புதன், 8 பிப்ரவரி, 2023

ஈழத்தமிழர் பிரச்னையில் கலைஞரை குறை சொல்லும் கிறுக்கனுங்களுக்கு சில கேள்விகள்.

ஈழத்தமிழர் பிரச்னையில் கலைஞரை குறை சொல்லும் கிறுக்கனுங்களுக்கு சில கேள்விகள்.

(1)MGR ரிடம் நன்கொடை பெற்றுக் கொண்டு கலைஞர் தந்த நன்கொடையை வாங்க பிரபாகரன் மறுத்தது ஏன்?

(2) சகப் போராளிகளை கொல்ல வேண்டாம் என கலைஞர் கோரியும் பிரபாகரன் அதை மதிக்காதது ஏன்?

(3) 1976 க்கு பின் 14 வருடம் கழித்து தமிழகத்தில் 1989 ல் திமுக ஆட்சி அமைத்த நேரத்தில் பத்மநாபாவை 1990 ல் கோடம்பாக்கம் வந்து கொன்றது ஏன்?

(4) ராஜீவ் கொலைப்பழி கலைஞர் மேல் விழுந்த போது பிரபாகரன் அமைதியாக இருந்தது ஏன்?

(5) வைக்கோவை மட்டும் தனியாக அழைத்து திமுகவை பிரபாகரன் கூறுபோட நினைத்தது ஏன்?

(6) ராஜபக்சேவுக்கு மறைமுக ஆதரவளிக்கும் நோக்கத்தோடு தேர்தலை புறக்கணித்ததால்தானே  ரணில் விக்ரமசிங்கே தோற்றார்

ராஜபக்சே ஆட்சிக்கு வர மறைமுக புலிகள் ஆதரவு தந்ததேன்?

(7) மாவிலாறு அணையை மூடி போரை தொடங்கியது ஏன்?

(8) புலிகள் தங்களின் எந்த ஒரு நடவடிக்கைக்கும் கலைஞரை ஆலோசித்ததில்லை.

கலைஞரின் வேண்டுகோளையோ அவரது ஆலோசனையையோ கேட்டு தங்களது நடவடிக்கைகளை நிறுத்தியதும் இல்லை. கலைஞர் தமிழர் தலைவர் அவர் போரை நிறுத்திருக்கனும் எனப் புலம்புகிறீர்களே புலிகள் ஏன் கலைஞரிடம் எந்த சூழலிலும் எந்த ஆலோசனையையும் பெறவில்லை?

இந்த கேள்விக்கு பதில் என்ன?

(9) 1991 க்கு பின் புலிகளுக்கும் கலைஞருக்கும் எந்த நேரடி உறவும் அல்லது மறைமுக உறவும் இல்லாத பொழுது  கலைஞரால் போரை( தடுக்க முடியுமா என்ற கேள்வியைத் தாண்டி) தடுக்க வேண்டிய அவசியம் எப்படி வரும்?

(10) போரில் புலிகளை காப்பாற்ற கலைஞர் உண்ணாவிரதம் இருக்கவில்லை. அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படக் கூடாது என்பதற்காகவே உண்ணாவிரதம் இருந்தார்.

அந்த சமயம் போரை நிறுத்துவதாக இலங்கை அரசு அறிவித்ததை உலகறியும். அதன் பின்னர் இலங்கை தன் அறிவிப்பில் இருந்து பின் வாங்கியது.

அதற்கு கலைஞர் எப்படி பொறுப்பாவார்?

இருந்தும் கலைஞரை தூற்றுவது ஏன்?

(11) உச்சக்கட்ட போரின் போது பாராளுமன்ற தேர்தல் நடந்தது. திமுக MP க்களின் பதவிக் காலமே முடியும் தருவாயில் அவர்கள் ஏன் ராஜினாமா செய்யவில்லை எனக் கேட்பது முட்டாள்தனம் இல்லையா?

(12) கலைஞரின் அரசு 1991 ல் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டிய நேரத்தில் அதை கெடுத்தது யார்?

யாருக்காக ஏன் கலைஞர் தனது மாநில அரசை 2009 ல் கலைத்திருக்க வேண்டும்?. அதனால் யாருக்கு என்ன நன்மை?

(13) கலைஞருக்கும் புலிகளுக்கும் உறவு என்ற ஒன்றே இல்லாதபோது அங்கே துரோகம் வார்த்தைக்கு அர்த்தமே இல்லையே.

பரஸ்பர நம்பிக்கையே இல்லாத போது துரோகம் எங்கிருந்து வரும்?

(14) எந்த ஒரு போரின் தோல்வியும் ஒரு சில நாட்களில் நிர்ணயிக்கப்படுவதில்லை.

ஈழப்போர் 1983ல் தொடங்கி 2009 ல் முடிந்துள்ளது. 26 வருடங்களில் நடந்த போருக்கும் புலிகளின் வெற்றி தோல்விகளுக்கும் கலைஞருக்கும் எந்த தொடர்பாவது எப்போதாவது இருந்ததுண்டா?

2009 போரில் மட்டும் கலைஞரை சம்பந்தப்படுத்துவதும் அவர் மேல் சேற்றை வாரி இறைப்பதும் ஏன்?

கலைஞர் என்றால் இளிச்சவாயர்

நன்றி: அந்தோணி பரிமளம்






இந்திய பாசிச வரலாறு பாகம் 5

 

இந்திய பாசிச வரலாறு பாகம் 5
கீர்த்தனா ராம்


எமர்ஜென்சியின் கொடுமைகளைப் பற்றி அதன் 43 வது ஆண்டு நினைவு நாளில் எட்டு வருடமாக அறிவிக்கப்படாத எமர்ஜென்சி ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் நரேந்திர மோடி ட்விட் செய்த போது டெல்லி மோடி மீடியாக்கள் புல்லரித்துப் போய் வெளியிட்ட செய்தி தொகுப்பு இது


சூப்பர் PM டெல்லி யுனிவர்சிட்டியில் BA படித்துக் கொண்டே எமர்ஜென்சியை எதிர்த்து 19 மாசம் சீக்கியர் வேடத்தில் தலை மறைவாக இருந்தார். அப்போ அப்போ வாட் நகரில் டீயையும் விற்றுவிட்டு வந்தார். இந்தப் படம் வைரல் ஆனபோது பஞ்சாபில் சட்டமன்றத் தேர்தல் நடந்தது என்பதை நினைவில் வையுங்கள்

இடையில் எமர்ஜென்சியை எதிர்த்துப் போராடிய சந்திரசேகரை டெல்லி ஏர்போர்ட்டில் சந்தித்து கைகுலுக்கியும் இருக்கிறார் அதற்கு சாட்சி முன்னாள் ஹரியானா முதலமைச்சர் பைரன் சிங் ஷேகாவட் சகித்துக் கொள்ள முடியாத ஆன்டி இந்தியன்ஸ் ஆர் எஸ் எஸ் அலுவலக சூசை கூட்டிக் கொண்டிருந்ததாக அவதூறு பரப்பினர்

இந்திரா பிரதமராக முன்மொழிந்த காமராஜர் அவரின் சர்வாதிகாரப் போக்கால் காங்கிரஸ் (O) என தனியாகப் பிரிந்து சென்றதை, இந்திரா எதிர்ப்பாளர்களுக்கு தமிழ்நாட்டில் புகலிடம் கொடுத்த கலைஞர் பற்றி வட இந்தியர்களுக்கு சொல்லிக் கொடுக்காத காங்கிரஸ் செய்த தவறு இன்று அதை அழித்துக் கொண்டு இருக்கிறது
1975 ஜூன் 25, ஃபக்ருதீன் அலி அகமது அரசியல் அமைப்பு சட்டம் 352 பயன்படுத்தி அவசர நிலையை அமலுக்கு கொண்டு வந்த பிறகு ஆங்கில ஆட்சி போன்ற கொடூரமான அடக்கு முறையை நாடு எதிர்கொண்டது. பத்திரிகைகள் முழு தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டன எதிர்க்கட்சிகள் பேரணி ஊர்வலம் நடத்த தடை போடப்பட்டது
தமிழ்நாடு தவிர ஒட்டுமொத்த இந்தியாவும், மாநில அரசுகள் கலைக்கப்பட்டு இந்திராவின் ஒற்றைத் தலைமையின் கீழ் கொண்டுவரப்பட்டது.
போராடிய தலைவர்கள் வேட்டையாடப்பட்டனர். தலைமறைவாக இருந்த ஷேக் அப்துல்லா போன்றவர்களுக்கு புகலிடம் அளித்த தமிழ்நாடு அரசு 1976 இல் கலைக்கப்பட்டது.

எமர்ஜென்சியை பற்றி பேசும்போது எல்லாம் சஞ்சய் காந்தி நினைவுக்கு வருவார் இந்திரா தன் மூத்த மகன் சஞ்சய் காந்தி கண்ட்ரோலில் இருப்பதாக கூட தகவல் பரப்பப் பட்டது.
சஞ்சய் காந்தியின் அரசியல் தலையீடு குறித்து உறுதியான ஆதாரங்கள் உள்ளன. அவருடைய சர்ச்சைக்குரிய செயல்பாடு 20 அம்சத் திட்டம்

அதில் ஒன்று நாம் இருவர் நமக்கு இருவர். இதன்படி கல்யாணம் ஆகி இரண்டு குழந்தைகள் பெற்று இருந்த ஆண்கள் அனைவரும் கட்டாய குடும்பக் கட்டுப்பாடு செய்யப்பட்டனர். அக்காலத்தில் ஒரு அரசு வண்டி கிராமத்திற்கு உள்ளே வருகிறது என்றாலே ஆண்கள் அனைவரும் தலைமறைவாக ஓடிப்போய் ஒளிந்து கொள்வர்
சொந்தமாக ஒரு கார் கம்பெனியைஆரம்பித்து ஜப்பான் உதவியுடன் இந்தியாவில் கார் தயாரித்தார்.
எதிர்க்கட்சிகள் அரசு அந்த கம்பெனியை ஆதரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர் பாகிஸ்தான் போர் வெற்றி இதனை மறைத்தது 1977ல் ஜனதா ஆட்சியில் அந்த கார் கம்பெனி தேசிய மையமாக்கப்பட்டது அதுதான் மாருதி கார்
தனது நண்பர் பன்சிலால் உதவியால் ஆயிரக்கணக்கான ரவுடிகளை இளைஞர் காங்கிரஸ் கட்சியில் சேர்த்து குண்டா ராஜ்ஜியம் நடத்தினார்.
இந்திரா மந்திரி சபையில் இருந்த ஐ கே குஜரால் போன்றோர் சஞ்சய் காந்தியின் தலையிட்டை எதிர்த்து காங்கிரசை விட்டு வெளியேறினர்.

ஜீம்மா மசூதியை அழகுபடுத்த டெல்லி டெவலப்மென்ட் அத்தாரிட்டி உதவியுடன் அதனைச் சுற்றி இருந்த குடிசைகளை எல்லாம் இடித்து தள்ளினார்.
அவருடைய ரவுடித்தனத்தின் உச்சகட்டம் இந்திரா சஞ்சய் காந்தியை விமர்சித்த கிஸ்ஸா குர்ஸி என்ற பட தயாரிப்பாளர் மிரட்டப்பட்டு படப்பெட்டிகள் மாருதி ஆலைக்கு கொண்டுவரப்பட்டு எரிக்கப்பட்டன

இன்றைக்கு சில பெருசுகள் எமர்ஜென்சி நினைவு கூறும்போது அற்புதமான காலமாக கூறுவர். ஓரளவு உண்மை உண்டு. 20 அம்சத் திட்டத்தில் வரதட்சணை ஒழிப்பு சட்டம், முழு எழுத்தறிவு, ஜாதி ஒழிப்பு, குடும்ப கட்டுப்பாடு போன்றவை அடங்கும். இதை வன்முறையாக திணித்தது தான் இங்கு விமர்சனம் ஆனது (தொடரும்)

செவ்வாய், 7 பிப்ரவரி, 2023

இந்திய பாசிச வரலாறு பாகம் 4

 

இந்திய பாசிச வரலாறு பாகம் 4
கீர்த்தனா ராம்


கொரோனாவால் சும்மா நிறுத்தப்பட்டிருந்த 8000 கோடி விமானத்தில் ஏறி ஜூன் 2022ல் ஜெர்மனியில் உள்ள Munich சென்றார் மோடி முன்னரே தயாரிக்கப்பட்ட ஸ்கிரிப்டை நன்கு ரிகர்சல் செய்த பின்னர் teleprompter பார்த்து வாசிக்க தொடங்கினார்: "எமர்ஜென்சி இந்திய ஜனநாயகம் மீதான கறை".

காங்கிரஸ் தோன்றிய நாள் முதலே பிராமணர், பிராமணர் அல்லாதவர் இடையே அதிகாரத்தை கைப்பற்றுவதில் மோதல் நிலவியது. தற்போது கூட உயர் சாதி சசிதரூர் மற்றும் மல்லிகார்ஜுன கார்க்கே இடையே தலைவர் பதவிக்கு, ஜனநாயக முறைப்படி நடந்த உள்கட்சி தேர்தலில் கார்கே வெற்றி பெறவே தருர் விட்டுக் கொடுக்கிறார்

டேராடூன்பிரச்சாரத்தில் இருந்த நேரு திடீர் மரணம் அடைய காமராஜர் உள்ளிட்ட தலைவர்கள் கூடி சாஸ்திரியை பிரதமராக தேர்வு செய்கின்றனர். பாகிஸ்தான் போரை முடிவுக்கு கொண்டு வர நிகழ்ந்த தாஸ்கெண்ட் மாநாட்டில் கலந்து கொண்டிருந்தபோதே சாஸ்திரி மர்மமாக மரணம் அடைகிறார். இதுவரை அது தீர்க்கப்படாத கேஸ் நேருவுக்கு பின் நான் தான் பிரதமர் ஆவேன் என்று அடம்பிடித்த மொரார்ஜி தனது தீவிர வலது சாரி கொள்கையை மாற்றாமல் ஹிந்து மகா சபாவின் இருந்து உருவான ஜன சங்கத்துடன் கூடிக் குழாவியதால் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. கட்சி உடையும் சூழ்நிலை. சென்னையில் எழுந்திருந்த இந்திய எதிர்ப்பு துப்பாக்கிச் சூடு பிரச்சனைகளை தீர்த்து விட்டு அப்போதுதான் பாகிஸ்தான் தாக்குதலால் சிதைந்த காஷ்மீரில் மறு நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த இந்திரா அவசரமாக டெல்லிக்கு அழைக்கப்படுகிறார்.

தற்காலிக பிரதமராக இருந்த குல்ஜாரிலால் ராஜினாமா செய்ய வைக்கப்பட்டு பிரதமர் பதவி இந்திரா மீது திணிக்கப்படுகிறது.
கட்சிக்குள் உள்குத்து தொடர்கிறது 1969 இல் ஜனாதிபதி தேர்தலை சாக்கு வைத்து பிரதமர் பதவி கிடைக்காத மொரார்ஜி குரூப் காங்கிரஸை விட்டு வெளியேறுகிறது.
மாநிலங்களில் இருந்த வலுவான தலைவர்களும் போர்க்கொடி உயர்த்துகின்றனர். திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவால் ஆட்சியை தக்க வைத்தார் இந்திரா
மாநிலங்களில் இருந்த உயர் ஜாதி தலைவர்களை நீக்கிவிட்டு பிற்படுத்தப்பட்டோரை பொறுப்புக்கு கொண்டு வருகிறார். நடவடிக்கை சிறிது பலனளித்தது.

1971 தேர்தலில் மொரார்ஜி அணியில் இந்திராவை எதிர்த்துப் போட்டியிட்ட ராஜ் நாராயணன் கொடுத்த வழக்கால் அலகாபாத் உயர்நீதிமன்றம் தகுதி நீக்கம் செய்கிறது

கிழக்கு பாகிஸ்தான் மக்கள் உருது திணிப்பை எதிர்த்து தாய் மொழி வங்காளியை காக்க போராடி பாகிஸ்தான் ராணுவத்தால் வேட்டையாடப்பட்டு லட்சக்கணக்கான அகதிகளாக கல்கத்தா நோக்கி வந்தனர்.
அகதி பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர இந்திய ராணுவம் கிழக்கு பாகிஸ்தான் நுழைந்தது. பாகிஸ்தானுக்கு ஆதரவாக இந்திய பெருங்கடலை நெருங்கிக் கொண்டிருந்த அமெரிக்க விமானம் தாங்கி கப்பல் சோவியத் ஆதரவு காரணமாக தயங்கி தென் சீனக் கடலில் நின்றது.
சாஸ்திரி திபத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் ஐநா தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு என்று அறிவித்தது சீனாவை கோபப்படுத்தி தகுந்த சமயம் பார்த்துக் கொண்டிருந்தது

இந்நிலையில் பொக்ரான் அணுகுண்டு சோதனை நிகழ்ந்தது. அமெரிக்கா தூண்டுதலால் இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் சூழல்.
1966- ல் ஏற்பட்ட பஞ்சங்களில் இருந்து பசுமைப் புரட்சி வெண்மை புரட்சி மூலம் அப்போதுதான் நாடு ஒருவேளை வயிறார சாப்பிட ஆரம்பித்து இருந்தது.

அரசியல் நிலையற்ற தன்மை, உள்நாட்டு வெளிநாட்டு சிக்கல்கள், அதிகாரத்தை கைப்பற்ற துடித்த இந்து சனாதனவாதிகள், தனது எதிர்காலம் குடும்பத்தின் நிலை குறித்த பயம், தான் வெகுவாக நம்பியவர்களே தன்னை முதுகில் குத்தியது போன்றவை 1975 ஜூனில் அரசியல் சட்டம் 352 ஐ பயன்படுத்தி எமர்ஜென்சியை பிரகடனம் செய்தார்


அவசர நிலை அறிவிப்பு குறித்து ராகுல் உள்ளிட்ட பல காங்கிரஸ் தலைவர்களும் மன்னிப்பு கேட்டு உள்ளனர். ஆனால் வரலாற்று ஞானமோ, சுய சிந்தனையோ இல்லாத ம தற்குறி மோடி வெளிநாட்டில், பல நாட்டு மக்கள் முன்னிலையில் எங்கள் நாட்டில் ஜனநாயகம் இல்லை என்று ஒரு பிரதமராக உளருவது என்ன ராஜதந்திரம்?

பிபிசி டாக்குமெண்டரியை வெளியிட தடை விதித்து, எமர்ஜென்சியை விட மோசமான பாசிசத்தில் இந்தியாவை வைத்திருப்பதை யாரும் சொல்லாமலே உலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டிவிட்டார் இந்த முட்டாள் மோடி. பாசிச ஆட்சியில் வாழ்கிறோம் என்பதை நம்மை உணர விடாமல் செய்ததுதான் ஆகப்பெரும் பாசிச கொடுமை

இந்திராவாவது வெளிப்படையாக கருத்துரிமையை தடை செய்தார். மோடியின் அறிவிக்கப்படாத எமர்ஜென்சியில் 2017ல இந்தியாவின் மிக எளிமையான திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சர்க்கார் பேச்சை தூர்தர்ஷன், வானொலி ஒளிபரப்ப தடை செய்யப்பட்டதை டெல்லியில் உள்ள தேசிய ஊடகங்கள் செய்தியாக கூட வெளியிடவில்லை

தவறு செய்து விட்டோம் என்பதை உணர்ந்ததும் பொதுமக்கள் முன்னிலையில் எத்தனை பேருக்கு மன்னிப்பு கோர மனோதிடம் உண்டு.. இந்திராவுக்கு இருந்தது அதனால தான் அவர் இரும்பு பெண்மணி தவறை எதிர்கொள்ளவே பயந்து ஓடி ஒளியும் மோடிகள் வரலாற்றிலிருந்து ஒருநாள் துடைத்தெறியப்படுவார்கள்

நான் ஒன்றும் என் தந்தையைப் போல் புத்தன் அல்ல.. அவர் ராஜதந்திரி நானோ அரசியலில் ஒற்றைப் பெண்மணியாய் ஒட்டுமொத்த ஆண் வர்க்கத்தையும் எதிர்த்து நின்ற பெண்மணி.. ~இந்திரா

நாளை எமர்ஜென்சி காலக் கொடுமைகளை பேசுவோம் காங்கிரஸ் நண்பர்கள் ஆதரவு தருவீர்கள் என்று நம்புகிறேன்

பிப்ரவரி 4,2023

இந்திய பாசிச வரலாறு பாகம் 3

 

இந்திய பாசிச வரலாறு பாகம் 3
கீர்த்தனா ராம்

குஜராத் பரிசோதனைக்கூடத்தில் நாக்பூர் கம்பெனி உருவாக்கிய பொம்மை பாட்னாவில் டெலிப்ரம்ட்டர் முன் 2013 ல் வாசித்தது: எமர்ஜென்சி இந்தியாவின் இருண்ட காலம் வரலாறு அறியாத ஒரு கூட்டம் அதை விட கொடூர பாசிசத்திற்கு செல்ல போகிறோம் என்பதை அறியாமல் கைதட்டி கொண்டிருந்தது.

ஆங்கில அரசுக்கு விண்ணப்பம் அனுப்ப ஆரம்பிக்கப்பட்ட காங்கிரசுக்குள் நூலுபான்கள் புகுந்து சனாதன தர்மத்தை மீட்டெடுக்கும் கருவியாக அதை மாற்ற முயலும் போது காந்தி அதனை பொதுமக்கள் இயக்கமாக மாற்றி சுதந்திரத்தை நோக்கி இட்டுச் சென்றார். காங்கிரசை விட்டு வெளியேறிய மதன் மோகன் மாளவியா குரூப்
ஹிந்து மகா சபா ராஷ்டிரிய சுயம்சேவக் தீவிரவாத கும்பல்களை உருவாக்கி ஒரு ஊதாரி பார்ப்பானை ஏவி காந்தியின் கணக்கை முடித்தது
அவர்கள் எதிர்பார்ப்புக்கு மாறாக இந்தியாவும் காங்கிரசும் நேரு பின்னால் திரண்டது. ஒரிஸ்ஸா பயணத்தின் போது மர்மமாக நேரு இறக்க நூலிபான்களுக்கு நப்பாசை துளிர்விட்டது

பிரதமர் இல்லாத இந்தியா தலைமை இல்லாத காங்கிரசை காமராஜர் வழிநடத்தி மென் சங்கி மொரார்ஜி தேசாயை ஒதுக்கி நேருவின் விசுவாசி லால்பகதூர் சாஸ்திரியை பிரதமராக தேர்வு செய்தார் கோபமான கோட்சே குரூப் காமராஜரை உயிருடன் வீட்டில் வைத்து எரிக்க முயன்றது. சாஸ்திரி மர்மமாக தாஸ்கண்டில் இறந்தார்

மொரார்ஜி தேசாய் ஜெயப்பிரகாஷ், ராஜ் நாராயணன் போன்றோர் மூலம் பிரதமராக காய் நகர்த்தினார்
ஆனால் காமராஜர் இந்த கும்பலிடம் கட்சியும் ஆட்சியும் சிக்கினால் நாடு சிதைந்து விடும் என உணர்ந்து நேருவின் புதல்வி இந்திராவை பிரதமர் ஆக்கினார். கடுப்பான மொரார்ஜி குரூப் காங்கிரஸை விட்டு வெளியேறியது

அருதிப் பெரும்பான்மை இழந்த இந்திராவுக்கு, அன்று ஆதரவாக இருந்து, ஆட்சியை கவிழ விடாது காங்கிரஸில் அவர் கரத்தை வலுப்படுத்த உதவியது அண்ணா ஆரம்பித்து 1967இல் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்த திமுக. இந்தியாவுக்கு சிக்கல் ஏற்பட்ட போதெல்லாம் தமிழ்நாடு நியாயத்தின் பக்கம் நின்றது

நேருவுடன் பல வெளிநாடுகளுக்கு சென்றிருந்தாலும் அவரது அரசியல் பணிகளில் பங்கெடுத்திருந்தாலும் காங்கிரஸில் உள்ள பழைய பெருந்தலைகளுக்கு கட்டுப்பட்டே இந்திரா நடந்தார்.
இந்திராவை கூங்கி குடியா என்று அழைத்தது எதிர் குரூப் ராகுலை பப்பு என்றும் மன்மோகனை மௌன சாமியார் என தூற்றிய அதே குரூப்

இந்திராவுக்கு எதிராக காங்கிரசுக்குள் உள்குத்து நடத்திக் கொண்டே இருந்தன மிச்சம் மீதி இருந்த மென்சங்கீகள்.
பொதுத்தேர்தல் வந்தது. இந்த சங்கிகளை நம்பாது தனது ரேபரேலி தொகுதியில் பொதுக்கூட்ட மேடையை பார்வையிட்டு பணிகளை மேற்கொள்ள அந்த பிளாக் அதிகாரிகள் சிலரை கேட்டுக்கொண்டார் இந்திரா.

எதிர்த்து போட்டியிட்டவர் மொரார்ஜி குரூப்பை சேர்ந்த ராஜ் நாராயணன். தேர்தலில் இந்திரா வெற்றி பெற்றார் ஆட்சியை தக்க வைத்தார். ராஜ்நாராயணன் இந்திரா வெற்றியை எதிர்த்து அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக வழக்கு தொடர்ந்தார். இந்திராவின் வெற்றி செல்லாது என்று அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது

கவனிக்க வேண்டியது இந்திரா ஊழல் செய்ததாகவோ கடும் குற்றம் எதுவும் செய்ததாகவோ அவர் தகுதி நீக்கம் செய்யப்படவில்லை.
சில கிராம சேவக்குகளை பிரச்சார மேடையை தயார் செய்ய உத்தரவிட்டது தான் அதிகார துஷ்பிரயோக அளவுகோல். தீர்ப்பு அடுத்த ஆறு ஆண்டுக்கு இந்திரா தேர்தலில் போட்டியிட தடை விதித்தது

காங்கிரசுக்குள் இருந்த மென் சங்கிகள், வெளியே போன மொரார்ஜி குரூப், ஜன சங்கத்திலிருந்த வாஜ்பாயி அத்வானிகள். குதூகலம் அடைந்தன.
1972 பங்களாதேஷ் வெற்றிக்குப் பின் துர்கா தேவியாக பார்த்த வாஜ்பாயி இந்திராவே பதவி விலகு என்று மாட்டு வண்டியில் ஊர்வலம் கிளம்பினார். ஜெயா போல ஏதாவது ஒரு அடிமையை பிரதமர் ஆக்கிவிட்டு இந்திரா ஜெயிலுக்குப் போய் இருக்கலாம்.
ஆனால் காலே இல்லாமல் செத்தது எப்படி என்றே தெரியாமல் போக அவருக்கு எண்ணம் இல்லை. 1975 ஜூன் 25 இல் அவசர நிலையை அமல்படுத்தினார். அடுத்த பிரதமர் நான்தான் என்று கனவில் இருந்த காங்கிரஸ் குடுமிகள் நிலை குலைந்தன

பாக்கிஸ்தான் போரில் வெற்றி, பங்களாதேஷ் நாடு உருவாக்கம் பொக்ரான் அணுகுண்டு சோதனை, ரஷ்யா உடன் கூட்டு சேர்ந்து அமெரிக்க வல்லாதிக்கத்தை இந்திய பெருங்கடலில் ஒடுக்கியது.
இரும்பு பெண்மணியானது எதுவுமே தெரியாத தற்குறி மோடி தலைமறைவாக காலேஜில் படித்தார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்


இந்திய பாசிச வரலாறு பாகம் 2

இந்திய பாசிச வரலாறு பாகம் 2
கீர்த்தனா ராம்




1942 ல் ஜின்னா பாகிஸ்தான் கோரிக்கையை முன்வைத்த போது முதலில் சுதந்திரம் பின்னர் பிரிவினை என்றார் காந்தி.
இதற்கு மாறாக ராசகோபாலு முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகளை தனியாக பிரிக்க ஜின்னாவுக்கு ஐடியா கொடுத்தார். இதை கடுமையாக எதிர்த்தார் காமராஜர்

இறுதியில் பாகிஸ்தான் பிரிக்கப்பட்டது காந்தியின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல். 1.5 கோடி மக்கள் நாட்டின் மேற்கிலிருந்து கிழக்கிற்கு மாற்றி மாற்றி துரத்தி அடிக்க பட்டார்கள் 10 லட்சம் பேர் கலவரங்களில் மரணமடைந்தார்கள் காணாமல் போனார்கள் கல்கத்தாவில் மட்டும் நாலாயிரம் பேர் இறந்திருந்தனர்

ராசகோபாலு பார்முலா இந்தியாவை சின்னா பின்னப் படுத்தியது என்றால் காமராஜரின் கே பிளான் இந்தியாவை வல்லரசு ஆக்க தீட்டப்பட்டது.
அதன்படி ஒருவருக்கு இரு பொறுப்பு இனி கிடையாது என்றார். பத்து ஆண்டுகள் ஒரே பதவியில் தொடர்வது, நல்லது அல்ல என்றார். சுதந்திரம் அடைய உருவாக்கப்பட்டது காங்கிரஸ்

அதன் தேவை முடிந்து விட்டது காங்கிரசை கலைத்து விடலாம் என்றது ராசகோபாலு குரூப். காமராஜர் திட்டத்தை ஏற்ற நேருவின் கட்டளை படி மத்தியில் அமைச்சர்களாக இருந்த லால் பகதூர் சாஸ்திரி, மொரார்ஜி தேசாய், ஜெகஜீவன் ராம், பதவியை ராஜிநாமா செய்து விட்டு முழு நேர கட்சிப்பணிக்கு திரும்பினார்கள்.


காமராஜர் திட்டத்தை நேரு உறுதியாக ஏற்க 1962 இல் சீனாவில் வாங்கிய அடியும் ஒரு காரணம். சீன யுத்தம் எதிரியை மட்டும் இல்ல கட்சியில் இருந்த துரோகிகளையும் களை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை நேருவுக்கு உண்டாக்கி இருந்தது. யாருமே எதிர்பார்க்காத நிலையில் நேரு 1964 இல் மரணம் அடைந்தார்

நேரு மறைவுக்குப் பின் காங்கிரசில் இருந்த நூலிபான்கள் ஒன்று கூடி மொரார்ஜி தேசாயை பிரதமராக்க முயன்றனர். தீவிர வலது சரியான தேசாயை விலக்கி நேரு நம்பிக்கை பெற்ற சாஸ்திரியை முன்மொழிந்தார் காமராஜர். காமராஜரின் அதிரடிகளால் ராசகோவலுகுரூப் கட்சியை விட்டு விலகியதால் சாஸ்திரி பிரதமரானார்

எதிர் பார்த்தபடி சாஸ்திரி நேருவின் சமதர்ம லட்சியப்படி வெண்மை புரட்சி உள்ளிட்ட சாதனைகளை புரிந்து கொண்டிருந்தபோது 1965இல் மீண்டும் இந்தியா பாகிஸ்தான் போர், 1966 இல் அன்றைய சோவியத் ஒன்றியத்தில் இருந்த இன்றைய உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஸ்கண்டில் இந்தியா பாகிஸ்தான் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்ட சில மணி நேரங்களில் மர்மமாக மரணமடைந்தார் லால் பகதூர் சாஸ்திரி.

மீண்டும் காங்கிரசில் இருந்த நூலிபான்கள் கூடி மொரார்ஜி தேசாயை சுற்றி நின்று கும்மி அடித்தனர். இம்முறை காமராஜர் இந்திராவை முன்மொழிந்தார். அதற்கு முக்கிய காரணம்
1) மொரார்ஜி மனித மூத்திரப்பிரியர்

2) இந்திரா தன் தந்தை நேரு உடன் பல வெளிநாடுகளுக்கும் சென்று அந்நாட்டு அதிபர்களிடம் பரிட்சயம் செய்திருந்தார் 3)நேருவின் வெற்றிடத்தை அப்போ இருந்த நூலிபான் எவராலும் நிரப்ப முடியாது 4) காங்கிரஸ் கட்சி கேரளம் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் அடிவாங்கிக் கொண்டிருந்தது

அதற்கு காமராஜரே பிரதமர் ஆகி இருக்கலாமே? கலைஞர் சொன்னது தான், பல நூலிபான்களை விட உயரமாக இருந்தாலும், காமராஜரை ரொம்ப நாள் விட்டு வைக்க மாட்டார்கள். காங்கிரஸில் நூலிபான்கள் சம்பவம் செய்யப்படுவதை கண்டு கடுப்பான ஆர் எஸ் எஸ் அவரை வீட்டில் வைத்து உயிரோடு எரித்துக் கொள்ள முயன்றது

ராஜகோபாலு குரூப் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு அவருக்கு எதிராக அல்லு சில்லு வேலைகளை செய்து கொண்டிருந்தது. பதவியில் இருந்து சாதிக்க முடியாததை கட்சி பொறுப்பிலிருந்து சாதிக்க எண்ணி இருக்கலாம் எதிர்த்துப் போட்டியிட்ட மொரார்ஜி தேசாய் தோற்கடிக்கப்பட்டு, இந்திரா பிரதமர் ஆக்கப்பட்டார்

இந்திய பாசிச வரலாறு பாகம் 1

இந்திய பாசிச வரலாறு பாகம் 1
கீர்த்தனா ராம்




இந்திய பாசிச முகமூடிகளை வெளிப்படுத்த இன்று போல் ஒரு கெட்ட நாள் அமையாது.
தென்னாப்பிரிக்காவில் வக்கீல் தொழில் பார்த்துக் கொண்டிருந்தவரை, விதி ஒரு மத வெறி பிடித்த நூலிபானின் குண்டுக்கு பலியாக இந்தியாவிற்கு அழைத்து வந்தது அவர் மோஹன்தாஸ் கரம்சந்த் காந்தி

காந்திக்கு முன்பே காங்கிரஸ் இயக்கம் ஆலன் ஆக்டோவியன் ஹுமால் ஆரம்பிக்கப்பட்டது தாங்கள் அந்நியரால் ஆளப்படுகிறோம் என்பதை இந்திய மக்கள் உணராதபடி செய்ய தாதாபாய் நௌரோஜி ஃபிரோஜ் சா மேத்தா போன்ற மேல்தட்டு பார்சி தொழிலதிபர்கள் உள்ளே இழுத்துப் போடப்பட்டார்கள் கூடவே சில நூலிபான்களும்

சென்னை ஹிந்து பத்திரிக்கை குடும்பம்
வடக்கே மதன் மோகன் மாளவியா,
மகாராஷ்டிராவில் கோபால கிருஷ்ண கோகலே போன்றோர். ஒரு கட்டத்தில் காங்கிரஸ் நூலிபான்களின் கைக்கு சென்று விட்டது. தென்னாபிரிக்காவில் அடக்குமுறைக்கு ஆளான காந்தி வழக்கு விஷயமாக இந்தியாவுக்கு வந்திருந்த போது இங்குள்ள நிலைமை
மிக மிக கேவலமாக இருப்பதைக் கண்டு, வருந்தி முதலில் தாய் நாட்டை கவனிப்போம் என்று காங்கிரசில் இணைந்தார்.
அதுவரை நூலிபான்களின் ஏகபோக உடமையாக இருந்த காங்கிரஸ் பொதுமக்களின் இயக்கமாக மாற ஆரம்பித்தது. ஏற்கனவே கடுப்பில் இருந்த சில குடுமிகள் தங்கள் இஷ்டப்படி காங்கிரஸ் ஆடாது என உணர்ந்தனர்

ஆங்கிலம் பயிற்று மொழி ஆக்கப்பட்டு அடித்தட்டு மக்கள் ஓரளவு கற்க ஆரம்பித்தனர். இதனால் தங்கள் ஆச்சார அனுஷ்டான சனாதான தர்மத்தைப் பேணி காக்க இந்து மகா சபாவை துவக்கினார் மதன்மோகன் மாளவியா என்ற குடுமி. அதற்கு பனாரஸ் ஹிந்து பல்கலை உருவாக்கி சமஸ்கிருதம் வழியாக ஹிந்துத்துவா புகுத்தப்பட்டது

காங்கிரஸ் கட்சி காந்தி தலைமையின் கீழ் வந்தது. வாட்ஸ் அப், பேஸ்புக், twitter இல்லாத அந்தக் காலத்திலேயே சபர்மதி ஆற்றங்கரையில் இருந்து காந்தி விடுக்கும் போராட்டக் கோரிக்கைகள், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஆப்கானிஸ்தான் எல்லையில் இருந்து அருணாச்சல் பிரதேசம் வரை பரவியது
காங்கிரஸ் மெதுவாக வெகு மக்கள் இயக்கமாக அதன் போராட்டங்கள் வெகுமக்கள் எழுச்சியாக பரிணமித்துக் கொண்டிருந்தன. ஆங்கில அரசு பயந்தது. காங்கிரசில் இருந்த பச்சை சங்கிகளையும், காவி சங்கிகளையும் தூண்டி விட்டுக் கொண்டே இருந்தது. ஹிந்து மகாசபா உருவாகும் முன்பே முஸ்லிம் லீக் உருவாகிவிட்டது
நவாப் சலீமுல்லாவில் ஆரம்பித்து ஜின்னா வரை காங்கிரஸ் இந்துக்களுக்கான கட்சி என நம்ப ஆரம்பித்து இருந்தனர். அந்தமான் சிறையில் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து விட்டு வி டி சாவர்க்கர், மதன்மோகன் மாலவியா உருவாக்கி இருந்த தீவிரவாத பள்ளிக்கு வந்து சேர்ந்தார். ஹிந்துத்துவா வெறி அதிகமானது

முஸ்லிம்களின் தனி நாடு கோரிக்கைக்கு பதிலடியாக அகண்ட பாரதம் முன்வைக்கப்பட்டது. துருக்கி கலீபாவுக்கு ஆதரவாக கிலாபத் இயக்கம் ஆரம்பித்தார். முஸ்லிம்களை தங்களுடன் பிணைத்திருக்கும் என்று அவர் எண்ணியதற்கு மாறாக ஹிந்துக்கள் இடையே அவர் முஸ்லிம்களின் ஆதரவாளர் என்று பரப்பப்பட்டது.

காந்தி ஆரம்பித்த போராட்டங்களை, கண்டுக்காத ஹிந்து மகாசபா அம்பேத்கரின் இரட்டை தொகுதி முறைக்கு காந்தி எதிர்ப்பு தெரிவித்த போது அவருடன் தோளோடு தோள் நின்றது. காந்தியின் அகிம்சையில் முரண்பட்ட நேதாஜி பிரிட்டிசாரை விரட்ட ஜெர்மனியுடன் இணைந்து இந்தியா மீது தாக்குதல் நடத்தினார்

இடையில் ஹெட்கோவர் தலைமையில் தலைமையில் ஒரு குரூப் ஹிந்து மகா சபாவில் இருந்து பிரிந்து ஆர்எஸ்எஸ் இயக்கத்தை ஆரம்பித்தது. ஆர் எஸ் எஸ் & ஹிந்து மகாசபா நேதாஜி கூட்டத்தை போட்டுக் கொடுத்து ஆங்கிலேயரிடம் விசுவாசத்தை காட்டி கொண்டிருந்தது. இரண்டாம் உலகப் போர் முடிவில் செமத்த அடி வாங்கிய அந்தக் காலப் பெரிய அண்ணன் இங்கிலாந்து, கட்டுப்பாட்டில் இருந்த காலனிகளை வைத்து மேய்க்க முடியாமல் அவற்றை கை கழுவ முடிவு செய்தது.
ஜின்னா முறுக்க ஆரம்பித்தார் பாகிஸ்தான் தராமல் இந்தியாவை சுதந்திரம் பெற விட மாட்டோம் என்றார். காங்கிரசில் இருந்த மென் சங்கிகள், பதவி ஆசையில் மவுண்ட் பேட்டன் திட்டத்திற்கு சம்மதித்து, இந்தியாவை கூறு போட நாள் குறித்தனர்.
காந்தி எக்கெடோ கெட்டு தொலைங்கடா என்று ஒதுங்கி கொண்டார். ஒன்றரக் கலந்திருந்த இரு சமுகத்தை எப்படி பிரிப்பது? நம்ம ஊரு ராசகோபாலு ஐடியா படி, மேற்கு பஞ்சாப் கிழக்கு வங்காளம் பாகிஸ்தானுக்கு என்று முடிவானது

தகவல் பரவியதும் பஞ்சாபிலும் வங்காளத்திலும் கலவரம் வெடித்தது. கராச்சி, ராவல் பிண்டியிலிருந்து லாகூர் வழியாக வந்த அனைத்து ரயில்களும் பினங்களை சுமந்து கொண்டு வந்தன. பதிலுக்கு கல்கத்தா மாநகரம் பற்றி எரிய ஆரம்பித்தது. காந்தி நவகாளி சென்று கலவரத்தை நிறுத்த உண்ணாவிரதம் ஆரம்பித்தார்

கலவரம் கட்டுக்குள் வந்தது. ஆனால், காந்தி தனது உணவான சில வேர்க்கடலைகள் மற்றும் ஆட்டு பாலை தொடர்ந்து உண்ண மறுத்தார்.
நேருவும் அயன் மேனும் ஏரோப்ளேன் எடுத்துக் கொண்டு கல்கத்தா விரைந்தனர். பாகிஸ்தான் தனி நாடாக போனபோது அதுக்குன்னு சொந்தமா ஒரு துப்பாக்கி கூட இல்லை. நம்பிபோன மக்களுக்கு சோறு போட ஒரு உழக்கு கோதுமை கூட இல்லை.
பாகிஸ்தானுக்கு கொடுக்கவேண்டிய பங்கையும் தொகையையும் உடனடியாக கொடுத்தால் மட்டுமே உண்ணாவிரதத்தை கைவிடுவேன் என்று கறாராகச் சொல்லிவிட்டார் காந்தி.
அகண்ட பாரத கனவில் இருந்த ஹிந்து மகா சபாவிலும் ஆர் எஸ் எஸ் சிலும் மூளைச்சலவை செய்யப்பட்ட நூலிபானுக்கு பேரிடியாக இறங்கியது.

இரண்டு தேசமும், எப்படியோ ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது அவரவர் பொழப்பை பார்ப்போம் என்று எண்ணிய போது இந்த சைக்கோ, நாட்டின் எல்லா பிரச்சனைக்கும் காரணம் காந்தி என போதிக்கப்பட்டு, அந்தக் கால அம்பானி பிர்லா வீட்டில் தங்கி இருந்த காந்தியை போட்டு தள்ளிய நாள் இன்று ஜனவரி 30.

ரஜினியின் குடும்பம்

ரஜினியின் குடும்பம் காமெடி நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் அப்பா ஒய்.ஜி.பார்த்தசாரதி. புகழ்பெற்ற அமெச்சூர் நாடகக் குழுவை நிறுவி நடத்திய நடிகர். ப...