வெள்ளி, 25 டிசம்பர், 2020

தமிழக அரசியலில் பாஜகவின் திட்டங்கள்

தமிழக அரசியலில் 

பாஜகவின் திட்டங்கள்



எங்கேயும் , எப்போதும், எதிலும் இரண்டு இருக்கும் என்பது இயற்கையின் நியதி மூன்றாவது என்பது இரண்டிற்கும் இடைப்பட்டது என்று சொல்லலாம். இதை தவறிய  இயற்கை, இயற்கை மீறல் என்றும் சொல்லலாம்

எல்லாமே இப்படி ஜோடி, ஜோடியாய் இருத்தல் என்பது தவிர்க்க இயலாதது.

தமிழக அரசியலிலும் இந்த இரண்டு என்பது இருக்கிறது. 

திமுகவும், அதிமுகவும் இரு துருவங்கள்

இரண்டும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளும். அதே சமயம் மூன்றாவது ஒரு கட்சியை இங்கே அனுமதிக்காது.

இது கடந்த 50 வருட தமிழக அரசியல்.

சட்டமன்றத்தில் எதிர் கட்சி அந்தஸ்தை இழந்திருந்த காலத்திலும் கூட மக்கள் மன்றத்தில் இந்த இரு கட்சிகளும் செல்வாக்கோடு இருந்திருக்கின்றன, இருந்து வருகின்றன.

கட்சித் தலைமை வெற்றிடமாகும் போது காலத்தின் கட்டாயத்தில் இன்னொரு தலைமை அந்த இடத்தை நிரப்பி வந்திருக்கிறது.

அண்ணாவின் மறைவுக்குப் பின் பல போட்டிகளுக்கு இடையில் கலைஞர் தலைமை பொறுப்புக்கு வந்தார்,

எம் ஜி ஆர் மறைவுக்கு பின் ஜெயலலிதா அவ்விதமே பல போட்டிகளுக்கு இடையில்  தலைமை பொறுப்புக்கு வந்தார்

கலைஞர் மறைவுக்கு பின் ஸ்டாலின் எந்த வித போட்டியும் இல்லாமல்  தலைமை பொறுப்புக்கு வந்திருக்கிறார்

ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பின் இன்றைய முதல்வர்பழனிச்சாமி பல போட்டிகளுக்கு இடையில்  தலைமை பொறுப்பைக் கைப்பற்றிக் கொண்டார். இன்னமும் முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் போட்டி அரசியல் நடந்து வருகிறது.

இந்தப் போட்டி அரசியலை பின்னிருந்து பாஜக நடத்தி வருகிறது.

இப்போதைக்கு தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்க முடியாது என்பதை புரிந்து கொண்ட பாஜக 2026 ஆம் ஆண்டு வரும் தேர்தலையும், ஆட்.சியையும் மனதில் கொண்டு பாஜக திட்டம் தீட்டி அதை இப்போது இருந்தே செயல்படுத்தி வருகிறது.

பாஜகவின் திட்டங்கள் பல இருக்கலாம். அவற்றுள் இவையும் இருக்கலாம் என்ற கணிப்பில் சில கணிப்புக்களை கீழே காணலாம்

PLAN - A:

ஜெயலலிதா மறைவுக்குப் பின் பாஜக தான் அதிமுகவின் பின்புறம் இருந்து கொண்டு மறைமுகமாக ஆட்சி செய்து வருகிறது என்பதை அனைவரும் அறிவர்.

இனியும் அதையே தொடர அதிமுகவுடன் பாஜக கூடவே சில உதிரிக் கட்சிகளையும் சேர்த்துக் கொண்டு கூட்டணி அமைத்து 2021 தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை எதிர்த்து போட்டியிட திட்டம் வைத்திருக்கிறது.

தி மு க ஆதரவு ஓட்டுக்களை, அதாவது வழக்கமாக ஆளும் கட்சிக்கு எதிராக விழும் அதிருப்தி ஓட்டுக்களை சிதறடிக்கச் செய்யும் வேலையைச் செவ்வனே செய்ய பாஜகவின் B டீம் கட்சிகளான நாம் தமிழர், மய்யம், பெயர் வைக்கப்படாத ரஜினி கட்சி, உவைசியின் மஜ்லீஸ் கட்சி போன்றவை இறக்கி விடப்பட்டுள்ளன.  

இப்படி ஓட்டுக்கள் சிதறுவதால் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் பல இடங்களில் அதிமுக - பாஜக கூட்டணி வெல்லும். EVM ரிசல்டுக்கு இது ஒரு லாஜிக் ஆக இருக்கும்.

ஆனாலும் அறுதிப் பெரும்பான்மைக்கு சற்று குறைவான எம்.எல்.ஏ க்களுடன் அதிமுக இருக்கும். அதற்கு பாஜக அல்லது அதன் ஆதரவு அல்லக்கை கட்சிகளின் தயவு தேவைப்படும். 

இப்படி மறைமுகமாக அதிமுக ஆட்சி என்ற பெயரில் தமிழகத்தை பாஜக ஆட்சி செய்யும்.

இது PLAN - A

PLAN - B:

திராவிடகட்சிகளை எதிர்த்து தமிழகத்தில் அரசியல் செய்து அவர்களை வெல்ல முடியாது என்பதை பாஜக புரிந்து கொண்டு விட்டது. 

ஜாதி அரசியல் செய்ய முடிகிற தமிழகத்தில் மதவெறியை கிளறி மத அரசியல் செய்வதிலும் பெரும் தாக்கத்தை உண்டு பண்ண முடியாது என்பதையும் பாஜக புரிந்து கொண்டு விட்டது.

பக்தி வேறு, மதவெறி வேறு என்பதைப் பிரித்து அறிந்து கொண்டவர்கள் தமிழக மக்கள் என்பதையும் தாமதமாக பாஜக புரிந்து கொண்டிருக்கிறது.

இங்கு திராவிட எதிர்ப்பை விட பாஜக எதிர்ப்பு அரசியல்தான் செல்லுபடியாகும் என்பதையும் புரிந்து கொண்டு விட்டது.

அதற்காக அடுத்த கட்ட காட்சியை அரங்கேற்ற உள்ளது. 

அதன்படி  அதிமுக, பாஜக மோதிக் கொள்ளும் நாடகம் ஆரம்பமாகி விட்டது. அதிமுகவின் தலைமையை ஏற்க மறுக்கிற பாஜகவை அதிமுகவின் ஒரு பிரிவு இனி தீவிரமாக எதிர்க்கும். 

இதன் விளைவுகளைப் பார்த்து விட்டு படிப்படியாக பாஜக எதிர்ப்பு அரசியல் அதிமுகவில் வலுக்கும்.

மண்ணின் மைந்தர்களான ஓபிஎஸ்-சும், ஈபிஎஸ்-சும் கடுமையாக பாஜகவை எதிர்த்து வீரபுருஷர்களாகக் காட்டப்படுவார்கள்.

பாஜகவை எதிர்ப்பதில் திமுகவை விட ஒரு படி மேலே போய் குரல் கொடுப்பார்கள்.

மக்களும் மயங்கிப்போய், குழம்பிப் போய் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் மாறி மாறி வாக்களிப்பார்கள். 

B டீம்களும் ஓட்டுக்களை சிதறடிக்கும் வேலையினைச் செய்து முடிப்பர்.

EVM ரிசல்டுகளுக்கு இவை ஒரு லாஜிக் ஆக இருக்கும்.

அதிமுக குறைந்த மெஜாரிட்டியில் வெல்லும்.
தேர்தலுக்குப் பின் அதிமுக தன் பாஜகவுடன் நட்பு பாராட்டத் தொடங்கும்.
பாஜக மறைமுகமாக மீண்டும்ஆட்சி செய்யும். 
இது BJP PLAN B

இந்தத் திட்டம் சென்ற தேர்தலில் ஜெயலலிதா மற்றும் மோடியால் செயல்படுத்தப்பட்டது என்பதை நினைவில் கொள்ளவும்.

பாஜகவைக் கூட்டணியால் சேர்த்துக் கொண்டால் தனக்கும் சேர்த்து ஓட்டு விழாது என்பதை புரிந்து கொண்ட ஜெயலலிதா, சோ வின் ஆலோசனையினபடி பாஜக தவிர்த்த இதர சிறு கட்சிகளை தன் கூட்டணியில் இணைத்துக் கொண்டு நின்றார். தன்னுடைய இரட்டை இலை சின்னத்திலேயே தன் கூட்டணிக் கட்சிகளை நிற்க வைத்தார்.

திமுகவுக்குப் போகிற அதிமுக அரசின் அதிருப்தி ஓட்டுக்களைச் சிதறடிக்க மூன்றாவது அணி உருவாக்கப்பட்டது. 

தேர்தலுக்குப் பிறகு பாஜகவுடன் உறவைப் புதுப்பித்துக் கொண்டார்.
இது இப்பொழுதும் நடக்கலாம்.

காலங்கள் மாறும், ஆனால் காட்சிகள் மாறாது.

பாஜகவின் B டீம்களிலும் பாஜக எதிர்ப்பு அரசியல் பெரிதாக நடக்கிறது.
 B டீம் கட்சிகளிலிருந்து பாஜகவுக்கு அல்லது அதன் மற்ற கட்சிகளுக்கு கட்சித் தாவல் நடக்கிறது.

மய்யத்தின் பொதுச் செயலாளர் பாஜகவுக்குத் தாவுகிறார்.
நா.த.க விலிருந்து அதிமுகவுக்கு கலியாண சுந்தரம் தாவுகிறார்.

இன்னும் பல கட்சித் தாவல்கள் இதே போன்று நடக்கும்.
இது பாஜகவும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்கிற செய்தியை ஊருக்குள் கொண்டு செல்லும் முயற்சி

இவை எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதாகத்தான் தெரிகிறது.
மண்டையை மறைத்தவன், கொண்டையை மறைக்க மறப்பது விரைவில் தெரியும்.

இப்படிப் பலப் பல திட்டங்கள் பாஜகவிடம் இருக்கலாம்.
அவற்றை வெல்லும் திட்டங்கள் தி.மு.க வசம் இருக்கட்டும்.

மாநில சுயாட்சியை, உரிமையைக் கேட்டு இந்தியாவிலேயே முதன்முதலில் குரல் எழுப்பியது தி.மு.க. தான்

மீண்டும் அந்தக் குரல் எழுப்ப வேண்டிய சூழலை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது.

அடிமை அரசு எஜமானர்களுக்கு சேவகம்தான் செய்யும்.

திராவிட முன்னேற்ற கழகம் மட்டுமே மக்களுக்கு சேவகம் செய்யும்
உரிமைக்குக் குரல் கொடுக்கும்.

ஊருக்குள் அனைவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும்
நல்ல பல திட்டங்கள் நாட்டுக்கு வேண்டும்
அதற்கு திமுக ஆட்சியில் அமர வேண்டும்

அதற்கு ஆதரிப்பீர் திமுக கூட்டணியை

நாள் : 26.12.2020

KALAIGNAR'S GREAT ACHEIVEMENTS

KALAIGNAR'S GREAT ACHEIVEMENTS



1.Transport corporation started by Kalaignar

2. Transports were nationalized by Kalaignar

3. Electric power line connection provided to all villages by Kalaignar

4. Road facilities provided to 1500 populated villages by Kalaignar

5. Tamilnadu Slum Clearance Board started by Kalaignar

6. Tamilnadu Drinking Water Drainage Board started by Kalaignar

7. First free Eye treatment camp started by Kalaignar

8. Beggars Rehabilitation Center started by Kalaignar

9. Replaced the Hand-pulled rickshaw by Cycle rickshaw

10. Plan to give free concreate houses to the oppressed started by Kalaignar

11. Residential law (Rent fixing etc) brought by Kalaignar

12. The first police commission was set up in India brought by Kalaignar

13. Departments for BC, SC & ST started by Kalaignar

14. System for the backward in the constitution started by Kalaignar

15. Raised reservation for BC - 31%, SC - 18% in the Constitution by Kalaignar

16. Free education up to PUC given by Kalaignar

17. Holiday with wages declared for May day by Kalaignar

18. Holiday declared for Meelathu Nabi (Birth day of Mohammed Nabi) by Kalaignar

19. First Agricultural University at Coimbatore started by Kalaignar

20. Government Employees Family Welfare Scheme brought by  Kalaignar

21. Abolished top secret reporting system for government employees by Kalaignar

22. Free residences for Fisheries given by Kalaignar

23. “Mercy Home” for children in temples given by Kalaignar

24. Salem Steel Plant started by Kalaignar

25. Land Sale Definition Act given by Kalaignar

26.  Neyveli Coal power generation second unit started by

27. Petrol & Chemicals Industry at Thoothukudi  (SPIC) given by Kalaignar

28.  SIDCO created by Kalaignar

29. SPDCOT created by Kalaignar

31. Removal of tax on useless land by

32. Petition Justice Project given by Kalaignar

33. Poompuhar Shipping Company given by Kalaignar

34. Green Revolution Project given by Kalaignar

35. Kongu Velaalar community were inserted to Backward class by Kalaignar

36. Vanniyars ^ Seer marabinar communities were inserted to Most Backward class by Kalaignar

37. 20% special Reservation allotted for MBC by Kalaignar

38. 18% special Reservation allotted for SC by Kalaignar

39. 1% special Reservation allotted for ST by Kalaignar

40. Free education given to MBC cast peoples by Kalaignar

41. Free education up to Degree course for the backward class peoples below the income ceiling given by Kalaignar

42. Free education for Schedule Caste peoples by Kalaignar

43. Free Electricity to agriculture for the first time in India provided by Kalaignar

44. Legislated equal rights for woman in property implemented by Kalaignar

45. 30% reservation for women in government jobs given by Kalaignar

46. University of Animal and Animal Sciences for the first time in Asia started by Kalaignar

47. Marriage financial aid scheme for poor women started by Kalaignar

48. Widow Remarriage Financial Assistance Scheme started by Kalaignar

49. Direct Paddy Procurement Center stated by Kalaignar

50. Incentives and price hike in paddy procurement given by

51. Tamilnadu Civil Supplies Corporation started by Kalaignar

52. Financial Assistance Scheme for Pregnant Women given by Kalaignar

53. Women's self-help groups given in Tamilnadu by Kalaignar

54. Manonmaniyam Sundaranar University started by Kalaignar

55. Paavendar Barathidasan University started by Kalaignar

56. Dr.MGR Medical College given by Kalaignar

57. First tried Cauvery Judicial Court by Kalaignar

58. Local and Cooperative Elections were started by Kalaignar

59. 33% of local government posts are reserved for women started by Kalaignar

60. Madras name changed to Chennai by Kalaignar

61. Placement in Engineering and Medical College for first time widowed women by Kalaignar

62. Transparency policy for factories started by Kalaignar

63. Kalaignar first helped widowed women start businesses

64. Concreate road facility provided by Kalaignar

65. 24 hours medical service given by Kalaignar

66. 15% reservation for rural students in vocational education given by Kalaignar

67. Samaththuvapuram (For all Castes) given by Kalaignar

68. Mini bus service facility given for all villages given by Kalaignar

69. Dr. Ambedkar Law College was established for the first time in India by Kalaignar

70. Periyar University established by Kalaignar

71. Tamil Virtual University established to support for world Tamils by Kalaignar

72. Urudu Acadamy started by Kalaignar

73. Minorities economic growth system started by Kalaignar

74. Formers Market Scheme (Uzhavar Santhai) given by Kalaignar

75. Prevention project (Varumun kaappom Thittam) given by Kalaignar

76. Animal Care Program given by Kalaignar

77. 133 feet Thiruvalluvar Statue provided by Kalaignar

78.Tidel park at Chennai started by Kalaignar

79. Housing Board Plan given by Kalaignar

வியாழன், 24 டிசம்பர், 2020

கலைஞரின் நகைச்சுவை

 கலைஞரின் நகைச்சுவை







தி.மு.க என்ன செய்தது?

 தி.மு.க என்ன செய்தது?














திமுகவின் மீதான அட்டகத்தி குற்றச்சாட்டுக்கள்

 

திமுகவின் மீதான அட்டகத்தி குற்றச்சாட்டுக்கள்



பத்தாண்டுகளாக ஆட்சியில் இல்லாத திமுகவை எதிர்க்கும் மாற்றுக்கட்சி நண்பர்கள் முன்வைக்கும் அட்டகத்தி குற்றச்சாட்டுகள் மூன்று மட்டுமே. 

1. வாரிசு அரசியல்

2. ஊழல் அரசியல்

3. ஈழ அரசியல்

ஆனால் மறந்தும் கூட திமுகவின் “சாதனை அரசியல்" பட்டியலை பற்றி பேச மாட்டார்கள். அந்தோ பரிதாபம்!

1. வாரிசு அரசியல் கதை 

நடிகரின் மகன் நடிகரானால், டாக்டரின் மகன் டாக்டரானால், பொறியாளரின் மகன் பொறியாளரானால் தமிழ் கூறும் நல்லுலகில் சில மக்கள் “தமக்கு ஒரே குடும்பத்தில் இருந்து வாரிசாக கலைப்பசி போக்கிட ஒரு நடிகர், வைத்தியம் பார்க்க ஒரு டாக்டர், வடிவமைக்க ஒரு பொறியாளர் கிடைத்தாக பெருமிதம் கொள்வர்” ஆனால் ஒரே குடும்பத்தில் இருந்து வாரிசாக இச்சமூகம் மேம்பட ஒரு அரசியல்வாதி கிடைத்தால் மட்டும்  “வாரிசு அரசியல்” குற்றச்சாட்டை சொல்லிவிடும். 

ஆனால் ஏன் வாரிசு அரசியல் தவறில்லை / தவிர்க்க இயலாதது என்பதை காண்போம். 

இந்திரா காந்தி இறந்த போது யார் அடுத்த பிரதமர்? என்ற சலசலப்பு காங்கிரஸ் கட்சிக்குள் எழுந்தது. அப்போது ஒரு சில மூத்த தலைவர்கள் பிரதமர் பதவிக்கு ஆசைப்பட்டார்கள் ஆனால் வேறு சில மூத்த தலைவர்கள் காங்கிரஸ் கட்டுக்கோப்புடன் இருக்க வேண்டும் என்று விரும்பியதால் ராஜிவ் காந்தியை காங்கிரஸ் அரசியலுக்குள் கொண்டு வந்தனர்.

ராஜிவ் காந்தி காங்கிரஸ் அரசியலுக்குள் வந்த காரணத்தினால் தான் அக்கட்சி தலைவியை இழந்த சோகத்திலும் "இளம் ரத்தம்" பாய்ச்சப்பட்டு புத்துணர்ச்சி பெற்று 1984 ஆம் தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை பதிவு செய்தது. 

தலைவன் இறந்த பிறகு தொண்டன் தலைவன் ஆகலாமே? என்று சிலர் கூறுவதுண்டு. 

அதை கேட்பதற்கு நல்லாயிருக்கும் ஆனால் நடைமுறைக்கு சரி வராது. காரணம் உலகில் தலைவன் இறந்த பிறகு இரண்டு விடயங்கள் நடக்கும். ஒன்று பாகுபலி சண்டையில் தலைவன் இறந்த பிறகு காலகேயர்கள் போல சுக்குநூறாக ஓடிவிடுவது அல்லது அண்ணன் எப்ப சாவான்? திண்ணை எப்ப காலியாகும்? என்று நேரம் பார்ப்பது. 

இன்று அதிமுக கட்சி அழிவின் விளிம்பில் நிற்க காரணம் என்ன? ஜெயலலிதா நேரடி வாரிசு இல்லாமல் இறக்க இன்று அக்கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது என்பதை மறக்காதீர்.

2. ஊழல் அரசியல் கதை 

வீராணம் ஊழல், பாலம் ஊழல், அலைக்கற்றை ஊழல், சர்க்காரியா கமிஷன், வர்மா கமிஷன், ஜெயின் கமிஷன் என்று திமுகவுக்கு ஊழலில் பங்கு மற்றும் ராஜிவ் காந்தி படுகொலையில் பங்கு என்று திமுகவுக்கு எதிராக ஆதாரமில்லாத புகார் பட்டியல் அள்ளி வீசப்படுகிறது ஆனால் “திமுக தலைமை” மீது இதுவரை எந்த குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை. மற்ற கட்சி தலைவர் போல A1 குற்றவாளி யாரும் திமுகவில் கிடையா.

3. ஈழ அரசியல் கதை 

*31 ஜனவரித் 1976 இல் பிரதமர் இந்திராகாந்தி "இந்தியாவுக்கும் இலங்கைக்கும் நட்புறவு கெட கலைஞரின் ஈழ பாசம் காரணமாக இருக்கிறது" என குற்றம்சாட்ட அதற்கு கலைஞர் "ஆட்சிக் கலைப்புக்கு அதுவே காரணம் என்றால் அதைவிடப் பெருமையான ஒன்று திமுகவுக்கு இருக்க முடியாது" என்றார்.

15 செப்டம்பர் 1981 இல் இலங்கைத் தமிழர்களுக்கான பிரச்னையில் தலைவர் கலைஞர் அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டார். 

10 ஆகஸ்ட் 1983 இல் மத்திய அரசு ஈழத் தமிழர் பிரச்னையில் கவனம் செலுத்திட வலியுறுத்தி கலைஞர் மற்றும் இனமான பேராசிரியர் சட்டப் பேரவை உறுப்பினர் பொறுப்புகளை விட்டு விலகினர்.

13 மே மாதம் 1985 இல் இலங்கையில் தமிழ் ஈழ மக்களுக்கு ஆதரவு அளிப்பதற்காக தமிழகத்தில் தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பு (டெசோ) உருவாக்கப்பட்டு அதன் தலைவராக கலைஞர், உறுப்பினர்களாக பேராசியர், கி.வீரமணி, பழ.நெடுமாறன், அய்யணன் அம்பலம் ஆகியோர் இடம்பெற்றனர்.

16 மே 1985 இல் காஞ்சியில் நடைபெற்ற ஈழ ஆதரவு மறியல் போரில் கலைஞர் கலந்துகொண்டு கைதாகி சென்னைச் சிறையில் அடைக்கப்பட்டார். 

3 ஜூன் 1986 இல் கலைஞரின் பிறந்தநாள் ரத்து செய்யப்பட்டு அன்று உண்டியல் வழியே வசூலான 2,75,000 ரூபாய் நிதியை ஈழ போராளி இயக்கங்களுக்குத் கலைஞர் பகிர்ந்தளித்தார்.

6 நவம்பர் 1987 இல் சென்னையில் ‘ஈழத் தமிழர் உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு’ சார்பாக பல்வேறு கட்சியினர், கவிஞர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், மாணவர்கள், மகளிர் கலந்துகொண்ட மனித சங்கிலியை தி.மு.க நடத்தியது.

15 மார்ச் 1989 இல் பிரதமர் ராஜீவ்காந்தியை டெல்லியில் சந்தித்து ஈழத் தமிழர் பிரச்னை குறித்து கலைஞர் ஈழம் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார்.

31 ஜனவரி 1991 இல் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தி.மு.க அரசு நடக்கிறது என்ற காரணம் கூறப்பட்டு தி.மு.க அரசு கலைக்கப்பட்டது.

23 ஏப்ரல் 2008 இல் சட்டப் பேரவையில் "இலங்கையில் அமைதியை ஏற்படுத்த முறையானதொரு அரசியல் தீர்வு எட்டப்படுவதற்காக பயனுள்ள பேச்சுவார்த்தைகளுக்கு ஏற்பாடு செய்ய மத்திய அரசு முன்வரவேண்டும் என இப்பேரவை வலியுறுத்துகிறது” என்ற தீர்மானத்தை கலைஞர் நிறைவேற்றினார்.

24 ஏப்ரல்  2009 இல் ஈழ ஆதரவு நிலைப்பாட்டை உறுதி செய்திட கலைஞர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தம் நடைபெற்றது.

#என்றும்திமுக 

https://t.co/iKxBKzLp5g


நன்றி : Chocks@chockshandle

புதன், 23 டிசம்பர், 2020

ஏன் திமுகவை ஆதரிக்க வேண்டும்?

 ஏன் திமுகவை ஆதரிக்க வேண்டும்?


தமிழகத்தில் எத்தனையோ கட்சிகள் உண்டு அதற்குள் எத்தனையோ காட்சிகள் உண்டு!

ஆனால் ஒரு கட்சியை ஆதரிப்பவருக்கு அதில் ஏதாவது நன்மைகள் இருக்க வேண்டும்

அவ்வகையில் இன்னென்ன நன்மைகளை ஒரு கட்சி தமிழகத்தில் செய்தது என்றால் அது திமுக மட்டும் தான்

திமுக மீது சில தவறுகள் இருக்கலாம் அதை மேற்கோள்காட்டி பிரச்சாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் "எங்கள் மீது தவறுகள் இருந்திருக்கலாம் ஆனால் அடுத்து எங்கள் ஆட்சி அமையும் பட்சத்தில் நிச்சயம் அத்தவறுகள் நடக்காத வகையில் கவனத்தில் கொள்ளப்படும்" என்று பேசியது குறிப்பிடத்தக்கது.

எடப்பாடி ஆட்சியை கலைக்கும் யுத்தி ஸ்டாலினுக்கு தெரியவில்லை ஆனால் கலைஞர் இருந்திருந்தால் கலைத்திருப்பார் என சிலர் ஏளனம் பேசுகின்றனர் ஆனால் உண்மையில் கலைஞர் அப்படி கலைப்பவர் அல்ல கலைத்தவரும் அல்ல ஸ்டாலினும் அப்படி செய்யாமல் இருப்பதன் மூலமே அவர் ஒரு தலைவராக உயர்ந்து நிற்கிறார்.

ஏனெனில் திமுக அதிகாரத்தில் மட்டுமே அமர உருவான கட்சி அல்ல அது சமூக சீர்திருத்தத்தை முதன்மையாக கொண்ட கட்சி ஆகும் அவ்வகையில் தேர்தல் பக்கமே திமுக தொடங்கிய எட்டு வருடங்களுக்கு பிறகு தான் நுழைந்தது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

திமுக தொண்டர்கள் பிற கட்சிகளை விமர்சனம் செய்வதோடு நிற்காமல் நாம் செய்த சாதனைகளை மக்களுக்கு சொல்லி நினைவூட்டுவது நன்மை அளிக்கும்.

திமுகவின் ஆதார பூர்வமான சாதனை பட்டியல்கள் நீளமானது 

அவ்வகையில் திமுக வலைத்தளத்தில் இடம்பெற்ற ஒரு சில சாதனை பட்டியலை இங்கே பகிர்கிறேன்.

திமுக ஆட்சி சாதனைகள் 1969-1976

1. பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத் திட்டம்

2. இலவசக் கண்ணொளி வழங்கும் திட்டம்

3. குடிசை மாற்று வாரியம்

4. சுற்றுலா வாரியம்

5. குடிநீர் வடிகால் வாரியம்

6. ஆதிதிராவிடர் இலவசக் கான்க்ரீட் வீட்டு வசதித் திட்டம்

7. சிங்காரவேலர் நினைவு மீனவர் இலவச வீட்டு வசதித் திட்டம்

8. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கெனத் தனி அமைச்சகம்

9. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிதிராவிடர் இட ஒதுக்கீடுகளை உயர்த்தியது

10. பேருந்துகள் நாட்டுடைமை, போக்குவரத்துக் கழங்கங்கள் உருவாக்கம்

11. அனைத்துக் கிராமங்களுக்கும் மின் இணைப்புத் திட்டம்

12. விவசாயத் தொழிலாளர்களுக்குக் குடியிருப்பு மனை உரிமைச் சட்டம்

13. சேலம் உருக்காலைத் திட்டம்

14. 15 ஏக்கர் நில உச்சவரம்புச் சட்டம்

15. 1,78,880 ஏக்கர் உபரி நிலம் மீட்கப்பட்டு 1,37,236 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது

16. சிப்காட் தொழில் வளாகங்கள்

17. பூம்புகார் கப்பற் போக்குவரத்துக் கழகம்

18. ஆதரவற்ற குழந்தைகளுக்கு திருக்கோயில்களில் கருணை இல்லங்கள்

19. கை ரிக்‌ஷாவை ஒழித்து சைக்கிள் ரிக்‌ஷாக்கள் வழங்கும் திட்டம்

20. மாற்றுத் திறனாளிகள் நல வாழ்வுத் திட்டம்

21. அஞ்சுகம் அம்மையார் நினைவுக் கலப்புத் திருமனத் திட்டம்

22. அரசு ஊழியர்களுக்குக் குடும்பப் பாதுகாப்புத் திட்டம்

23. பணிக் காலத்தில் உயிரிழக்கும் அரசு ஊழியர் வாரிசுக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி

24. டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமணத் திட்டம்.

25. மாநிலத் திட்டக் குழு உருவாக்கம்

26. காவல்துறை மேம்பாட்டுக்கு காவல் ஆணையம்


திமுக ஆட்சி சாதனைகள் 1989-1991

1. தமிழக அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம், பொங்கல் முன்பணம் உள்ளிட்ட சலுகளைகள்

2. பெண்களுக்கு சொத்துரிமை வழங்கிடத் தனிச் சட்டம்

3. ஏழைப் பெண்கள் பயன்பெறும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவுத் திருமண உதவித் திட்டம் 

4. ஈ.வெ.ரா – நாகம்மையார் நினைவு மகளிர் இலவசப் பட்டப் படிப்புத் திட்டம்

5. ஆதிதிராவிடர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், வருமான வரம்புக்கு உட்பட்ட பிற்படுத்தப்பட்டோரில் பெண்களுக்குப் பட்டப் படிப்புவரை இலவசக் கல்வி

6. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்

7. கர்ப்பிணிகளுக்கு நிதியுதவி வழங்கும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதியுதவித் திட்டம்

8. மகளிர் திட்டத்தின் மூலம் மாநிலமெங்கும் மகளிர் சுய உதவிக் குழுக்கள்

9. வன்னியர், சீர்மரபினர் உட்பட மிகப்பிற்படுத்தப்பட்டோருக்கு 20% தனி இட இதுக்கீடு

10. ஆதிதிராவிடர்களுக்கு மட்டும் 18 விழுக்காடு இட ஒதுக்கீடு நிர்ணயித்து, பழங்குடி இனத்தவருக்கு 1 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு

11. மகளிர்க்கு அரசு வேலை வாய்ப்பில் 30 விழுக்காடு இட ஒதுக்கீடு

12. நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைப்பு


திமுக ஆட்சி சாதனைகள் 1996-2001

1. உயர்கல்வித் துறை உருவாக்கம்

2. நெடுஞ்சாலைத் துறை உருவாக்கம்

3. தகவல் தொழில்நுட்பத் துறை உருவாக்கம்

4. சமூக சீர்திருத்தத் துறை உருவாக்கம்

5. இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை உருவாக்கம்

6. சென்னையில் டைடல் பூங்கா அமைக்கப்பட்டது

7. உள்ளாட்சி அமைப்பில் மகளிர்க்கு 33% இட ஒதுக்கீடு

8. பெரியார் நினைவு சமத்துவபுரத் திட்டம்

9. உழவர் சந்தைத் திட்டம்

10. வருமுன் காப்போம் திட்டம்

11. கால்நடைப் பாதுகாப்புத் திட்டம்

12. பள்ளிகளில் வாழ்வொளித் திட்டம்

13. தாய்மொழி வளர்ச்சிக்குத் தனி அமைச்சகம்

14. விவசாயத் தொழிலாளர் நல வாரியம், தொழிலாளர் நலனுக்கெனத் தனித்தனி நல வாரியங்கள்

15. போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத் திட்டம்

16. தென்குமரியில் 133 அடி உயர அய்யன் திருவள்ளுவர் சிலை

17. கிராமங்கள்தோறும் சிமெண்ட் சாலைகள்

18. கிராமப்புறங்களுக்கு மினிபஸ் திட்டம்

19. ஆட்சிப் பொறுப்பேற்ற 6 மாதங்களுக்குள் தடைபட்டுக் கிடந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கும் கூட்டுறவு அமைப்புகளுக்கும் தேர்தல்

20. வரலாறு காணாத வகையில் ஆறு, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் தூர்வாரும் திட்டம்

21. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு திட்டம்

22. அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்

23. கிராமப்புற பெண்களுக்குத் தொழிற்கல்லூரிகளில் 15 விழுக்காடு இட ஒதுக்கீடு

24. சென்னை கோயம்பேட்டில் ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையம்

25. சேமிப்புடன்கூடிய மகளிர் சிறுவணிகக் கடன் திட்டம்

26. பள்ளிக் குழந்தைகளுக்கு சத்துணவுடன் முட்டை வழங்கும் திட்டம்

27. மதுரை மாநகரில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அமைக்கப்பட்டது

28. மாணவர்களுக்கு இலவசப் பேருந்து பயண அட்டை வழங்கப்பட்டது

29. 10,000 சாலைப் பணியாளர்கள் நியமனம்

30. 13,000 மக்கள் நலப் பணியாளர்கள் மீண்டும் நியமனம்


திமுக ஆட்சி சாதனைகள் 2006-2011

1. கிலோ அரிசி 1 ரூபாய் என மாதம் 20 கிலோ அரிசி வழங்கும் திட்டம்

2. பாமாயில் எண்ணெய், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, மைதா செரிவூட்டப்பட்ட கோதுமை மாவு சிறப்புப் பொது வினியோகத் திட்டத்தின் கீழ் குறைந்த விலையில் மாதந்தோறும் வழங்கும் திட்டம்

3. ஏழை, எளியோர் பயன்பெற ரூ.70 மதிப்புடைய 10 சமையல் பொருட்கள் ‘மானிய விலை மளிகைப் பொருட்கள்’ என ரூ.50க்கு வழங்கப்பட்டது

4. தமிழ்ப் புத்தாண்டை எல்லோரும் கொண்டாட ரூ.1 கோடியே 80 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு அரிசி, பருப்பு, வெல்லம் வழங்கப்பட்டது

5. 22 லட்சத்து 40 ஆயிரத்து 739 விவசாயக் குடும்பங்களுக்கு ரூ.7 ஆயிரம் கோடி கூட்டுறவுக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது

6. கூட்டுறவுக் கடன்களைத் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளின் பயிர்க் கடனுக்கு வட்டி ரத்து செய்யப்பட்டது

7. சாதாரண நெல், குவிண்டால் ஒன்றுக்கு ரூ.850, சன்ன ரக நெல் ரூ.880 என நடுவண் அரசு நிர்ணயித்த விலைகளை உயர்த்தி சாதாரண நெல் விலை ரூ.1,000 எனவும், சன்ன ரக நெல் விலை ரூ.1,050 எனவும் வழங்கப்பட்டது

8. உழுவோரும் நுகர்வோரும் பயன் அடைய 117 உழவர் சந்தைகள் புதுப்பொலிவுடன் தொடங்கப்பட்டது

9. கரும்பு விலை டன் ரூ.811 என்பதை நடுவண் அரசு இரண்டு ஆண்டுகளாக உயர்த்தாமல் இருந்த நிலையில் அதை கழக அரசு ரூ.1,000 ஆக உயர்த்தி போக்குவரத்துக் கட்டணமாக ரூ.90, சர்க்கரைக் கட்டுமான ஊக்கத் தொகை ரூ.30 சேர்த்து கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.1,220  வழங்கப்பட்டது

10. பயிர்க் காப்பீடு திட்டத்தில் 50 விழுக்காடு காப்பீட்டுத் தொகையாக அரசு மானியமாக வழங்கி ஊக்கப்படுத்தியதால் 2008 – 2009ம் ஆண்டில் 8 லட்சத்து 50 ஆயிரம் விவசாயிகள் அரசு மானியம் பெற்று காப்பீடு செய்தனர்

11. பயிர்க் காப்பீடு செய்யும் 25 லட்சம் விவசாயிகளுக்கு மானியமாக ரூ.40 கோடி

12. ஆதிதிராவிட விவசாயிகள் ‘தாட்கோ’ நிறுவனத்தின் மூலம் 31.03.2006-ம் ஆண்டுவரை பெற்ற கடன் தொகை வட்டி உட்பட ரூ.5 கோடியே 25 லட்சம் தள்ளுபடி செய்யப்பட்டது

13. காமராஜர் பிறந்தநாளை, கல்வி வளர்ச்சி நாள் என அரசாணை பிறப்பித்து பள்ளிகளில் கல்வி விழா நடத்தப்பட்டது

14. நில அடமானத்தின் மீது தொழில் செய்ய வழங்கப்பட்ட பண்ணை சாராக் கடன்களுக்கு வட்டி, அபராத வட்டி தள்ளுபடி செய்யப்பட்டு வாங்கியக் கடன் அசல் தொகையை செலுத்தினால் கடன் ரத்து செய்யப்பட்டது

15. தொழிற்கல்விச் சேர்க்கைக்கான இருந்த நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது

16. ஏழை மகளிர்க்கு பட்டப் படிப்புவரை வழங்கப்பட்ட இலவசக் கல்வி முதுகலைப் பட்டப் படிப்புவரை நீட்டிக்கப்பட்டது

17. கழக அரசு விவசாயிகளுக்கு வழங்கும் சலுகைகளால் உணவு தானிய உற்பத்தி 2005 – 2006ல் 61 லட்சம் டன் எனவும், 2008 – 2009ல் 91 லட்சம் டன் எனவும் உயர்ந்தது

18. கோவை, திருச்சி, நெல்லை ஆகிய இடங்களில் 3 புதிய அன்ணா தொழிற்நுட்பப் பல்கலைக் கழகங்கள் தொடங்கப்பட்டன

19. பள்ளிகளில் 12-ம் வகுப்புவரை தமிழ் மொழி கட்டாயப் பாடம் என சட்டம் இயற்றப்பட்டது

20. நூற்றாண்டு கனவை நனவாக்கி செம்மொழித் தமிழாய்வு மையம் சென்னையில் அமைக்கப்பட்டது

21. அரசு ஊழியர்களுக்கு 4 ஆண்டுகளில் 2 லட்ச ரூபாய்வரை நிதியுதவி வழங்கும் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது

22. மக்கள் பயன்பெற உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான முதலமைச்சர் கலைஞரின் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது

23. 45 ஆயிரத்து 943 கிலோமீட்டர் நீளச் சாலைகளில் மேம்பாட்டுப் பணிகள் செய்யப்பட்டன

24. 4 ஆயிரத்து 730 கிலோமீட்டர் நீளம்கொண்ட சாலைகள் இருவழித் தடங்களாக அகலப்படுத்தப்பட்டன

25. தமிழகத்தில் உள்ள சாலைகளில் 551 சிறு மற்றும் பெரிய பாலங்கள் ரூ .557 கோடி செலவில் கட்டப்பட்டன

26. தலவரி, தலமேல்வரி, தண்ணீர்த் தீர்வை அனைத்தும் ரத்து செய்யப்பட்டன

27. சென்னையில், 166 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உலகத்தரம் வாய்ந்த மாநில நூலகம் அமைக்கப்பட்டது

28. சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், 400 கோடி ரூபாய் செலவில் புதிய சட்டமன்ற தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டது

29. அடையாறு பூங்கா திட்டம், 100 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டது

30. 2 லட்சத்து 12 ஆயிரத்து 981 சத்துணவுப் பணியாளர்கள் பயன்பெற காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்கப்பட்டது

31. இராமநாதபுரம் பரமக்குடி கூட்டுக் குடிநீர்த் திட்டம் ரூ.630 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது

32. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் ரூ.1,330 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது

33. ஏறத்தாழ 3 லட்சம் இளைஞர்களுக்கு அரசு அலுவலகங்களில் புதிய வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்பட்டன

34. இஸ்லாமியர் சமுதாயம் மேன்மை பெற, 3.5 விழுக்காடு தனி உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது

35. வேலை வாய்ப்பு அலுவலகங்களில் புதுப்பிக்கத் தவறிய 2 லட்சத்து 70 ஆயிரம் இளைஞர்கள், 2001 முதல் பதிவு மூப்புடன் மீண்டும் புதுப்பித்து பயனடைந்தனர்

36. கடுமையான மாற்றுத் திறன் கொண்டோருக்கான உதவித்தொகை ரூ.200-ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தப்பட்டது. இதன் மூலம் 10 ஆயிரம் பேர் பயனடைந்தனர்

37. கட்டணம் உயர்த்தப்படாமல் ஏற்கெனவே விடப்பட்ட 9,248 புதிய பேருந்துகளுடன், மேலும் 3,500 புதிய பேருந்துகள் இயக்கப்பட்டன

38. அருந்ததியினர் சமுதாயத்தினரின் அவலம் தீர, 3 விழுக்காடு தனி உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது

39. மக்களுக்கு எந்தவொரு மதத்தில் இருந்தும் விடுபட உரிமை வேண்டும் என்பதற்காக, கட்டாய மதமாற்ற சட்டம் ரத்து செய்யப்பட்டது

40. சென்னை மதுரவாயல் – சென்னைத் துறைமுகம் இடையே ரூ.1,655 கோடி மதிப்பீட்டில் பறக்கும் சாலை திட்டம் தொடங்கப்பட்டது

41. ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு வங்கி நிதியுதவியுடன்  14 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட்டது

42. 2 வயது முதல் 15 வயதுவரையுள்ள 73 லட்சம் குழந்தைகள், மாணவ மாணவியருக்கு சத்துணவுடன் வாரம் 3 முறை முட்டையும் வாழைப்பழமும் வழங்கப்பட்டன

43. விவசாயத் தொழிலாளர் நல வாரியம் உட்பட 25  அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் 1 கோடியே  92 லட்சத்து 93 ஆயிரத்து 624 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர்

44. 6,87,319 87 அமைப்புசாரா தொழிலாளர் குடும்பங்களுக்கு 314 கோடியே 74 லட்சத்து 58 ஆயிரத்து 933 ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டது

45. 2 ஆயிரத்து 267 கோடியே 87 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் 1 கோடியே 4 லட்சத்து 42 ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப்பட்டதுடன் மேலும் 25 லட்சம் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்குவதற்காக ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டது

46. ரூ.220 கோடி செலவில் 11 லட்சம் குடும்பங்களுக்கு எரிவாயு இணைப்புடன் இலவச எரிவாயு அடுப்புகள் வழங்கப்பட்டு, ரூ.140 கோடி செலவில் 6 லட்சம் இலவச எரிவாயு அடுப்புகள் வழங்கப்பட்டன

47. 6 லட்சத்து 56 ஆயிரத்து 342 ஏழைக் குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன

48. சென்னைப் பெருநகரின் குடிநீர் பற்றாக்குறையை முற்றிலும் போக்கிட, வடசென்னை மீஞ்சூரில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது

49. மத்திய அரசு அனுமதித்துள்ள 908 கோடி கோடி ரூபாய் நிதியுதவியுடன் தென்சென்னை நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம்

50. மூன்றாவது காவல் ஆணையம் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆர்.பூர்ணலிங்கம் தலைமையில் அமைக்கப்பட்டு, அக்குழு வழங்கிய 444 பரிந்துரைகளில் 278 பரிந்துரைகள் ஏற்கப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டன

51. ஈரோடு, திருப்பூர், வேலூர், தூத்துக்குடி நகராட்சிகள் மாநகராட்சிகளாக நிலை உயர்த்தப்பட்டன

52.  அரியலூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்கள் தோற்றுவிக்கப்பட்டன

53. 50 வயது கடந்தும் திருமணமாகாமல் வறுமையில் வாடும் 6 ஆயிரத்து 444 ஏழைப் பெண்களுக்கு மாதம் 400 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டது

54. மாநகராட்சி, நகராட்சிகளின் நிதிச் சுமையைக் குறைத்து மக்களுக்கு வசதிகள் செய்திட, அவை அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.793 கோடி கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டது

55. தருமபுரியில் 'அரூர்' புதிய கோட்டம், திருவண்ணாமலையில் 'தண்டராம்பட்டு', திண்டுக்கல்லில் 'ஆத்தூர்' புதிய வட்டங்கள்

56. சமத்துவச் சமுதாயம் காணும் நோக்கில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம் நிறைவேற்றப்பட்டு பல்வேறு சாதிகளைச் சேர்ந்த 216 பேருக்கு அர்ச்சகர் பயிற்சிகள் அளிக்கப்பட்டன

57. 1,75,355 நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர்கள், விவசாயக் குடும்பங்களுக்கு 2,10,427 ஏக்கர் இலவச நிலம்

58. தமிழ்வழியில் பயிலும் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்க்கு அரசுப் பள்ளிகளிலும் அரசு உதவிபெரும் பள்ளிகளிலும் சிறப்புக் கட்டணங்கள் ரத்து செய்யப்பட்டன. 

11 லட்சம் மாணவ மாணவியருக்கு 10 மற்றும் 12ம் வகுப்புகளில் அரசுத் தேர்வுக் கட்டணங்கள் ரத்து செய்யப்பட்டன

59. பட்டப்படிப்பு பயிலும் 3 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலை அறிவியல் கல்லூரி மாணவர்களின் கல்விக் கட்டணம் ரத்து செய்யப்பட்டது

60. ஒரத்தநாடு, பெரம்பலூர், வால்பாறை, சுரண்டை, குளித்தலை, லால்குடி, மேட்டூர் ஆகிய இடங்களில் அரசின் புதிய கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டன

61. டெஸ்மா, எஸ்மா சட்டங்களை நீக்கி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பறிக்கப்பட்டிருந்த சலுகைகளை மீண்டும் வழங்கியதுடன் 6வது ஊதியக்குழு அறிக்கையை நடைமுறைப்படுத்தும் நோக்கில் ரூ.4,247 கோடி செலவில் இடைக்கால நிவாரணமாக 3 மாத ஊதியம் மற்றும் நிலுவைத் தொகை வழங்கப்பட்டது

62. அனைத்துச் சாதியினரும் ஒரே இடத்தில் வசிக்க ஏற்கெனவே உருவாக்கப்பட்டுள்ள 145 பெரியார் நினைவு சமத்துவபுரங்களுடம், மேலும் 95 சமத்துவபுரங்கள் அமைத்து 240 சமத்துவபுரங்களையும் தந்தை பெரியார் திருவுருவச் சிலைகளுடன் நிர்மாணிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது

63. நிலவரி, ஏக்கர் ஒன்றுக்குப் புன்செய் நிலங்களுக்கு 15 ரூபாய் என்பது 2 ரூபாய், நன்செய் நிலங்களுக்கு 50 ரூபாய் என்பது 5 ரூபாய் பெயரளவுக்கு வசூலிக்க ஆணை

64. படித்தும் வேலை வாய்ப்பு கிடைக்கப்பெறாத 3,53,488 இளைஞர்களுக்கு 156,15,30,604 ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டது

64. அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.2,033 கோடி செலவில் 10 ஆயிரத்து 96 ஊராட்சிகளில் அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன

65. ரூ.210 கோடி செலவில் 420 பேரூராட்சி, 30 நகராட்சி பகுதிகளில் அடிப்படைக் கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன

66. விழுப்புரம், திருவாரூர், தருமபுரி, சிவகங்கை, பெரம்பலூர் ஆகிய இடங்களில் 5 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன

67. 24 லட்சத்து 82 ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கு, 2 லட்சத்து 99 ஆயிரம் கல்லூரி மாணவர்களுக்கு இலவச பேருந்துப் பயணச் சலுகை

68. மகளிர் சுய உதவிக் குழுக்களைப்போலவே 2006-ம் ஆண்டுக்குப் பிறகு 19 ஆயிரத்து 885 இளைஞர் சுய உதவிக் குழுக்களும், 30 ஆயிரம் நகர்ப்புற சுய உதவிக் குழுக்களும், 10 ஆயிரத்து 772 விவசாயிகள் கூட்டுப் பொறுப்புக் குழுக்களும் ஏற்படுத்தப்பட்டு தேவையான நிதியுதவி வழங்கப்பட்டது

69. படிப்பைத் தொடர இயலாமல் இடையில் நிறுத்திய ஏழை மாணவர்களில், ஆண்டுக்கு 10 ஆயிரம் பேர்வரை வேலை வாய்ப்புகளுக்கேற்ற தொழிற்பயிற்சிகளைச் சமுதாயக் கல்லூரிகள் வழியே பெறுவதற்காக, திறந்தநிலைப் பல்கலைக் கழகம் மூலம், தலா ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்பட்டது

70. 10 லட்சத்து 48 ஆயிரம் மகளிர் உறுப்பினர்களைக் கொண்ட 61, 687 புதிய மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு 3,276 கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்கப்பட்டது

71. முதியோர், ஆதரவற்ற விதவைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை மாதம் ரூ.400 என உயர்த்தப்பட்டது

72. ‘வருமுன் காப்போம் திட்டம்’ மீண்டும் செயல்படுத்தப்பட்டு 9,000 மருத்துவ முகாம்களில் 91 லட்சம் ஏழை எளியோர் பயன்பெற்றனர். மேற்கொண்டு 4,500 முகாம்கள் நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது

73. மூவலூர் இராமாமிர்தம் அம்ம்மையார் திருமணத் திட்ட நிதியுதவி, ரூ.10,000 என்பது ரூ.20,000 என உயர்த்தப்பட்டு 2 லட்சத்து 14 ஆயிரத்து 189 ஏழைப் பெண்கள் பயன்பெற்றனர். மேற்கொண்டு  75 ஆயிரம் ஏழைப் பெண்கள் பயன்பெற ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது

74. கிராமப்புற ஏழைகளுக்கு உடனடி மருத்துவ வசதி கிடைக்கச் செய்திட இ.எம்.ஆர்.ஐ நிறுவனத்துடன் இணைந்து 32 கோடி ரூபாய் செலவில் ‘அதிநவீன அவசர கால மருத்துவ ஊர்தி சேவைத் திட்டம்’ தமிழ்நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டது

75. 1,05,494 கைத்தறி நெசவாளர்களுக்கும் 90,547 விசைத்தறி நெசவாளர்களுக்கும் சிறப்புத் தொகை செலுத்தி மின் இணைப்பு பெற்ற 2,39,511 விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்பட்டது

76. ஏறத்தாழ 2 லட்சத்து 5 ஆயிரத்து 350 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் 37 ஆயிரத்து 595 கோடி ரூபாய் முதலீட்டிலான 29 புதிய தொழிற்சாலைகள் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு அவற்றில் 8 தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன மற்றவை தொடங்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன

77. அருந்தமிழ்ச் சான்றோர் 62 பேரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு, 4 கோடியே 61 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டதுடன் நடப்பாண்டிலேயே மேலும் 25-க்கும் மேற்பட்ட அறிஞர்களின் படைப்புகளை நாட்டுடைமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது

78. ஏழை கர்ப்பிணிப் பெண்கள் ஊட்டச் சத்து பெறவேண்டும் என்பதற்காக ரூ.6,000 வீதம் 12,96,803 ஏழை மகளிர்க்கு 619 கோடியே 66 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டு, மேலும் 4 லட்சம் தாய்மார்கள் பயன்பெற ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது

79.திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, அரியலூர், திருக்குவளை, ராமநாதபுரம், ஆகிய 5 இடங்களில் புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டதுடன் திருவண்ணாமலை, தஞ்சாவூர், திண்டுக்கல், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டன

80. தமிழகத்தில் உள்ள 1,421 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தலா 3 செவிலியர்களைப் பணியமர்த்தி 24 மணி நேரமும் மருத்துவ சேவை அளிக்கப்பட்டதால் 2006ல் நடைபெற்ற மகப்பேறுகளின் எண்ணிக்கை 80,766ல் இருந்து 2008ம் ஆண்டு 2,41,078 ஆக மூன்று மடங்கு உயர்ந்தது

81. மூடிய அறுவை சிகிச்சைக்கு ரூ.20,000. சாதாரண திறந்த அறுவை சிகிச்சைக்கு ரூ.50,000. கடினமான திறந்த அறுவை சிகிச்சைக்கு ரூ.1 லட்சம் என அரசு நிதி உதவி வழங்கும் ‘இளம் சிறார் இதய அறுவை சிகிச்சை திட்டம்’.

மேற்கூறியவை போக திமுக ஆட்சிக்காலத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனை பட்டியல் இன்னும் நிறைய இருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்.


வேண்டும் ஆட்சி மாற்றம் அதற்கு வேண்டும் தி.மு.க

         என்பதை மறவாதீர்! மறந்தும் இருந்து விடாதீர்!

வாசித்தமைக்கு நன்றி தோழர்களே  !

https://t.co/yPJBHVIpS4

நன்றி : Chocks@chockshandle

ஞாயிறு, 20 டிசம்பர், 2020

கலைஞர் கருணாநிதியின் சாதனைகள்

 கலைஞர்  என்கிற மாமனிதர் கருணாநிதியின் சாதனைகள்


1.. போக்குவரத்து துறை என்ற துறையை உருவாக்கியது கலைஞர்


2. போக்குவரத்தை தேசியமையமாக்கியது கலைஞர்


3. மின்சாரம் அனைத்து கிராமங்களுக்கும் செல்ல வழித்தடம் அமைத்தது கலைஞர்


4. 1500 பேரை கொண்ட கிராமங்களுக்கும் சாலை வழித்தடம் அமைத்தது கலைஞர்


5. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அமைத்தது கலைஞர்


6. குடிநீர் வடிகால் வாரியம் அமைத்தது கலைஞர்


7. முதலில் இலவச கண் சிகிச்சை முகாம் அமைத்தது கலைஞர்


8. பிச்சைகாரர்கள் மறுவாழ்வு மையம் அமைத்தது கலைஞர்


9. கையில் இழுக்கும் ரிக்‌ஷா ஒழித்து இலவச சைக்கில் ரிக்‌ஷா கொடுத்தது கலைஞர்


10. இலவச கான்கிரீட் வீடுகளை ஒடுக்கப்பட்டோருக்கு கொடுக்கும் திட்டம் வகுத்தது கலைஞர்


11. குடியிருப்பு சட்டம் (வாடகை நிர்ணயம் போன்றவை) கொண்டுவந்தது கலைஞர்


12. இந்தியாவிலே முதன் முதலில் காவல் துறை ஆணையம் அமைத்தது கலைஞர்


13. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கென துறை அமைத்தது கலைஞர்


14. அரசியலமைப்பில் பிற்படுத்தபபட்டோருக்கான அமைப்பை அமைத்தது கலைஞர்


15. அரசியலமைப்பில் BC – 31%, SC – 18 % ஆக உயர்த்தியது கலைஞர்


16. P.U.C வரை இலவச கல்வி உருவாக்கியது கலைஞர்


17. மே 1, சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறையாய் அறிவித்தது கலைஞர்


18. வாழ்ந்த மனிதரான நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை விடுமுறையாய் அறிவித்தது கலைஞர்


19. முதல் விவசாய கல்லூரி (கோவை) உருவாக்கியது கலைஞர்


20. அரசு ஊழியர்கள் குடும்ப நல திட்டம் தந்தது கலைஞர்


21. அரசு ஊழியர்கள் மேலான ரகசிய அறிக்கை முறையை ஒழித்தது கலைஞர்


22. மீனவர்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்டம் தந்தது கலைஞர்


23. கோவில்களில் குழந்தைகளுக்கான ” கருணை இல்லம் ” தந்தது கலைஞர்


24. சேலம் இரும்பு தொழிற்சாலை அமைத்தது கலைஞர்


25. நில விற்பனை வரையரை சட்டம் அமைத்தது கலைஞர்


26. இரண்டாம் அலகு நிலக்கரி மின்உற்பத்தி நெய்வேலி கொண்டுவந்தது கலைஞர்


27. பெட்ரோல் மற்றும் ரசாயன தொழிற்சாலை தூத்துகுடி கொண்டுவந்தது கலைஞர்


28. SIDCO உருவாக்கியது கலைஞர்


29. SIPCOT உருவாக்கியது கலைஞர்


30. உருது பேசும் இஸ்லாமியர்களை பிற்படுத்தபபட்டோரில் தமிழ் இஸ்லாமியர்கள் போல் சேர்த்தது கலைஞர்


31. பயனற்ற நிலத்தின் மீதான வரி நீக்கம் கொண்டுவந்தது கலைஞர்


32. மனு நீதி திட்டம் தந்தது கலைஞர்


33. பூம்புகார் கப்பல் நிறுவனம் தந்தது கலைஞர்


34. பசுமை புரட்சி திட்டம் தந்தது கலைஞர்


35. கொங்கு வேளாளர் இனத்தை பிற்படுத்தபபட்டோரில்

இணைத்தது கலைஞர்


36. மிக பிறப்படுத்தபபட்டோரில் வன்னியர், சீர் மரபினரை சேர்த்தது கலைஞர்


37. மிக பிற்படுத்தபபட்டோருக்கு 20% தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்


38. தாழ்த்தப்பட்டோருக்கு 18% தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்


39. பழங்குடியினருக்கு 1% தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்


40.மிகபிர்படுத்தபபட்டோருக்கு இலவச கல்வி தந்தது கலைஞர்


41. வருமான உச்ச வரம்புக்கு கீழ் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இலவச கல்வி இளகலை பட்டப்படிப்பு வரை தந்தது கலைஞர்


42. தாழ்த்தப்பட்டோருக்கு இலவச கல்வி தந்தது


43. இந்தியாவிலே முதன் முறையாக விவசாயத்திற்க்கு இலவச மின்சாரம் தந்தது கலைஞர்


44. சொத்தில் பெண்ணுக்கு சம உரிமையை சட்டமாக்கியது கலைஞர்


45. அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 30 % இடஒதுக்கீடு தந்தது கலைஞர்


46. ஆசியாவிலே முதன் முறையாக கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைகழகம் அமைத்தது கலைஞர்


47. ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்


48. விதவை பெண்கள் மறுமண நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்


49. நேரடி நெல் கொள்முதல் மையம் தந்தது கலைஞர்


50. நெல் கொள்முதலில் ஊக்கத்தொகை மற்றும் விலை ஏற்றம் செய்தது கலைஞர்



51. தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் அமைத்தது கலைஞர்


52. கர்பிணி பெண்களுக்கு நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்


53. பெண்கள் சுய உதவி குழுக்கள் அமைத்தது கலைஞர்


54. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம் நிறுவியது கலைஞர்


55. பாவேந்தர் பாரதிதாசன் பல்கலைகழகம் நிறுவியது கலைஞர்


56. டாக்டர் MGR மருத்துவ கல்லூரி நிறுவியது கலைஞர்


57. முதன் முதலில் காவிரி நீதிமன்றம் அமைக்க முற்பட்டவர் கலைஞர்


58. உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு தேர்தல் கொண்டுவந்தது கலைஞர்


59. உள்ளாட்சி பதவிகளில் 33% பெண்களுக்கு இடஒதுக்கீடு


60. இரு பெண் மேயரில் ஒருவர் தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து வர செய்தது கலைஞர்

61. மெட்ராஸ், சென்னையாக்கியது கலைஞர்


62. முதல் தடவை விதவை பெண்களுக்கும் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரியில் இடம் அளித்தது கலைஞர்


63. தொழிற்சாலைகளுக்கான வெளிப்படை கொள்கை அமைத்தது கலைஞர்


64. முதல் தடவை விதவை பெண்கள் தொழில் தொடங்க உதவியவர் கலைஞர்


65. கான்கிரீட் சாலை அமைத்தது கலைஞர்


66. 24 மணி நேர மருத்துவ சேவை தந்தது கலைஞர்


67. தொழிற்முறை கல்வியில் கிராமபுற மாணவர்களுக்கு 15% இடஒதுக்கீடு


68. சமத்துவபுரம் தந்தது கலைஞர்


69. கிராமங்களில் மினி-பஸ் சேவையை கொண்டுவந்தது கலைஞர்


70. இந்தியாவிலே முதன் முறையாக டாக்டர். அம்பேத்கார் சட்ட கல்லூரி நிறுவியது கலைஞர்


71. பெரியார் பல்கலைகழகம் நிறுவியது கலைஞர்


72. உலக தமிழர்களுக்கு உதவ, தமிழ் மெய்நிகர் பல்கலைகழகம் தந்தது கலைஞர்


73. உருது அக்காடமி தந்தது கலைஞர்


74. சிற்பான்மையினர் பொருளாதார வளர்ச்சி அமைப்பு ஏற்படுத்தியது கலைஞர்


75. உழவர் சந்தை திட்டம் தந்தது கலைஞர்


76. வருமுன் காப்போம் திட்டம் தந்தது கலைஞர்


77. கால்நடை பாதுகாப்பு திட்டம் தந்தது கலைஞர்


78. 133 அடி திருவள்ளுவர் சிலை கன்னியாகுமாரியில்

வைத்தது கலைஞர்


79. டைடல் பார்க் சென்னையில் அமைத்தது கலைஞர்


80. வீட்டுமனை வழங்கும் திட்டம் தந்தது கலைஞர்


81. விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்ய உழவர் சந்தை திட்டம் தந்தது கலைஞர்


இன்னும் இன்னும் சொல்ல பட்டியல் நீளும்


எதிரே இருக்கிறவர்கள் அம்மாவும், அவர் வழி வந்தவர்களும் செய்த சாதனைகளை பட்டியலிட முடியுமா ?


அவர்கள் சொல்லும் ஒரே விஷயம்

திமுக ஊழல் கட்சி

கருணாநிதி ஊழல்வாதி


இதைத் தவிர சொல்ல அவர்களுக்கு  உருப்படியாய் ஏதும் இல்லை


கருணாநிதி போல ஆட்சி செய்வேனு ஏன் சொல்ல முடியாது.

 கருணாநிதி போல ஆட்சி செய்வேனு ஏன் சொல்ல முடியாது



MGR ஆட்சியை தருவேன் # ரஜினிகாந்த்

 MGR போல ஆட்சி செய்வேன் # கமல்ஹாசன்

நான் கருப்பு MGR # விஜயகாந்த் 

MGR போல ஏழைகளுக்காக பாடுபடுவேன் # விஜய்

MGR போல ஆட்சி ஆள என்னாலும் முடியும் # Tராஜேந்தர்

ஒருத்தன்கூட தலைவா் கருணாநிதி போல ஆட்சி செய்வேனு சொல்லல...

ஏன்னா அது எவராலும் முடியாது...

கோயம்பேடு பேருந்து நிலையம் வேண்டுமென்று எந்த சென்னை குடிமகனும் கொடி பிடிக்கவில்லை, 

👍மெட்ரோ ரயில் வேண்டுமென்று யாரும் கனவு காணவில்லை, 

👍வள்ளுவருக்கு கோட்டமும், சிலையும் வேண்டுமென்று எந்த தமிழ் ஆர்வலரும், குடிமகனும் குரல் கொடுக்கவில்லை,

👍கணினி என்பதைக் கேள்விபடுவதற்கு முன்னதாகவே டைடல் பார்க் வேண்டுமென எந்த மாணவர் சங்கமும் கொடி பிடிக்கவில்லை.

👍தங்களது கிராம சாலைகள் சிமென்ட்டில் அமைக்கப்படும் என எந்த கிராமவாசியும் கனவு கூட கண்டதில்லை,

👍பள்ளியில் படிக்க தம்பிள்ளைகளை இலவசமாகவே பேருந்தில் அரசு அனுப்பும் என பெற்றோர் நினைத்துக் கூட பார்த்ததில்லை, 

👍தம் நிலத்திற்கு தண்ணீர பாய்ச்ச அரசே இலவச மின்சாரம் தரும் என விவசாயி கனவு கண்டதில்லை 

தம் பொருளை தானே விற்க உழவர் சந்தை வரும், 

👉பட்டிக்காட்டிற்கும் மினிபஸ் வரும்,

👉நாமும் படித்து அமெரிக்காவில் வேலை பார்ப்போம் என எந்த கிராம மாணவனும் கனவு காணவில்லை, 

👉கிராம மாணவனுக்காக நுழைவுத் தேர்வை ரத்து செய்து தம் பிள்ளைகளும் மருத்துவராகும் என எந்த கிராம பெற்றோரும் கனவு கண்டதில்லை

👏ஆனால் இது அத்தனையும் நடந்தது, அதன் பின்னே தமிழகத்தின் வளர்ச்சி குறித்து கனவு காணும் பிதாமகன் ஒருவர் இருந்தார்.

👏சான்றோர்களும், கலைஞர்களும் அவர் பின்னே இருந்தனர்.

👉எந்த உயரிய தொழில்நுட்பமும் தமிழகத்தில்தான் அறிமுகப் படுத்தப்பட்டது,

👉சென்னை ஆட்டோமொபைல் நகரமாக மாற்றப்பட்டது.

👉சமத்துவபுரம் அமைக்கப்பட்டது,

👉குடிசை மாற்று வாரியம் அமைக்கப்பட்டது, 

👉நீர்நிலைகள் தவறாமல் தூர்வாரப்பட்டது, 

👉காவிரி நீர் பாசனத்திற்கு குறித்த நாளில் திறக்கப்பட்டது. 

👉பெண்கள் முன்னேற்றத்திற்கு, சொத்துரிமை,

👉மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திட்டம் முதல் மகளிர் குழுக்கள் வரை அமைக்கப்பட்டது.  

💪இதையெல்லாம் தாண்டி சாதிக்கக் கூடிய ஒரு கட்சி

ஆட்சி தமிழகத்தில் அமையும் என சொல்லுங்கள், 

💪உங்களுடன் அந்தக் கட்சிக்காக கொடி பிடிக்கிறேன், கோஷம் போடுகிறேன்.

💪அதுவரை எம் தலைவர் கலைஞரின் புகழ் பாடுவதும் 

💪அவரை கொண்டாடுவதும்தான் எனக்கு வேலை,

💪எங்கள் பிள்ளைகளுக்கு முதலில் நாங்கள் காட்டி மகிழ்வது உதயசூரியனையும் தலைவர் கலைஞரையும்தான்.   

வாழ்க கலைஞர்❤❤❤

வளர்க தமிழகம்....

பதிவு 

சண் சம்பத்குமார்

சனி, 19 டிசம்பர், 2020

கலைஞர் ஆட்சி என்றால் சாதாரணம் இல்லை

 ஏன் எல்லாம் எம்ஜிஆர் ஆட்சின்னு மட்டுமே சொல்றாங்க..                                   கலைஞர் ஆட்சின்னு சொல்றது இல்லை...

கலைஞர் ஆட்சி என்றால் சாதாரணம் இல்லை

14 வயசுல வீதியில் இறங்கி போராடணும்.                                                                      
15 வயசுல கையெழுத்துப் பிரதி ஆரம்பிக்கணும்.
16 வயசுல தனியாக கூட்டம் நடத்தணும்..
17 வயசுல மாணவர் மன்ற அமைப்பை தொடங்கனும்.


19 வயசுல சொந்தமா திரைக்கதை எழுதி நாடகம் போடணும்..
20 வயசுல பத்திரிக்கையில் எழுத்தாளராகனும்..
21 வயசுல அந்தப் பத்திரிகைக்கு துணையாசிரியராகனும்..
22 வயசுல சினிமாவிற்கு (ராஜகுமாரி) வசனம் எழுதி நண்பனை (MGR) கதாநாயகன் ஆக்கணும்..


24 வயசுல கொள்கை அரசியலிலிருந்து வாக்கரசியலிற்கு மாறனும்..
25 வயசிலேயே கவர்னருக்கு கருப்புக்கொடி காட்டி கைதாகனும்..
26 வயசுல புரட்சிகரமான வசனகர்த்தாவாக மாறனும்..


28 வயசுல தன் உழைப்பால் சம்பாதித்ததில் வீடு கார் வாங்கணும்...
29 வயசுல தண்டவாளத்தில் தலைவைத்து கைதாகி 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்கணும்...
30 வயசுல பிரபலமான பத்திரிக்கை ஆசிரியர் ஆகணும்..


32 வயசுல தேர்தலில் நின்று எம்எல்ஏ ஆகணும்..
33 வயசுல உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சியை கைப்பற்றி
அண்ணாவிடம் பரிசு வாங்கணும்..
34 வயசுல சொந்தமா சினிமா கம்பெனி துவங்கனும்..


36 வயசுல தன் பத்திரிக்கையை நாளிதழாக மாத்தணும்...
37 வயசுல சட்டசபை துணைத்தலைவராகணும்..
38 வயசுல கழகத்தின் பொருளாளர் ஆகணும்...
39 வயசுல அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தில் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்கணும்..


41 வயசுல விடுதலையான பிறகும் ஓய்வின்றி தீவிரமாக பிரச்சாரம் செய்யனும் ..
42 வயசுல மீண்டும் எம்எல்ஏவாகி அமைச்சராகணும்...
43 வயசுல சிறந்த அமைச்சர் என்று பெயர் எடுக்கணும்..


45 வயசுல துவக்கப்பள்ளி முதல் பியூசி வரை இலவச கல்வி கொண்டு வரணும்..
46 வயசுல அந்த இயக்கத்தின் தலைவராகனும்...
47 வயசுல மீண்டும் நடந்த தேர்தலில் தமிழக மக்களின் அமோக ஆதரவுடன் பிரம்மாண்டமாக வெற்றி பெற்று திருக்குவளை முத்துவேலர் கருணாநிதி எனும் நான் என்று சும்மா ஸ்டைலா கெத்தா பதவி ஏற்கனும்...

கழகத்தால் வளர்ந்து கருத்து வேறுபாடால் பிரிந்து ரசிகர் பட்டாளத்தை வைத்துக் கட்சி ஆரம்பிச்சு ஆட்சியைப் பிடிக்கிறதோ இல்ல இடையில கொள்கை பரப்புச் செயலாளரா வந்து அரசியல் வாரிசு ஆகிறதோ இல்ல


முப்பது வருஷமா சினிமால நடிச்சுட்டு வெற்றிடம் இருக்குன்னு வியாக்கியானம் பேசி சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வருவதற்கு பெயர் அரசியல் இல்லடா அது சுயநலம்,சந்தர்ப்பவாதம்.


இது அரசியல்
இந்த சமூகத்திற்கான அரசியல்.
இந்த மக்களுக்கான அரசியல்.
அதை நேர்மையாக செய்த மனிதர்

முத்தமிழ் அறிஞர் கலைஞர்.

 -  Jagan@IamSVJ



ரஜினியின் குடும்பம்

ரஜினியின் குடும்பம் காமெடி நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் அப்பா ஒய்.ஜி.பார்த்தசாரதி. புகழ்பெற்ற அமெச்சூர் நாடகக் குழுவை நிறுவி நடத்திய நடிகர். ப...