ஞாயிறு, 9 மே, 2021

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்....

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்....

திரு. டான் அசோக்



ஸ்டாலின் முதல்வராகப் பதவி ஏற்கும் அன்று ஒரு நொடி நிமிர்ந்து பார்த்த அந்தப் பார்வை இருக்கிறதே.!

அந்தப் பார்வைக்குப் பின்னால் ஒரு #வரலாறு இருக்கிறது.

அண்ணா முதல்வர் ஆவதற்கு முன்பே அரசியலுக்கு வந்தவர் ஸ்டாலின்.

கலைஞர் காலத்திலும் உழைத்தார் உழைத்தார் உழைத்தாரே தவிர உயரம் வந்ததா? 

வெகு லேட்டாகத்தான் வந்தது. என்ன செய்வது?

அப்பா என்ன முலாயம் சிங் மாதிரியா? கலைஞர் அல்லவா.!

மேயர், துணை முதல்வர் என படிப்படியாக வளர்ந்து வளர்ந்து, 

'சோ' போன்ற பரம்பரை அரசியல் எதிரிகளால் கூட "ஸ்டாலினை எல்லாம் வாரிசு அரசியல் என்று சொல்ல முடியாது" எனச் சொல்ல வைத்தார் கலைஞர்.

கலைஞர் ஓய்விற்குப் பின், 

அந்த ஓய்வை ஒட்டி பாஜக வும்/அதிமுக வும் செய்த அரசியல் அநாகரீகங்களை எல்லாம் எதிர்நோக்கி,  

கடமையுணர்ச்சி மிக்க ஒரு மகனாய்,           

பொறுப்புணர்ச்சி மிக்க ஒரு தலைவனாய் திமுக விற்கு நின்று கலைஞர் சமாளித்து தன் தந்தையை சாவிலும் வெல்ல வைத்தது ஸ்டாலின்.

அப்படிப்பட்ட ஸ்டாலின்  இருக்கும் போதே,

ஐம்பதாண்டு காலமாக அரசியலில் இருக்கும்போதே,

கொஞ்சமும் கூச்சப்படாமல், நாக்கில் நரம்பில்லாமல்,

"தமிழ்நாட்டில் தலைவருக்கான வெற்றிடம் இருக்கிறது" என்று கூவுகூவென்று கூவினார்கள்.  சூப்பர்_ஸ்டார் ல் இருந்து நண்டுசிண்டுவரை எல்லோரும் கூவினார்கள்.

ஸ்டாலின் பதில் எதுவும் சொல்லவில்லை.

வட இந்திய தலைவர்கள் எல்லாம் கூட்டணிக் கணக்கில் தோற்றார்கள்.

சுயநலத்தால் வீழ்ந்தார்கள். 

தென்னாட்டில் இருந்து ஸ்டாலின், "ஒற்றுமையாக இல்லையென்றால் பாஜக வுக்கே பலம்" என்றார்.  யாரும் கேட்கவில்லை. 

ஆனால் ஸ்டாலின் முடிவு செய்தார்.

பிரதமர் வேட்பாளர் என ஒருவரை நிறுத்தவில்லை என்றால் தமிழ்நாட்டு மக்கள் குழம்புவார்கள் என்பதால் காங்கிரஸ் கூட அறிவிக்கும் முன் ராகுல் ஐ பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தார். 

அதிகப்பிரசங்கித்தனம் என்றார்கள்.

அவசரப்படுகிறார் ஸ்டாலின் என்றார்கள்.

ஸ்டாலின் பதில் எதுவும் சொல்லவில்லை.

நாடாளுமன்ற தேர்தல் முடிவு வந்தது.

39 இடங்களில் மாபெரும் வெற்றி.

திமுக வுக்கு மட்டுமல்லாமல் அகில இந்திய அளவில் எம்பிக்களை தேத்த முடியாமல் கஷ்டப்பட்ட காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகள் க்கும் கூட எம்.பிக்களை பெற்றுத் தந்தார். 

ஆனாலும் நாங்கள் தலைவர் என ஒப்புக்கொள்வோமா என்ன.?

அவ்வளவு ஈசியா அது.? அதிமுக என்றால் ஐஸ் பக்கெட் சேலஞ்ச்.

திமுக என்றால் ஃபயர் பக்கெட் சேலஞ்ச் அல்லவா.?

மீண்டும் சொன்னார்கள், 

தமிழகத்தில் வெற்றிடம் "உண்டு உண்டு உண்டு" என்று.

ஸ்டாலின் பதில் எதுவும் சொல்லவில்லை. 

திமுக தலைவரான முதல் நாளே என்ன சொன்னார் ஸ்டாலின்.?

"எனக்கு கலைஞர் ஐ போல் பேச தெரியாது. ஆனால் எனக்கு உழைக்கத் தெரியும்..என் சக்திக்கு மீறி உழைக்கிறேன்" என்றார்.

தன் பலம் எது என அறிந்திருந்தார்.

ஆனால் திமுக என்றால்,

குயில் கர்ஜிக்க வேண்டும், சிங்கம் பாட வேண்டும் என எதிர்பார்க்கும் உலகம் அல்லவா இது.?

பேசவே வரவில்லை. உளறுகிறார்.

தத்தி என என்னென்னவோ சொன்னார்கள்.

இதில் உச்சக்கட்ட கொடுமை என்னவென்றால், மூளைச்சலவை செய்யப்பட்ட சூத்திரர்கள் பார்ப்பனர்களோடு சேர்ந்துக் கொண்டு,

சுடலை என்பது நம் காவல் தெய்வம் என அறியாமல் அதை கேலி வார்த்தையாகப் பேசினார்கள்.

எத்தனை குதூகலம் அவர்களுக்கு.

இலவு காத்த கிளி என்றார்கள்.

இதில் உச்சக்கட்டம், நேற்று பெய்த மழையில், இன்று முளைத்த கட்சித் தலைவர் கம் நடிகர் ஒருவர்,

"கலைஞரை அவமானப்படுத்த வேண்டும் என்றால் #ஸ்டாலின் எனச் சொன்னால் போதும்" என்றார்.

அந்தப் பெருமைக்குச் சொந்தக்காரர் கமல்

(தோல்விக்குப்பின் அவருக்குப் புரிந்திருக்கும் அரசியல் என்ன என்பது.?)

அந்த அளவுக்கு ஒரே நோக்கத்தோடு வேலை செய்தார்கள் எதிரிகள்.

ராகுல் ஐ பப்பு என வட இந்திய மக்கள் மனதில் பதிய வைத்ததைப் போல, தமிழ்நாட்டில் ஸ்டாலின் ஐ பதிய வைத்து விட மாட்டோமா எனத் துடித்தார்கள்.

அதற்காகவே "தீயாக" வேலை செய்தார்கள்.

ஸ்டாலின் பதில் எதுவும் சொல்லவில்லை.

இதெல்லாம் பத்தாதென்று சைக்கலாஜிக்கல் ஆயுதம் ஒன்றை கையில் எடுத்தார்கள். 

ஸ்டாலின் ஜாதகத்தில் முதல்வர் யோகம் இல்லை என்பதுதான் அது.!

"என்ன ஒரு எச்சைத்தனமான யோசனை.?"

Hராஜா, SVசேகர், குட்கா விஜயபாஸ்கர், எடுபிடி எடப்பாடி என அத்தனைப் பேரும் மீண்டும் மீண்டும் இதைச் சொன்னார்கள்.

ஏன் இதை ஒப்பாரியாகவே பாடினார்கள் எல்லா இடங்களிலும்.

இதனால் கலங்கிப் போன ஜோசிய நம்பிக்கையுள்ள திமுக வினர் பலரையும்,

இதை நம்பி மமதையில் ஆடிய #அதிமுக வினர் பலரையும் கூட எனக்குத் தெரியும்.

"சுருக்கமாகச் சொன்னால் அடிமைகளுக்கு மற்றும் சங்கிகளுக்கு இதை லைத்து ஒரே கொண்டாட்டம்.!"

ஸ்டாலின் பதில் எதுவும் சொல்லவில்லை.

கொரோனா வந்தது.

அரசுக்கு முன் மக்களுக்கு உதவக் கிளம்பினார்.

நாங்களெல்லாம் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பதைத்தோம்.

"அவரை எங்கயும் போக சொல்லாதீங்க ப்ளீஸ்," என உரிமையோடு உதயநிதி வரை சொல்லிப்பார்த்தோம்.

ஆனால் ஸ்டாலின் செய்தது என்ன.?

'ஒன்றிணைவோம்_வா' என்ற பெயரில் உதவுவதற்காகவே ஒரு நிழல் அரசாங்கதை நடத்தினார். 

தன் உயிருக்கு உயிரான களத்தளபதியை பலிகொடுத்து உள்ளம் உடைந்தார்.

ஆட்சியும் அதிகாரமும் இருந்தும் யாருக்கும் உதவாத உதவாக்கரை நாய்கள் பலவும் ஏளனம் செய்தன.

பழிபோட்டன.

அப்போதும் வன்மம் கக்கின.

ஸ்டாலின் பதில் எதுவும் சொல்லவில்லை.

தேர்தல் வந்தது.

உழைத்தார். உழைத்தார். உழைத்தார்.

திட்டம் தீட்டினார். கூட்டணி பிரித்தார். தொகுதி வகுத்தார். கணக்குப் போட்டார்.

"நம்மை எளிதாக ஜெயிக்க விட மாட்டார்கள்" எனத் தொண்டர்களுக்கு எச்சரிக்கை மணி அடித்தார்.

எதிலும் உதாசீனம் இல்லை.

எதையும் லேசாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஒரு நொடியும் ஓய்வில்லை. 

இளைஞர்களே வெட்கப்படும் அளவிற்கு உழைத்தார்.

தேர்தல் முடிந்தது.

முடிவு வந்தது. 

ஸ்டாலின் பதில் சொன்னார், 

"முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்...."

சொல்லி விட்டு ஒரு நொடி நிமிர்ந்து பார்த்தார்.

சிலர் பதில்களைச் சொல்லிக் காட்டுவதில்லை.!

செய்துக் காட்டுகிறார்கள்.!


வாழ்க எங்கள் முதல்வர் முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்
வாழ்க எங்கள் தமிழ்நாடு


- நன்றி:  திரு. டான் அசோக்


"நினைத்ததை முடிக்கும் வரை சிலர் பேசுவார்கள்.

சிலர் பேசாமலேயே ஜெயிப்பார்கள்.?"


சனி, 1 மே, 2021

பாஜக ஆட்சி அதிகாரத்தில் அமர உதவியோர் பெற்ற பதவிகள்

 தேச பக்தர்களால் தேச நலனுக்காக பா.ஜ.க

பாஜக ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்த பின்பு  மோடி மற்றும் அமித் ஷா-வுக்காக வேலை செய்தவர்களுக்கு அரசால் வழங்கப்பட்ட பதவிகள்.. 

அதிகார வர்க்கத்தில் அமர்ந்து கொண்டு உதவிய ஒவ்வொருவரும் அரசாங்கத்தின் முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டனர். அது பற்றிய சிறிய தொகுப்பு.

1. YC .மோடி :


YC .மோடி : 69 பேர் கொல்லப்பட்ட குல்பர்க் சொசைட்டி படுகொலையில் 2002 ஆண்டில் நரேந்திர மோடிக்கு நற்சான்றிதழ் கொடுத்தவர்.2019 ஜனவரியில் அலோக் சின்ஹா ​​ஓய்வு பெற்ற பின்னர் சிபிஐ தலைவராக நியமிக்கப்பட முன்னணியில் இருந்தார்.

2. ஆர்.கே.ராகவன் :

ஆர்.கே.ராகவன் : 2002 ஆம் ஆண்டு SIT தலைவராக இருந்தபோது குஜராத் கலவர வழக்கில் மோடிக்கு நற்சான்றிதழ் கொடுத்தவர்.பின்னர் சைப்ரஸில் இந்திய தூதராக நியமிக்கப்பட்டார்

3. மவுலிக் நானாவதி  
                                         

மவுலிக் நானாவதி : 2002 குஜராத் கலவரங்களை விசாரித்த நானாவதி ஆணையத்தின் தலைவரான ஜி.டி.நனாவதியின் மகன்.நரேந்திர மோடி அரசின் உயர்நீதிமன்றம்,உச்சநீமன்ற பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.

4. தலைமை நீதிபதி சதாசிவம்
 
உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி சதாசிவம் : கேரள ஆளுநராக நியமிக்கப்பட்டார். சோஹ்ராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கில் அமித் ஷாவுக்கு எதிரான இரண்டாவது எஃப்.ஐ.ஆரை ரத்து செய்த சிறிது காலத்தில் கவர்னராக நியமிக்கபபட்டார்.

5. உதய் யு லலித் 

 உதய் யு லலித் : துளசி பிரஜாபதி என்கவுன்டர் வழக்கில் தொடர்பான அமித் ஷா சார்பாக பிரதிநிதித்துவப்படுத்திய மூத்த வழக்கறிஞர்.அடுத்து உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

6. ஒய்.சி மோடி

ஒய்.சி மோடி; ஹரேன் பாண்டியாவின் கொலை வழக்கை விசாரித்தவர்.NIA தலைவராக நியமிக்கப்பட்டார்.

7.நீதிபதி அக்‌ஷய் மேத்தா :

நீதிபதி அக்‌ஷய் மேத்தா : 2002 குஜராத் படுகொலைகள் கலவர வழக்கில் அமைச்சர் பாபு பஜ்ரங்கிக்கு ஜாமீன் வழங்கியவர். நானாவதி-மேத்தா ஆணையத்தில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அதே கமிஷன் பின்னர் 2002 கலக வழக்கில் மோடிக்கு நற்சான்றிதழ் கொடுத்தது.

8.ராகேஷ் அஸ்தானா  


ராகேஷ் அஸ்தானா : கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை  விசாரித்தவர். ரயிலில் ஏற்பட்ட தீ விபத்துக்கு பின்னால் மோடி அரசின் நிலைப்பாட்டை அங்கீகரித்தவர், பின்னர் சிபிஐ தலைவராக நியமிக்கப்பட்டார்

9.துஷர் மேத்தா



துஷர் மேத்தா : 2002 குஜராத் கலவரம் மற்றும் ஆவணங்களை கசியவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்.மத்திய அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.


10.ஆர்.கே.எஸ் பதவுரியா 



ஆர்.கே.எஸ் பதவுரியா : ரஃபேல் போர் விமான பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை தாங்கியவர்.

ரஃபேல் ஒப்பந்தத்தில் பங்கு பெற்று  - ஏர் மார்ஷல் இருந்து புதிய ஐ.ஏ.எஃப் தலைவராக நியமிக்கப்பட்டார்.


11. எஸ்.வி.ராஜு 



எஸ்.வி.ராஜு : சோஹ்ராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் அமித் ஷாவின் வழக்கறிஞர்.இந்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.

12. ஜி.சி முர்மு



ஜி.சி முர்மு : 1985 குஜராத்-கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரி, 2002 கலவர விசாரணையை கட்டிப்படுத்தி, இஸ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கை மூடிமறைக்கவும் மோடி & அமித் ஷாவுக்கு உதவியவர், இந்தியாவின் தலைமை தணிக்கையாளராக (Chief Auditor Gen of India) நியமிக்கப்பட்டார்.


13. ரஞ்சன் கோகாய்



ரஞ்சன் கோகாய் : ரஃபேல் ஊழலில் மோடிக்கு கிளீன் சிட் கொடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி.ஓய்வு பெற்ற சில மாதங்களுக்குப் பிறகு, மாநிலங்களவை எம்பி பதவி வழங்கப்பட்டது.


2005 ஆம் ஆண்டிலிருந்தே மோடியை டில்லிக்கு நகர்த்த தேவையான வேலைகளுக்கு அடித்தளம் போட்டுவிட்டார்கள். இதில் காங்கிரஸில் இரண்டாம் மட்டத் தலைவர்கள் அதிகம் கைகொடுத்துள்ளனர். முக்கியமாக பார்ப்பனர்கள் 
காங்கிரசின் நம்பிக்கையான தலைவர்களான சரத்பவார் உள்ளிட்ட சில கட்சியை விட்டுப் பிரிந்ததால் காங்கிரஸில் உள்ள ஆர்.எஸ்.எஸ் ஸ்லிப்பர் செல்கள் 
தங்களின் வேலையை துவங்கி 2014 மோடியை அமரவைப்பதில் இருந்து வடமாநிலங்களில் காங்கிரஸை ஒன்றுமில்லாமல் ஆக்குவதை அவர்கள் உள்ளூர வேலைபார்த்தனர், பார்த்துகொண்டு இருக்கின்றனர்.

Thanks to Shafeeq@shafeeqkwt




 

ஞாயிறு, 7 மார்ச், 2021

எவனும் கேட்க மாட்டான்

எவனும் கேட்க மாட்டான்



தமிழ்நாட்டுல அதிமுக காரனா வாழ்வது ரொம்ப சுலபம் !

1965 ல் அண்ணா தலைமையிலான இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் MGR ஏன் போராடவில்லை தமிழகமே திரண்டு போராடும் போதும் பலர் தூப்பாக்கிச்சூட்டில் செத்த போதும் உங்க MGR மட்டும் ஆயிரத்தில் ஒருவன் (1965), உங்கள் வீட்டு பிள்ளை (1965), கலங்கரைவிளக்கம் (1965), கண்ணிதாய் (1965), பணம் படைத்தவன் (1965), தாழம்பூ (1965), என தமிழக மக்களை பற்றியோ கலவரத்தில் செத்தவர்களை பற்றியோ கவலை படாமல் ஆறு படங்கள் நடித்து படப்பிடிப்பே கதியென கிடந்தது ஏன்னு எவனும் கேட்கமாட்டான்.

பொருளாளர் தானே கணக்கு வச்சிருப்பாரு MGR பொருளாளராச்சே அவர் ஏன் கலைஞர் கிட்ட கணக்கு கேட்டார் அப்படின்னா அது இந்திரா தூண்டுதலில் நடந்த நாடகம்தானேன்னு யாரும் கேட்க மாட்டாங்க.

கச்சத்தீவை இந்திராகாந்தி கொடுக்கும் கலைஞர் எதிர்த்து போராடினாரே MGR அதை எதிர்த்து ஏன் ஒரு அறிக்கை கொடுக்கவில்லை மூச்சுகூட விடவில்லையே, நேற்று இன்று நாளை (12.07.1974)  124. உரிமைக்குரல் (07.10.1974)  125. சிரித்து வாழ வேண்டும் (30.11.1974) என்று லதாவோடு டுயட்டுதானே பாடிக்கொண்டு சுற்றினார் என்று எவனும் கேட்கமாட்டானுங்க.

மின்சார கட்டணத்தை குறைத்து கேட்ட விவசாயிகளை துப்பாக்கிச்சூடு நடத்தி கொன்றாரே எம்ஜிஆருன்னு எவனும் கேட்க மாட்டான்

எம்ஜிஆர் மீது கேரளாவுக்கு எரிசாராயம் கடத்தியதில் ரே என்ற விசாரனை கமிஷனின் விசாரனை நடந்ததாமே என்று எவனும் கேட்க மாட்டான்.

அமைதியாக நடந்த 89 சட்டமன்றத்தில் முதல்வர் கலைஞர் பட்ஜெட்டை படித்துக்கொண்டிருந்த போது ஏற்கனவே போட்ட திட்டப்படி "டோன்ட் ரீட், யூ கிரிமினல் டோன்ட் ரீட்" என்று குரல் கொடுத்து கிரிமினல் முதல்வர் இவர் குத்துங்கடா என்று சண்டையை தொடங்கி வைத்து கலைஞர் கையில் இருந்த பட்ஜெட் பேப்பரை பிடுங்கி வீசி அவரது மூக்கு கண்ணாடியை பிடுங்கி வீசி திட்டமிட்ட படி தனக்குதானே சேலையை கிழித்துக்கொண்டு வெளியே வந்து மொத்த பழியையும் திமுக மேல் போட்டீங்களேன்னு எவனும் கேட்க மாட்டான்.

ராஜீவ்காந்தி மரணமடைந்த ஸ்ரீபெரும்புதூர் மீட்டிங்கில் கூட்டணி கட்சி தலைவரான ஜெயலலிதாவும் தோழி சசியும் ஏன் கலந்துகொள்ளவில்லை என்று எவனும் கேட்கமாட்டான்.

ஜெ வாங்கிய ஒரு ரூபாய் சம்பளத்தில 900 ஏக்கர் கொடநாட்டு பங்களா வாங்க முடியுமான்னு எவனும் கேட்க மாட்டான், கங்கை அமரனை மிரட்டி பையனூர் பங்களாவை வாங்கியதை எவனும் கேட்கமாட்டான்.

சந்திரலேகா என்ற கலெக்டர் முகத்திலயே ஆசிட் வீசிட்டீங்களேடான்னு எவனும் கேட்டு பொங்க மாட்டான்.

ஏழு கழுதை வயசுல மகனை தத்தெடுத்து 100 கோடியில கல்யாணம் பன்ன காசு ஏது? ஜெவை விட அதிக சம்பளம் வாங்கிய நடிகைள் யாரும் இத்தனை செலவில் திருமணம் பன்னலையேன்னு கேட்கமாட்டான்.

அந்த கல்யாணத்தால பாலு ஜுவல்லரின்னு ஒரு கடையையே அழிச்சி ஓனரை கொன்னுட்டீங்களேன்னு கேட்க மாட்டான்.

டான்சி நிலத்தை வாங்கிட்டு கையும் களவுமா பிடிபட்ட பிறகு அது என் கையெழுத்தே இல்லைன்னு ஜெயலலிதா ஏன் பல்டி அடித்தார்னு எவனும் கேட்கமாட்டான்.

மகாமகத்தில் 100 பேர் சாக காரணமா இருந்தது ஜெயலலிதா தானேன்னு எவனும் கேட்க மாட்டான்.

தாலிக்கு தங்கம் தறேன்னு சொல்லிட்டு தாலியை அறுக்க மிடாஸ் நடத்தி மொத்த கொள்முதலும் மிடாசிலேயே செய்தாரே இவரா புரட்சிதலைவின்னு எவனும் கேட்க மாட்டான்.

சாகுறதுக்கு இரண்டு வருசத்துக்கு முன்பு கூட 1000 கோடி ரூபாய்க்கு வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் 11 திரையரங்குகளை கொண்ட ஜாஸ் சினிமா வளாகத்தை வாங்கிட்டு செத்திருக்காரேன்னு எவனும் கேட்க மாட்டான்.

சொத்துக்குவிப்பு வழக்குல தண்டனை பெற்றவருக்கு 80 கோடி ரூபாய் மக்கள் பணத்தில சமாதி கட்டலாமா இது நியாயமான்னு எவனும் கேட்க மாட்டான்.

ஜெயலலிதா நடிப்பு தொழிலை விடும்போது ஐதராபாத் திராட்சை தோட்டமும் போயஸ் தோட்ட வீடும்தானே இருந்தது சசிகலாவுக்கு. அதுகூட இல்லையே பிறகு எப்படி 2017 ம் ஆண்டு மத்திய அமலாக்கதுறை 190 இடங்களில் ரெய்டு நடத்தும் அளவுக்கு சொத்துக்கள் வந்தது என்று எவனும் கேட்க மாட்டான்.

கலைஞர் சமாதியில தயிர்வடை படைத்ததை முதல் பக்கத்தில் எழுதுகிற பத்திரிக்கை கூட ஜெயலலிதா மர்மமான முறையில் இறந்த அப்போல்லோ ஆஸ்பத்திரி CCTV கேமராக்களை யார் அகற்றினார்கள் என்று கேட்க மாட்டான்.

மூன்று கன்டைனரில் பிடிபட்ட 570 கோடி பணம் ஜெயலலிதாவுதுன்னு தெரிந்தும் கூட பணம் எப்படி வந்ததுன்னு கேட்டு எழுதமாட்டான்.

கொடநாட்டு கொள்ளை மற்றும் தொடர் கொலைகளில் எடப்பாடிக்கு உள்ள தொடர்புகளை பற்றி எவனும் கேள்வி கேட்கமாட்டான.

மூன்று கல்லூரி மாணவிகளை எரித்துக்கொன்ற அதிமுக கயவர்களை இப்படி அநியாயமாக எம்ஜிஆர் பிறந்தநாளில் விடுதலை செய்றீங்களேன்னு எவனும் பொங்க மாட்டான்

அதிமுகவின் அத்தனை மந்திரிகள் மீதும் ஊழல் புகார் இருந்தாலும் அதைபற்றி யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள்.

இதேபோல இன்னும் எழுத அதிமுகவின் ஆயிரக்கணக்கான ஊழல்களும் வன்முறைகளும் உள்ளது ஆனாலும் அதிமுகவை யாரும் கேள்வியே கேட்கமாட்டார்கள்.

இதுவே திமுககாரனா வாழ்வது ரொம்ப ரொம்ப கஷ்டம், எங்கோ எவனோ ஒரு தொண்டன் பிரியாணி கடையில தகராறு செய்தாலும் அதற்கு பதில் திமுக தலைமையே சொல்லியாகனும்?


- Jagan in Tweeter

தமிழ்நாட்டுல அதிமுக காரனா வாழ்வது ரொம்ப சுலபம் !




வியாழன், 18 பிப்ரவரி, 2021

திமுகவை ஆதரிப்பது என்பது ஒரு நன்றிக்கடன்

திமுகவை ஆதரிப்பது என்பது பதவிக்காகவோ, பணத்துக்காகவோ அல்ல. அது ஒரு நன்றிக்கடன்! 

திமுக மீது எவ்வளவு அவதூறை, வன்மத்தை இன்றைய இளைஞர்களிடம் பரப்பி இருக்கிறார்கள் என்பதற்கு இந்த தம்பியின் புரிதல் ஒரு உதாரணம்! 

பெரியார் ஏன் சிறந்தவர், காமராசர் ஏன் சிறந்தவர் என்பது மக்களுக்கு எளிதில் புரிந்து விடும். ஏனெனில், அவர்கள் மக்களுக்காக வாழ்ந்தார்கள் என்பதை திரும்பத்திரும்ப பேசியும், சொல்லியும், எழுதியும் வருகிறோம். 

ஆனால், அண்ணா ஏன் சிறந்தவர்? கலைஞர் ஏன் சிறந்தவர்?என அதிகம் பேசுவதில்லை. ஏனென்றால்,அவர்கள் மக்களை அதிகாரம் பக்கம் திருப்பினார்கள். பொருளாதார சுதந்திரம் தந்தார்கள். ஆகையால், திமுக என்றால் பணம், பதவி, அதிகாரம் தான் என்ற பிம்பம் ஏற்பட்டுவிட்டது. அதை தவிர்க்கவும் முடியாது. திமுக என்றால் வெறும் ஊழல் கட்சி மட்டும் தான் என்ற சங்கிகளின் தொடர் பரப்புரை வென்றதும் இப்படித்தான்! 

இங்கே இன்னொரு முரண் என்னவென்றால், சங்கிகள் எந்தளவுக்கு திமுகவை வெறுக்கிறார்களோ, அதே அளவுக்கு தங்களை புரட்சியாளர்கள் என்று கருதிக்கொள்ளும் தோழர்கள் சிலரும் வெறுப்பது தான்! 

சங்கிகள் திமுகவை எதிர்ப்பது மிக சிப்பிள் லாஜிக். சங்கிகள் திமுகவை தங்கள் கொள்கையின் நேரடி எதிரியாக பார்க்கிறார்கள்.

இயற்கையை காப்போம் என ஒரு பக்கம் நம்மை பேசவிட்டு அவர்கள் நீட், ஐஏஎஸ் என நம் மக்களின் உயர்வை அழிக்க வருகிறார்கள்.

இதில், தோழர்கள் திமுகவிடம் முரண்படுவதை புரிந்துக்கொள்வது கொஞ்சம் சிக்கலானது.

சில பெரியாரியர்கள், திமுக பெரியாரியத்தை நீர்த்துப்போகச் செய்கிறது என குற்றம் சாட்டுவார்கள். 

சில தமிழ்தேசியர்கள், அண்ணா, திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டது கொள்கை சமரசம் என்பார்கள். 

சில தலித்தியவாதிகள் திமுக சூத்திரர்களின் கட்சி என சொல்லுவார்கள்.

சில பொதுவுடமை தோழர்கள், திமுக முதலாளிகளின் கட்சி என்பார்கள். 

மேலோட்டமாக பார்த்தால், இதில் எல்லாமே உண்மை இருப்பது போலத்தான் இருக்கும். உண்மை இல்லாமலும் இல்லை. 

ஆனால், திமுக திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டு, மாநில சுயாட்சியை கையில் எடுத்தது.

திமுக பெரியாரின் இயக்க அரசியல் பாதையை கைவிட்டு, தேர்தல் அரசியலை கையில் எடுத்தது. புரட்சிப்பாதையை கைவிட்டு மக்களாட்சி பாதையை தொடர்ந்தது. 

சூத்திரர்களின் ஆட்சி என சொல்லப்படும் ஆட்சியில் தான் இந்தியாவிலேயே அதிகமான இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டது.

கட்சியிலும் இடஒதுக்கீட்டை கொண்டு வந்தது திமுக. இசைவேளாளர் எனும் மிகவும். ஒடுக்கப்பட்ட ஆள் பலமில்லாத சாதியை சேர்ந்த கலைஞர் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்ததே சமூகநீதியின் வெற்றி தான். பறையர்களின் கட்சி என்று பேர் வாங்கிய கட்சியான திமுக, இன்று பறையர்களுக்கு கருணாநிதியின் துரோகம் என்று புத்தகம் வெளியிடும் கட்டத்தில் இருப்பதன் பின்னனியை ஆராயவேண்டும்! 

ஐடி கம்பெனிகள், கார்ப்பரெட் கம்பெனிகளை கொண்டு வந்த அதே திமுக தான், ஒரு ரூபாய் அரிசியில்  இருந்து இலவச மருத்துவ காப்பீடு வரை சோசியலிச பாதையில் பயணித்ததும் திமுக தான்! 

பார்பனர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்த காலத்தில் பார்பனிய ஆதிக்கத்தை எதிர்த்தும், அதற்கு எதிரான பண்பாட்டை நிறுவியவர்கள் பலர் இருந்தார்கள். அவர்களின் பெயர் சிரமணர்கள். அதாவது, சிரமமான பாதையான கடும்தவம், புலால் மறுப்பு, துறவு வாழ்க்கை என்று வாழ்ந்தார்கள். கௌத்தம புத்தர் தனது ஆரம்ப காலத்தில் இந்த கடுந்தவ வாழ்க்கையை தான் வாழ்ந்தார். பிறகு, தன்னை உணர்ந்த போதி நிலையை அடைந்த பின், புத்தர் தனது பாதையை “மஜ்ஜிம பதிபாதம்” என்ற நடுநிலை பாதைக்கு மாறினார். அதாவது, கடும் தவம் தேவையில்லை. ஒரு எளிய மனிதனும் பின்பற்றும் வகையில் பௌத்தத்தை உருவாக்கினார். அதே வேளையில், தனது

அடிப்படை கொள்கையான பகுத்தறிவு, உயிர் நேயம், அறம் சார்ந்த வாழ்வியல் என்பதிலும்..மானுட வாழ்வில் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை பரப்புவதிலும் எவ்வித சமரசமும் செய்யவில்லை. இன்று உலகெங்கும் பௌத்தம் பரவி வாழ்வதற்கு இந்த நடுநிலை பாதையும் ஒரு காரணம் என நினைக்கிறேன்.

திமுகவின் பாதையும் ஒரு வகையில் இந்த நடுநிலைபாதை தான். அது தான் தேர்தல் பாதை. மக்களாட்சி என்கிற ஜனநாயக பாதை. ஆனால், அது சென்று சேரும் இடம் புத்தம் - பெரியாரியம்- அம்பேத்கரியம் காட்டிய  சுதந்திரம் - சமத்துவம் - சகோதரத்துவமாக தான் இருக்கும்! 


- ராஜராஜன் ஆர்.ஜெ


வெள்ளி, 12 பிப்ரவரி, 2021

தகவல் தொழில்நுட்பத் துறை முன்னோடி கலைஞர்

தகவல் தொழில்நுட்பத் துறை முன்னோடி டாக்டர் கலைஞர் 

*இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையில் 65% ஊழியர்கள் ATT என்று அழைக்கப்படுவார்கள். 

*ATT என்றால் Andra, Telangana and Tamil Nadu.

*TN = "Social + Economical" Development = Kalaignar's Work.

*இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறை வளர அடிகோலியது கலைஞர் என்றால் மிகையல்ல.


*இந்தியாவிலேயே தகவல் தொழில்நுட்பத் துறையில் தனி முத்திரை பதித்தது கலைஞர் தலைமையிலான தி.மு.க அரசு தான்.


*05-10-1998 இல் தகவல் தொழிற்நுட்பத்துக்கென்றே சென்னை தலைமைச் செயலகத்தில் தனியே துறை தி.மு.க ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டு ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் செயல்படத் தொடங்கியது.

*தமிழ்நாட்டை தொடர்ந்து ஆந்திராவில் சந்திரபாபு பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்தார் .


*கலைஞர் முதல் நபராக கணினி வளர்ச்சி திட்ட செயல்பாடுகளை செய்தது இன்று நாம் பொருளாதாரத்திலும் பல மடங்கு முன்னேறி உள்ளோம்.

*இந்தியாவிலேயே முதல் முறையாக தகவல் தொழிற்நுட்பத்துக்கென்று தனிக் கொள்கை (I.T.Policy) ஒன்றும் தி.மு.க ஆட்சியில் உருவாக்கப்பட்டது. 


*இக்கொள்கை தகவல் தொழிற்நுட்பத் தொழில் முனைவோர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

*இந்தியாவிலேயே தகவல் தொழிற்நுட்ப வளர்ச்சிக்கென தனிக் கொள்கை உருவாக்கி அறிவித்த முதல் மாநிலமும் தமிழ்நாடுதான்.


*இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக எண்ணிக்கையிலான மென்பொருள் பொறியியல் வல்லுநர்கள் வேலை செய்து வருகிறார்கள்.

*2000 ஆம் ஆண்டிலேயே தமிழகம் இந்த நிலையை எட்டிவிட்டது தி.மு.க அரசின் சிறப்பான செயல்பாடுகளே இதற்குக் காரணம்.


*1998 செப்டம்பர் வரை சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் 21,371 பேருக்கு விசா வழங்கியது.

*இதே காலகட்டத்தில் மும்பை தூதரகம் 9,734 பேருக்கும், புதுதில்லி தூதரகம், 5,460 பேருக்கும், கொல்கத்தா தூதரகம் 1,367 பேருக்கும் விசாக்களை வழங்கின. 


*விசா பெற்றோரில் பெரும்பாலானோர் மென்பொருள் பட்டதாரிகள்.


*இது, மற்ற மாநிலங்களைவிடத் தமிழகத்தில் இருந்துதான் அதிகம் பேர் அமெரிக்காவில் வேலைவாய்ப்பு கிடைத்து செல்கின்றனர் என்பதை எடுத்துக் காட்டியது.


*2000 ஆம் ஆண்டு கழக ஆட்சியின்போது 340 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டைடல் மென் பொருள் பூங்கா சென்னை தரமணியில் உருவாக்கப்பட்டு அன்றைய பிரதமர் வாஜ்பாய் அவர்களால் திறக்கப்பட்டது.


*12 லட்சம் சதுர அடி பரப்பளவுடன், தரை தளம், 12 மேல் தளங்கள், 2 தரைகீழ் தளங்கள் கொண்ட டைடல் பூங்காவில் இருந்து தரை வழியாகவும், செயற்கைக்கோள் வழியாகவும், நுண்ணலைகள் வழியாகவும் செய்திகளை பரிமாறிக் கொள்வதற்கு ஏற்ப வசதிகள் செய்துகொடுக்கப்பட்டன.

*இங்கு, ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது.


*முழுவதும் குளிர்ப்பதனப்படுத்தப்பட்ட டைல் பூங்காவில் மின்சாரத்தை சிக்கனப்படுத்துவதற்காக இந்தியாவிலேயே முதல் முறையாக “Thermal Energy Storage System” அறிமுகம் செய்யப்பட்டது.

*அப்போது இந்த “மின்தொகுப்பு முறை” உலகிலேயே மூன்றாவது பெரியது அமைப்பாக விளங்கியது.


*இதே போல் பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள சிறுசேரியில் 1000 ஏக்கர் பரப்பளவில் பன்னாட்டுத் தரத்தினாலான பெரிய வன்பொருள் மற்றும் மென்பொருள் தொழிற்நுட்பப் பூங்கா ஒன்றை சிப்காட் நிறுவனம் உருவாக்கியது.

*இதன் மூலம் டைடல் பூங்கா அமைந்துள்ள சென்னை தரமணியிலிருந்து பழைய மாமல்லபுரச் சாலை, தமிழகத்தின் தகவல் தொழில்நுட்ப நெடுஞ்சாலையாக உயர்வு பெற்றது.


*இந்தச் சாலையில் பல்வேறு மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களுடைய மென்பொருள் தொழிற்சாலைகளை கழக ஆட்சிட்யின்போதே நிறுவின.

*சோழிங்கநல்லூரில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (T.C.S) நிறுவனம், ஆசியாவின் மிகப் பெரிய மென்பொருள் மையத்தை தொடங்கியது. அதைத் தொடர்ந்து மற்ற மிகப் பெரிய நிறுவனங்களான விப்ரோ, இன்ஃபோசிஸ் மற்றும் போலாரிஸ் ஆகிய நிறுவனங்களும் தங்களது மையங்களை இப்பகுதியில் நிறுவின.

*இங்கிலாந்திலுள்ள World Tel நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டுள்ள கூட்டுத் தொழில் முயற்சியின் காரணமாக, தமிழகம் முழுவதும் கழக ஆட்சியின்போது 13,000 சமுதாய இணைய மையங்களை அமைக்கப்பட்டன. 


*இதன் மூலம் ஏறத்தாழ 1 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது.

*கணினியைப் பயன்படுத்தி நெடுந்தொலைவுக்கு அப்பால் வெளிநாடுகளில் உள்ள மருத்துவ வல்லுநர்களிடமிருந்து அறிவுரை மற்றும் வழிகாட்டுதலுடன், நவீன மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு Tele Medicine எனப்படும் தொலைத் தொடர்பு வழி மருத்துவ வசதியும் கழக ஆட்சியின்போதுதான் தமிழ்நாட்டில் ஏற்படுத்தப்பட்டது.

*இதன் மூலம், சென்னை மாநகரம் மருத்துவ சுற்றுலா நகரமாக வளர்ச்சியடைந்தது


# கணினி கல்வித் திட்டம் #


*உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் பயன்பெறும் வகையில் முதன்முதலாக தமிழ் இணையப் பல்கலைக் கழகமும் தொடங்கப்பட்டதும் தி.மு.க ஆட்சியில்தான்.

*தற்போது இது, தமிழ் இணையக் கல்விக் கழகம் என்ற பெயருடன் செயல்பட்டு வருகிறது.


*மாநிலம் முழுவதும் உள்ள 1,200 மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12-ம் வகுப்புகளில் கணினியை விருப்பப் பாடமாகக் கற்பிக்கும் திட்டம், 187 கோடியே 66 லட்ச ரூபாய் செலவில் முதலமைச்சர் கலைஞரால் தொடங்கப்பட்டது.

*இதனால் ஒவ்வொரு பள்ளியிலும் 40 மாணவர்கள் என்ற அடிப்படையில் சுமார் 48,000 மாணவர்கள் ஆண்டுதோறும் மென்பொருள் துறையில் வேலை பெறும் வாய்ப்புக்கு தகுதியுடையவர்களாக வெளியே வந்தனர்.

*இத்திட்டம், அரசின் அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகள், வேளாண் மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் ஆகியவற்றுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இதன் மூலம், ஆண்டுதோறும் 60,000 மாணவ மாணவியர் கணினிக் கல்வியிலும் தேர்ச்சி பெற்றனர்.

*பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் அறிமுகம் செய்யப்பட்ட இந்தக் கணினி கல்வித் திட்டம்தான், இந்தியாவிலேயே முதலாவது மிகப்பெரிய திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.


*இத்திட்டத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை 23-04-1999 அன்று தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம், “சமூகநீதிக் காவலனாகப் பாடுபடும் தமிழக அரசு, கிராமப்புற மற்றும் நடுத்தர மக்களிடையே படிக்க வருபவர்களின் நலனில் கவனம் கொள்ளும் என்று நம்பிக்கை கொள்வதாக” தி.மு.க அரசுக்கு பாராட்டுத் தெரிவித்தது.

# அரசுத் துறைகள் கணினிமயம் #


*ஒளிவு மறைவு இல்லாத வெளிப்படையான நடைமுறைகளில் மிகுந்த நம்பிக்கை கொண்ட கலைஞர், அரசு நிர்வாக வழங்கும் சேவைகள், தங்கு தடையின்றி விரைவாகவும், முழுமையாகவும் மக்களைச் சென்று அடைந்திட வேண்டுமென்ற நோக்கத்துடன், அரசுத் துறைகளை கணினிமயமாக்கினார்.

*முதற்கட்டமாக, பதிவுத் துறை, மோடார் வாகனங்கள் துறை, நிலப் பதிவேடுகள் மற்றும் வரைபடங்கள் துறை, விற்பனை வரித் துறை போன்றவற்றைக், கணினிமயமாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.


தகவல் = கலைஞரின் சாதனைகள் பட்டியல்


Thanks to Chocks   @chockshandle

வியாழன், 11 பிப்ரவரி, 2021

பாஜக அனுதாபிகளிடம் சில கேள்விகள்

 பாஜக அனுதாபிகளாகவே இருந்தாலும், இந்த கேள்விகளின் நியாயம் புரியுமென்று நினைக்கிறேன்!


மோடி உலகப் புனிதர் போலவும் பாஜக தான் உலகத்திலேயே மிகவும் யோக்கியர்களின் கட்சி என்பது போலவும் பீத்திக் கொள்பவர்கள் யாரிடமாவது பதில் இருக்கிறதா?
1. எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கப் பயன்பட்ட, பயன்படும் பணம் யாருடைய நேர்மையான சம்பாத்தியம்?

2. ரபேல் கோப்புகள் ஏன் மாயமாகின?

3. பாஜகவை கேள்வி கேட்கும் நீதிபதிகள் மீது மட்டுமே கற்பழிப்புப் புகார்களும் கொலை மிரட்டல்களும் வருவதும், கொலை செய்யப்படுவதும் ஏன்?
3. மோடியை பிரமோட் செய்யப் பயன்படுத்தப்பட்ட 10,000 கோடி பணம் யாருடையது? பிரசாந்த் கிஷோர் சம்பளம் உட்பட. அல்லது பத்தாயிரம் கோடிகளை ஒரு கட்சிக்கு வாரி வழங்கி டொனேஷன்கள் தருமளவு பணக்காரர்கள் ஏன் முன்வந்தார்கள் ?
4. அத்தனை ஊழல்வாதிகளும் பாஜகவில் இணைந்தவுடன் பரிசுத்தமாவது எப்படி?
5. எதிர்க்கட்சிகள் பாஜக மீது குற்றச்சாட்டுக் கூறியவுடன், பாஜக மீது குற்றம் கூறியவர்கள் மீது மட்டும் வருமான வரித்துறை அமலாக்கத்துறை ரெய்டுகள் பாய்ந்து பாய்ந்து நடப்பது ஏன்?
6. பாஜக ஆட்சிக்கு வருவதற்கு மிக முக்கியமான காரணமான 2ஜி வழக்கு ஏன் மேல் முறயீடு செய்யப்படவில்லை? அதை ஜோடித்த வினோத் ராய்க்கு ஓய்வு பெற்ற பின்னர் பாஜக அரசிலேயே பதவி வழங்கியதேன்?
7. வெளிநாடுகளில் பதுக்கியதாகச் சொல்லப்பட்ட பல லட்சம் கோடி கருப்பு பணத்தில் இதுவரை ஏன் ஒரு பைசா கூட மீட்கப்படவில்லையே? குறைந்த பட்சம் கருப்புப் பணம் பதுக்கியவர் பட்டியலைக் கூட வெளியிட முடியவில்லையே... ஏன் ஏன்?
இந்தியாவில் பாதையோரம் கடை வைத்து சுருக்குப்பையில் சில ஆயிரங்களிலிருந்து, சில லட்சங்கள் என்று சேர்த்து வைத்த ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தின் சேமிப்புப் பணங்களை டீமானடைசேஷன் செய்து கள்ளப்பணமாக ஆக்கி வேட்டையாடியது தான் கறுப்புப் பண ஒழிப்பின் லட்சணமா ?
8. பாஜக ஆட்சிக்கு வரும்வரை கருப்புப் பணமாக இருந்தவை, பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் முதலீட்டுப் பணமாக மாறும் மர்மம் என்ன?
10. ஏன் நாட்டின் பாதுகாப்புத் துறை உட்பட அத்தனை துறைகளும் தனியாருக்கு விற்கப்படுகின்றன? ராணுவம் என்பது தேச பாதுகாப்பு சம்பந்தப்பட்டது இல்லையா ?
11. கடந்த தேர்தலில் கைப்பற்றபட்ட 3 கண்டெய்னர் பணம் யாருடையது என்பதை ஏன் வெளிப்படையாக இதுவரை அறிவிக்க முடியவில்லை? பத்திரிக்கைகளில் இவ்வளவு வெட்டவெளிச்சமான கண்டெயினர்களின் கதியே இதுவென்றால் தெரியாமல் கைமாறிய கண்டெயினர்களின் எண்ணிக்கை என்ன?
12. மோடி பல்லாயிரம் கோடி அரசுப் பணத்தை செலவழித்து வெளிநாடுகளுக்குச் செல்வது முதலீடுகளை ஈர்க்கத்தான் என்றால், ஏன் இதுவரை ஒரு பைசா கூட வெளிநாட்டு முதலீடு இந்தியாவிற்கு வரவில்லை?
13. மோடியின் வெளிநாட்டுப் பயணங்களில் அவரோடு செல்லும் தொழிலதிபர்கள் மட்டும் வெளிநாடுகளில் பல லட்சம் கோடிகள் முதலீடு செய்வது எப்படி?
14. மோடியின் வெளிநாட்டுப் பயணம் இந்தியாவிற்கு முதலீடுகளைக் கொண்டு வரவா? அல்லது அவரது நண்பர்கள் மட்டும் வெளிநாடுகளில் முதலீடு செய்ய முகவராகச் செல்கிறாரா?
அவரது நண்பர்கள் உள்நாட்டு இந்திய வங்கிகளில் பல்லாயிரம் கோடிகள் வாங்கி வெளிநாடுகளில் முதல் செய்து, கடனை அடைக்காமல் கைவிட்டு, அதை மோடி அரசு தள்ளுபடி செய்தது எப்படி ? இதே வேலையை  அவரது நண்பர்கள் உள்நாட்டு இந்திய வங்கிகளில் பல்லாயிரம் கோடிகள் வாங்கி வெளிநாடுகளில் முதல் செய்து, கடனை அடைக்காமல் கைவிட்டு, அதை மோடி அரசு தள்ளுபடி செய்தது எப்படி ? இதே வேலையை முந்தைய காங்கிரஸ் அரசும் செய்ததாலா ? காங்கிரஸ் அரசு செய்ததால் மோடி அரசு செய்வதும் நியாயமாகிவிடுமா ?
15. இந்தியாவின் முக்கிய ஊழல்வாதியாக கூறப்பட்டு தண்டனை அனுபவிக்கும் லாலுவின் காலத்தில் நல்ல லாபத்தில் இயங்கிய ரயில்வே, தனியாருக்கு விற்கும் அளவிற்கு நஷ்டம் அடைந்து எப்படி? இன்று ரிலையன்ஸூக்கும், அதானிக்கும் விற்கப்படுவது எப்படி ?
16. பெட்ரோல் மீதான 300 சதவீத இலாபம் அரசுக்கு மட்டுமே என்றால், இன்னமும் 50 சதவீதத்திற்கு மேலான பெட்ரோல் தனியார் வசம் இருப்பது ஏன்? அந்த லாபங்கள் மக்களுக்கு என்னவாக செலவிடப்பட்டிருக்கின்றன ?
17. தேசிய நெடுஞ்சாலைகள் அமைத்து 15 ஆண்டுகள் கடந்த பின்னரும் டோல் கட்டணம் வசூலிக்க தனியாருக்கு தொடர்ந்து அனுமதி வழங்குவது ஏன்? இந்த ஆண்டு கட்டணத்தை உயர்த்தவும் செய்திருக்கிறார்கள். பாஸ்டேக் என்று ஆன்லைன் கொள்ளையடிப்பதை கட்டாயமாக்கியிருக்கிறார்கள். யாரிடம் அனுமதி கேட்டார்கள் ?
18. யாரிடமும் கொடுக்காமல் மிக ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்று பொதுமக்களிடம் உறுதியளிக்கப்பட்டு பெறப்பட்ட ஆதார் தகவல்கள் ரிலையன்சின் ஜியோ நிறுவனத்திற்கு முழுவதுமாக வழங்கப்பட்ட காரணம் என்ன?
19. ஏழை விவசாயிகளுக்கும் மாணவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் கூட தள்ளுபடி செய்யப்படாத கடன்கள், பெருநிறுவனங்களுக்கு மட்டும் பல்லாயிரக் கணக்கான கோடிகள் தள்ளுபடி செய்யப்படுவதன் மர்மம் என்ன?
20. பல்லாயிரம் கோடிகள் உபரிபணம் இருக்கும் எல்ஐசி பங்குகள் தனியாருக்கு விற்கப்படும் காரணம் என்ன? எல்ஐசியில் எந்த விதமான நஷ்டம் ஏற்பட்டது? இதேபோல பல்லாயிரம் கோடி மதிப்புள்ள பொதுத்துறை நிறுவனங்கள் சில நூறு கோடி ரூபாய்களுக்கு தனியாரிடம் விற்கப்படும் மர்மம் என்ன ?
21. மாநிலங்களின் GST பங்குகள் எங்கே மயமானது?

22. கொள்ளையர்கள், ரவுடிகள் தொடர்ந்து பாஜகவில் இணைந்து வருகிறார்களே ஏன் ?ரவுடிகளின், கற்பழிப்பு காவாளிகளின் கடைசி புகலிடம் பாஜகதானா?
இதற்கெல்லாம் பதில் சொல்லிட்டு பின்னர் இரவு நேர போதையில் திமுகவை திட்டுங்கள்,நையாண்டி செய்யுங்கள்..
பாஜக உத்தமர்களின் கட்சி!
பா.ஜ.க 6 வருட ஆட்சி
மேலே உள்ள தகவல்களில் எதாவது ஒன்று தவறாக இருந்தாலும் BJP நண்பர்கள் யாராக இருந்தாலும் சுட்டிக்காட்டலாம்..
–Thanks to Smile Designer @riyazdentist 
In Tweeter


புதன், 20 ஜனவரி, 2021

திமுக ஆட்சியில் கட்டப்பட்ட அணைகள் - 45.

 திமுக ஆட்சியில் கட்டப்பட்ட அணைகள் - 45

சுதந்திரத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில்  கட்டப்பட்ட 90 அணைகளில்,                  50 சதவீதம் அணைகள் திமுகவால் வெறும் 21 ஆண்டுகளில் கட்டப்பட்டவை.

தமிழ்நாட்டின் மொத்த அணைகள் - 115. 

சுதந்திரத்திற்கு முன் கட்டியது - 25. 

அதன் பின்னர் கட்டப்பட்டவை 90.

திமுக ஆட்சியில் கட்டப்பட்ட அணைகள் - 45.

1. தும்பலஹள்ளி அணை

2. சின்னாறு அணை 

3. குண்டேரிப்பள்ளம் அணை 

4. வரட்டுப்பள்ளம் அணை 

5. பாலாறு பொருந்தலாறு அணை 

6. வரதமானதி அணை 

7. வட்டமலைக்கரை ஓடை  அணை

8. பரப்பலாறு அணை

9. பொன்னியாறு அணை

10. மருதாநதி அணை 


11. பிளவுக்கல்(பெரியாறு)

12.பிளவுக்கல்(கோவிலாறு)

13.கடானா அணை 

14.இராமாநதி அணை 

15. கருப்பாநதி அணை  

16. சித்தாறு-1 அணை 

17. சித்தாறு-2 அணை  

18. மேல் நீராறு அணை 

19.கீழ் நீராறு அணை  

20. பெருவாரிப்பள்ளம் அணை

 

21.வீரகனூர் தடுப்பணை(வைகை)

22.பார்த்திபனூர் தடுப்பணை

23.முக்கொம்பு தடுப்பணை

24. மோர்தானா அணை

25. இராஜாதோப்பு அணை 

26.ஆண்டியப்பனூர் ஓடை அணை 

27.குப்பநத்தம் அணை 

28. மிருகண்டா நதி 

29. செண்பகத்தோப்பு 

30.புத்தன் அணை 

31. மாம்பழத்துறையார் அணை 

32. பொய்கை அணை 

33.நல்லாறு அணை 

34.வடக்கு பச்சையாறு அணை  

35. கொடுமுடி அணை 

36. அடவிநயினார் அணை  

37. சாஸ்தாகோவில் அணை

38. இருக்கன்குடி அணை  

39. சென்னம்பட்டி அணை  

40. கிருதமால் அணை 

41. நல்லதங்காள் அணை

42. நங்காஞ்சியார் அணை 

43. வரட்டாறு வள்ளி மதுரை 

44. பச்சைமலை அணை

45.ஆணைவிழுந்தான் ஓடை அணை

சனி, 9 ஜனவரி, 2021

தி.மு.க கறைப்படியாத கட்சியா ?

கேள்வி:

அப்படியென்றால் நீங்கள் தி.மு.க கறைப்படியாத கட்சி என்கிறீர்களா?

பதில்:

கறைப்படியாதக் கட்சி, கறைப்படியாதத் தலைவர், கறைப்படியாத மனிதர் என்பதெல்லாம் என்னைப் பொறுத்தவரை வெறும் மூடநம்பிக்கைதான்.

ஒருநாள் முழுவதும் பயன்படுத்தும் வெள்ளைவேட்டியைக்கூட கறைப்பாடாமல் காப்பாற்றமுடியாது என்கிறப்போது 70 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து இயங்கிவரும் ஒரு மாபெரும் மக்கள் இயக்கம் துளியும் கறைப்பட்டிருக்கவே கூடாது என்கிற எதிர்ப்பார்ப்பே இயங்கியலுக்கு எதிரானது.

ஆனால் 60ஆண்டுகளாக தொடர்ந்து தன்னைத்தானே சலவை செய்துக்கொண்டு இன்றளவும் பார்ப்பனீய ஆதிக்கத்திற்கு எதிரான சமூகநீதிப் போராட்டத்தை எந்தவித சமரசமுமின்றி தி.மு.க தன்னந்தனியாகத் தலைமையேற்று நடத்திக்கொண்டிருக்கிறது என்பதையும் சேர்த்துச் சொல்லவேண்டும்.

அதனால்தான் பார்ப்பனீய அடிவருடிகள் தி.மு.கவை தங்கள் உள்ளத்தின் அடியாழத்திலிருந்து வெறுக்கிறார்கள். அதற்கான விலையாகத்தான் எவ்வித ஆதாரங்களுமற்ற எத்தனையோ பழிகளையும், களங்கங்களையும் தி.மு.க சுமந்துநிற்கிறது.

ஆக, தி.மு.க கறைப்படியாத கட்சியோ இல்லையோ, நம்மை எல்லாம் கரைசேர்த்தக் கட்சி!

  Thanks to  Choks


சமூகமாற்றத்துக்கு திராவிட இயக்கம் தந்த கல்வி, சமூக நலத் திட்டங்கள்

 சமூகமாற்றத்துக்கு திராவிட இயக்கங்கள்                அடித்தளமிட்ட கல்வி, சமூக நலத் திட்டங்கள்


கல்லூரி முதல்வர்கள் எல்லாம் பிராமணர்களாகவே இருந்த நிலையில், பிராமணர் அல்லாத மாணவர் சேர்க்கைக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டிருந்த காலகட்டம் அது;

பனகல் அரசர் என்ன செய்தார்?

ஒவ்வொரு கல்லூரியிலும் மாணவர் சேர்க்கைக்குக் குழுக்கள் அமைக்க உத்தரவிட்டார்.

மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு சம்ஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் எனும் நடைமுறையை நீக்கினார்.

ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் இருந்த மருத்துவத் துறையை இந்தியமயமாக்கிய பெருமையும் நீதிக் கட்சி முதலமைச்சர் பனகல் அரசரையே சேரும்.

சென்னை மாநிலக் கல்லூரி சமஸ்கிருதப் பேராசிரியர் குப்புசாமி சாஸ்திரிக்கு மாதச் சம்பளம் ரூ.300, தமிழ்ப் பேராசிரியர் கா.நமசிவாயனாருக்கு மாதச் சம்பளம் ரூ.81 என்றிருந்தது.                          இந்த பேதம் நீக்கப்பட்டது.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதம் படிப்பதற்குத்தான் வழி இருந்ததே தவிர, தமிழ் படிக்கக் கதவு அடைக்கப்பட்டது.

நீதிக் கட்சிப் பிரமுகர்கள் ஆர்.வெங்கடரத்தினம் நாயுடு, டி.என்.சிவஞானம் பிள்ளை, எஸ்.முத்தையா முதலியார், டாக்டர் ஏ.இலட்சுமணசாமி முதலியார் போன்ற தலைவர்கள் போராடிப் போராடிதான் சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் மொழி கற்பிக்கப்படுவதற்கு வழிவகுத்தனர்.

பிட்டி. தியாகராயர் சென்னை மாநகர மேயராக இருந்தபோதுதான், 1921-ல் பள்ளிகளில் இலவச நண்பகல் உணவு அளித்தார். இதற்காக சென்னை மாநகராட்சிப் பணம் செலவழிப்பதை நகராட்சி சட்டத்தைத் திருத்தி மாகாண அரசே ஏற்றுக்கொண்டது.இதன் காரணமாகப் பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது.

இன்னும் ஒரு குறிப்பிடத் தகுந்த தகவல் உண்டு.இலவச இரவுப் பள்ளிகள் நடத்த முன்வந்தால்,மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்ற நிலைப்பாடுதான் அது பகல் பொழுதில் பணியாற்றச் செல்வோர் இரவில் படிக்கும் ஒரு வாய்ப்புக்குத் கதவைத் திறந்துவிட்டவர் நீதிக் கட்சித் தலைவர் பிட்டி. தியாகராயர்தான்.

தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு அரசினர் கல்லூரி சம்ஸ்கிருதக் கல்வி நிலையமாக இருந்ததை மாற்றி , தமிழும் சொல்லிக்கொடுக்கப்பட ஆவன செய்தார் நீதிக் கட்சித் தலைவர் ஏ.டி.பன்னீர்செல்வம். பிராமண மாணவர்கள் மட்டும் பயன் கண்ட ராஜா மடம், ஒரத்தநாடு விடுதிகள் மற்றவருக்கும் திறந்துவிடப்பட்டன. 

தாழ்த்தப்பட்ட மாணவர்கள் 10-ம் வகுப்புத் தேர்வுக்குப் பணம் கட்டத் தேவையில்லை என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதேபோல, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் கல்லூரிகளிலும், உயர்நிலைப் பள்ளிகளிலும் அரைச் சம்பளம் கட்டினால் போதும் என்று அறிவிக்கப்பட்டது.

அரசுப் பள்ளிகளில் வகுப்புரிமையை நிலைநாட்ட ஆண்டுதோறும் அறிக்கைகள் வெளியிடப்பட உத்தரவிடப்பட்டது.

பேருந்துகளில் தாழ்த்தப்பட்டவர்களை அனுமதிக்காவிட்டால் பேருந்துகளின் உரிமம் ரத்துசெய்யப்படும் என்று ஆணையிட்டு , தாழ்த்தப்பட்ட மாணவர்கள் ஊரிலிருந்து பள்ளிகளை நோக்கிச் செல்ல வழிவகுத்தவர் நீதிக் கட்சித் தலைவர்களில் ஒருவரான ஊ.பு.அ. சவுந்தரபாண்டியன். 




தாழ்த்தப்பட்டவர்களைச் சேர்க்காத பள்ளிகளுக்கு மானியம் நிறுத்தப்படும் என்று ஆணையிட்டவர் முன்னோடிகளில் ஒருவரான சிவகங்கை எஸ்.இராமச்சந்திரன். 

தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றம் கருதித் தனி அலுவலர்கள் நியமனம். தனி அலுவலர் என்பது ‘லேபர் கமிஷனர்’ என்று மாற்றம். இம்மக்களுக்கு 7 லட்சத்து 36 ஆயிரம் ஏக்கர் தரிசு நிலங்கள் வழங்கப்பட்டன. தாழ்த்தப்பட்ட வகுப்பாரில் என்னென்ன சாதிகள் உள்ளன என்பதைத் தொகுக்கும் பணி தொடங்கப்பட்டது.

குறவர்கள் சீர்திருத்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக 2,776 கூட்டுறவுச் சங்கங்கள் உருவாக்கப்பட்டன. வலையர், குறவர் ஆகியோரைக் குற்றப் பரம்பரையிலிருந்து மீட்க அவர்களின் குழந்தைகளுக்கு நிதி உதவி அளிக்கப்பட்டது. துப்புரவு வகுப்பினர், தோடர்கள், கோடர்கள், படகர்கள் ஆகியோருக்காகக் கூட்டுறவுச் சங்கங்கள் தொடங்கப்பட்டன. மீனவர் நலன் காப்பதற்காக ‘லேபர் கமிஷன்’ நியமிக்கப்பட்டது. இதேபோல கள்ளர் சமுதாய முன்னேற்றத்துக்காகவும் ‘லேபர் கமிஷன்’ நியமிக்கப்பட்டது.

ரஜினியின் குடும்பம்

ரஜினியின் குடும்பம் காமெடி நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் அப்பா ஒய்.ஜி.பார்த்தசாரதி. புகழ்பெற்ற அமெச்சூர் நாடகக் குழுவை நிறுவி நடத்திய நடிகர். ப...