வியாழன், 24 டிசம்பர், 2020

திமுகவின் மீதான அட்டகத்தி குற்றச்சாட்டுக்கள்

 

திமுகவின் மீதான அட்டகத்தி குற்றச்சாட்டுக்கள்



பத்தாண்டுகளாக ஆட்சியில் இல்லாத திமுகவை எதிர்க்கும் மாற்றுக்கட்சி நண்பர்கள் முன்வைக்கும் அட்டகத்தி குற்றச்சாட்டுகள் மூன்று மட்டுமே. 

1. வாரிசு அரசியல்

2. ஊழல் அரசியல்

3. ஈழ அரசியல்

ஆனால் மறந்தும் கூட திமுகவின் “சாதனை அரசியல்" பட்டியலை பற்றி பேச மாட்டார்கள். அந்தோ பரிதாபம்!

1. வாரிசு அரசியல் கதை 

நடிகரின் மகன் நடிகரானால், டாக்டரின் மகன் டாக்டரானால், பொறியாளரின் மகன் பொறியாளரானால் தமிழ் கூறும் நல்லுலகில் சில மக்கள் “தமக்கு ஒரே குடும்பத்தில் இருந்து வாரிசாக கலைப்பசி போக்கிட ஒரு நடிகர், வைத்தியம் பார்க்க ஒரு டாக்டர், வடிவமைக்க ஒரு பொறியாளர் கிடைத்தாக பெருமிதம் கொள்வர்” ஆனால் ஒரே குடும்பத்தில் இருந்து வாரிசாக இச்சமூகம் மேம்பட ஒரு அரசியல்வாதி கிடைத்தால் மட்டும்  “வாரிசு அரசியல்” குற்றச்சாட்டை சொல்லிவிடும். 

ஆனால் ஏன் வாரிசு அரசியல் தவறில்லை / தவிர்க்க இயலாதது என்பதை காண்போம். 

இந்திரா காந்தி இறந்த போது யார் அடுத்த பிரதமர்? என்ற சலசலப்பு காங்கிரஸ் கட்சிக்குள் எழுந்தது. அப்போது ஒரு சில மூத்த தலைவர்கள் பிரதமர் பதவிக்கு ஆசைப்பட்டார்கள் ஆனால் வேறு சில மூத்த தலைவர்கள் காங்கிரஸ் கட்டுக்கோப்புடன் இருக்க வேண்டும் என்று விரும்பியதால் ராஜிவ் காந்தியை காங்கிரஸ் அரசியலுக்குள் கொண்டு வந்தனர்.

ராஜிவ் காந்தி காங்கிரஸ் அரசியலுக்குள் வந்த காரணத்தினால் தான் அக்கட்சி தலைவியை இழந்த சோகத்திலும் "இளம் ரத்தம்" பாய்ச்சப்பட்டு புத்துணர்ச்சி பெற்று 1984 ஆம் தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை பதிவு செய்தது. 

தலைவன் இறந்த பிறகு தொண்டன் தலைவன் ஆகலாமே? என்று சிலர் கூறுவதுண்டு. 

அதை கேட்பதற்கு நல்லாயிருக்கும் ஆனால் நடைமுறைக்கு சரி வராது. காரணம் உலகில் தலைவன் இறந்த பிறகு இரண்டு விடயங்கள் நடக்கும். ஒன்று பாகுபலி சண்டையில் தலைவன் இறந்த பிறகு காலகேயர்கள் போல சுக்குநூறாக ஓடிவிடுவது அல்லது அண்ணன் எப்ப சாவான்? திண்ணை எப்ப காலியாகும்? என்று நேரம் பார்ப்பது. 

இன்று அதிமுக கட்சி அழிவின் விளிம்பில் நிற்க காரணம் என்ன? ஜெயலலிதா நேரடி வாரிசு இல்லாமல் இறக்க இன்று அக்கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது என்பதை மறக்காதீர்.

2. ஊழல் அரசியல் கதை 

வீராணம் ஊழல், பாலம் ஊழல், அலைக்கற்றை ஊழல், சர்க்காரியா கமிஷன், வர்மா கமிஷன், ஜெயின் கமிஷன் என்று திமுகவுக்கு ஊழலில் பங்கு மற்றும் ராஜிவ் காந்தி படுகொலையில் பங்கு என்று திமுகவுக்கு எதிராக ஆதாரமில்லாத புகார் பட்டியல் அள்ளி வீசப்படுகிறது ஆனால் “திமுக தலைமை” மீது இதுவரை எந்த குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை. மற்ற கட்சி தலைவர் போல A1 குற்றவாளி யாரும் திமுகவில் கிடையா.

3. ஈழ அரசியல் கதை 

*31 ஜனவரித் 1976 இல் பிரதமர் இந்திராகாந்தி "இந்தியாவுக்கும் இலங்கைக்கும் நட்புறவு கெட கலைஞரின் ஈழ பாசம் காரணமாக இருக்கிறது" என குற்றம்சாட்ட அதற்கு கலைஞர் "ஆட்சிக் கலைப்புக்கு அதுவே காரணம் என்றால் அதைவிடப் பெருமையான ஒன்று திமுகவுக்கு இருக்க முடியாது" என்றார்.

15 செப்டம்பர் 1981 இல் இலங்கைத் தமிழர்களுக்கான பிரச்னையில் தலைவர் கலைஞர் அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டார். 

10 ஆகஸ்ட் 1983 இல் மத்திய அரசு ஈழத் தமிழர் பிரச்னையில் கவனம் செலுத்திட வலியுறுத்தி கலைஞர் மற்றும் இனமான பேராசிரியர் சட்டப் பேரவை உறுப்பினர் பொறுப்புகளை விட்டு விலகினர்.

13 மே மாதம் 1985 இல் இலங்கையில் தமிழ் ஈழ மக்களுக்கு ஆதரவு அளிப்பதற்காக தமிழகத்தில் தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பு (டெசோ) உருவாக்கப்பட்டு அதன் தலைவராக கலைஞர், உறுப்பினர்களாக பேராசியர், கி.வீரமணி, பழ.நெடுமாறன், அய்யணன் அம்பலம் ஆகியோர் இடம்பெற்றனர்.

16 மே 1985 இல் காஞ்சியில் நடைபெற்ற ஈழ ஆதரவு மறியல் போரில் கலைஞர் கலந்துகொண்டு கைதாகி சென்னைச் சிறையில் அடைக்கப்பட்டார். 

3 ஜூன் 1986 இல் கலைஞரின் பிறந்தநாள் ரத்து செய்யப்பட்டு அன்று உண்டியல் வழியே வசூலான 2,75,000 ரூபாய் நிதியை ஈழ போராளி இயக்கங்களுக்குத் கலைஞர் பகிர்ந்தளித்தார்.

6 நவம்பர் 1987 இல் சென்னையில் ‘ஈழத் தமிழர் உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு’ சார்பாக பல்வேறு கட்சியினர், கவிஞர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், மாணவர்கள், மகளிர் கலந்துகொண்ட மனித சங்கிலியை தி.மு.க நடத்தியது.

15 மார்ச் 1989 இல் பிரதமர் ராஜீவ்காந்தியை டெல்லியில் சந்தித்து ஈழத் தமிழர் பிரச்னை குறித்து கலைஞர் ஈழம் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார்.

31 ஜனவரி 1991 இல் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தி.மு.க அரசு நடக்கிறது என்ற காரணம் கூறப்பட்டு தி.மு.க அரசு கலைக்கப்பட்டது.

23 ஏப்ரல் 2008 இல் சட்டப் பேரவையில் "இலங்கையில் அமைதியை ஏற்படுத்த முறையானதொரு அரசியல் தீர்வு எட்டப்படுவதற்காக பயனுள்ள பேச்சுவார்த்தைகளுக்கு ஏற்பாடு செய்ய மத்திய அரசு முன்வரவேண்டும் என இப்பேரவை வலியுறுத்துகிறது” என்ற தீர்மானத்தை கலைஞர் நிறைவேற்றினார்.

24 ஏப்ரல்  2009 இல் ஈழ ஆதரவு நிலைப்பாட்டை உறுதி செய்திட கலைஞர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தம் நடைபெற்றது.

#என்றும்திமுக 

https://t.co/iKxBKzLp5g


நன்றி : Chocks@chockshandle

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ரஜினியின் குடும்பம்

ரஜினியின் குடும்பம் காமெடி நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் அப்பா ஒய்.ஜி.பார்த்தசாரதி. புகழ்பெற்ற அமெச்சூர் நாடகக் குழுவை நிறுவி நடத்திய நடிகர். ப...