந்த நபர் எஸ்.எல்.எம் மானெக் லாலின் ஹெய்லி ரோடு அலுவலகத்தில் இருந்து வந்துள்ளார் என்பது தெரிந்ததும், அந்த அலுவலகத்திலும் 24 மணிநேர கண்காணிப்பு போடப்பட்டது. பல நாட்கள் கண்காணிப்புக்குப் பிறகு, இந்த மோசடியில் ஈடுபட்ட அனைவரும் அடையாளம் காணப்பட்டனர்" என எழுதினார்.

நாராயணின் அலுவலகத்தில் ரெய்டு:

இந்தக் கைதுகள் வெளியுலகிற்கு தெரியாமல் மறைக்கப்பட்டுவிட்டன. ஆனால், 'தி இந்து'வின் ஜி.கே.ரெட்டிக்கு இதுபற்றித் தெரிந்து, இந்தச் செய்தியை முதலில் வெளியிட்டார்.

பிப்ரவரி 4, 1985 இல், குமார் நாராயணை எஸ்.எம்.எல் மானெக்லால் வேலையில் இருந்து நீக்கினார்.

குமார் நாராயண் தனது 15 பக்க வாக்குமூல அறிக்கையில், இந்த உளவு வழக்கில் குறைந்தது மூன்று நாடுகளுக்கு தொடர்பு இருப்பதாகவும், கடந்த 25 ஆண்டுகளாக பணத்திற்கு ஈடாக அவர்களுக்கு ரகசிய ஆவணங்களை அளித்து வந்ததாகவும் ஒப்புக்கொண்டார்.

தான் கொடுத்த தகவலை தனது முதலாளி மானெக்லால் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டதாக குமார் கூறினார்.

பி.சி. அலெக்சாண்டர் ராஜினாமா:

இதற்கு தார்மீக பொறுப்பேற்று பிரதமரின் முதன்மை செயலாளர் பி.சி.அலெக்சாண்டர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

"ஜனவரி 18, 1985 முதன்மைச் செயலாளராக எனது பணிக்காலத்தின் இருண்ட நாள்," என்று அவர் தனது சுயசரிதையான 'தி காரிடார்ஸ் ஆஃப் பவர்' இல் (Through the Corridors of Power) எழுதினார்.

அதில், "என் அலுவலகத்தின் ரகசிய தகவல்களை சில வணிக நிறுவனங்களுக்கு கசியவிட்ட குற்றச்சாட்டின் பேரில் எனது தனிப்பட்ட செயலாளரும் மூன்று தனிப்பட்ட கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டனர் என்ற அதிர்ச்சியூட்டும் செய்தி அன்று காலை என்னிடம் கூறப்பட்டது." என எழுதினார்.

"இந்த விஷயத்திற்கு தார்மீக பொறுப்பேற்று எனது பதவியை ராஜினாமா செய்வதுதான் என்னுடைய உடனடி எதிர்வினையாக இருந்தது" என அவர் எழுதியுள்ளார்.

"நான் மூன்று மணிக்கு பிரதமரைச் சந்திக்கச் சென்றேன். அப்போது அவருக்கு அருகில் அவரது மூத்த சகாக்கள் நரசிம்மராவ், வி.பி.சிங், எஸ்.பி.சவான் ஆகியோர் அமர்ந்திருந்தனர். நான் ராஜீவ் காந்தியிடம் உங்களை தனியாகச் சந்திக்க வேண்டும் என்று சொன்னேன். அவர்கள் சென்றவுடன், பிரதமரிடம் அனைத்தையும் கூறி, எனது ராஜினாமா குறித்து தெரிவித்தேன்" என்றார்.

தூதரை திரும்ப அழைக்குமாறு பிரான்ஸை கேட்டுக்கொண்ட டெல்லி:

பாரிஸில் உள்ள இந்திய தூதர் நரேந்திர சிங்குக்கு, பிரான்ஸ் வெளியுறவு அமைச்சரை சந்தித்து, இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதரை திரும்ப அழைத்துக் கொள்ளுமாறும், டெல்லியில் உள்ள தங்கள் தூதரக ஊழியர்களின் எண்ணிக்கைக்கு சமமாக பாரிஸில் உள்ள இந்திய தூதரகத்தின் ஊழியர்களின் எண்ணிக்கை இருக்க வேண்டும் என்றும் தகவல் அனுப்பப்பட்டது.

சின்மோய் கரேகான் தனது சுயசரிதையான 'சென்டர்ஸ் ஆஃப் பவர்' இல், "பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் மித்திராண்ட், 'என்ன நடந்தாலும் அதை மறந்துவிடுங்கள். இந்த சம்பவம் இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவுக்கு இடையூறாக இருக்க அனுமதிக்கப்படக் கூடாது' என, ராஜீவ் காந்திக்கு கடிதம் எழுதினார்" எனத் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 22, 1985 அன்று ராஜீவ் காந்தியைச் சந்திக்க தனது சகோதரனை டெல்லிக்கு அனுப்பினார் மிட்டல். தான் வருத்தமாக இருப்பதை அவர் இந்த வழியில் கூறினார். ஆனால் அதை அவர் வார்த்தையாக கூறவில்லை.

இந்த மோசடியில் ஈடுபட்ட போலந்து, செக்கோஸ்லோவாக்கியா மற்றும் கிழக்கு ஜெர்மனியின் ஊழியர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். ஆனால், நரசிம்ம ராவ் ஆலோசனையின் பேரில் சோவியத் தூதரகத்திற்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

குமார் நாராயணின் மரணம்:

குற்றம் சாட்டப்பட்ட 13 பேருக்கும் எதிரான விசாரணை 17 ஆண்டுகள் நீடித்தது.

அவர்கள் அனைவரும் வெளிநாட்டு ஏஜெண்டுகளுக்கு ரகசிய தகவல்களை அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டது. அவர்கள் அனைவரும் அரசு ஊழியர்கள். அவர்களில் 4 பேர் பிரதமர் அலுவலகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தில் பணியாற்றி வந்தனர்.

அவர்கள் அனைவருக்கும் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது, ஆனால், குமார் நாராயண் தீர்ப்புக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மார்ச் 20, 2000 அன்று இறந்தார்.

குமார் நாராயணை பற்றி 'எ சிங்குலர் ஸ்பை தி அன்டோல்ட் ஸ்டோரி ஆஃப் குமார் நாராயண்' என்ற புத்தகத்தை எழுதிய கல்லோல் பட்டாச்சார்ஜி

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Thanks to BBC

ஆதாரம்:

https://www.google.com/amp/s/www.bbc.com/tamil/articles/cy0l4jnrkp7o.amp





ஞாயிறு, 10 நவம்பர், 2024

பெரியார் என்ன கிழித்தார் ?

பெரியார் என்ன கிழித்தார்?


பெரியாரின் சாதனைகள் :

முன்பெல்லாம் எங்க ஊரில் இரண்டு சக்கர வாகனத்தில் தாழ்த்தப்பட்டோரை அமர வைத்து கொண்டு போக மாட்டார்கள்! ஆனால் இப்ப தாழ்த்தப்பட்டோர் ஓட்ட இவரு பின்னால் அமர்ந்து அவர் தோளை பிடித்துக் கொள்கிறார்! 

ஆனால் பெரியார் என்ன கிழித்தார் என்று சண்டைக்கு வருகிறார்கள்!


முன்பெல்லாம் எங்க ஊரில் கணவர் இறந்தால் மனைவிக்கு வெள்ளைப் புடவை தந்து சுப நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள அனுமதிக்க மாட்டார்கள் ஆனால் இப்ப அந்த பெண்ணே அடுத்த தலைமுறைக்கு தாலி எடுத்து கொடுக்கும் அளவுக்கு மாறி இருக்கிறார்கள்.


ஆனால் பெரியார் என்ன கிழித்தார் என்று சண்டைக்கு வருகிறார்கள்!

முன்பெல்லாம் எங்க ஊரில் பெண் வயதுக்கு வந்தா குடிசை கட்டி ஊர் முழுவதும் பத்திரிகை வைத்து அந்த பெண்ணை காட்சிப் படுத்துவார்கள் ஆனால் இப்ப பல தனவந்தர்கள் அப்படி ஒரு நிகழ்ச்சி இருக்கிறது என்று கூட நினைக்க மறுக்கிறார்கள்.


ஆனால் பெரியார் என்ன கிழித்தார் என்று சண்டைக்கு வருகிறார்கள்!


முன்பெல்லாம் எங்க ஊரில் பழனியம்மாள் பள்ளியில் பத்தாவது படித்தால் போதும் என்று 17 வயதில் திருமணம் செய்து விடுவார்கள் ஆனால் இப்ப பெண்ணை படிக்க வைத்து வேலைக்கு அனுப்பி கை நிறைய சம்பளம் வாங்கி சந்தோஷம் படுகிறார்கள். 

ஆனால் பெரியார் என்ன கிழித்தார் என்று சண்டைக்கு வருகிறார்கள்!


முன்பெல்லாம் எங்க ஊரில் திருமண நிகழ்வுகளில் பெண்ணை தரையில் அமர வைத்து ஆண்களுக்கு பென்ஞ்ச் போட்டு உட்கார வைப்பார்கள் ஆனால் இப்ப பெண்களை முன் வரிசையில் அமர வைத்து அழகு பார்க்கிறார்கள்.


ஆனால் பெரியார் என்ன கிழித்தார் என்று சண்டைக்கு வருகிறார்கள்!

முன்பெல்லாம் எங்க ஊரில் தாழ்த்தப்பட்டோரை சாதி பெயரைச் சொல்லி அழைப்பார்கள் ஆனால் இப்ப பெயரைச் சொல்லி அழகாக அழைக்கிறார்கள்.


 ஆனால் பெரியார் என்ன கிழித்தார் என்று சண்டைக்கு வருகிறார்கள்!

முன்பெல்லாம் எங்க ஊரில் ஆடு மாடு செத்தால் காலனி ஆட்களை அழைத்து தூக்கி கொண்டு போய் உணவாக உட்கொள்ள பரிந்துரைப்பார்கள். விஞ்ஞானம் அறிவியல் மனித நேயம் கற்றதனால் இப்ப அது அவர்கள் உடம்புக்கு ஆகாது என்று குழி தோண்டி புதைத்து விடுகிறார்கள். 


ஆனால் பெரியார் என்ன கிழித்தார் என்று சண்டைக்கு வருகிறார்கள்!

முன்பெல்லாம் எங்க ஊரில் நவீன உடை அலங்காரம் போட்டால் கண்ட படி ஆண்கள் வார்த்தை பேசுவார்கள். ஆனால் இப்ப Tattoo போட மெகந்தி வரைய பெற்றோர்களே அழைத்து போய் அழகு நிலையத்தில் காத்திருந்து வெளியே வந்த பெண்ணை ரசித்து கூட்டி வருகிறார்கள்.


ஆனால் பெரியார் என்ன கிழித்தார் என்று சண்டைக்கு வருகிறார்கள்!

ஆண் மனைவியை இழந்தால் உடனே திருமணம் ஆனால் பெண் காலம் முழுவதும் விதவைக் கோலத்தை அனுபவிக்க வேண்டும் என்று சொன்னார்கள். காலம் மாற தனது மகனுக்கு இரண்டாம் தாரமாக பெண் தேடுகிறார்கள். 


ஆனால் பெரியார் என்ன கிழித்தார் என்று சண்டைக்கு வருகிறார்கள்!

முன்பெல்லாம் எங்க ஊரில் பேருந்தில் தேநீர் கடைகளில் சரிசமமாக நடத்த மாட்டார்கள். 

ஆனால் இப்ப இரட்டை டம்ளர் இல்லாமல் ஒழித்து விட்டார்கள்.


ஆனால் பெரியார் என்ன கிழித்தார் என்று சண்டைக்கு வருகிறார்கள்!

(கோபிசெட்டிபாளையம் மருத்துவர் சு. விஜயகுமார் அவர்களின் பதிவு)

வெள்ளி, 8 நவம்பர், 2024

தவறான கேள்விகளுக்கு தக்க பதில்கள்

தவறான கேள்விகளுக்கு 
தக்க பதில்கள்


WhatsApp -ல் எனக்கு வந்த கேள்விகளுக்கு நான் அனுப்பிய பதில்கள்


மனசாட்சியுடன் பதில் சொல்லுங்கள் நண்பர்களே:


1. பிள்ளைகளை ஆங்கிலவழி கல்வியில் படிக்கவச்சுகிட்டு, தமிழுக்கு ஆதரவாக போராட வேண்டியது.

தமிழ் முக்கியம், ஆங்கிலமும் முக்கியம். ஆனால் தமிழ் இருக்க வேண்டிய இடத்தில் மாற்றாக ஹிந்தியை நுழைத்ததை / திணித்ததை/ திணிப்பதைத் தான் எதிர்க்கிறோம்.
இப்பொழுதே நம் பிள்ளைகளின் தமிழ்   வாசிப்பு, எழுத vocabulary இல்லை.

2. ஓவன்ல சமைத்து A/c அறையில உட்கார்ந்து சாப்பிட்டு, அணுமின்சாரத்திற்கு எதிராக போராட வேண்டியது.

ஓவன்ல சமைப்பது, A/C அறையில் வாழ்வதும் சாமான்யன் இல்லை. அவர்கள் வாழ்வும் மற்றவரை விட பாதுகாப்பானது. அணு மின் திட்டம் ஆபத்தானது. உலகில் பல நாடுகள் அதை கை விட்டு விட்டு மாற்று உற்பத்திக்கு சென்று கொண்டிருக்கின்றன. நாம் அதை எதிர்ப்பது சாமான்யர்களுக்காகவே. சாமான்யர்களின் அழிவில் (அ) சாமான்யர்களின் ஆபத்தில் மற்றவர்கள் வாழ செய்வதையே எதிர்க்கிறோம்.

3. கேஸ் அடுப்புல பால் காய்ச்சு குடித்துவிட்டு, மீத்தேனுக்கெதிரா போராட வேண்டியது.

மீத்தேனிலிருந்தும் கேஸ் எடுக்கலாம்.
பெட்ரோலியம் பொருட்களிலிருந்தும் கேஸ் எடுக்கலாம். நம் விவசாய பூமியை அழிக்கவே மீத்தேன் திட்டம் எனில் அதை அனைவரும் எதிர்க்கத் தானே வேண்டும்

4.பெட்ரோலில் வண்டிய ஓட்டிக்கொண்டு, ஹைட்ரோகார்பனுக்கெதிரா போராட வேண்டியது.

3-ஆம் கேள்விக்கான பதிலே இதற்கும் பொருந்தும்

5. விவசாயமே செய்யாது, விவசாயத்திற்கு ஆதரவாக போராட்டம்.

எல்லோரும் விவசாயம் செய்ய முடியாது. விவசாயம் செய்பவர் மட்டுமே விவசாயிகளுக்கு ஆதரவாக போராட வேண்டியதில்லை. விவசாய உற்பத்தியில் கிடைத்தவற்றை உண்ணுபவர் அனைவருமே ஆதரவு தர வேண்டும்

6. மாடு வெட்டி திண்ணுட்டு, மாட்டுக்கு ஆதரவாக போராட்டம்.

கேள்வி எண் 5-க்கான பதிலே இதற்கும் பொருந்தும்

7. சாதி சலுகைகளை அனுபவச்சிகிட்டு, சாதிக்கெதிரா போராட்டம்.

சாதி ஒழிப்பு / சாதி மறுப்பு வேறு, சாதி இயக்கம் வேறு
கீழே இருந்த நாம், மேலே வருவது பொறுக்காமல் செயல்படுவோர் செய்வது சாதி ஒழிப்பு என்ற போர்வையில் இடஒதுக்கீடு ஒழிப்பு.
இட ஒதுக்கீடு என்பது சலுகையல்ல. கால் ஊனமானவனையும், நல்ல கால் உள்ளவனையும் ஒரே ஓட்டப் பந்தயத்தில் விடும் போது ஊனமானவனுக்கு தரும் முன்னுரிமையே இட நதுக்கீடு
அதை அனுபவித்து படிப்பும், பதவியும் பெற்றோர் இதை எதிர்ப்பதுதான் வேடிக்கை  அவர்கள் தங்கள் பணிகளை துறப்பார்களா?  / அப்படி கிடைக்கும் வாய்ப்புக்களை விட்டு விடுவார்களா? புரிந்து கொள்ளுங்ள்.

8. இந்துமதத்தை மட்டும் இழிவு படித்திகிட்டு, மதசார்பிண்மைக்கு ஆதரவாக போராட்டம்.

பக்தி என்பது வேறு
மதவெறி என்பது வேறு.
பிறர் வாழச் செய்வது பக்தி
பிறர் வாடச் செய்வது வெறி
மதச்சார்பின்மை என்பது எந்த மதத்தையும் சாராதிருத்தல் மட்டுமல்ல பிற மதத்தை பகடி செய்யாதிருத்தலும்
பக்தி பகல் வேஷமாவதை எதிர்ப்பின் அது இந்து மதத்தை இழிவுபடுத்துவது என்பதாகிறது.

9. பணம் கொடுத்து,பணம் வாங்கி ஓட்டு போட்டு, ஊழலுக்கு எதிராக போராட்டம்.

இது கோழி முதலா?  முட்டை முதலா? என்பது போன்றது
ஊழல் என்பது ஓழிக்க முடியாது. எளிதில் / விரைவில் எதையும் சாதிக்க குறுக்கு வழி தேடும் நாம் அனைவரும் ஊழல்வாதிகளே.

10.மதுவிற்கு எல்லாம் அடிமையாகிவிட்டு, மதுக்கெதிரா போராட்டம்.

நம் காலத்தில் சிகரெட் குடிப்பது ஆண்மை. இன்று அதுவே மது குடிப்பது. அரசாங்கமே மது வருமானத்தில் நடக்கிறது. இது கேடு கெட்ட நிலை. நம் வலிமையாக எதிர்க்காததல் அதை விற்பவனே எதிர்ப்பது போல் நடிக்கிறான்

11. நீர்நிலைகளை எல்லாம் மாசு உண்டாக்கி அழித்துவிட்டு, நீருக்காதவராக போராட்டம்.

கேள்வி எண் 10-ன் பதிலே பொருந்தும்

12. அரசிற்கு வரியே கட்டாமல், வளர்ச்சி எங்கே என்று கேட்டு போராட்டம்.

வரிகள் பல வகை உண்டு. தெரிந்தும், தெரியாமலும் வரிகள் கட்டிக் கொண்டே இருக்கிறோம். (உ-ம்: சொத்து வரி, விற்பனை வரி, உற்பத்தி வரி Etc) இதில் சொல்வது வருமான வரி. இங்கு யாரும் உண்மையாக வரி கட்டுவதில்லை. நான் உட்பட . வரி விலக்கை தேடி தேடி உபயோகிக்கிறோம். வாங்கிய வரிக்கான வளர்ச்சியைக் கேட்கிறார்கள். நாட்டு வளர்ச்சிக்கு திட்டம் தீட்டி தன் வீட்டு வளர்ச்சியை செய்து கொள்கிறார்கள் கேட்கக் கூடாதா?

13. தவறு செய்தவர்களை தண்டித்தால், அடக்குமுறை,சர்வாதிகாரம்னு சொல்லி போராட்டம்.


யார் செய்வது தவறு?
சரி, தவறு எல்லாமே ஆளுபவர்களை பொறுத்து மாறும். இன்று சரி என்பது நாளை தவறு என மாறும்.
அரசு செய்வதல்லாம் சரி என்னு சொல்லும் சட்டம், சாமன்யன் செய்தால் தவறு என தண்டிப்பதை ஏற்றுக் கொள்ளலாமா?

அனைத்தையும் மக்களே செய்துவிட்டு
இந்தியாவை சில ஆண்டுகள் ஆட்சி செய்பவர்கள் தான் எல்லாத்திற்கும் காரணம் என்று சொல்லும் பொழுதுதான் வேடிக்கையாக உள்ளது.

இது முழுக்க முழுக்க பாஜக ஆதரவில் எழுதப்பட்டுள்ள வாசகம்.
சரி காங். இவ்வளவு நாள் தப்பா ஆட்சி செய்து விட்டான். பாஜக வந்து 6 வருடங்கள் ஆகி விட்டது. உருப்படியாய் செய்தவை எத்தனை?
மதவாத அரசியலே அதன் அஜெண்டா , அதை அடைய அது எதுவும் செய்யும். பதவி பலத்தில், பண பலத்தில் மிரட்டும். எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும். ஆட்சிகளை கவிழ்க்கும். அனைத்தையும் ஓப்பனாகவே செய்யும். கேட்டால் தேச விரோதி  ஆதரித்தால் தேச பக்தி

தனி மனதின் ஒவ்வொருவரும் மாறினால் மட்டுமே நிச்சயம் மாற்றம் பிறக்கும்.

*மாற்றம் வேண்டும் என்றால் நாம் தான் மாற வேண்டும் ..!!*

என் பதில்களை படித்தமைக்கு நன்றி
எதையும் பத்திரிக்கை, தொலைக்காட்சி பார்வையில் மேம்போக்காக  அணுகாதீர்
நிறைய புத்தகங்கள் வாசியுங்கள்
ஆழ யோசியுங்கள்


நன்றி


வாழ்க வளமுடன்


பயணப் பயனாளிகளின் நாயகன் கலைஞர்

 பயணப் பயனாளிகளின் நாயகன் கலைஞர்





வாசித்த நாள் : 15.12. 2020


ஒரு அம்மா தன் பிறந்த குழந்தை பேசவே இல்லையேன்னு பல தவங்கள் செஞ்சு, நிறையக் கஷ்டப்பட்டு பேச வச்சாங்களாம். அந்தக் குழந்தைக்கு பேச்சு வந்த உடனே எப்பம்மா நீ தாலி அறுப்பேன்னு கேட்டுச்சாம். அதுபோல கலைஞரால், இலவச பஸ் பாஸ்ல ஸ்கூல் போயிட்டு, பர்ஸ்ட் கிராஜுவேட்ல காலேஜ் முடிச்சு வேலைக்குப் போயி நாலு காச பார்த்த சிலர் சோசியல் மீடியாவுக்கு வந்த உடன் கலைஞர் டிக்கெட் எடுக்காம ட்ரெயின்ல வந்தாராம்ல என ேபாகிற போக்கில் பொத்தாம் பொதுவாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னும் கலைஞர் அவர்கள் ட்ரெயினில் டிக்கெட் எடுக்காமல் வந்தார் என்று உளறிக் கொண்டே இருப்பவர்களைக் கண்டால் சிரிப்பு வருகிறது. 

தமிழ்நாட்டில் பெரு முதலாளிகளிடம் மட்டும் இருந்த பேருந்துகளை பல எதிர்ப்புகளையும் மீறி அரசுடமையாக்கியவர் கலைஞர். அவர்கள் லாபமில்லா ரூட்களில் பேருந்துகளை இயக்க மாட்டார்கள். ஊழியர்களுக்கு சரி நிகர் ஊதியம், பணிப்பாதுகாப்பு இருக்காது. பேருந்து கட்டண நிர்ணயம் அவர்கள் கைகளில்.

ஆனால் அவர்களிடம் இருந்த பேருந்துகள் அரசுடமையாக்கப்பட்ட உடன் குக்கிராமங்களுக்கும் பேருந்து வசதி கிட்டியது. பேருந்து வசதி இல்லா ஊரே தமிழ்நாட்டில் இல்லை என்னும் நிலை ஏற்பட்டது. சமூக /பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏராளமான குடும்பத்து இளைஞர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்து அக்குடும்பங்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்தது. (தனியார் பெரு முதலாளிகள் அப்போது ஜாதி பார்த்துத்தான் வேலை கொடுப்பார்கள்). 

பின் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ், முதியோர் பாஸ், நலிந்த நாடகக் கலைஞர்களுக்கான கன்செசன், கல்லூரி மாணவர்களுக்கான கன்செசன், உழவர் சந்தைக்கு காய் ஏற்றி வர கன்செசன் என ஏராள நலத்திட்டங்கள் செய்ய முடிந்தது. 

இதனால் பேருந்து வைத்து அந்தந்த ஏரியாவில் மோனோபோலியாக இருந்த பல முதலாளிகளின் கோபத்திற்கு திமுக ஆளானது. 

இன்று வரை அம்முதலாளிகள் அவர்கள் குடும்பம் எல்லாம் திமுக எதிர்ப்பு நிலையில் தான் உள்ளார்கள்.  

இப்போது கலைஞர் ட்ரெயினில் டிக்கெட் எடுக்காமல் வந்தார் என்று சொல்பவர்களோ அல்லது அவர்களின் உறவினர்களில் யாராவது ஒருவரோ கலைஞரின் இந்த பேருந்து அரசுடமையாக்கத்தால் பலன் பெற்றிருப்பார்கள்.

ஆம் தமிழ்நாட்டில் பேருந்துகள் அரசுடமை ஆக்கப்பட்டு போக்குவரத்து கழகம் உருவாக்கபட்டு பல கிராமங்களும் நகரங்களுடன் இணைக்கபட்டு விட்டன. எந்த ஆண்டு? 1972. அப்போது யார் முதல்வர்? பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

2008 ஆம் ஆண்டில் கூட குஜராத்தில், நகரத்திலிருந்து கிராமங்களுக்கு டவுன் பேருந்துகள் இல்லை. உள்ளூர் மக்களால் தயாரிக்கபட்ட புல்லட் எஞ்சின் கொண்ட சிறிய வாகனங்கள் தான் மக்கள் பயன்படுத்தினர். 
ஆனால் நகரங்கள் மிகவும் எழிலாக ஆடம்பரமாக இருக்கும். அப்படியே தலைகீழாக கிராமங்கள். 

அப்போது அந்த மாநில முதலமைச்சராக இருந்தவரை ஊடகங்கள் நம் வளர்ச்சியின் நாயகன் என்று கூறின. அப்படி ஏற்றி விட்டு அவர் இன்று பிரதமர்.
ஆனால் இன்று ?

Transport Ministryயில் தொடர் ஊழல், தரமற்ற பராமரிப்பு, யூனியன் என்ற பெயரில் வேலை செய்யாமல் சுற்றும் ஊழியர்கள், முறையற்ற நிர்வாகம் & அலட்சியபோக்கு என்று தரம் தாழ்ந்து போனது. இன்று Omni Bus முதலாளிகள் நினைப்பதைத்தான் அரசு செய்து வருகிறது.

90களில் மட்டமான சேவை அளித்த KSRTC இன்று தரமான சேவை, புதியபேருந்துகள், சிறந்த நிர்வாகம் என்று பாய்ச்சல் காட்டுகிறது.

நமது SETC அடிப்படை தேவைகளைகூட பூர்த்தி செய்ய முடியாமல், ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கமுடியாமல்,திவாலாகும் நிலைமையில் உள்ளது.
இப்படியாக ஆரம்பம் நன்றாக இருந்தாலும் accountability & sustainability இல்லாமல் நாம் உடைத்த furnitureகள் பல.
மக்கள் நலன் சார்ந்த கொள்கைகளுடன், சரியான SOPயை அரசு வழங்கிவிட்டு operationஐ தனியாரிடம் கொடுக்கும் நிலை better என்று நினைக்கும் நிலையில் நாம் உள்ளோம்

இஸ்லாமியர்களுக்கு ஒரு வேண்டுகோள்

 இஸ்லாமியர்களுக்கு ஒரு வேண்டுகோள்


பதிவு எழுதிய நாள் : 13.12.2020


ஒற்றுமை என்னும் கயிற்றைப் பற்றிப் பிடிக்க வேண்டிய இஸ்லாமிய சமுதாயம் பல இயக்கங்களாக பிளவு பட்டு நிற்கிறது.

 எப்போதும் இல்லாத சூழ்நிலையில் மிகவும் முக்கியமான காலகட்டத்தில் தமிழக சட்டமன்ற தேர்தல் எதிர் வர இருக்கின்றது.

மேலே சொல்லப்பட்டுள்ள இரு கருத்துக்களும் எப்பொழுதுமே காலம் தவறாமல், வார்த்தை மாறாமல் சொல்லப்பட்டு வருகிறது.

உண்மைதான்.

தமிழகத்தை மதவெறி அரசியல் சூழ்ந்திருக்கிறது.

இந்தியாவின் எல்லா மாநிலத்துக்குள்ளும் காலூன்றி விட்ட பாஜக தமிழகத்திலும் காலூன்ற பகீரதப் பிரயத்தனம் செய்து வருகிறது.

இது ஊரறிந்த இரகசியம்.

நேரடியாக இறங்கி தன் நெடுநாள் இலட்சியங்களை அடைய முடியாது என்பதால் பதுங்கி இருந்து, திரைமறைவில் காய்களை நகர்த்தி வருகிறது.

ஆளும் அதிமுக அரசை விழுங்கி ஏப்பம் விட்டு விட்டது.

உதிரிக் கட்சிகளை குத்தகைக்கு எடுத்து கம்பெனி ஆர்ட்டிஸ்டுகளாக 

வைத்திருக்கிறது.

சில சிறு கட்சிகளை / அமைப்புக்களை உருவாக்கி விட்டிருக்கிறது.

எதிர்கட்சியின் கூட்டணிக்குள் கூட தன் .--- வைத்திருக்கலாம்.

ஏனெனில் காங்கிரஸில் இருந்து பிரிந்து ஜனசங்கம் ஆரம்பிக்கப்பட்டபோது ஜனசங்கக் கொள்கை கொண்ட அனைவரும் ஜனசங்கத்திற்கு வந்து விடவில்லை. பலரை காங்கிரசுக்குள்ளேயே தொடர்ந்து இருக்க ஜனசங்கம் விட்டு வைத்தது. அது இன்றும் தொடர்கிறது .

இன்னமும் காங்கிரசுக்குள் இருந்து கொண்டே பாஜக - வுக்கு பணியாற்றுபவர்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

அதனால்தான் கட்சியை கட்டுக்குள் கொண்டு வர ராஜீவ், ராகுல் போன்றோரால் முடியவில்லை.


தமிழகத்தில் இப்பொழுது பாஜக தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கமல், ரஜினி, சீமான் போன்றவர்களின் உதிரி கட்சிகளைக் கொண்டு தமிழக மக்களை குழப்பத் திட்டமிடுகிறது.

தங்கள் கட்சி தனியாக நின்றோ அல்லது ஒருவருக்கொருவர் கூட்டணி சேர்ந்து நின்றோ வெற்றி பெற்று தங்களால் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்று இவர்கள் அனைவருக்கும் நன்கு தெரியும்.

ஆனாலும் தனித்தனியாகவோ அல்லது சிலருடன் கூட்டணி வைத்தோ தேர்தலில் நிற்பார்கள்.

தான் வெல்லப் போவதில்லை என்று தெரிந்தும் தேர்தலில் நிற்கிறார்கள்.


வெகு ஜனம் தெளிவாக இருக்கக்கூடாது என்று குழப்புவதற்காகவே களம் காண்பவர்கள் தான் மய்யம்,மாற்று அரசியல், சிஸ்டம் சரியில்லை அரசியல், தமிழ் தேசிய அரசியல் என்பதெல்லாம். 


இவர்கள் யாரை எதிர்க்கிறார்கள் என்று நீங்கள் கேட்டால்,பொதுவாக நாங்கள் அனைத்தையும் எதிர்க்கிறோம் என்று சொல்வார்கள். அதாவது,நாங்கள் அவர்களையும் எதிர்க்குறோம்,

இவர்களையும் எதிர்க்கிறோம் என்று சொல்வார்கள். 

தான் வெல்லப் போவதில்லை என்று தெரிந்தும் ஏன் இவர்களில் தேர்தலில் நிற்கிறார்கள்?

அவர்களின் இலக்கு யார் வெல்ல வேண்டும் என்பதல்ல. 

யார் வென்று விடக் கூடாது என்பது தான்

இந்த ஒற்றைக் கொள்கைக்காக திரைமறைவில் ஒன்றுபட்டு செயல்பட இருக்கிறார்கள்.

இஸ்லாமிய சமுதாய மக்கள் பலரும் பல கட்சிகளில் இருக்கலாம். அது ஜனநாயகம்.

ஆனால் முழு இஸ்லாமிய சமுதாயமும் ஒரு ஒற்றைக் கொள்கைக்காக செயல்பட வேண்டிய தருணம் இது.


இப்பொழுது யாருக்கு வாக்களிக்கக் கூடாது? என்பதை விட யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டிய தருணம்.


பாஜக வின் பொம்மை அரசாக அதிமுக செயல்படுகிறது.

பாஜகவை எதிர்ப்பது போல் காட்டிக் கொண்டாலும் கூட பாஜகவின் தற்போதைய எதிரிக் கட்சியான திமுகவுக்கு எதிராகவே அதன் கம்பெனிக் கட்சிகள் கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கின்றன.

எந்தப் பிரச்னையைப் பற்றிப் பேசினாலும் இந்தக் கட்சிகள் இறுதியில் அந்தப் பிரச்னையின் காரண கர்த்தாவாக ஆளும் கட்சியான அதிமுகவை குறை சொல்லாமல் பத்தாண்டுகளாக ஆட்சியிலேயே இல்லாத திமுகவையே கை காட்டுகின்றன.

பாஜகவுக்கு எதற்கெடுத்தாலும் பாகிஸ்தான்தான் காரணம் என்பது போல பாஜக கம்பெனி கட்சிகளுக்கு திமுக.

வளர்ச்சி என்ற போலி பிம்பத்தை விஸ்வரூபமாகக் காட்டி ஆட்சிக்கு வந்த பாஜக அரசால் இன்றைக்கு அனைத்து துறைகளும் பின்தங்கிப் போய் கொண்டேதான் இருக்கின்றன.

பாஜகவின் இலக்கு அகண்ட இந்துஸ்தானம், இஸ்லாமிய எதிர்ப்பு / ஒழிப்பு.

இந்த இந்துத்துவா அரசியல் கொள்கையை அவர்கள் விட்டு விடத் தயாரில்லை. விட வே மாட்டார்கள்.

இதற்காக இவ்வளவு காலம் பொறுத்திருந்து காலங்காலமாக திட்டங்கள் தீட்டி, அவற்றை செயல்படுத்தி ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். 

அவர்கள் அஜெண்டாவில் இருக்கும் அனைத்து அம்சங்களையும் நிறைவேற்றவே செய்வார்கள். செய்து கொண்டும் இருக்கிறர்கள்.

இவற்றிற்காக எதையும் செய்ய தயங்க மாட்டார்கள்.

ராமர் கோவில், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, பசு பாதுகாப்பு, மத மாற்றத் தடைச் சட்டம், முத்தலாக் தடைச் சட்டம் , சி ஐ ஏ (CIA), என்.ஆர்.சி (NRC) போன்ற பல அம்சங்கள் பாஜகவின் அஜெண்டாவில் உள்ளன.

இரு நாட்களுக்கு முன்னர் "கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட CIA. NRC சட்டம் ஜனவரியில் மீண்டும் செயல்படுத்தப்படும் " என்ற பாஜக அரசின் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது என்பதைக் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.


நாம் எதிரியைத் தேடவில்லை. 

ஆனால் நம்மை எதிரியாகப் பார்த்து நமக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு எதிராக நிற்பவர்கள் பக்கம் இப்பொழுது நாம் நின்றாக வேண்டும்.


பாஜகவின் தற்போதைய எதிரிக் கட்சி தமிழகத்தில் திமுகதான்.

இப்பொழுது அதை சமுதாயம் ஆதரித்தேயாக வேண்டிய சூழல்.

மற்ற கட்சிகள் பாஜகவை எதிர்ப்பது போல் காட்டிக் கொண்டாலும், பாஜக குறிவைத்து தாக்குவதும், எதிர்ப்பதும் என்னவோ திமுகவை மட்டும்தான்.

அதனால்தான் திமுகவை இஸ்மாயியர்கள் ஆதரித்தேயாக வேண்டும்.

நாளை காலச் சக்கர ஓட்டத்தில் சூழல் மாறி திமுக, பாஜகவுடன் உறவு வைத்துக் கொண்டாலும் கூட நமக்காக திமுக குரல் கொடுக்கும். இது கடந்த கால அனுபவம். (கோவை வெடிகுண்டு சம்பவத்தில் திமுக நேர் எதிராக செயல்பட்டது என்பதும் கூட நமக்கு ஒரு பாடமே)

ஒரு வேளை நாளை நமக்கு எதிராக திமுக செயல்பட்டால், இன்ஷா அல்லாஹ் நாம் அதற்கு ஜால்ரா அடித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை.

அதாவது நாளை நடப்பதை அன்றைக்கு பார்த்துக் கொள்வோம்.

ஆனால் இன்று செய்ய வேண்டியதை செய்தாக வேண்டும்.

இஸ்லாமியர்களின் ஓட்டுக்கள் தமக்கு கிடைக்காது என்பது தெளிவாகவே பாஜக -வினருக்குத் தெரியும். அதை அவர்கள் எதிர்பார்ப்பதுமில்லை.

அவர்கள் திட்டம் ஓட்டுக்கள் சிதற வேண்டும். சிதறலில் மீதமாகும் குறைந்த பட்ச ஓட்டு வித்தியாசத்தில் அடிமை அ தி மு க வெல்ல வைத்து தங்கள் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

நாட்டில் சட்டம், ஒழுங்கு, நீதித்துறை மற்றும் தொலைக்காட்சி, பத்திரிக்கை போன்ற ஊடகங்கள் எப்படி ? யாருக்காக செயல்படுகின்றன? என்பதை அனைவரும் அறிவோம்.

இவற்றைக் கொண்டு இஸ்லாமிய சகோதர அமைப்புக்களை பிரித்து ஒருவருக்கொருவர் எதிர்த்து செயல்பட வைக்கும் தந்திரங்களை ஆளும் பாஜக செய்யும்.

அதனால் பலனடையப் போவது பாஜக தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பணம், பொருள், பதவி இவற்றிற்காக எதையும் செய்வோர் எங்கும் உண்டு.

இத்தனை காலம் சும்மா கிடந்தவர்கள் திடீரென கொள்கை முழக்கமிட்டு, வீராவேசம் பேசிக் கொண்டு தம்மை நோக்கி "அழைப்பார்கள்".

நன்றாக புரிந்து கொள்ளுங்கள்.

நம்மைக் கூட்டி, அந்தக் கூட்டத்தைக் காட்டி, நம்மை விலை பேசி விற்று "சூட்கேஸ்" பார்த்து விடுவார்கள் நம் சமுதாயக் காவலர்கள்.

அவர்களை கவனமாக நாம் கடக்க வேண்டும், தவிர்க்க வேண்டும்.

அவர்களுக்குப் போடும் ஓட்டும், அதிமுகவுக்குப் போடும் ஓட்டும் ஒன்று தான்.

அதிமுகவுக்காக நீங்கள் போடும் ஒவ்வொரு ஓட்டும் பாஜகவுக்கே போடும் ஓட்டாகவே அமையும்.

ஏனெனில் அதிமுகவை வைத்து நிழல் ஆட்சியை நடத்தி வருவது பாஜகதான் என்பதும் ஊரறிந்த இரகசியம்

இனிமேலும் தமிழகத்தில் அதையேதான் பாஜக செய்யும்.


ஆகவே இஸ்லாமிய சமுதாயம் குறைந்த பட்ச கொள்கை ஒப்பந்த அடிப்படையில் திமுக கூட்டணியை ஆதரிக்க வேண்டிய , கட்டாய சூழ்நிலையில் இருக்கிறது


சமுதாயத்தின் பொது பிரச்னைகளை, கோரிக்கைகளை திமுக கூட்டணியிடம் இப்பொழுது வைத்தாக வேண்டும்.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, பசு பாதுகாப்பு, மத மாற்றத் தடைச் சட்டம், முத்தலாக் தடைச் சட்டம் , சி ஐ ஏ (CIA), என்.ஆர்.சி (NRC) போன்ற முஸ்லீம்களை குறி வைத்து இயற்றப்பட்ட சட்டங்களை தேசிய அளவில் வெளிப்படையாக எதிர்க்க வேண்டும். மாநில அளவில் அவற்றை அமுல்படுத்தாமல் இருக்க சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்டு வரும் 3.5% சதவிகித இட ஒதுக்கீடை 5% சதவிகிதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


கட்சியிலும், சட்டசபை, பாராளுமன்றம் போன்றவற்றிலும் முஸ்லீம்களுக்கு கட்சி சார்பில் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்

இது போன்ற பொதுவான பல கோரிக்கைகளை முன் வைக்கலாம்

என்னை விட விபரமறிந்தவர்கள் இயக்கங்களின் தலைமைகளில் உள்ளனர்.

அவர்கள் சமுதாயத்திற்காக சொந்த விருப்பு, வெறுப்புக்களை, ஈகோவை ஒதுக்கி விட்டு ஒன்று கூடி முடிவெடுக்க வேண்டும்


"இறைவன் மீது நம்பிக்கை வையுங்கள். அதே சமயம் ஒட்டகத்தையும் கட்டி வையுங்கள்" என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். 


இன்ஷா இவை நடைபெற நாம் முயற்சி செய்வோம்.

வல்ல அல்லாஹ் நிறைவேற்றித் தருவானாக. 

 

கமல், ரஜினி, சீமானை பி டீம் என்று ஏன் சொல்லுகிறோம்?

கமல், ரஜினி, சீமானை பி டீம் என்று 
ஏன் சொல்லுகிறோம்?





பதிவு செய்த நாள்: 08. 12. 2020

தமிழ்நாட்டில் அதிகமான வாக்கு வங்கியை வைத்திருக்கும் இரு கட்சிகள் அதிமுகவும் திமுகவும் தான். 

2016 சட்டசபை தேர்தலில், அதிமுக 40 சதவிகிதமும், திமுக 31 சதவிகிதமும் வாக்குகளாக பெற்றது. 
அதிமுக அதிக இடங்களில் போட்டியிட்டதும், திமுக கூட்டணிகளுக்கு இடங்களை பகிர்ந்தளித்து போட்டியிட்டதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். 

இந்த தேர்தலில் மாற்று அரசியல் என்று சொல்லி போட்டியிட்டவர்கள் பெற்ற வாக்கு சதவிகிதம் 
நாம் தமிழர் கட்சி (1.09), 
தேசிய முற்போக்கு திராவிட கழகம் (2.41), பாமக (5). 

இதில் பாமகவின் வாக்கு வங்கி எது என்று தெரியும். இவர்கள் மாற்று என்று சொல்லிக்கொண்டாலும், அவற்றில் பெரும்பான்மை வன்னியர் சாதி ஓட்டுகள் மட்டும் தான். அதுவும் 2019 தேர்தலில், பாமகவுக்கு கிடைக்கவில்லை என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. 

மாற்று அரசியல் பேசிய மற்ற கட்சிகள் இன்று திமுக கூட்டணியில் இருப்பதால் அவர்களின் வாக்கு சதவிகதத்தை குறிப்பிடவில்லை. 

2019 தேர்தலை எடுத்துக்கொண்டால், திமுகவின் வாக்குவங்கி 34 சதவிகிதமாக உயர்ந்து இருந்தது. அதிமுகவின் வாக்குவங்கி 19 சதவிகிதமாக குறைந்து இருந்தது. 

ஒரு விசயத்தை நாம் இதன் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

வரும் 2021 தேர்தலிலும் முதல் இரண்டு இடங்களை பெறப்போகும் கட்சிகள் திமுகவும் அதிமுகவும் தான். இந்த தேர்தலில் பாஜக, அதிமுக நேரிடையாக திமுகவை எதிர்ப்பதே தங்கள் அரசியல் என்று சொல்லி களத்தில் நிற்கிறது. இந்த கூட்டணியில் பாமக, கிருஷ்ணசாமி போன்ற சாதி வலதுசாரிகள் இணைவது இயற்கையானது. 

பாஜக - அதிமுகவை நேரிடையாக எதிர்த்து திமுக, இடதுசாரிகள், காங்கிரஸ், விசிக, மதிமுக ஆகிய கட்சிகள் களத்தில் நிற்கிறது. 

இந்த மேற்சொன்ன கட்சிகளுடன் கூட்டணி இல்லாமல், தனியாக மாற்று அரசியல் என்று சொல்லிக்கொண்டு களம் காண அதிக வாய்ப்பு இருப்பவர்கள்
கமலின் மய்யமும், ரஜினியின் பெயர் அறிவிக்கப்படாத கட்சியும், சீமானின் நாம் தமிழர் கட்சியும் தான். இதில் நாம் தமிழர் 2016ல் போட்டியிட்டு அவர்களின் வாக்கு சதவிகிதத்தை அறிந்த கட்சி. கமலுக்கும் ரஜினிக்கும் அவர்களின் வாக்குவங்கி தெரியாது.

ஆனால், அவர்களுக்கு கிடைக்கபோவது அதிகபட்சமாக 5 சதவிகிதம் தான். இதை புரிந்துக்கொள்ள பெரிய அரசியல் ஞானம் எல்லாம் தேவையில்லை. தமிழ் நாட்டு தேர்தல்களை கொஞ்சம் உன்னிப்பாக பார்த்தாலே புரியும். 

சரி, மாற்று அரசியல் என்று சொல்லி இவர்கள் போட்டியிடுவதை தடுக்க முடியுமா?
முடியாது. அது ஜனநாயகமும் இல்லை. 

34 சதவிகித ஓட்டு வங்கியை வைத்திருக்கும் திமுக கமல், ரஜினியை பார்த்து பி டீம் என்று சொல்வது ஏன்? பயமா? 

அரசியல் என்பது என்னைப்பொறுத்தவரை எப்போதும் "Opposing the Greatest Evil" என்பது தான்.அதாவது யார் ஜெயிக்கக்கூடாது? என்பது தான் தேர்தல் அரசியல்.
திமுக கூட்டணியை பொறுத்தவரை, தமிழ்நாட்டின் பலமான எதிரி அதாவது "Greatest Evil" அதிமுக - பாஜக கூட்டணி தான். 

அதிமுக-பாஜக கூட்டணியை பொறுத்தவரை, தமிழ்நாட்டின் பலமான எதிரி அதாவது "Greatest Evil" திமுக கூட்டணி தான்.  

இந்த தெளிவில்லாமல், அல்லது தெளிவாக இருக்கக்கூடாது என்று குழப்புவதற்காகவே களம் காண்பவர்கள் தான் மய்யம்,மாற்று அரசியல், சிஸ்டம் சரியில்லை அரசியல், தமிழ் தேசிய அரசியல் என்பதெல்லாம். 

இவர்கள் யாரை எதிர்க்கிறார்கள் என்று நீங்கள் கேட்டால்,பொதுவாக நாங்கள் அனைத்தையும் எதிர்க்கிறோம் என்று சொல்வார்கள். அதாவது,நாங்கள் அவர்களையும் எதிர்க்குறோம்,
இவர்களையும் எதிர்க்கிறோம் என்று சொல்வார்கள். அரசியலில் இது தெளிவின்மையை தான் காட்டுகிறது. 

திமுக அதிமுகவிற்கு மாற்று என்ற கட்டம் தமிழ்நாட்டிற்கு இன்றும் வரவில்லை. ஏனெனில், அப்படி அவர்களை மாற்றக்கூடிய கொள்கை தெளிவுள்ள கட்சி இவர்கள் இல்லை என்பதால் தான் மக்கள் மாற்று அரசியல் என்று வருபவர்களை புறக்கணிக்கிறார்கள். 

சரி, திமுக ஏன் இவர்களை பி டீம் என்று சொல்கிறது?

மேலே சொன்னதை வைத்து நீங்களே புரிந்துக்கொள்ளலாம். 
முதல் இரண்டு இடம் 2021 தேர்தலில் திமுக மற்றும் அதிமுகவிற்கு தான் கிடைக்கப்போகிறது.
திமுகவிற்கு முதல் இடம் கிடைத்தால், தமிழ்நாட்டு மக்கள் மிகத்தெளிவாக, யார் தங்களது "Greatest Evil" என்று முடிவெடுத்து இருக்கிறார்கள் என்றுப் பொருள். 
திமுக மீண்டும் ஒருவேளை 2016 போல இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டால், அதற்கு மக்கள், இந்த மாற்று அரசியல் புரட்டுகளுக்கு வீழ்ந்து வாக்குகளை சிதறடித்தது ஒரு காரணமாக இருக்கலாம். 

ஒன்றை இவர்கள் மறந்துவிடுகிறார்கள். திமுக காரர்கள் அதிகம் கவலைப்படுவது தங்கள் கூட்டணி ஜெயிக்கவேண்டும் என்பதை விட, மீண்டும் இந்த மோசமான அதிமுக - பாஜக கள்ளக்கூட்டணி அரசு தொடரக்கூடாது என்பது தான்.  

இந்த மாற்று அரசியல் பேசும் கட்சிகளை ஆதரிப்பவர்கள் இவ்வளவு எல்லாம் சிந்திப்பதில்லை.
அவர்களை பொறுத்தவரை, தாங்கள் தான் தூய்மை அரசியலின் முகவர்கள் என்று தங்களை தாங்களே ஏமாற்றிக்கொண்டு, எதிரிகளுக்கு துணைபோகிறார்கள். 

மேலே சொன்னது போல, அவர்கள் போட்டியிடுவதை நாம் தடுக்கமுடியாது. அவர்கள் போட்டியிடட்டும். ஆனால், அவர்களின் அரசியல் யாருக்கு சாதகமாக இருக்கப்போகிறது என்பதை நாம் பேசித்தான் ஆகவேண்டும். அவர்கள் பி டீம் என்று நாம் குற்றம் சொல்லித்தான் ஆகவேண்டும். தாங்கள் பி டீம் இல்லை என்பதை அவர்கள் தான் நிரூபிக்க வேண்டும்..

அதற்கு முதல் படி, தமிழ்நாட்டின் "Greatest Evil" யார் என்ற கேள்வி தான். இந்த கேள்விக்கு பதிலே, அவர்களை அம்பலப்படுத்தி விடும். வேண்டுமானால், முயற்சித்து பாருங்கள்.

- ராஜராஜன் ஆர்.ஜெ


எம்ஜிஆர் மறைவையடுத்து அஇஅதிமுக

 எம்ஜிஆர் மறைவையடுத்து 
அஇஅதிமுக 


துக்ளக் பத்திரிக்கை செய்திகள் :









திங்கள், 4 நவம்பர், 2024

கலைஞர் பதித்த தடங்கள்

 கலைஞர் பதித்த தடங்கள்

பெண்ணியவாதியுமானவர்  - கவிதாயினி சல்மா




சமச்சீர் கல்வி தந்தவர்  - பிரின்ஸ் கஜேந்திர பாபு



போராடாமல் வாழ்க்கை இல்லை - தம்பி




கலைஞர் பற்றி புகைப்படக் கலைஞர் யோகா

இன்று வரை அந்தப் படத்தை 
வெளியிடவே இல்லை

கலைஞர் பற்றி புகைப்படக் கலைஞர் யோகா




கலைஞரின் காவியங்கள்

 கலைஞரின் காவியங்கள்






கலைஞர் - எனது தமிழின் ஆசான் - வைரமுத்து

கலைஞர் - எனது தமிழின் ஆசான்  வைரமுத்து






கலைஞர் - படைப்பாளிக்குள் ஒரு போராளி

 படைப்பாளிக்குள் ஒரு போராளி



தமிழக வளர்ச்சியில் கருணாநிதியின் பங்கு

 தமிழக வளர்ச்சியில்  கருணாநிதியின் பங்கு



நன்றி:  இந்து தமிழ் திசை 

ரஜினியின் குடும்பம்

ரஜினியின் குடும்பம் காமெடி நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் அப்பா ஒய்.ஜி.பார்த்தசாரதி. புகழ்பெற்ற அமெச்சூர் நாடகக் குழுவை நிறுவி நடத்திய நடிகர். ப...