பஹல்காம் படுகொலைகள்
ஒரு பார்வை
இரண்டு நாட்களுக்கு முன்பு (22.04.2025) காஷ்மீர் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகளின் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி தாக்குதல் மூலம் 27 அப்பாவி பயணிகளை கொலை செய்திருக்கிறார்கள்.
இதற்கு "லஷ்கர் இ தொய்யிபா"வின் சக அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (The Resistance Front - TRF) என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது என்று செய்திகள் வெளி வந்திருக்கின்றன.
அப்பாவி மக்களின் மீதான் இந்த கொடும் தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது. இதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை.
ஆனால்
1..இந்த தாக்குதல் மூலம் அந்த பயங்கரவாதிகள் உலகிற்கு என்ன சொல்ல வருகிறார்கள் ?
2.. இதனால் அவர்கள் அடையும் இலாபம் என்ன ?
3.. இப்படி செய்யச் சொல்லி இவர்கள் பின்பற்றும் இஸ்லாம் வழிகாட்டுகிறதா?
4.. இந்த தாக்குதலால் இந்தியாவில் குறிப்பாக காஷ்மீரில் ஏற்படும் பின் விளைவுகள் எப்படி இருக்கும் ?
5.. இந்த தாக்குதல் மூலம் யாருக்கு அதிக பாதிப்பு இருக்கும் ?
6.. இதனால் அதிக இலாபம் யார் அடைவார்கள்?
இவற்றை எல்லாம் இப்போது யோசிக்க வேண்டியிருக்கிறது
இந்த தாக்குதல் மூலம் பயங்கரவாதிகள் தாங்கள் பெரிய 'பிஸ்தாக்கள்' என உலக மக்களை அச்சுறுத்துகிறார்கள். ஆனால் உண்மையில் இவர்கள் உலக மக்களின் பார்வையில் இருந்து, அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு பயந்து ஒளிந்து வாழும் கோழைகள்.
இதனால் அவர்கள் எந்த நன்மையும் அடையப் போவதில்லை.
மாறாக துன்பங்கள்தான் தொடரப் போகின்றன. வேட்டையாடப்படுவார்கள்.
தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் ஓடி ஓடி ஒளிந்து கொண்டால், அகப்படுபவர்கள் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டு பலி / பழி வாங்கப்படுவார்கள்.
மற்றபடி இந்த தாக்குதலால் பத்து பைசா பிரயோஜனம் கூட அவர்களுக்கு இருக்காது.
ஒரு வேளை பாகிஸ்தான் மூலம் ஆதாயம் கிடைக்கலாம்.
இஸ்லாம் தன் வரலாற்றில் போர்களை எதிர் கொண்டிருக்கிறது. போர் நெறிகளை கடைப்பிடித்திருக்கிறது. எந்த காலத்திலும் இப்படி அப்பாவி மனிதர்களை கொல்ல அனுமதித்ததில்லை.
போர்கள், தண்டனை இவற்றைக் தவிர ஒரு உயிரை எடுப்பதற்கு இஸ்லாம் அனுமதிப்பதில்லை.
இஸ்லாமிய கோஷங்களோடு ஒரு பயங்கரவாத தாக்குதலை செய்வதால் அது இஸ்லாம் அனுமதித்த முறையாகாது.
இந்த தாக்குதலால் ஏற்பட இருக்கும் பின் விளைவுகளை பற்றி அந்த பயங்கரவாதிகள் யோசித்துப் பார்த்திருந்தால் இதைச் செய்திருக்க மாட்டார்கள்.
மூளைக் சலவை செய்யப்பட்டவர்கள் யோசிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
ஏற்கனவே காஷ்மீரில் இராணுவ கண்காணிப்பு பலமாக இருக்கிறது. இப்பொழுது இந்த தாக்குதலுக்குப் பிறகு அது இன்னமும் நெருக்கப்படும். அனைவரும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்படுவார்கள்.
ஏனெனில் இராணுவ உடமைகளையும், உயிர்களையும், பொது மக்களையும் பொதுச் சொத்துக்களையும் தங்கள் உயிர்களையும் பொருட்படுத்தாது பாதுகாக்க வேண்டிய 'ரிஸ்க்'கும் பொறுப்பும் துணை நிலை பாதுகாப்பு படைகளுக்கு உள்ளது.
இதனால் பொது அமைதி, வெகுஜன சுதந்திர வாழ்க்கை சீர் குலையும். நிம்மதியின்மை, ஸ்திரமற்ற தன்மை நிலவும்.
பெரும்பான்மை இஸ்லாமியர்களின் வாழ்க்கை வருமானம் சுற்றுலா பயணிகளின் மூலமே இருக்கிறது.
பயணிகள் வருகை தடை பட, வருமானம் குறைந்து, அடிப்படை வாழ்க்கை ஆட்டம் காணும்.
ஒரு புறம் இராணுவ துணை நிலைப் படையினர், மறு புறம் பயங்ரவாதிகள் என இரு பக்க அச்சுறுத்தல்களோடு வாழ்வது நரக வாழ்க்கையாக இருக்கும்.
ஆகவே இது போன்ற தாக்குதல்களால் தங்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது என்பதால் எந்த காஷ்மீர் மக்களும் இதை ஆதரிப்பதில்லை.
அதே போல் எந்த இந்தியக் குடிமகனும் இது போன்ற தாக்குதல்களை ஏற்பதுமில்லை.
ஏனெனில் பஹல்காமில் தாக்குதல் நடந்தால் ஒட்டு மொத்த தேசமுமே பாதுகாப்பை நோக்கி நகர வேண்டியிருக்கிறது. தங்களது இயல்பு வாழ்க்கைகள் ஊருக்குத் தகுந்தாற்போல் பாதிப்பை அடைகின்றன.
இந்த நிகழ்வால் யாருக்கு இலாபம் ? யார் அதிக பயனடைவார்கள் ? என்பதை யோசிக்கத் தெரிந்த எந்த இந்தியக் குடிமகனாலும் எளிதில் சொல்லி விட முடியும்.
இந்த பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியவர்கள் இஸ்லாமியர்கள் என்பதாலும், தாக்குதலுக்கு உள்ளானவர்கள் இந்துக்கள் என்பதாலும் இது இந்து - முஸ்லீம் விரோத செயல்பாட்டு கருத்தாக வெகுஜன மக்களிடம் பரப்பப்படுகிறது.
தேசம் முழுவதும் இஸ்லாமிய வெறுப்புணர்வு பிரச்சாரம் முடுக்கி விடப்பட்டிருக்கிறது.
மோர்பி பாலத்தில் 141 பேர் இறந்தபோது வராத,
புல்வாமாவில் 40 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட போது வராத,
பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்டிருந்த தமிழ்நாட்டைக் காணவராத,
வன்முறைகளால் பற்றி எரிந்த, எரிந்து கொண்டிருக்கும் மணிப்பூருக்கு வராத,
மகாராஷ்ட்ரா, உ.பி மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு மோசமடைந்து பெரும் கலவரங்கள் நடந்து போதும் வராத
-- பிரதமர் மோடியும் அமித்ஷாவும் பதறுவதும் உடனடியாக ஜம்முகாஷ்மீர் போவதும் வித்தியாகமாக படுகிறது.
சவுதி அரேபியாவின் சுற்றுப் பயணத்தை பாதியில் முடித்து விட்டு மோடி காஷ்மீர் திரும்புகிறார்.
சிவப்புக் கம்பள வரவேற்போடு வரும் அமித்ஷா 26 உடல்களையும் வெள்ளைப் பெட்டியில் வைத்து அஞ்சலி செலுத்தி அதை மீடியாவில் காட்டச் செய்கிறார்.
முந்தைய காங்கிரஸ் ஆட்சிகளில் இது போன்ற சம்பவங்கள் நடந்தால் அது ஆளும்கட்சியின் கவனக் குறைவு,
ஆட்சியின் திறமையின்மை என எழுதிய பத்திரிக்கைகள் இன்று
'அமித்ஷா கண் சிவந்தார்,
மாஸ்டர் பிளான் போட்ட மோடி,
*பாக். எல்லை மூடப்பட்டது*.
*பாகிஸ்தானின் X - தளப் பக்கம் மூடப்பட்டது*'
என்று தலைப்பில் பிரேக்கிங் நியூஸ் வெளியிடுகின்றன.
இந்துவா ? முஸ்லீமா ? எனக் கேட்டு பார்த்து சுட்டார்கள் என பரபரப்புச் செய்திகள் வெளியிட்ட மீடியாக்கள் பல வெளியூர் சுற்றுலா பயணிகளை உள்ளூர் முஸ்லீம் மக்கள்தான் காப்பாற்றினார்கள் என பல பொதுமக்கள் கொடுத்த பேட்டிகளை செய்திகளாக வெளியிட தயங்குவது ஏனோ?
தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் இந்த பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து உள்ளூர்வாசிகள் கடையடைப்பும், போராட்டமும் செய்வது அரசை எதிர்த்து செய்வதாக இந்த ஊடகங்கள் செய்திகள் வெளியிடுகின்றன.
வக்பு சட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பும், உச்சநீதி மன்றத்தின் கடும் விமர்சனமும் எழுந்த வேளையில்.. காஷ்மிரில் இந்த தீவிரவாத தாக்குதல் நடைபெற்று இருக்கிறது!
எப்போதெல்லாம் ஆளுங்கட்சிக்கு பிரச்னை வருகிறதோ அப்போதெல்லாம் எல்லையில் தீவிரவாதி ஆளுங்கட்சியை காப்பாற்ற வந்து விடுகிறான்.
நாலு நாதாரி நாய்கள் செய்யும் வெறிச் செயல்களால் நாடு முழுவதும் இருக்கும் இஸ்லாமியர்கள் தங்கள் தேசபக்தியை மெய்ப்பித்துக் காட்டிக் கொண்டே இருக்க வேண்டி இருக்கிறது.
ஆனால் மற்ற இந்தியக் குடிமகன்கள் தங்கள் தேசபக்தியை வெளிக்காட்ட வேண்டிய அவசியமே இல்லாமல் இருப்பது அவர்களுக்கு ஒரு உரிமை, சவுகரியம் என்பது ஒரு நகைமுரண்.
இந்தியாவில் பின்வரும் மாநிலங்களில் அடுத்து தேர்தல்கள் நடைபெற உள்ளன:
பிகாரில் 2025 நவம்பரிலும்,
2026, ஏப்ரல்-மே - யில்
அசாம்,கேரளா, மேற்கு வங்காளம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலும் சட்டமன்றத் தேர்தல்கள் வரவிருக்கின்றன.
முந்தைய வரலாற்றைப் பார்த்தால் 2019 பிப்ரவரியில் *புல்வாமா தாக்குதல்* நடந்த பிறகு, இந்தியாவில் ஏப்ரல், மே யில் பொதுத் தேர்தலும் கூடவே ஆந்திரா, அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் மற்றும் ஒடிசா ஆகிய நான்கு மாநில சட்டமன்றங்களுக்கும் தேர்தல்கள் நடைபெற்றன
புல்வாமா தாக்குதல் மக்களவை மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல்களின் பின்னணியில் முக்கிய அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தியது,
குறிப்பாக தேசிய பாதுகாப்பு மற்றும் தீவிரவாத எதிர்ப்பு விவாதங்களை மையப்படுத்தியது என்றும்,
மேலும், இது இந்தியாவின் அரசியல் களத்தில் குறிப்பிடத்தக்க நிகழ்வாக இருந்தது என்றும் Groke சொல்கிறது
அதற்கு பிறகு
2019 அக்டோபர் - நவம்பரில்
ஹரியானா: மகாராஷ்ட்ரா, ஜார்க்கண்ட்ஆகிய மாநிலங்களிலும் தேர்தல்கள் நடைபெற்றன.
இதில் நாட்டின் வளர்ச்சி பற்றிய பிரச்சாரத்தை விட தேசிய பாதுகாப்பு மற்றும் தீவிரவாத எதிர்ப்பு பற்றியே இங்கும் பாஜகவால் பிரச்சாரம் செய்யப்பட்டது.
இதில் பாஜக பெருமளவில் வெற்றியும் கண்டது.
இதனடிப்படையில் பார்த்தால் இந்த தாக்குதலால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் உயிரை இழந்த சுற்றுலா பயணிகள், அவர்கள் குடும்பத்தார்கள், காஷ்மீரின் உள்ளுர்வாசிகள் மற்றும் துணை நிலைப் படையினர்கள் ஆகியோராவார்கள்.
இவர்கள் யாருக்கும் எந்த ஆதாயமும் இல்லை.
இதில் எந்த அரசியல் கட்சிக்கும் எந்த ஆதாயம் இல்லை பாஜகவைத் தவிர.
பாஜக மட்டுமே இதைக் காட்டி ஆதாயம் அடைய முயலும்
தேசத்தின் எங்கோ ஒரு மூலையில் ஒரு பாதிப்பு நிகழ்ந்தாலும் அதை அறுவடை செய்ய ஒரு கூட்டம் காத்திருக்கும்போது, நடந்தவைகளைப் புரிந்து கொண்டு அதற்கு பதில் வினையாக அனைவரிடமும் அன்பையும், அமைதியையும், ஆறுதலையும் செலுத்த வேண்டியது நம் அனைவரின் மீதும் கடமையாக இருக்கிறது.
24.04.2025
.jpeg)

