இந்திய பாசிச வரலாறு பாகம் 4
கீர்த்தனா ராம்
கொரோனாவால் சும்மா நிறுத்தப்பட்டிருந்த 8000 கோடி விமானத்தில் ஏறி ஜூன் 2022ல் ஜெர்மனியில் உள்ள Munich சென்றார் மோடி
முன்னரே தயாரிக்கப்பட்ட ஸ்கிரிப்டை நன்கு ரிகர்சல் செய்த பின்னர் teleprompter பார்த்து வாசிக்க தொடங்கினார்:
"எமர்ஜென்சி இந்திய ஜனநாயகம் மீதான கறை".
காங்கிரஸ் தோன்றிய நாள் முதலே பிராமணர், பிராமணர் அல்லாதவர் இடையே அதிகாரத்தை கைப்பற்றுவதில் மோதல் நிலவியது. தற்போது கூட உயர் சாதி சசிதரூர் மற்றும் மல்லிகார்ஜுன கார்க்கே இடையே தலைவர் பதவிக்கு, ஜனநாயக முறைப்படி நடந்த உள்கட்சி தேர்தலில் கார்கே வெற்றி பெறவே தருர் விட்டுக் கொடுக்கிறார்
டேராடூன்பிரச்சாரத்தில் இருந்த நேரு திடீர் மரணம் அடைய காமராஜர் உள்ளிட்ட தலைவர்கள் கூடி சாஸ்திரியை பிரதமராக தேர்வு செய்கின்றனர். பாகிஸ்தான் போரை முடிவுக்கு கொண்டு வர நிகழ்ந்த தாஸ்கெண்ட் மாநாட்டில் கலந்து கொண்டிருந்தபோதே சாஸ்திரி மர்மமாக மரணம் அடைகிறார். இதுவரை அது தீர்க்கப்படாத கேஸ் நேருவுக்கு பின் நான் தான் பிரதமர் ஆவேன் என்று அடம்பிடித்த மொரார்ஜி தனது தீவிர வலது சாரி கொள்கையை மாற்றாமல் ஹிந்து மகா சபாவின் இருந்து உருவான ஜன சங்கத்துடன் கூடிக் குழாவியதால் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. கட்சி உடையும் சூழ்நிலை. சென்னையில் எழுந்திருந்த இந்திய எதிர்ப்பு துப்பாக்கிச் சூடு பிரச்சனைகளை தீர்த்து விட்டு அப்போதுதான் பாகிஸ்தான் தாக்குதலால் சிதைந்த காஷ்மீரில் மறு நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த இந்திரா அவசரமாக டெல்லிக்கு அழைக்கப்படுகிறார்.
கட்சிக்குள் உள்குத்து தொடர்கிறது 1969 இல் ஜனாதிபதி தேர்தலை சாக்கு வைத்து பிரதமர் பதவி கிடைக்காத மொரார்ஜி குரூப் காங்கிரஸை விட்டு வெளியேறுகிறது.
மாநிலங்களில் இருந்த வலுவான தலைவர்களும் போர்க்கொடி உயர்த்துகின்றனர்.
திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவால் ஆட்சியை தக்க வைத்தார் இந்திரா
மாநிலங்களில் இருந்த உயர் ஜாதி தலைவர்களை நீக்கிவிட்டு பிற்படுத்தப்பட்டோரை பொறுப்புக்கு கொண்டு வருகிறார். நடவடிக்கை சிறிது பலனளித்தது.
1971 தேர்தலில் மொரார்ஜி அணியில் இந்திராவை எதிர்த்துப் போட்டியிட்ட ராஜ் நாராயணன் கொடுத்த வழக்கால் அலகாபாத் உயர்நீதிமன்றம் தகுதி நீக்கம் செய்கிறது
கிழக்கு பாகிஸ்தான் மக்கள் உருது திணிப்பை எதிர்த்து தாய் மொழி வங்காளியை காக்க போராடி பாகிஸ்தான் ராணுவத்தால் வேட்டையாடப்பட்டு லட்சக்கணக்கான அகதிகளாக கல்கத்தா நோக்கி வந்தனர்.
அகதி பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர இந்திய ராணுவம் கிழக்கு பாகிஸ்தான் நுழைந்தது. பாகிஸ்தானுக்கு ஆதரவாக இந்திய பெருங்கடலை நெருங்கிக் கொண்டிருந்த அமெரிக்க விமானம் தாங்கி கப்பல் சோவியத் ஆதரவு காரணமாக தயங்கி தென் சீனக் கடலில் நின்றது.
சாஸ்திரி திபத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் ஐநா தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு என்று அறிவித்தது சீனாவை கோபப்படுத்தி தகுந்த சமயம் பார்த்துக் கொண்டிருந்தது
இந்நிலையில் பொக்ரான் அணுகுண்டு சோதனை நிகழ்ந்தது. அமெரிக்கா தூண்டுதலால் இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் சூழல்.
1966- ல் ஏற்பட்ட பஞ்சங்களில் இருந்து பசுமைப் புரட்சி வெண்மை புரட்சி மூலம் அப்போதுதான் நாடு ஒருவேளை வயிறார சாப்பிட ஆரம்பித்து இருந்தது.
அரசியல் நிலையற்ற தன்மை, உள்நாட்டு வெளிநாட்டு சிக்கல்கள், அதிகாரத்தை கைப்பற்ற துடித்த இந்து சனாதனவாதிகள், தனது எதிர்காலம் குடும்பத்தின் நிலை குறித்த பயம், தான் வெகுவாக நம்பியவர்களே தன்னை முதுகில் குத்தியது போன்றவை 1975 ஜூனில் அரசியல் சட்டம் 352 ஐ பயன்படுத்தி எமர்ஜென்சியை பிரகடனம் செய்தார்
அவசர நிலை அறிவிப்பு குறித்து ராகுல் உள்ளிட்ட பல காங்கிரஸ் தலைவர்களும் மன்னிப்பு கேட்டு உள்ளனர்.
ஆனால் வரலாற்று ஞானமோ, சுய சிந்தனையோ இல்லாத ம தற்குறி மோடி வெளிநாட்டில், பல நாட்டு மக்கள் முன்னிலையில் எங்கள் நாட்டில் ஜனநாயகம் இல்லை என்று ஒரு பிரதமராக உளருவது என்ன ராஜதந்திரம்?
பிபிசி டாக்குமெண்டரியை வெளியிட தடை விதித்து, எமர்ஜென்சியை விட மோசமான பாசிசத்தில் இந்தியாவை வைத்திருப்பதை யாரும் சொல்லாமலே உலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டிவிட்டார் இந்த முட்டாள் மோடி. பாசிச ஆட்சியில் வாழ்கிறோம் என்பதை நம்மை உணர விடாமல் செய்ததுதான் ஆகப்பெரும் பாசிச கொடுமை
இந்திராவாவது வெளிப்படையாக கருத்துரிமையை தடை செய்தார்.
மோடியின் அறிவிக்கப்படாத எமர்ஜென்சியில் 2017ல இந்தியாவின் மிக எளிமையான திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சர்க்கார் பேச்சை தூர்தர்ஷன், வானொலி ஒளிபரப்ப தடை செய்யப்பட்டதை டெல்லியில் உள்ள தேசிய ஊடகங்கள் செய்தியாக கூட வெளியிடவில்லை
தவறு செய்து விட்டோம் என்பதை உணர்ந்ததும் பொதுமக்கள் முன்னிலையில் எத்தனை பேருக்கு மன்னிப்பு கோர மனோதிடம் உண்டு..
இந்திராவுக்கு இருந்தது அதனால தான் அவர் இரும்பு பெண்மணி
தவறை எதிர்கொள்ளவே பயந்து ஓடி ஒளியும் மோடிகள்
வரலாற்றிலிருந்து ஒருநாள் துடைத்தெறியப்படுவார்கள்
நான் ஒன்றும் என் தந்தையைப் போல் புத்தன் அல்ல..
அவர் ராஜதந்திரி
நானோ அரசியலில் ஒற்றைப் பெண்மணியாய் ஒட்டுமொத்த ஆண் வர்க்கத்தையும் எதிர்த்து நின்ற பெண்மணி..
~இந்திரா
நாளை எமர்ஜென்சி காலக் கொடுமைகளை பேசுவோம் காங்கிரஸ் நண்பர்கள் ஆதரவு தருவீர்கள் என்று நம்புகிறேன்
நாளை எமர்ஜென்சி காலக் கொடுமைகளை பேசுவோம் காங்கிரஸ் நண்பர்கள் ஆதரவு தருவீர்கள் என்று நம்புகிறேன்
பிப்ரவரி 4,2023






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக