புதன், 8 பிப்ரவரி, 2023

இந்திய பாசிச வரலாறு பாகம் 5

 

இந்திய பாசிச வரலாறு பாகம் 5
கீர்த்தனா ராம்


எமர்ஜென்சியின் கொடுமைகளைப் பற்றி அதன் 43 வது ஆண்டு நினைவு நாளில் எட்டு வருடமாக அறிவிக்கப்படாத எமர்ஜென்சி ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் நரேந்திர மோடி ட்விட் செய்த போது டெல்லி மோடி மீடியாக்கள் புல்லரித்துப் போய் வெளியிட்ட செய்தி தொகுப்பு இது


சூப்பர் PM டெல்லி யுனிவர்சிட்டியில் BA படித்துக் கொண்டே எமர்ஜென்சியை எதிர்த்து 19 மாசம் சீக்கியர் வேடத்தில் தலை மறைவாக இருந்தார். அப்போ அப்போ வாட் நகரில் டீயையும் விற்றுவிட்டு வந்தார். இந்தப் படம் வைரல் ஆனபோது பஞ்சாபில் சட்டமன்றத் தேர்தல் நடந்தது என்பதை நினைவில் வையுங்கள்

இடையில் எமர்ஜென்சியை எதிர்த்துப் போராடிய சந்திரசேகரை டெல்லி ஏர்போர்ட்டில் சந்தித்து கைகுலுக்கியும் இருக்கிறார் அதற்கு சாட்சி முன்னாள் ஹரியானா முதலமைச்சர் பைரன் சிங் ஷேகாவட் சகித்துக் கொள்ள முடியாத ஆன்டி இந்தியன்ஸ் ஆர் எஸ் எஸ் அலுவலக சூசை கூட்டிக் கொண்டிருந்ததாக அவதூறு பரப்பினர்

இந்திரா பிரதமராக முன்மொழிந்த காமராஜர் அவரின் சர்வாதிகாரப் போக்கால் காங்கிரஸ் (O) என தனியாகப் பிரிந்து சென்றதை, இந்திரா எதிர்ப்பாளர்களுக்கு தமிழ்நாட்டில் புகலிடம் கொடுத்த கலைஞர் பற்றி வட இந்தியர்களுக்கு சொல்லிக் கொடுக்காத காங்கிரஸ் செய்த தவறு இன்று அதை அழித்துக் கொண்டு இருக்கிறது
1975 ஜூன் 25, ஃபக்ருதீன் அலி அகமது அரசியல் அமைப்பு சட்டம் 352 பயன்படுத்தி அவசர நிலையை அமலுக்கு கொண்டு வந்த பிறகு ஆங்கில ஆட்சி போன்ற கொடூரமான அடக்கு முறையை நாடு எதிர்கொண்டது. பத்திரிகைகள் முழு தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டன எதிர்க்கட்சிகள் பேரணி ஊர்வலம் நடத்த தடை போடப்பட்டது
தமிழ்நாடு தவிர ஒட்டுமொத்த இந்தியாவும், மாநில அரசுகள் கலைக்கப்பட்டு இந்திராவின் ஒற்றைத் தலைமையின் கீழ் கொண்டுவரப்பட்டது.
போராடிய தலைவர்கள் வேட்டையாடப்பட்டனர். தலைமறைவாக இருந்த ஷேக் அப்துல்லா போன்றவர்களுக்கு புகலிடம் அளித்த தமிழ்நாடு அரசு 1976 இல் கலைக்கப்பட்டது.

எமர்ஜென்சியை பற்றி பேசும்போது எல்லாம் சஞ்சய் காந்தி நினைவுக்கு வருவார் இந்திரா தன் மூத்த மகன் சஞ்சய் காந்தி கண்ட்ரோலில் இருப்பதாக கூட தகவல் பரப்பப் பட்டது.
சஞ்சய் காந்தியின் அரசியல் தலையீடு குறித்து உறுதியான ஆதாரங்கள் உள்ளன. அவருடைய சர்ச்சைக்குரிய செயல்பாடு 20 அம்சத் திட்டம்

அதில் ஒன்று நாம் இருவர் நமக்கு இருவர். இதன்படி கல்யாணம் ஆகி இரண்டு குழந்தைகள் பெற்று இருந்த ஆண்கள் அனைவரும் கட்டாய குடும்பக் கட்டுப்பாடு செய்யப்பட்டனர். அக்காலத்தில் ஒரு அரசு வண்டி கிராமத்திற்கு உள்ளே வருகிறது என்றாலே ஆண்கள் அனைவரும் தலைமறைவாக ஓடிப்போய் ஒளிந்து கொள்வர்
சொந்தமாக ஒரு கார் கம்பெனியைஆரம்பித்து ஜப்பான் உதவியுடன் இந்தியாவில் கார் தயாரித்தார்.
எதிர்க்கட்சிகள் அரசு அந்த கம்பெனியை ஆதரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர் பாகிஸ்தான் போர் வெற்றி இதனை மறைத்தது 1977ல் ஜனதா ஆட்சியில் அந்த கார் கம்பெனி தேசிய மையமாக்கப்பட்டது அதுதான் மாருதி கார்
தனது நண்பர் பன்சிலால் உதவியால் ஆயிரக்கணக்கான ரவுடிகளை இளைஞர் காங்கிரஸ் கட்சியில் சேர்த்து குண்டா ராஜ்ஜியம் நடத்தினார்.
இந்திரா மந்திரி சபையில் இருந்த ஐ கே குஜரால் போன்றோர் சஞ்சய் காந்தியின் தலையிட்டை எதிர்த்து காங்கிரசை விட்டு வெளியேறினர்.

ஜீம்மா மசூதியை அழகுபடுத்த டெல்லி டெவலப்மென்ட் அத்தாரிட்டி உதவியுடன் அதனைச் சுற்றி இருந்த குடிசைகளை எல்லாம் இடித்து தள்ளினார்.
அவருடைய ரவுடித்தனத்தின் உச்சகட்டம் இந்திரா சஞ்சய் காந்தியை விமர்சித்த கிஸ்ஸா குர்ஸி என்ற பட தயாரிப்பாளர் மிரட்டப்பட்டு படப்பெட்டிகள் மாருதி ஆலைக்கு கொண்டுவரப்பட்டு எரிக்கப்பட்டன

இன்றைக்கு சில பெருசுகள் எமர்ஜென்சி நினைவு கூறும்போது அற்புதமான காலமாக கூறுவர். ஓரளவு உண்மை உண்டு. 20 அம்சத் திட்டத்தில் வரதட்சணை ஒழிப்பு சட்டம், முழு எழுத்தறிவு, ஜாதி ஒழிப்பு, குடும்ப கட்டுப்பாடு போன்றவை அடங்கும். இதை வன்முறையாக திணித்தது தான் இங்கு விமர்சனம் ஆனது (தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ரஜினியின் குடும்பம்

ரஜினியின் குடும்பம் காமெடி நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் அப்பா ஒய்.ஜி.பார்த்தசாரதி. புகழ்பெற்ற அமெச்சூர் நாடகக் குழுவை நிறுவி நடத்திய நடிகர். ப...