திருட்டு ரயிலேறிப் போன கண்ணதாசனை விட்டு விட்டு பழியை கலைஞர் மேல் போட்டானுங்க
ஒரு FIR க்கு கூட லாயக்கில்லாத சர்க்காரியா கமிசனை மட்டும் பேசி ரே, ராமமூர்த்தி, பால் கமிசனை மறைச்சிட்டானுங்க
ஈழத்தமிழர்களுக்காக திமுக செய்த எல்லா தியாகங்களையும் மறைத்து கலைஞரை வசைபாடுறானுங்க
சொத்துக்குவிப்பு வழக்கை சொத்து வழக்குன்னு சப்பைக்கட்டு கட்டி பேசினானுங்க
கச்சத்தீவை வேறு நாட்டிற்கு வழங்க ஒரு மாநில முதல்வருக்கு அதிகாரமில்லை எனத் தெரிந்தும், கலைஞர் போராடியதை மறைத்தும், 1977 ல் ஆட்சிக்கு வந்த MGR வழக்கு போட மறந்ததை கேள்வி கேட்காமல் கலைஞரையே திட்டுறானுங்க
90% இந்துக்கு குரல் கொடுக்கும் திமுகவை இந்துக்களின் எதிரி எனப் புளுகுறான்
உச்சநீதி மன்றம் தீர்ப்பு சொல்லியும் ஊழலே நடக்கலன்னு புளுகுறானுங்க
2001-06 ஜெ ஆட்சியில் எந்த மின் திட்டமும் தொடங்காததால் 2006-11ல் மின் பற்றாக்குறை வந்ததை மறைத்து பழியை திமுக மேலே போட்டு ஏமாத்திட்டானுங்க
Tasmac ஆரம்பிச்சி சாராய ஊழலில் சிக்கியவர்களை,
மது பர்மிட் முறையை ஒழித்தவர்களை,
மிடாஸ் கம்பெனி ஆரம்பித்தவர்களை,தமிழகம் பூரா மதுக்கடைகளை திறந்து மக்களை முழுநேர குடிகாரர்களாக மாற்றியவர்களை விட்டு விட்டு
1974ல் மதுக்கடை மூடிய கலைஞரால்தான் மக்கள் குடிக்கிறார்கள் என புளுகுறானுங்க
1986 முதல் 720 க்கும் மேற்பட்ட இடங்களில் மீத்தேன் எடுப்பதையும் , தமிழக அரசுக்கு அதன் மூலம் ராயல்டி வருவதையும் மறைத்து ஒரே ஒரு கிணறுக்கு (அதுவும் ஆய்வுக்கு மட்டும்) ஸ்டாலின் 2011ல் அனுமதித்ததை வைத்து தமிழகம் முழுவதும் மீத்தேன் எடுக்கப்படுவதற்கு ஸ்டாலினே காரணம் என புளுகுறானுங்க)
கலைஞர் செய்த சீர்திருத்தங்களையும் அவர் செய்த சாதனைகளையும் பற்றி 1000 பக்கத்துக்கு பட்டியலிடலாம்
அதிமுக செய்த சாதனைகளை ஒரு பிட்டுப் பேப்பரில் எழுத கூட
எதுவும் இல்லையே
ஆனால் அதிமுகவின் 10 வருட அதிகார துஷ்பிரயோகங்களை எழுத 1000 பக்கங்கங்கள் போதாதே..
By
Antony Parimalam

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக