சனி, 29 அக்டோபர், 2022

வாஜ்பாய் - காட்டிக் கொடுத்தது முதல் கூட்டிக் கொடுத்தது வரை - செ.கார்கி

வாஜ்பாய்  

காட்டிக் கொடுத்தது முதல் 

கூட்டிக் கொடுத்தது வரை  

செ.கார்கி 

லைபாயை மட்டுமே அறிந்திருந்த கோடிக்கணக்கான தமிழர்களுக்கு வாஜ்பாய் யார் என்பது கூட தெரியவில்லை. பல சிறுசுகளிடம், கிழடு கட்டைகளிடம் பேசிப் பார்த்ததில் இருந்து இந்த உண்மை தெரிய வந்தது.

ஆனால் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் கார்கில் நாயகனே, தங்கநாற்கரச் சாலை தந்த தலைவனே என பலவாறாக வாஜ்பாய் புகழ்பாடும் பிஜேபி ஏதாவது ஒரு ஐந்துபைசா விஷயம் கிடைத்தால் கூட அதை வைத்து கட்சிக்கு ஆள் சேர்க்க முடியுமா எனப் பார்க்கும் பிஜேபியின் அவல ஆசை இதிலும் தெரிந்தது

என்னதான் வாஜ்பாயைப் பற்றி காவி வானரங்கள் புகழ்பாடினாலும் வரலாற்றைப் புரட்ட நினைத்தாலும், அதை நம்பும் மனநிலையில் இந்திய மக்கள் இல்லை.

ஏழைத்தாயின் மகன், ரயில் நிலையத்தில் டீ விற்றவன் என்றெல்லாம் சொல்லி, மோடியைப் பிரதமாராக்கினால் இந்தியாவில் பாலாறும், தேனாறும் ஓடும் என்று இந்திய மக்களை நம்ப வைத்து கழுத்தறுத்த கும்பலின் வாயில் இருந்து வரும் அனைத்துமே பச்சைப் பொய்கள்தான் என்பதை மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். உண்மையில் வாஜ்பாய் ஒரு மிதவாதியாக இருந்தாரா?, சிறப்பான பொருளாதாரத் திட்டங்களை முன்னெடுத்தாரா?, தேசபக்தியோடு இருந்தாரா? என்பதையெல்லாம் பார்த்தால் நிச்சயம் தமிழ்நாட்டு மக்கள் ரயிலேறி நாக்பூருக்குப் போயோ, இல்லை குறைந்தபட்சம் கமலாயத்துக்கு போயாவது காறித் துப்பிவிட்டு வந்து விடுவார்கள்.

1998 ஆம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராகப் பதவியேற்றவுடன் பல சீர்திருத்தங்களை அறிவித்தார். 

அந்நிய முதலீட்டுக்கு அனுமதி வழங்குவது குறித்த விண்ணப்பம் செய்த அறுபது நாட்களில் முடிவு, 

தொழிலாளர்களின் ஓய்வூதியம் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் சேமிப்பை முதலாளிகள் பயன்படுத்திக்கொள்ள அனுமதிப்பது 

18 எண்ணெய் வயல்களும் 3 மின் நிலையங்களும் 48000 சதுர கி.மீ பரப்பிலான கனிம வயல்களும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படுதல் போன்றவை மேற்கொள்ளப்பட்டன. 

ரேசன் உணவுப் பொருட்களுக்கான மானியத்தைக் குறைத்த வாஜ்பாய் அரசு, இந்திய உணவுக் கழகத்தின் இருப்பில் இருந்து கிலோ 11 ரூபாய் மதிப்புள்ள 1.4 கோடி டன் அரிசியை ரூ 6 ரூபாய்க்கு தனியார் முதலாளிகளுக்கு விற்பனை செய்தது. லாபத்தில் இயங்கி வந்த டெல்லி, மும்பை, கல்கத்தா, சென்னை , பெங்களுர் விமான நிலையங்களைத் தனியாருக்கு விற்பது போன்ற முடிவுகளும் எடுக்கப்பட்டன.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மூன்றே நாட்களில் காப்பீட்டுத் துறையை அந்நிய மூலதனத்துக்குத் திறந்து விடுவோம்" என்று தேர்தலுக்கு முன்பே அமெரிக்க முதலாளிக்கு வாக்குறுதி அளித்த யஷ்வந்த் சின்கா, அதன்படி ஆட்சிக்கு வந்ததும் நாடாளுமன்றத்தின் முதல் அமர்விலேயே காப்பீட்டுத் துறையைத் திறந்துவிடுவதற்கான சட்டத்தை நிறைவேற்றினார். சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் 100 சதவீத அந்நிய மூலதனமும், ரியல் எஸ்டேட் தொழிலில் 74 சதவீதமும் அந்நிய மூலதனம் அனுமதிக்கப்பட்டது. 

பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வதற்காகவே ஒரு துறையை ஏற்படுத்தி அந்தத் துறைக்கு அருண் ஷோரியை அமைச்சராக்கினார் வாஜ்பாய். 

மொத்தம் 31 பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட்டன. 

2100 கோடி ரூபாய் மதிப்புள்ள மாடர்ன் புட்ஸ் 104 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. 

அதே போல 5000 கோடி சொத்து மதிப்புள்ள பால்கோ நிறுவனம் வெறும் 551 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது.

தொலைபேசித் துறைக்கு சொந்தமாக இருந்த விதேஷ் சஞ்சார் நிகாம் நிறுவனம் டாடாவுக்கு விற்கப்பட்டது.

வந்தே மாதரம் பாட மறுப்பவர்கள் பாகிஸ்தானுக்கு ஓடிவிட வேண்டும் என தேசபக்தியைக் கக்கியவர்கள் போலி ராணுவ பேர ஊழலிலும், கார்கில் போரில் இறந்த வீரர்களை அடக்கம் செய்ய சவப்பெட்டி வாங்கியதிலும் ஊழல் செய்து தமது பூர்வாங்க தேசபக்தியை நிரூபித்தார்கள்.

மேலும் சாமானிய மக்களுக்காக கொள்முதல் செய்யப்பட்ட மருந்துகளில் ஊழல், டெல்லியின் மையப்பகுதியில் சங்பரிவார நபர்களுக்கு ஒதுக்கீடு செய்த வீட்டு மனை ஊழல் என தொட்டதெல்லாவற்றிலும் ஊழல் செய்து, மீண்டும் மீண்டும் தங்களது தேசபக்தியை வெளிப்படுத்தினர்.

நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்கக் கூட லஞ்சம் வாங்க முடியும் என்ற உண்மையை இந்திய அரசியல்வாதிகளுக்கு கற்றுக் கொடுத்தது வாஜ்பாயி அரசுதான். இவ்வளவு ஊழல்களும், அத்துமீறல்களும் நடந்தபோதும் ‘மிதவாதி’ வாஜ்பாய் மெளனமாகவே இருந்தார். அந்த மெளனம்தான் மோடிக்கு குஜராத் இனப்படுகொலையை நடத்தும் உத்வேகத்தை அளித்தது.

வாஜ்பாயின் ஆட்சிகாலத்தில்தான் நாடு முழுவதும் உள்ள நேரு யுவகேந்திரா பள்ளிகளில் இந்துத்துவா பிரச்சாரம், பாடத்திட்டங்களில் இந்துத்துவாவை புகுத்துவது, குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் கிறித்துவர்கள் மீதான தாக்குதல், அரசு நிதியை ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்குப் பயன்படுத்துதல் போன்றவை நடைபெற்றன. மேலும் மும்பை படுகொலையை விசாரித்து வந்த சிறீ கிருஷ்ணா கமிஷனையும், பாபர் மசூதி இடிப்பு குறித்து விசாரணை நடத்திவந்த லிபரான் கமிஷனையும் முடக்கும் சதிகள் மேற்கொள்ளப்பட்டன. எல்லாவற்றுக்கும் மேலாக வாஜ்பாயின் ஆட்சியில்தான் 1999ம் ஆண்டு காத்மாண்டுவில் இருந்து டெல்லி வந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை தீவிரவாதிகள் கந்தகாருக்குக் கடத்தினர். தீவிரவாதத்தை தனது இரும்புக்கரம் கொண்டு அடக்கிய வாஜ்பாயி அரசு, காஷ்மீர் சிறையில் இருந்த ஜெய்ஷ்-ஏ- முகமது தீவிரவாத இயக்கத் தலைவரான மெளலானா மசூர் அசார் உட்பட மூன்று தீவிரவாதிகளை பாதுகாப்பாக பாதுகாப்புத் துறை அமைச்சாரக இருந்த ஜஸ்வந்த் சிங் மூலம் கந்தகாரிலேயே கொண்டுபோய் விட்டுவிட்டு வந்தது. வாஜ்பாய் அரசின் வீரத்தை உலகமே பார்த்துக் குதூகலித்த தருணம் அது

இந்த அவமானத்தில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ளவும், தீவிரவாதிகளுக்கு அஞ்சுபவர்கள் தாங்கள் கிடையாது என்பதைக் காட்டவும் வேண்டிய நெருக்கடி வாஜ்பாய் அரசுக்கு ஏற்பட்டது. இதற்காக இந்திய உளவுத்துறையும், பாஜக அரசும் திட்டமிட்டு இந்திய பாராளுமன்றத்தின் மீதான தாக்குதல் என்ற நாடகத்தை டிசம்பர் 13, 2001 அன்று நடத்தினர். மொத்தம் 14 பேர் இந்தத் தாக்குதலில் உயிரிழந்தனர். இந்தக் குற்றத்தில் எந்தத் தொடர்பும் இல்லாத அப்பாவியான அப்சல் குரு வேண்டுமென்றே தூக்கிலிடப்பட்டார். இப்படியாக ஒட்டுமொத்தமாக வாஜ்பாயின் அரசு ஊழலிலும், லஞ்சத்திலும், முறைகேட்டிலும், அதிகார துஷ்பிரயோகத்திலும், போலி தேசபக்தியிலும் முழ்கிக் கிடந்தது

ஏன் வாஜ்பாயி இவ்வளவு கீழ்த்தரமாக ஆட்சி செய்தார் என்றால், அடிப்படையில் அவர் தன்னளவிலேயே ஒரு கீழ்த்தரமான மனிதராக இருந்ததுதான். ஏனென்றால் அடிப்படையில் கீழ்த்தரமான சிந்தனை உள்ள நபர்கள்தான் கீழ்த்தரமான சித்தாந்தத்தை தேர்ந்தெடுத்துக் கொள்கின்றார்கள்.

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கெடுத்து, பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகப் போராடிய லீலாதரை காட்டிக் கொடுத்து, அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுக் கொடுத்த பார்ப்பன வாஜ்பாய் தனது கொள்கையாய் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டது இயல்பானதுதான்.

வாஜ்பாய் ஆட்சியில் நாட்டின் சொத்தான பொதுத்துறை நிறுவனங்களை பெருமுதலாளிகளுக்கு விற்றதும், நாட்டுக்காக போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு சவப்பெட்டி வாங்கியதில் ஊழல் செய்ததும், இராணுவ பேர ஊழலில் ஈடுபட்டதும், பாபர் மசூதியை இடித்துத் தள்ள வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதும், முஸ்லிம்களை இன அழிப்பு செய்ய உடந்தையாக இருந்ததும், பார்ப்பன வாஜ்பாயின் இயல்பான நடத்தையாகவே நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆர்.எஸ்.எஸ் சாகாவில் இருந்து வெளிவரும் ஒவ்வொருவனும் நாட்டை கூட்டிக் கொடுப்பவனாகவும், காட்டிக் கொடுப்பவனாகவும் இருக்கின்றான் என்றால், இந்திய மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு எதற்காக தோற்றுவிக்கப்பட்டது என்று.

நாம் வாஜ்பாயையோ, இல்லை மோடியையோ புரிந்து கொள்ள வேண்டும் என்றால் அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். அதைப் புரிந்து கொள்ளும் போதுதான் நாட்டை தேசவிரோதிகளின் பிடியில் இருந்து காப்பாற்ற முடியும். நாம் வாஜ்பாயின் வரலாற்றை கீழ் இருந்து மேலாகப் படித்தாலும், மேல் இருந்து கீழாகப் படித்தாலும் அதில் துரோகம் மட்டுமே எஞ்சி நிற்கும். வாஜ்பாயிக்கு மட்டுமல்ல, மோடியின் வரலாறும் அப்படித்தான்

நன்றி : செ.கார்கி



ஞாயிறு, 23 அக்டோபர், 2022

கலைஞர் சம்பாதித்த வழி

கலைஞர் சம்பாதித்த வழி

தலைவர் கலைஞர் வாழ்ந்த இந்த வீட்டின் முதல் உரிமையாளர் பெயர் சரபேஸ்வர அய்யர்.

அவரிடம் இருந்து கலைஞர் வாங்கிய வருடம் 1955.

அப்போது அவரின் வயதே 30 தான்.

அவர் அரசியல் பேசினார் தவிர, எந்த பதவியும் இல்லை. அப்போது கட்சியும் அவ்வளவு வளரவில்லை..

முழுக்க முழுக்க சினிமா வருமானம்தான் அவருக்கு .... அதற்கு முன்பே தலைவர் கலைஞரின் 25வது வயதில், 1949இல் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த மந்திரிகுமாரி படத்திற்கு வசனம் எழுதினார் கலைஞர்.

அப்போதே அவரின் சம்பளம் 500 ரூபாய். அக்காலத்தில் அது பெரிய பணம்.

அந்த படத்தில் எம்ஜியாருக்கு நடிக்க வாய்ப்பு வாங்கிக் கொடுத்தவரும் கலைஞர் தான்..

ஒரு காலமும் ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ததில்லை. அது தலைவர் கலைஞரை பற்றி புரளி பேசுபவர்கள் இட்டுக்கட்டும் பல கதைகளில் ஒன்று.

கண்ணதாசன் அவர்களோடு சேர்ந்து அவர் ரயிலில் செல்லும் போது, கலைஞர் கொடுத்த பணத்தை கண்ணதாசன் அவர்கள் வேறு செலவு செய்து விட்டார்..

பிறகு அவர் டிக்கெட் எடுக்காமல் விட்டதைத்தான் தன் "வனவாசத்தில்" சொல்கிறார் கவிஞர் கண்ணதாசன்.

அதைத்தான் சில கழிசடைகள் திருட்டு ரயில் என்று திரிக்கிறார்களே தவிர, டிக்கெட் எடுக்காமல் வரும் அளவிற்கு கலைஞர் பஞ்சப்பாட்டு பாடிக்கொண்டு இருக்கவில்லை.

ஜெயலலிதா போல வேதா இல்லம், கொடநாடு பங்களா, ஹைதராபாத் திராட்சை தோட்டம், பையனுர் பங்களா போல ஆடம்பரமாக வாழும் இடத்தை கலைஞர் தேடவில்லை.

இறுதிவரை தான் வாழ்ந்த கோபாலபுரம் இல்லத்தை மாற்றவில்லை.

மழை வெள்ளத்தில் மூழ்கும் அதே வீட்டில் தான் மரணிக்கும் வரை இருந்தார் கலைஞர்

மோடியை போல 10 லட்ச ரூபாய் கோட்டும், லட்ச ரூபாய்க்கு விற்கும் வெளிநாட்டு காளானையும் சாப்பிட்டு, கவர்மெண்ட் காசில் கண்ட இடங்கள் எல்லாம் கலைஞர் ஊர் சுற்றவும் இல்லை.

நாம் கண்டு முகம் சுளிக்கும் இவர்களை எல்லாம் விட அவரின் இளமைகால வாழ்வே அவருக்கு எல்லாமே சம்பாதித்துக் கொடுத்து இருக்கிறது.

மோடி, ஜெயலலிதா, எம்ஜிஆர் போன்றவர்களின் ஆடம்பரத்தில் அரை சதவீதம் கூட தலைவர் கலைஞர் ஆடம்பரமாக இருந்தது இல்லை.

அதனால்தான் சாதாரண திருக்குவளை என்கிற குக்கிராமத்தில் பிறந்த தட்சணாமூர்த்தி என்கிற கருணாநிதி பின்நாளில் உலகத் தமிழினத்தின் தலைவராக உயர்ந்து நிற்கிறார் கலைஞர்..

ஒரு இனத்தையும், அந்த மொழியையும் காக்க போராடுபவனே தலைவன்..

அவரே தலைவர் கலைஞர்

நன்றி @Hotel_Dubakoor

சனி, 22 அக்டோபர், 2022

எம்ஜிஆருக்கு முன்பே கலைஞர் பணக்காரராக இருந்தாரா?

 


கேள்வி: எம்ஜிஆருக்கு முன்பே கலைஞர் பணக்காரராக இருந்தாரா?

பதில்: இந்த கேள்வி வரலாறு தெரிந்தவர்களுக்கு சிரிப்பூட்டும் என்றாலும் திரிக்கப்பட்ட பல கட்டுக் கதைகள் இந்த சமூகத்தில் பரப்பப்பட்டு வருகின்றன என்பதும், அவைதான் உங்களைப்போன்ற இளைஞர்களை இப்படி கேள்வி கேட்க வைக்கின்றன என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. 

கலைஞர் 20 வயதிலிருந்தே தனது சம்பளக் கணக்கை தொடங்கியவர்..

சரி கவனமாக படியுங்கள்!

கலைஞர் பிறந்தது 1924ல்.

சேலத்தில் செயல்பட்ட ஜுபிடர் திரைப்பட நிறுவனத்தில் கதை வசனம் எழுத்தாளராக  வேலைக்கு சேர்ந்தது 1944ல் அதாவது இருபது வயதில். 

(அவர் முதன் முதலில் சேலத்துக்குதான் சென்றார் சென்னைக்கு அல்ல) 

மூன்றாண்டுகள் உதவி எழுத்தாளராக இருந்தவருக்கு 1947ல் ராஜகுமாரி என்ற திரைப்படத்தில் முதல் அங்கீகாரம் கிடைத்தது அதாவது உதவி ஆசிரியர் மு.கருணாநிதி என்ற பெயரில்.

அப்போது அவருக்கு வயது 23 அந்த படத்தில் முன்னணி பாத்திரத்தில்  நடித்தவர் MGR..

கலைஞருக்கு அடுத்தடுத்து படங்கள் அமைந்தன. 1948ல் அபிமன்யு,1949ல் மருதநாட்டு இளவரசி, 1950ல் மந்திரிகுமாரி என படங்கள் தந்த புகழில் கலைஞர் உச்சத்துக்கு போனார்.

1952ல் கலைஞர் சொந்தமாக கார் வைத்திருந்தார். 

1955ல் கோபாலபுரத்தில் வீடும் வாங்கிவிட்டார் 

அப்போதிருந்த திராவிட இயக்கத்தினர் இடையே மிகவும் இளையவராகவும் பணக்காரராகவும் இருந்தவர் கலைஞர்.

எம்ஜிஆர் நடித்த எல்லா படங்களுக்கும் நட்பின் அடிப்படையில் கலைஞர் கைகொடுத்து வாய்ப்பளித்தார்.

எம்ஜிஆருக்கு மந்திரிகுமாரி படம் திருப்புமுனையாக அமைந்தது (1950)

அப்படம் திருப்புமுனையாக இருந்தாலும் அவரை சூப்பர் ஸ்டார் உயரத்துக்கு கொண்டு சென்ற படம் மலைக்கள்ளன்(1954).அதுவும் கலைஞர் திரைக்கதை வசனம் எழுதிய படமாகும்.

ஆனால் அதற்குமுன்பே கலைஞர் ஒரு மாபெரும் சூப்பர்ஸ்டாராக இருந்தார்.

அவர் கதைவசனம் எழுதி சிவாஜிகணேசன் அறிமுகமான பராசக்தி திரைப்படம் 1952 வந்தது.

இங்கே கவனிக்க வேண்டியது 1952 முதல் 1954 வரை சிவாஜியை விடவும் எம்ஜிஆர் சின்ன நடிகராக இருந்தார் என்பதாகும்

இன்னொன்று சொல்கிறேன்.

திமுக தொடங்கப்பட்டது 1949ல்

முதன் முதலில் தேர்தலின் நின்றது 1957ல்

வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது 1967ல். கலைஞர் அமைச்சாரனதும் அப்போதுதான்.

1944ல் தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கி 1947ல் உச்சம்பெற்று 1952ல்

சூப்பர்ஸ்டாராகி 1955க்குள் தனக்கு தேவையான எல்லா சொத்துக்களையும் தனது உழைப்பால் கலைஞர் சேர்த்துவிட்டார்

அது மட்டுமல்ல. எம்ஜிஆர் சிவாஜி என்ற மாபெரும் திறமை படைத்த திரைக் கலைஞர்களை உலகத்திற்கு கொடுத்திருக்கிறார்.

அவர் கோடீஸ்வரனாகி சுமார் 13 ஆண்டுகள் கழித்துதான் அமைச்சர் பதவிக்கு வந்தார்.

இன்றைக்கும் கலைஞரின் சொத்து 1955ல் எவ்வளவு இருந்ததோ அவ்வளவுதான் இருக்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அந்த சொத்து கூட எதிர்காலத்தில் மருத்துவமனையாக வேண்டும் என்றே அவர் உயில் எழுதி வைத்திருக்கிறார். தயாளு அம்மாள் மறைவுக்கு பின் அது மருத்துவமனையாக மாற்றப்படும். 

ஒவ்வொரு நிமிடமும் பழியை தாங்கி தாங்கி வளர்ந்தவர் நம்முடைய தலைவர் கலைஞர். 

வாழ்க்கையில் ஒரு நிமிடம் கலைஞரை நினைத்து பாருங்கள் கண்ணீரே வந்திடும்.. 

முன்மாதிரி தலைவனல்ல அவர், 

நம் முன்னேற்றைத்தை தடுத்த ஒரு கூட்டத்தை அழித்த தலைவன் அவர்..

Thanks to @Hotel_Dubakoor







வெள்ளி, 21 அக்டோபர், 2022

தேர்தல்களில் தோல்வியே காணாத கலைஞர்

தேர்தல்களில் தோல்வியே

காணாத கலைஞர்


கலைஞர் ஏன் தான் போட்டியிட்ட தேர்தல்களில் தோல்வியே கண்டதில்லை?

காமராஜர், அண்ணா கூட தோற்றுப் போனது வரலாறு. இவரிடம் என்ன சிறப்பு? Determination & Perseverance எதையும் செய்ய முடியும் என்ற  உறுதியும் வெற்றிக்கு அவர் மேற்கொள்ளும் விடாமுயற்சியும் கூடுதல் பலம். 1957 ஆம் ஆண்டு தனது முதல் தேர்தலில் குளித்தலை எம்எல்ஏவாக  சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர். சிறந்த முறையில் பணியாற்றி கொண்டிருந்த காலகட்டம்... 1959 தஞ்சையில் காங்கிரஸ் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது... காமராஜர்  தலைமையில் தஞ்சை காங்கிரஸ் தளகர்த்தா  பெரும் செல்வந்தரான பரிசுத்தநாடார் மிக சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தார்....

கூட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் தலைவர்கள் திமுகவை சரமாரியாக தாக்கி பேசினார்கள்.

இறுதியில் மைக் பிடித்த பரிசுத்த நாடார் திமுகவை காட்டிலும் கலைஞரை கடுமையாக விமர்சித்தார்.

தஞ்சை மண்டலத்தில் பிறந்த கருணாநிதி இந்தப் பகுதியில் போட்டியிடாமல் திருச்சிக்கு அப்பால் குளித்தலையில் போட்டியிடுவது ஏன் இங்கு நின்றால் தோற்று விடுவோம் என்ற பயம் தான் காரணம்". "நான் ஒரு சவால் விடுகிறேன் இந்தத் தஞ்சை மண்டலத்தில் ஏதேனும் ஒரு தொகுதியில் கருணாநிதி போட்டியிட்டு வெற்றி பெற்றுவிட்டால் நான் அரசியலை விட்டே ஒதுங்கி கொள்கிறேன் என்று வார்த்தைமழை விடுகிறார்..
இதெல்லாம் மறுநாள் பத்திரிக்கைகளில் பக்கம் பக்கமாக வெளிவந்ததை படித்துப் பார்த்த கலைஞர்  எந்த வித எதிர்வினையும் ஆற்றாமல் அமைதி காக்கிறார்.. காலங்கள் உருண்டோடுகிறது மீண்டும்1962 சட்டமன்ற பொதுத்தேர்தல் அறிவிப்பு வெளியாகிறது. திமுகவினர் சென்றமுறை போட்டியிட்டவர்கள் அனைவரும் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட அண்ணா பட்டியல் தயாரிக்கிறார்.

இதனை அறிந்த கலைஞர் அண்ணாவிடம் சென்று "நான் இந்த முறை குளித்தலையில் போட்டியிடவில்லை  தஞ்சாவூரில்  போட்டியிட போகிறேன்" என்று கூறுகிறார்.. அதிர்ச்சியான அண்ணா தஞ்சையில் பரிசுத்த நாடார் அல்லவா போட்டியிடுகிறார் அவரை எதிர்த்து உன்னால் வெற்றி பெற முடியுமா" என்று கேட்கிறார்..
"இல்லை அண்ணா நான் தீர்க்க வேண்டிய கணக்கு ஒன்று உள்ளது அதற்கு சரியான களம்தான் இந்த தஞ்சை களம்.. இந்த தஞ்சை மண்டலத்தில் இந்த கருணாநிதி எத்தகையவன் என்பதை நிரூபித்து காட்ட ஒரு சந்தர்ப்பம் எனவே எனக்கு என்று வேண்டி விரும்பி தஞ்சையில் போட்டி இடுகிறார்
கலைஞர். தேர்தல்நாள் நெருங்க நெருங்க சூறாவளி பிரச்சாரம் செய்கிறார் கலைஞர். ஆசைத்தம்பி, ஏ.கோவிந்தசாமி, விருத்தாச்சலம் செல்வராஜ், மா.ப.சாரதி, அண்ணாமலை, நடிகர் ஆனந்தன், அன்பில்தர்மலிங்கம், மன்னைநாராயணசாமி, பிஎஸ்சந்தானம், இசப்பன் என திமுகவின் மற்ற தொகுதி வேட்பாளர்களும் கலைஞருக்காக பிரச்சாரம் செய்துவிட்டு போகிறார்கள். எதிர் முகாமில் உள்ள பரிசுத்தநாடார் அன்றைய காங்கிரஸ் பெருந்தலைகள் அனைவரையும் பிரச்சார களத்தில் இறக்கி விடுகிறார்.
தனக்கு சொந்தமான 45 பேருந்துகளில் தொண்டர்களைஅழைத்துக்கொண்டு தொகுதி முழுவதும் அணிவகுப்பு நடத்திக் காட்டுகிறார். தொகுதி முழுவதும் பரிசுத்த நாடாரின் பண மழை பொழிந்ததால் பரிசுத்த நாடாரே  வெற்றி பெறுவார் என கணிப்புகள் தெரிவித்தன.
எதைப் பற்றியும் கவலை கொள்ளாத கலைஞர் தன் பிரச்சாரத்தை டாப் கியரில் உயர்த்தினார். ஆம் வீடு வீடாகச் சென்று தெருத்தெருவாக சென்று ஊர் ஊராகச் சென்று ஒவ்வொரு மனிதராக கைகுலுக்கி திமுகவிற்கு ஓட்டு கேட்டார்.

முதல் நாள் தேர்தல் பணிமனையிலிருந்து அண்ணாவின் தம்பிகளோடு கலைஞர் ஓட்டு வேட்டைக்கு சென்ற முதல் இடம் காங்கிரஸ் வேட்பாளர் திரு.பரிசுத்த நாடார் அவர்களின் இல்லத்திற்கே. அவர் தான் கலைஞர் அஞ்சுக செல்வர்.
ஏற்கனவே குளித்தலை எம்எல்ஏவாக இருந்து தான் செய்த பணிகளை துண்டு பிரசுரமாக வீடுவீடாக வழங்கினார். அவருக்கு துணையாக பரப்புரையில் கேடிஎம் பஸ் நிறுவன ஊழியர்கள் உதவினர். தேர்தலும் நல்ல முறையில் முடிந்தது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே ஓட்டுக்களும் எண்ணப்பட்டன.. தஞ்சை தொகுதியை கொஞ்சம் சென்சிட்டிவான தொகுதியாக அறிவித்திருந்த தேர்தல் கமிஷன் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் மத்தியபடைகளை கொஞ்சம் கூடுதலாக இறக்கிவிட்டு இருந்தது.
ஆம் அன்றைய கருத்துக்கணிப்புகள் அத்தனையும் தவிடுபொடியாக்கி கலைஞரே வெற்றி பெற்றார்.
பரிசுத்தநாடார் தோல்வியா?" செய்தியைக் கேட்ட முதலமைச்சர் காமராஜரே சற்று அதிர்ந்து போய்விட்டார்.ஏன் அண்ணாவே ஆடிப்போய் விட்டார். "போர்க்களத்தில் ஒரு வீரன் எப்படிப் போர் புரிய வேண்டும் என்பதை நமக்கெல்லாம் பாடமே நடத்திக் காட்டிவிட்டான் என் தம்பி கருணாநிதி" என்று தஞ்சை வெற்றியை அண்ணா கலைஞருக்கு புகழ்மாலை சூட்டினார். காங்கிரசின் பெருந்தலைகள் கலைஞரின் பாய்ச்சல் எத்தகையது என்பதை ஏற்கனவே குளித்தலையில் உணர்ந்து கொண்டாலும் தஞ்சையில் அவரது வெற்றி இன்னும் கொஞ்சம் கூடுதலாக அசரடித்தது. அதன் எதிரொலியாக டெல்லிதலைமையே அவர்களை கடிந்து கொண்டது.

இந்தத் தேர்தல் வெற்றியை முரசொலியில் குறிப்பிட்ட தலைவர் கலைஞர் "தஞ்சையில் தி.மு.க வெற்றி பெற்றுவிட்டால் அரசியலை விட்டு விலகுகிறேன் என்று பரிசுத்த நாடார் கூறியிருந்தார்."இதோ இந்த கடிதத்தின் வாயிலாக நான் கேட்டுக் கொள்ளுகிறேன் அவர் அரசியலில் இருந்து விலகத் தேவையில்லை எப்போதும்போல் இதுபோன்ற சவால்களை எங்களுக்கு விடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் அப்பொழுதுதான் நாங்கள் இன்னும் வேகத்தோடு பணியாற்ற முடியும்" என்று நச்சென்று மூன்றே வரிகளில் முடித்துக் கொண்டார் கலைஞர்.
கலைஞர் என்றால்  சும்மாவா? காமராஜர், அண்ணா இருவரும் தலைமைப் பொறுப்பில் இருந்த போது அவர்களுக்கு கட்சித் தலைமை என்பது ஒரு அழுத்தம்.கலைஞர் தலைவராக ஆகும் வரை அந்த அழுத்தம் இல்லை. தலைவர் ஆனதும் அவரது தலைமைப் பதவியே அவருக்கு வெற்றியை தேடிக் கொடுத்தது.

திமுகவை போன்று ஒரு உட்கட்டமைப்பு கொண்ட கட்சியை உலகத்தில் எந்த முலைக்கு சென்றாலும் காண முடியாது அதனால் தான் இன்றும் சிலர் அழிக்க நினைத்து வீழ்ந்தும் போகிறார்கள்..

நஞ்சை கழனிகளின் நாயகனே நீ வாழ்க! நடனமிடும் காவேரி காவலனே நீ வாழ்க! பஞ்சமென வருவோர்க்கு தஞ்சம் வழங்குகின்ற தஞ்சை பெருவுடைய தலைவனே நீ வாழ்க!

- நன்றி : ஹோட்டல் டுபாக்கூர் @Hotel_Dubakoor


திங்கள், 5 செப்டம்பர், 2022

கலைஞரை திட்டுபவர்கள்

கலைஞரை திட்டுபவர்கள்



1 .பள்ளிக்கு பஸ் பாஸ்சில் சென்று படித்தவன் கலைஞரை திட்டுவான்.

 2.பள்ளிகளிள் முட்டை வாங்கி சாப்பிட்டவன் கலைஞரை திட்டுவான்.

 3.அரசு பஸ் ஓட்டுநர்கள் பாதிபேர் கலைஞரை திட்டுவான்.

4.இட ஒதுக்கிட்டில் வேலைப்பெற்றவன் கலைஞரை திட்டுவான்.

5.பம்பு செட்டு வைத்து தண்ணீர் பாச்சும் விவசாயி கலைஞரை திட்டுவான்.

6.அறுவடை செய்து கமிட்டியில் விற்பனை செய்பவன் கலைஞரை திட்டுவான்.

6.கூரை வீடு இல்லாத கிராமத்தில் வாழ்ந்துக்கொண்டு கலைஞரை திட்டுவான்.

6.வீட்டில் இலவச மின்சாரத்தை பயன்படுத்தியன் கலைஞரை திட்டுவான்.

7.,தமிழ்தாய் வாழ்த்து பாடுபவன் கலைஞரை திட்டுவான். 

8.அரசு பள்ளியில் கனிணி பயின்றவன் கலைஞரை திட்டுவான்.

9.ITயில் வேலை பார்ப்பவன் கலைஞரை திட்டுவான்.

10.நுழைவு தேர்வு இல்லாமல் BE,Doctor போன்ற பட்டம் பெற்றவன் கலைஞரை திட்டுவான்.

11.சிமென்ட் தெருவில் நடப்பவன் கலைஞரை திட்டுவான்.

12.காவல் ஆனையத்தில் இருந்துக்கொண்டு கலைஞரை திட்டுவான்.

13.அம்பேத்கார் சட்டக்கல்லூரியில் பயின்று சட்டம் பயின்றவன் கலைஞரை திட்டுவான்..

என்ன செய்வது இவை அனைத்தும் கலைஞரின் ஆளுமையால் தான் கிடைத்தது என்று தெரியாமலே திட்டுவான். எதிரிகளையும் வாழ வைத்து தான் திமுகவிற்கு பழக்கம்.


நன்றி : அனஸ்

ஞாயிறு, 4 செப்டம்பர், 2022

இசுலாமியர்களும், திராவிட இயக்கமும் - ஒரு வரலாற்றுப் பார்வை!

 

இசுலாமியர்களும், திராவிட இயக்கமும் 
- ஒரு வரலாற்றுப் பார்வை!

1967 ஆம் ஆண்டு, திராவிட முன்னேற்றக் கழகம் முதன்முதலாக பேரறிஞர் அண்ணா தலைமையில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்த சமயம். சென்னையை அடுத்து, அச்சிறுப்பாக்கத்திற்கு அருகில் உள்ள பள்ளிப்பேட்டை கிராமத்தில் வசிக்கும் முஸ்லிம்கள், தொழுகைக்காக பள்ளிவாசல் எழுப்புவதற்கு உள்ளூர்வாசிகளிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதற்காக உயிர்பலியாகிறது. 

தங்கள் உரிமையை விட்டுக் கொடுத்துவிடக் கூடாது என்று முனைப்புடன், நோன்பு பெருநாளுக்கு முந்தைய இரவில் அங்கே குழுமியிருக்கும் முஸ்லிம்களுக்கு, நள்ளிரவில், அவர்கள் பதட்டத்தை அதிகரிக்கும் வண்ணம் அந்த குக்கிராமத்தை நோக்கி வாகனப் படையெடுப்பு. கலவரத்தை எதிர்கொள்ளத் தயாராக கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் மகனான மியாகானின் தலைமையில் கூடியிருந்த அந்த சிறு முஸ்லிம் கூட்டத்தினருக்கு வாகனங்கள் அருகில் வர பெருங் குழப்பம். வந்தவையெல்லாம் நீல நிற காவல்துறை வாகனங்கள். அதிலிருந்து இறங்கிய போலீசார், கீற்றுக் கொட்டகை கட்டுவதற்குத் தேவையானவற்றை இறக்கி விட்டு, காலை பெருநாள் தொழுகைக்கு முன்னர் பள்ளிவாசல் எழுப்பப் பட்டிருக்க வேண்டும் என்று தங்களுக்கு மேலிடத்திலிருந்து உத்தரவு வந்திருப்பதாக மியாகானிடம் கூற, கூடியிருந்த அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது. நடந்தது இதுதான். 

முஸ்லிம்கள் பள்ளிவாசல் கட்டுவதற்கு எதிர்ப்பு, அதுவும் தன் கட்சிக்காரர்களாலேயே என்ற செய்தியை அன்று டெல்லியில் இருந்த காயிதே மில்லத்திடம் இருந்து தெரிந்து கொண்ட முதலமைச்சர் அண்ணா உடனடியாக எடுத்த நடவடிக்கைதான் அது. காவலர் பாதுகாப்புடன் பெருநாள் தொழுகையை மன நிறைவுடன் தொழுது முடித்த முஸ்லிம்களுக்கு இன்னொரு ஆச்சரியமும் காத்திருந்தது. தொழுது முடித்த மியாகானை சந்திக்க அருகிலுள்ள பயணியர் விடுதியில் முதல்வர் அண்ணா காத்திருக்கிறார் என்ற செய்தி தான் அது.

விடுதியில் அண்ணாவுடன் காவல் துறை மற்றும் அரசு அதிகாரிகள் மட்டுமின்றி, இதற்கு முட்டுக்கட்டையாக இருந்த தன் கட்சி அமைச்சர்கள் இருவரும் இருந்தனர். கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையிலும் அண்ணா இஸ்லாமியருக்கு ஏற்பட்ட இக்கட்டை களைய நேரடியாக களத்தில் இறங்கியிருந்தார்.

சில மாதங்களிலேயே பேரறிஞர் அண்ணா இறந்து போனார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இசுலாமியர்களுடனும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அப்போது முதல் நல்லுறவு இருந்து கொண்டுதான் உள்ளது. 


20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வட இந்தியாவின் அரசியல் மதத்தின் அடிப் படையில் வடிவம் பெறத் தொடங்கியது. அதே வேளையில் சென்னை மாகாணத்திலோ பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதோர் என்ற அடிப்படையில் அரசியல் வடிவம் பெறத் தொடங்கியது. யார் இந்த பார்ப்பனர்கள்?

1920 ஆம் ஆண்டில், திராவிட இயக்கத்தின் தொடக்க காலம் அது, அப்போது சென்னை சட்டசபையில் நடந்த ஒரு விவாதம் இதற்கு வெளிச்சம் தருகிறது. நிர்வாகத்தை இந்திய மயமாக்குவது தொடர்பான விவாதம் அது.

காவல்துறையில் ஐரோப்பியர்களுடன் சேர்த்து இந்தியர்களுக்கும் சில பொறுப்புகளை வழங்க வேண்டும் என சி.வி. வெங்கட் ரமண ஐயங்கார் ஒரு கோரிக்கையை வைத்தார். காவல்துறை பதவிகளை பார்ப்பனரல்லாதோருக்கும் வழங்க வேண்டுமென நீதிக்கட்சித் தலைவர்களுள் ஒருவரான டாக்டர் நடேசன் விவாதித்தார்.

பார்ப்பனரல்லாதோர் என்றால் முகமதியர்கள், இந்திய கிறித்துவர்கள், பார்ப்பனரல்லாத இந்துக்கள், ஜெயினர்கள், பாரசீகர்கள், ஆங்கிலோ இந்தியர்கள் என்றும் விளக்கம் அளித்தார். இத்தகைய புரிதலின் அடிப்படையில்தான் இசுலாமியர்களுக்கும், திராவிட இயக்கத்திற்குமான உறவு வடிவமைக்கப்பட்டது.


ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இசுலாம் அரேபிய தீபகற்பத்தில் வேகமாகப் பரவியது. அந்த சமயத்தில் தமிழ்நாட்டிற்கும், மேற்கு ஆசியாவிற்கும் இடையில் இருந்த கடல் வழி வர்த்தகத் தொடர்புகள் வழியாக இசுலாம் தமிழ்நாட்டுக் கரையையும் தொட்டது.

அவர்கள் செல்வங்களை கொண்டு வந்து மிளகு அல்லது முத்துக்கள் வாங்கிச் சென்றது மட்டுமின்றி தங்களுக்கான ஒரு சிறப்பான இடத்தையும் கண்டறிந்தனர். அதை Mazbar என்றும் அழைத்தனர். இத்தகைய வர்த்தக உறவின் மூலமே தமிழ் முஸ்லிம்கள் உருவாகினர்.

காலனிய ஆட்சி வளர்ந்து வந்த சமயத்திலும்கூட நூற்றுக் கணக்கான திராவிட இசுலாமிய கட்டடக் கலை பாணியிலான மசூதிகள் உருவாகின. அந்த கால கட்டத்தில் வெளியான இசுலாமியர்களின் கணிசமான இலக்கிய வெளியீடுகளும் தமிழ்ச் சமூகத்தில் அவர்களின் இருப்பிடத்தை உறுதியாக்கியது.

இத்தகைய சூழலில்தான் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் திராவிட இயக்கம் வடிவம் பெற்றது. அதன் ஒருங்கிணைந்த ஓர் அங்கமாக இசுலாமியர்களும் இருந்தனர்.

நீதிக் கட்சியாக இருந்த போதிலிருந்தே திராவிட இயக்கத்தின் அரசியல் வெளிப்பாடு என்பது சமூக நீதியைக் காக்கப் போராடுவதாக இருந்தது.

காந்தியின் தலைமையில் காங்கிரஸ் இருந்தபோது, ஒட்டோமான் மன்னரிடமிருந்து கிலாபத்தை பாதுகாப்பதற்கான அலி சகோதரர்கள் தலைமையிலான இயக்கத்திற்கு ஆதரவு அளித்தது. நீதிக் கட்சியும் *கிலாபத் இயக்கத்திற்கு ஆதரவளித்தது.

இதற்கிடையில் சென்னை மாகாணத்தின் ஆட்சிப் பொறுப்பை நீதிக் கட்சி ஏற்ற போது, இசுலாமியர்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதிப் படுத்தியது மட்டுமின்றி, பல்வேறு அலுவலகங்களிலும் அவர்களுக்கான இடத்தை உறுதிப் படுத்தியது. சமூக தேவைகளையும் கவனத்தில் கொண்டது.

காங்கிரசும், அலி சகோதரர்களும் பிரிந்த சிறிது காலத்தில் கிலாபத் இயக்கமும் குழப்பத்தில் முடிந்தது. காங்கிரசுக்காரராக இருந்தபோது தீண்டாமையை எதிர்த்துப் பேசி வந்த பெரியார், கட்சியில் இருந்த உயர்ஜாதி தன்மையைக் கண்டு அதிருப்தியடைந்தார்.

அதனால் காங்கிரசில் இருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கம் கண்டு, பின்னர் நீதிக் கட்சியில் இணைந்தார். 1944 ஆம் ஆண்டில் நீதிக்கட்சியை திராவிடர் கழகமாக பெயர் மாற்றினார்.

பெரியார் ஒரு நாத்திகராக இருந்தபோதும் தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிரான ஒரு மாற்று மருந்தாக இசுலாத்தை ஆதரித்தார். பெரியாரின் எழுத்துக்களும், பொதுக் கூட்ட மேடைப் பேச்சுக்களும் ஒடுக்கப் பட்டவர்கள் இசுலாமை ஏற்றுக் கொள்ள ஊக்குவித்தன.

ஜின்னாவையும், அவரது தனிநாடு கோரிக்கையையும் பெரியார் ஆதரித்தே வந்தார். 1948 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி ‘விடுதலை’ நாளேட்டில் பெரம்பூர் (மாயவரம்) கூட்டத்தின் தீர்மானம் இடம் பெற்றுள்ளது. அதில், “முஸ்லிம்கள் எங்களை ஆதரித்தாலோ அல்லது எதிர்த்தாலோ எது நடந்தாலும், நாளை திராவிட நாடு சுயராஜ்யத்தை அடையும் போது அதனால் உங்களுக்குப் பாதிப்பு வராது என உறுதியளிக்கிறேன். ஏனெனில் இசுலாமியர்களும் திராவிடர்களே என திராவிடர் கழகம் உறுதியாக நம்புகிறது” என்று பெரியார் கூறியுள்ளார்.

அப்போது சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் திராவிட இயக்கம் இல்லாத குறையை இஸ்மாயில் சாகிப் ஓரளவு நிவர்த்தி செய்தார். இட ஒதுக்கீட்டின் தேவை குறித்து முகமது இஸ்மாயில் சாகிப் தொடர்ந்து வலியுறுத்தினார்.

இந்தியை தேசிய மொழியாக்க முயற்சித்ததை கண்டித்தும், தாய்மொழியான தமிழை வலியுறுத்தியும் சட்டமன்றத்தில் பேசினார்.

பாகிஸ்தான் பிரிவினையின் போது நாட்டில் ஏற்பட்ட கலவரங்களால் முஸ்லிம் தலைவர்கள் தங்களது கட்சியை கலைக்கவும், அலுவலகங்களை மூடவும் முடிவு செய்தனர்.ஆனால் அந்த சூழலிலும் தமிழ்நாட்டில் முஸ்லிம் லீக் தலைவர்கள் சென்னை மாகாண அரசினர் தோட்ட விருந்தினர் மாளிகையில் தங்களது எதிர்கால செயல்பாடுகள் குறித்து ஆலோசித்துக் கொண்டிருந்தனர். அப்போது பெரியார், ராஜாஜி இருவருமே இவர்கள் கட்சியை கலைத்து விடுவர் என்றே எண்ணினர்.

ஆனால் பிரிவினைக்குப் பிந்தைய முஸ்லிம்களின் நிலையைப் பார்த்த முகமது இஸ்மாயில் சாகிப், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்காக தொடர்வது என முடிவு செய்தார்.கட்சியை கலைத்துவிட்டு காங்கிரசில் இணைய இஸ்மாயில் சாகிப்பிற்கு ஜவஹர்லால் நேரு அழுத்தம் கொடுத்ததாக அவரது பேரனும், காயிதே மில்லத் ஆண்கள் கல்லூரியின் தாளாளருமான தாவூத் மியா கான் கூறுகிறார்.அத்தகைய கடினமான சூழலிலும் சென்னை மாகாணத்தில் மட்டுமே முஸ்லிம் லீக்கால் செயல்பட முடிந்தது. அதற்கு அடிப்படையில் திராவிட இயக்கம் காரணமாக இருந்தது. முஸ்லிம்களின் பிரச்னைகளுக்காக திராவிட இயக்கம் எப்போதும் அனுசரணையுடன் இருந்தது.

இந்த உறவுதான் பிரிவினைக்குப் பிறகு நாடு முழுவதும் முஸ்லிம்கள் ஓரங்கப்பட்ட போதும், சென்னை மாகாணமாக இருந்த போதும், பின்னர் தமிழ்நாடாக மாறிய பின்பும் முஸ்லிம்கள் புயலாக செயல்படக் காரணமாக அமைந்தது.

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையும், காந்தி படுகொலையிலும் அவர்களுடைய நோக்கம் சென்னை மாகாணத்தில் வீழ்ச்சியில்தான் முடிந்தது. காந்தி படுகொலை செய்யப்பட்ட சமயத்தில் திருவண்ணாமலை, ஈரோடு மற்றும் ராஜபாளையம் பகுதிகளில் முசுலிம்களைக் குறிவைத்து பெரும் கலவரங்களும், திட்டமிட்ட தீ விபத்துகளும் நடந்தேறின. சுமார் 100 முசுலிம் வீடுகள் தீ வைத்து எரிக்கப் பட்டன. 50 கடைகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதன் மூலம் ஏற்பட்ட இழப்பு சுமார் 50 லட்சம் ரூபாய் இருக்கும் என மதிப்பிடப்பட்டது.

சமூக மற்றும் நாடக ஆர்வலரான பிரளயன் திருவண்ணாமலையில் நடந்த கலவரம் குறித்து கூறுகையில், “கலவரம் நடந்த பிறகு சில திடீர் பணக்காரர்கள் உருவாகினர். கலவரத்தில் கொள்ளையடித்த பணத்தின் மூலம் அவர்கள் பணக்காரர்களாக உருமாறினர். அவர்களை அப்பகுதியில் காந்தி பணக்காரர் என்றே அடையாளப் படுத்தினர்” என்கிறார். அப்போது கடலூரில் சில இடங்களில் கலவரம் நடந்தபோது திராவிடர் கழகம் நிவாரணப் பணிகளை மேற்கொண்டது என நினைவு கூர்கிறார் முஸ்தபா மரைக்காயர். இவர் பிறகு சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்து விட்டார்.

இசுலாமியர்கள் அனுபவித்து வந்த பல உரிமைகள் மற்றும் சலுகைகள் இந்திய விடுதலைக்குப் பிறகு காங்கிரசு ஆட்சியில் பறிக்கப்பட்டது. அரசு முகம்மது கல்லூரியில் முசுலிம்களுக்கான இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. பொது மகளிர் கல்லூரியாகவும் மாற்றம் செய்யப்பட்டது. இதே போல் நீதிக் கட்சியின் ஆட்சியின் போது தொடங்கப்பட்ட யுனானி மருத்துவத்திற்கான பள்ளியும் மூடப்பட்டது. ஆற்காடு இளவரசர் மற்றும் தலைமை காஜியின் குடியிருப்புகளில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என சோதனைகள் மேற்கொள்ளப் பட்டது.காவல்துறை பட்டாலியன் அமைப்புக்குள் முசுலிம்கள் வருவதை அரசு தடை செய்ததையும் மிக மோசமான முடிவுகளாக அப்போது பார்க்கப்பட்டது. 1952 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கோபால் ரெட்டி சென்னை மாகாண நிதி அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர்தான் இந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.

இத்தகைய சிக்கலான காலங்களில் பெரியார் இசுலாத்தை தொடர்ந்து ஆதரித்து வந்துள்ளார். அப்போது பெரியாரிடம் இருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகத்தை அண்ணா கண்டிருந்த நிலையில் அவரும் முசுலிம்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார்.

திராவிடர் கழகத்தைப் போல நாத்திகத்தை வலியுறுத்தாமல், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என திராவிட முன்னேற்ற கழகம் தனது கொள்கையை முன்வைத்ததால் அந்தக் கொள்கையும் தேர்தல் அரசியலில் பங்கேற்க வேண்டுமென்ற திட்டமும் முசுலிம்களிடையே தி.மு.க.விடம் நெருக்கத்தை அதிகரித்தது.

காங்கிரசு ஆட்சியில் முசுலிம்களுக்கு இழைக்கப்பட்ட பல்வேறு அநீதிகளை அண்ணா சுட்டிக் காட்டினார். குறிப்பாக, பிரபலமான முசுலிம்கள் பலர் காங்கிரஸ் கட்சியில் இருந்த போதும் அவர்களுக்கு அமைச்சரவையில் இழைக்கப்பட்ட அநீதியை அண்ணா சுட்டிக் காட்டினார். 

1946 ஆம் ஆண்டு முதல் 1962 ஆம் ஆண்டு வரை காங்கிரசு ஆட்சியில் ஒரு முசுலிம் கூட அமைச்சராக நியமிக்கப்படவில்லை. 1962 ஆம் ஆண்டில் காமராஜர் தலைமையிலான காங்கிரசு அரசு அமைந்த போதுதான் அப்துல் மஜீத் அமைச்சராக நியமிக்கப் பட்டார். இந்த காலகட்டத்தில் காங்கிரசு எந்த ஒரு முசுலிமையும் சட்டமன்ற வேட்பாளராக நியமிக்கவில்லை. ஆனால் திமுக அணியில் இந்திய யூனியன் முசுலிம் லீக்கைச் சேர்ந்த எஸ். எம். அப்துல் மஜீத் சாஹிப் பிறப்பு: ஜனவரி 12, 1924) ஒரு தமிழக அரசியல்வாதி. இவர் சென்னை மாநிலத்தின் மூன்றாவது சட்டமன்றத்திற்கு 1962 ஆம் ஆண்டு தேர்தலில் சங்கரன்கோயில் சட்டமன்றத் தொகுதியிலிருந்து  தற்பொழுது சங்கரன் கோவில் இந்திய தேசிய காங்கிரசு சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழக அமைச்சரவையில் உள்ளாட்சி அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.

 கடையநல்லூர் சார்ந்தவர் -அப்போது சங்கரன் கோவிலுடன் சேர்ந்த தொகுதியாக இருந்தது .

ஆனால் திமுக அணியில் இந்திய யூனியன் முசுலிம் லீக்கைச் சேர்ந்த திருச்சி அப்துல் வாஹப் ஜானி 1962 ஆம் ஆண்டில் சட்டசபை உறுப்பினராக இருந்தார். 1980 வரையில் மேலும் 2 முறையும் திமுக ஆதரவுடன் அவர் சட்டசபை உறுப்பினராக தேர்வானார்.

1965 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பிறகு தமிழ் முசுலிம் பங்கேற்பில் மீண்டும் ஒரு எழுச்சி காணப் பட்டது. திமுகவில் சிறு பான்மையினர் பிரிவு தொடங்க வேண்டுமென பொதுக் குழு கூட்டத்தில் கோரிக்கைகள் எழுந்தன. ஆனால் காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் இருக்கும் வரை திமுகவில் சிறுபான்மையினர் பிரிவு தொடங்கத் தேவையில்லை என அண்ணா மறுத்து விட்டார். 

1967 ஆம் ஆண்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்குடன் கூட்டணி அமைத்தே திமுக சட்டமன்றத் தேர்தலை எதிர் கொண்டது. அண்ணாவைத் தொடர்ந்து அதே மரபை கலைஞர் கருணாநிதியும் பின்பற்றினார். அப்போது முதல் இப்போது வரை இசுலாமிய அமைப்புகள் திராவிட அமைப்புகளுடனும், அரசியல் கட்சிகளும் இணைந்தே பயணித்து வருகின்றன. மற்ற மாநிலங்களைப் போலல்லாமல் தமிழ்நாட்டில் மதக் கலவரம் என்ற பேச்சுக்கே இடமில்லாத நிலையை ஏற்படுத்தியதற்கு நூறாண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் இந்த உறவே காரணமாய் அமைந்துள்ளது. 

இப்போதும் கூட அயோத்தியில் இசுலாமியர்களுக்கு உச்ச நீதிமன்றம் இழைத்த அநீதியான தீர்ப்பை எதிர்த்து உரக்கக் குரல் கொடுக்கும் மண்ணாக தமிழகம் மட்டுமே இருக்கிறது. அயோத்தி தீர்ப்பைக் கண்டித்து இசுலாமிய அமைப்புகள் மட்டுமன்றி பெரியாரிய அமைப்புகளும், பல்வேறு முற்போக்கு அமைப்புகளும் போராட்டக் களங்களை கண்டு வருகின்றன.

கடவுள் மறுப்பு என்பது பெரியார் இயக்கத்தின் கொள்கையாய் இருந்தாலும், இந்து மத இழிவில் இருந்து ஒடுக்கப்பட்டவர்களுக்கு விடுதலை கிடைக்க வேண்டும் என்ற எண்ணமும், இசுலாமியர்களின் மீது பார்ப்பனர்கள் காட்டிய வன்மையான ஒடுக்குமுறைகளுமே இசுலாமியர்களுக்கும் திராவிட இயக்கத்திற்கும் ஒரு ஆழமான பிணைப்பை ஏற்படுத்தியுள்ளது.

(டெல்லி அம்பேத்கர் பல்கலைக்கழகம் 2018இல் நடத்திய திராவிட இயக்கம் குறித்த ஆய்வரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரையின் ஒரு பகுதி.) 

நன்றி: பரவட்டும் தீ  ட்வீட்டர் தளம்

கலைஞரின் பேனா

 

கலைஞரின் பேனா

 எழுதாத பேனாவிற்கு 80 கோடியில் சிலை அவசியமா?

      - எடப்பாடி பழனிசாமி கேள்வி

இந்த பையனை நினைவிருக்கிறதா? பழனிசாமி! 

 இந்த பையன் பேரு பொன்.நாவரசு, அண்ணாமலை பல்கலைகழகத்தில் மருத்துவப் படிப்பில் முதலாம் ஆண்டு தன் லட்சியப் பயணத்தை தொடர்ந்த ஒரு செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவன்.

இவனுடைய அப்பா சென்னை பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பணியாற்றிய ப.க.பொன்னுசாமி!

 Mr.பழனிசாமி நீங்கள் கொண்டு வந்த நீட் தேர்வுகள் இல்லாத காலகட்டம் அது! ஆம், தலைவர் கலைஞரின் ஆட்சி..தமிழர்களின் பொற்கால ஆட்சி நடந்து கொண்டிருந்த காலகட்டமும் கூட!! 

அப்போது இரண்டாம் ஆண்டு மருத்துவப் படிப்பு படித்துக் கொண்டிருந்த ஜான் டேவிட் என்பவன் தன்னுடைய ஓரினச்சேர்க்கைக்கு (Homosexual) இணங்க மறுத்ததால் நாவரசுவை கொலை செய்து உடல்பாகங்களை ஆற்றில் வீசினான்..

 தமிழகமே அதிர்ந்த அந்த கொலை சம்பவம் தலைவர் கலைஞரின் காதுக்கு சென்றது. கொதித்தெழுந்த தமிழ்தாயின் தலைமகனான கலைஞர் உடனே அமைச்சரவையை கூட்டினார். நாவரசுவின் தந்தையான துணைவேந்தர் ப.க.பொன்னுசாமியை அழைத்து ஆறுதல் தெரிவித்தார்.. 

06-11-1996ல் நாவரசு கொலை செய்யப்பட்ட நாள் அன்று, அப்போதைய எதிர்கட்சித் தலைவரான உங்க தாய் ஜெயா கொடநாட்டில் ஒய்வு எடுத்துக்கொண்டிருந்த காலமும் கூட, இதை கண்ட கலைஞரின் கண்களில் கண்ணீர் ஆறாய் பெருக்கெடுத்தது.

 கலைஞரின் உதவியாளர் அய்யா சண்முகநாதன் ஏன், தலைவரே அழுகிறீர்கள் என்று கேட்ட போது கலைஞர் சொன்ன பதில் " ஒரு மிகப்பெரிய பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் மகனுக்கே இந்த நிலையென்றால், பாமரனின் குழந்தை கல்லூரிக்கு வரும்போது என்னை நிலைமை என்று யோசித்துப் பார்க்கவே குலை  நடுங்குகிறது என பதிலளித்தார். 



அன்று இரவே தலைவர் கலைஞர் இதை தடுக்க சட்டம் ஒன்று கொண்டுவர எண்ணிணார், அதை முடித்தும் கொடுத்தார்.ஆம், அந்த சட்டம் தான் என்னைப் போன்ற எத்தனையோ "அன்றாடம் காய்ச்சியின்"மகன்கள் படித்து முடிக்க காரணமாய் இருந்தது அந்த சட்டம் யாது என்று தெரியுமா Mr.பழனிசாமி?

1997-ல் தலைவர் கலைஞரால் கொண்டுவரப்பட்ட "பகடிவதை தடுப்புச் சட்டம்" (Tamilnadu Prohibition of Ragging act) இந்தியாவிலேயே இதை கொண்டு வந்து சாதித்தது "கலைஞர் பேனா" தான் திரு.பழனிச்சாமி அவர்களே!! 


நீ படிச்ச ஸ்கூல்ல கலைஞர் தான் டா கடவுள் வாழ்த்தே!!

நன்றி: ஹோட்டல் டுபாக்கூர்


திமுக இந்து விரோதக் கட்சியா?

 

திமுக இந்து விரோதக் கட்சியா?

திமுக என்றாவது அழகர் ஆற்றில் இறங்கும் விழாவை தடுத்திருக்கிறதா?

இல்லை

திமுக என்றாவது திருச்செந்தூர் சூரசம்ஹார விழா, வைகாசி விசாக விழாவை தடுத்திருக்கிறதா?

இல்லை.

திமுக என்றாவது சுசீந்திரம் தேரோட்டத்தை தடுத்திருக்கிறதா?

இல்லை.

திமுக என்றாவது மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி பெருவிழாவை தடுத்திருக்கிறதா?

இல்லை.

இந்துக்கள் கொண்டாடும் இது மாதிரி எந்தப் பண்டிகையையும் திமுக அதிகாரத்தில் இருக்கும் போது தடுத்தது கிடையாது.

தடுக்காதது மட்டுமில்லை. இந்த விழாக்கள் எல்லாம் செவ்வனே நடந்து முடிக்க அரசு அதன் இயந்திரத்தை பயன்படுத்தி நடத்தியும் கொடுத்திருக்கிறது.

இந்துக்களுக்கு பிரச்சனை என்று பயப்படும் பிற்படுத்தப்பட்ட இளைஞர்கள் இந்த கோணத்தில்யோசிக்க வேண்டும்

திமுகவால் இந்துக்களுக்கு ஒரு பிரச்சனை கிடையாது அவர்கள் வழிபாட்டை இந்துக்கள் உணர்வுஎன்று திமுக ஆதரித்தே வந்திருக்கிறது

அப்படியானால் ஏன் திமுக விநாயகர் சதூர்த்தி ஊர்வலத்துக்கு மட்டும் போகவில்லை?

ஏன் என்றால்விநாயகர் சதூர்த்தி ஊர்வலம் தமிழ்நாட்டில்கலாச்சாரமே கிடையாது.அதை புதிதாய் உருவாக்கி பெரிதாக்கியவர்கள் இந்துத்துவா என்றமத அடிப்படைவாதிகள் ஆவர்

ஒருவேளை இந்துக்களாகிய நாம் விநாயகர் ஊர்வலம் நடத்த வேண்டும் என்று விரும்பினால் அதை திமுகவிடம் நியாயமாக வலியுறுத்தும்போது நிச்சயம் திமுகவே இந்து அறநிலையத் துறை சார்பாக பெரிய விநாயகர் ஊர்வலம் நடத்தி நம்மை விநாயகர் வழிபாடு செய்ய வைக்கும்

ஆனால் அதே சமயம் மற்றவர்கள் விநாயகர் ஊர்வலம் என்றுமதவெறி பரப்பும் செயலுக்கும் அரசு தடைவிதித்து,அரசே முன்னின்று மாபெரும் ஊர்வலம் நடத்தும்.அது உங்களுக்கு சம்மதமா?      என்ன வேண்டாமா?அப்படி ஒரு ஊர்வலம் நடத்த இந்து அடிப்படைவாதிகள் நிச்சயம் சம்மதிக்கமாட்டார்கள்.காரணம் அவர்கள் ஊர்வலம் நடத்துவதே மதத்தின் பெயரால் மக்களை தூண்டுவதற்கு மட்டும்தான்

ஒணம் ஒரு இந்து பண்டிகை என்று எடுத்துக்கொண்டால் அதற்கு தமிழ்நாட்டில் விடுமுறை அறிவித்தவர் டாக்டர்கலைஞர் கருணாநிதி

இதை விட இந்துக்களுக்கு இந்துக்களின் உணர்வுகளுக்கு எப்படி மரியாதை கொடுக்க முடியும்

இந்து மதத்தை ஒருவர் பின்பற்ற நிச்சயம் திமுக தன் முழு ஆதரவையும் கொடுக்கும்.

( கோவில் விழாக்கள் தேரோட்டம்)

ஆனால் இந்து மதத்தினால் மத அடிப்படைவாதத்தை பரப்புவதை திமுக

இந்து மத அடிப்படைவாதம் என்றில்லை

ஐரோப்பிய,அமெரிக்க சமூகத்தில் 400 ஆண்டுகளுக்கு முன்பே இயேசுவையும், கர்த்தரையும், கிறிஸ்தவ மதத்தில் உள்ள மூடநம்பிக்கைகளையும் திரும்ப திரும்ப விமர்சனம் செய்திருக்கிறார்கள். அதற்கான பல்வேறு இயக்கங்களை நடத்தி இருக்கிறார்கள்.

அதனால்தான் அவர்கள் இந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறார்கள்.

பெரும்பான்மை மதத்தவரின் மதத்தை முதலில் பகுத்தறிவு கொண்டு ஆராய்வது அந்த அந்த பிராந்திய வளர்ச்சியில் ஆர்வம் காட்டும் எந்த கட்சியும் செய்யக் கூடிய ஒன்றுதான்

ஆனால் அதற்காக பெரும்பான்மை மதத்தவரின் மத உரிமையில் தலையிடாது

உங்கள் வீட்டு குழந்தை சாக்லேட் அதிகம் சாப்பிட்டால் வயிறு அழற்சி வரும் என்பது உங்கள் கொள்கை.

ஆனால் அது சாப்பிடும் போது அதை பிடுங்கி எறிய மாட்டீர்கள்.

காரணம் அது சாக்லேட் சாப்பிட அதற்கான உரிமை எப்போதும் உண்டு.

அதே கணக்குதான் திமுகவின் பகுத்தறிவு கொள்கையும்.

மக்கள் எந்த மதத்தையும் சாராமல் இருக்க வேண்டும் என்பது திமுகவின் கொள்கை.

ஆனால் மக்களுக்கு அவரவர் மதத்தை பின்பற்றும் உரிமை உண்டு, அந்த உரிமையை காக்கும் பொறுப்பு அரசுக்கு உண்டு என்பதையும் திமுக உணர்ந்தே இத்தனை வருடங்கள் ஆட்சி செய்து வந்திருக்கிறது

ஆகவே ஒபிசி  இளைஞர்களே கொஞ்சம் யோசியுங்கள்

நம் பெருமை மிகுந்த இந்து மதத்துக்கு ஒரு பிரச்சனையும் வரவில்லை

மூளைச்சலவை செய்பவர்கள் நம் ஒட்டை வாங்கிக் கொண்டு தமிழகத்தில் தமிழை அழித்து இந்தி மற்றும் வட இந்திய கலாச்சாரத்தை புகுத்த முயற்சி செய்கிறார்கள்

திமுக என்னும்“சமூக ஒற்றுமை மற்றும் சமூகநீதி மற்றும் மத நல்லிணக்க” பொன் முட்டையிடும் வாத்தின் கழுத்தை நெறிக்காதீர்கள்

கொஞ்சம் யோசிப்போம்

நன்றி: சு. புகழேந்தி

ரஜினியின் குடும்பம்

ரஜினியின் குடும்பம் காமெடி நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் அப்பா ஒய்.ஜி.பார்த்தசாரதி. புகழ்பெற்ற அமெச்சூர் நாடகக் குழுவை நிறுவி நடத்திய நடிகர். ப...