செவ்வாய், 7 பிப்ரவரி, 2023

இந்திய பாசிச வரலாறு பாகம் 3

 

இந்திய பாசிச வரலாறு பாகம் 3
கீர்த்தனா ராம்

குஜராத் பரிசோதனைக்கூடத்தில் நாக்பூர் கம்பெனி உருவாக்கிய பொம்மை பாட்னாவில் டெலிப்ரம்ட்டர் முன் 2013 ல் வாசித்தது: எமர்ஜென்சி இந்தியாவின் இருண்ட காலம் வரலாறு அறியாத ஒரு கூட்டம் அதை விட கொடூர பாசிசத்திற்கு செல்ல போகிறோம் என்பதை அறியாமல் கைதட்டி கொண்டிருந்தது.

ஆங்கில அரசுக்கு விண்ணப்பம் அனுப்ப ஆரம்பிக்கப்பட்ட காங்கிரசுக்குள் நூலுபான்கள் புகுந்து சனாதன தர்மத்தை மீட்டெடுக்கும் கருவியாக அதை மாற்ற முயலும் போது காந்தி அதனை பொதுமக்கள் இயக்கமாக மாற்றி சுதந்திரத்தை நோக்கி இட்டுச் சென்றார். காங்கிரசை விட்டு வெளியேறிய மதன் மோகன் மாளவியா குரூப்
ஹிந்து மகா சபா ராஷ்டிரிய சுயம்சேவக் தீவிரவாத கும்பல்களை உருவாக்கி ஒரு ஊதாரி பார்ப்பானை ஏவி காந்தியின் கணக்கை முடித்தது
அவர்கள் எதிர்பார்ப்புக்கு மாறாக இந்தியாவும் காங்கிரசும் நேரு பின்னால் திரண்டது. ஒரிஸ்ஸா பயணத்தின் போது மர்மமாக நேரு இறக்க நூலிபான்களுக்கு நப்பாசை துளிர்விட்டது

பிரதமர் இல்லாத இந்தியா தலைமை இல்லாத காங்கிரசை காமராஜர் வழிநடத்தி மென் சங்கி மொரார்ஜி தேசாயை ஒதுக்கி நேருவின் விசுவாசி லால்பகதூர் சாஸ்திரியை பிரதமராக தேர்வு செய்தார் கோபமான கோட்சே குரூப் காமராஜரை உயிருடன் வீட்டில் வைத்து எரிக்க முயன்றது. சாஸ்திரி மர்மமாக தாஸ்கண்டில் இறந்தார்

மொரார்ஜி தேசாய் ஜெயப்பிரகாஷ், ராஜ் நாராயணன் போன்றோர் மூலம் பிரதமராக காய் நகர்த்தினார்
ஆனால் காமராஜர் இந்த கும்பலிடம் கட்சியும் ஆட்சியும் சிக்கினால் நாடு சிதைந்து விடும் என உணர்ந்து நேருவின் புதல்வி இந்திராவை பிரதமர் ஆக்கினார். கடுப்பான மொரார்ஜி குரூப் காங்கிரஸை விட்டு வெளியேறியது

அருதிப் பெரும்பான்மை இழந்த இந்திராவுக்கு, அன்று ஆதரவாக இருந்து, ஆட்சியை கவிழ விடாது காங்கிரஸில் அவர் கரத்தை வலுப்படுத்த உதவியது அண்ணா ஆரம்பித்து 1967இல் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்த திமுக. இந்தியாவுக்கு சிக்கல் ஏற்பட்ட போதெல்லாம் தமிழ்நாடு நியாயத்தின் பக்கம் நின்றது

நேருவுடன் பல வெளிநாடுகளுக்கு சென்றிருந்தாலும் அவரது அரசியல் பணிகளில் பங்கெடுத்திருந்தாலும் காங்கிரஸில் உள்ள பழைய பெருந்தலைகளுக்கு கட்டுப்பட்டே இந்திரா நடந்தார்.
இந்திராவை கூங்கி குடியா என்று அழைத்தது எதிர் குரூப் ராகுலை பப்பு என்றும் மன்மோகனை மௌன சாமியார் என தூற்றிய அதே குரூப்

இந்திராவுக்கு எதிராக காங்கிரசுக்குள் உள்குத்து நடத்திக் கொண்டே இருந்தன மிச்சம் மீதி இருந்த மென்சங்கீகள்.
பொதுத்தேர்தல் வந்தது. இந்த சங்கிகளை நம்பாது தனது ரேபரேலி தொகுதியில் பொதுக்கூட்ட மேடையை பார்வையிட்டு பணிகளை மேற்கொள்ள அந்த பிளாக் அதிகாரிகள் சிலரை கேட்டுக்கொண்டார் இந்திரா.

எதிர்த்து போட்டியிட்டவர் மொரார்ஜி குரூப்பை சேர்ந்த ராஜ் நாராயணன். தேர்தலில் இந்திரா வெற்றி பெற்றார் ஆட்சியை தக்க வைத்தார். ராஜ்நாராயணன் இந்திரா வெற்றியை எதிர்த்து அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக வழக்கு தொடர்ந்தார். இந்திராவின் வெற்றி செல்லாது என்று அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது

கவனிக்க வேண்டியது இந்திரா ஊழல் செய்ததாகவோ கடும் குற்றம் எதுவும் செய்ததாகவோ அவர் தகுதி நீக்கம் செய்யப்படவில்லை.
சில கிராம சேவக்குகளை பிரச்சார மேடையை தயார் செய்ய உத்தரவிட்டது தான் அதிகார துஷ்பிரயோக அளவுகோல். தீர்ப்பு அடுத்த ஆறு ஆண்டுக்கு இந்திரா தேர்தலில் போட்டியிட தடை விதித்தது

காங்கிரசுக்குள் இருந்த மென் சங்கிகள், வெளியே போன மொரார்ஜி குரூப், ஜன சங்கத்திலிருந்த வாஜ்பாயி அத்வானிகள். குதூகலம் அடைந்தன.
1972 பங்களாதேஷ் வெற்றிக்குப் பின் துர்கா தேவியாக பார்த்த வாஜ்பாயி இந்திராவே பதவி விலகு என்று மாட்டு வண்டியில் ஊர்வலம் கிளம்பினார். ஜெயா போல ஏதாவது ஒரு அடிமையை பிரதமர் ஆக்கிவிட்டு இந்திரா ஜெயிலுக்குப் போய் இருக்கலாம்.
ஆனால் காலே இல்லாமல் செத்தது எப்படி என்றே தெரியாமல் போக அவருக்கு எண்ணம் இல்லை. 1975 ஜூன் 25 இல் அவசர நிலையை அமல்படுத்தினார். அடுத்த பிரதமர் நான்தான் என்று கனவில் இருந்த காங்கிரஸ் குடுமிகள் நிலை குலைந்தன

பாக்கிஸ்தான் போரில் வெற்றி, பங்களாதேஷ் நாடு உருவாக்கம் பொக்ரான் அணுகுண்டு சோதனை, ரஷ்யா உடன் கூட்டு சேர்ந்து அமெரிக்க வல்லாதிக்கத்தை இந்திய பெருங்கடலில் ஒடுக்கியது.
இரும்பு பெண்மணியானது எதுவுமே தெரியாத தற்குறி மோடி தலைமறைவாக காலேஜில் படித்தார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ரஜினியின் குடும்பம்

ரஜினியின் குடும்பம் காமெடி நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் அப்பா ஒய்.ஜி.பார்த்தசாரதி. புகழ்பெற்ற அமெச்சூர் நாடகக் குழுவை நிறுவி நடத்திய நடிகர். ப...