தவறான கேள்விகளுக்கு தக்க பதில்கள்
WhatsApp -ல் எனக்கு வந்த கேள்விகளுக்கு நான் அனுப்பிய பதில்கள்
மனசாட்சியுடன் பதில் சொல்லுங்கள் நண்பர்களே:
1. பிள்ளைகளை ஆங்கிலவழி கல்வியில் படிக்கவச்சுகிட்டு, தமிழுக்கு ஆதரவாக போராட வேண்டியது.
தமிழ் முக்கியம், ஆங்கிலமும் முக்கியம். ஆனால் தமிழ் இருக்க வேண்டிய இடத்தில் மாற்றாக ஹிந்தியை நுழைத்ததை / திணித்ததை/ திணிப்பதைத் தான் எதிர்க்கிறோம்.
இப்பொழுதே நம் பிள்ளைகளின் தமிழ் வாசிப்பு, எழுத vocabulary இல்லை.
2. ஓவன்ல சமைத்து A/c அறையில உட்கார்ந்து சாப்பிட்டு, அணுமின்சாரத்திற்கு எதிராக போராட வேண்டியது.
ஓவன்ல சமைப்பது, A/C அறையில் வாழ்வதும் சாமான்யன் இல்லை. அவர்கள் வாழ்வும் மற்றவரை விட பாதுகாப்பானது. அணு மின் திட்டம் ஆபத்தானது. உலகில் பல நாடுகள் அதை கை விட்டு விட்டு மாற்று உற்பத்திக்கு சென்று கொண்டிருக்கின்றன. நாம் அதை எதிர்ப்பது சாமான்யர்களுக்காகவே. சாமான்யர்களின் அழிவில் (அ) சாமான்யர்களின் ஆபத்தில் மற்றவர்கள் வாழ செய்வதையே எதிர்க்கிறோம்.
3. கேஸ் அடுப்புல பால் காய்ச்சு குடித்துவிட்டு, மீத்தேனுக்கெதிரா போராட வேண்டியது.
மீத்தேனிலிருந்தும் கேஸ் எடுக்கலாம்.
பெட்ரோலியம் பொருட்களிலிருந்தும் கேஸ் எடுக்கலாம். நம் விவசாய பூமியை அழிக்கவே மீத்தேன் திட்டம் எனில் அதை அனைவரும் எதிர்க்கத் தானே வேண்டும்
4.பெட்ரோலில் வண்டிய ஓட்டிக்கொண்டு, ஹைட்ரோகார்பனுக்கெதிரா போராட வேண்டியது.
3-ஆம் கேள்விக்கான பதிலே இதற்கும் பொருந்தும்
5. விவசாயமே செய்யாது, விவசாயத்திற்கு ஆதரவாக போராட்டம்.
எல்லோரும் விவசாயம் செய்ய முடியாது. விவசாயம் செய்பவர் மட்டுமே விவசாயிகளுக்கு ஆதரவாக போராட வேண்டியதில்லை. விவசாய உற்பத்தியில் கிடைத்தவற்றை உண்ணுபவர் அனைவருமே ஆதரவு தர வேண்டும்
6. மாடு வெட்டி திண்ணுட்டு, மாட்டுக்கு ஆதரவாக போராட்டம்.
கேள்வி எண் 5-க்கான பதிலே இதற்கும் பொருந்தும்
7. சாதி சலுகைகளை அனுபவச்சிகிட்டு, சாதிக்கெதிரா போராட்டம்.
சாதி ஒழிப்பு / சாதி மறுப்பு வேறு, சாதி இயக்கம் வேறு
கீழே இருந்த நாம், மேலே வருவது பொறுக்காமல் செயல்படுவோர் செய்வது சாதி ஒழிப்பு என்ற போர்வையில் இடஒதுக்கீடு ஒழிப்பு.
இட ஒதுக்கீடு என்பது சலுகையல்ல. கால் ஊனமானவனையும், நல்ல கால் உள்ளவனையும் ஒரே ஓட்டப் பந்தயத்தில் விடும் போது ஊனமானவனுக்கு தரும் முன்னுரிமையே இட நதுக்கீடு
அதை அனுபவித்து படிப்பும், பதவியும் பெற்றோர் இதை எதிர்ப்பதுதான் வேடிக்கை அவர்கள் தங்கள் பணிகளை துறப்பார்களா? / அப்படி கிடைக்கும் வாய்ப்புக்களை விட்டு விடுவார்களா? புரிந்து கொள்ளுங்ள்.
8. இந்துமதத்தை மட்டும் இழிவு படித்திகிட்டு, மதசார்பிண்மைக்கு ஆதரவாக போராட்டம்.
பக்தி என்பது வேறு
மதவெறி என்பது வேறு.
பிறர் வாழச் செய்வது பக்தி
பிறர் வாடச் செய்வது வெறி
மதச்சார்பின்மை என்பது எந்த மதத்தையும் சாராதிருத்தல் மட்டுமல்ல பிற மதத்தை பகடி செய்யாதிருத்தலும்
பக்தி பகல் வேஷமாவதை எதிர்ப்பின் அது இந்து மதத்தை இழிவுபடுத்துவது என்பதாகிறது.
9. பணம் கொடுத்து,பணம் வாங்கி ஓட்டு போட்டு, ஊழலுக்கு எதிராக போராட்டம்.
இது கோழி முதலா? முட்டை முதலா? என்பது போன்றது
ஊழல் என்பது ஓழிக்க முடியாது. எளிதில் / விரைவில் எதையும் சாதிக்க குறுக்கு வழி தேடும் நாம் அனைவரும் ஊழல்வாதிகளே.
10.மதுவிற்கு எல்லாம் அடிமையாகிவிட்டு, மதுக்கெதிரா போராட்டம்.
நம் காலத்தில் சிகரெட் குடிப்பது ஆண்மை. இன்று அதுவே மது குடிப்பது. அரசாங்கமே மது வருமானத்தில் நடக்கிறது. இது கேடு கெட்ட நிலை. நம் வலிமையாக எதிர்க்காததல் அதை விற்பவனே எதிர்ப்பது போல் நடிக்கிறான்
11. நீர்நிலைகளை எல்லாம் மாசு உண்டாக்கி அழித்துவிட்டு, நீருக்காதவராக போராட்டம்.
கேள்வி எண் 10-ன் பதிலே பொருந்தும்
12. அரசிற்கு வரியே கட்டாமல், வளர்ச்சி எங்கே என்று கேட்டு போராட்டம்.
வரிகள் பல வகை உண்டு. தெரிந்தும், தெரியாமலும் வரிகள் கட்டிக் கொண்டே இருக்கிறோம். (உ-ம்: சொத்து வரி, விற்பனை வரி, உற்பத்தி வரி Etc) இதில் சொல்வது வருமான வரி. இங்கு யாரும் உண்மையாக வரி கட்டுவதில்லை. நான் உட்பட . வரி விலக்கை தேடி தேடி உபயோகிக்கிறோம். வாங்கிய வரிக்கான வளர்ச்சியைக் கேட்கிறார்கள். நாட்டு வளர்ச்சிக்கு திட்டம் தீட்டி தன் வீட்டு வளர்ச்சியை செய்து கொள்கிறார்கள் கேட்கக் கூடாதா?
13. தவறு செய்தவர்களை தண்டித்தால், அடக்குமுறை,சர்வாதிகாரம்னு சொல்லி போராட்டம்.
யார் செய்வது தவறு?
சரி, தவறு எல்லாமே ஆளுபவர்களை பொறுத்து மாறும். இன்று சரி என்பது நாளை தவறு என மாறும்.
அரசு செய்வதல்லாம் சரி என்னு சொல்லும் சட்டம், சாமன்யன் செய்தால் தவறு என தண்டிப்பதை ஏற்றுக் கொள்ளலாமா?
அனைத்தையும் மக்களே செய்துவிட்டு
இந்தியாவை சில ஆண்டுகள் ஆட்சி செய்பவர்கள் தான் எல்லாத்திற்கும் காரணம் என்று சொல்லும் பொழுதுதான் வேடிக்கையாக உள்ளது.
இது முழுக்க முழுக்க பாஜக ஆதரவில் எழுதப்பட்டுள்ள வாசகம்.
சரி காங். இவ்வளவு நாள் தப்பா ஆட்சி செய்து விட்டான். பாஜக வந்து 6 வருடங்கள் ஆகி விட்டது. உருப்படியாய் செய்தவை எத்தனை?
மதவாத அரசியலே அதன் அஜெண்டா , அதை அடைய அது எதுவும் செய்யும். பதவி பலத்தில், பண பலத்தில் மிரட்டும். எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும். ஆட்சிகளை கவிழ்க்கும். அனைத்தையும் ஓப்பனாகவே செய்யும். கேட்டால் தேச விரோதி ஆதரித்தால் தேச பக்தி
தனி மனதின் ஒவ்வொருவரும் மாறினால் மட்டுமே நிச்சயம் மாற்றம் பிறக்கும்.
*மாற்றம் வேண்டும் என்றால் நாம் தான் மாற வேண்டும் ..!!*
என் பதில்களை படித்தமைக்கு நன்றி
எதையும் பத்திரிக்கை, தொலைக்காட்சி பார்வையில் மேம்போக்காக அணுகாதீர்
நிறைய புத்தகங்கள் வாசியுங்கள்
ஆழ யோசியுங்கள்
நன்றி
வாழ்க வளமுடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக