திங்கள், 23 மார்ச், 2026

ரஜினியின் குடும்பம்

ரஜினியின் குடும்பம்



காமெடி நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் அப்பா ஒய்.ஜி.பார்த்தசாரதி. புகழ்பெற்ற அமெச்சூர் நாடகக் குழுவை நிறுவி நடத்திய நடிகர்.



பார்த்தசாரதியின் சகோதரி வசுந்தராதேவி அந்தகாலத்து புகழ்பெற்ற சினிமா நடிகை.

வசுந்தராதேவியின் மகள்தான் தமிழில் இருந்து பாலிவுட் வரை சென்று வெற்றிக்கொடி நாட்டிய வைஜயந்திமாலா. இவருடைய மகன் சுசிந்தீராவும் நடிகர்தான்.


ஒய்.ஜி.மகேந்திரனின் அம்மா ராஜலட்சுமி, சென்னையின் புகழ்பெற்ற பத்மாசேஷாத்ரி பள்ளிகளின் நிறுவனர்.

பள்ளி ஆரம்பிப்பதற்கு முன்பாக குமுதம், இந்து பத்திரிகைகளில் பணிபுரிந்த த்திரிகையாளர் இவர். ராஜலட்சுமியின் பாட்டனார் ரங்கச்சாரி அவர்கள்தான் இந்தியாவில் சென்ஸார் போர்டையே கொண்டுவந்தவர்.

ராஜலட்சுமியின் சகோதரர் கே.பாலாஜி, புகழ்பெற்ற நடிகர் மற்றும் தயாரிப்பாளர்.




பாலாஜியின் மகன் சுரேஷ்பாலாஜியும் அப்பாவை போலவே புகழ்பெற்ற தயாரிப்பாளர்.


கே.பாலாஜியின் மகள் சுசித்ரா, மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலை திருமணம் செய்துக் கொண்டிருக்கிறார்.


மோகன்லாலின் மகன் பிரணவ்வும் இப்போது ஹீரோவாகி இருக்கிறார். கமல்ஹாசனின் ‘பாபநாசம்’ படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் இவர்.

Y G மகேந்திரன் மகள் மதுவந்தி, ஒரு நடிகை, நாடகக் கலைஞர், நடன அமைப்பாளர் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் (BJP) மாநில நிர்வாகக் குழு உறுப்பினர்

Y G மகேந்திரனின் மனைவி சுதாவின் தங்கை லதா.


இவர்தான் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை மணந்துக்கொண்டு லதாரஜினிகாந்த் ஆனார். சென்னையின் புகழ்பெற்ற ஆஸ்ரம் பள்ளியின் நிறுவனர் இவர்.


லதாவின் மகள் ஐஸ்வர்யா, இளம் நடிகர் தனுஷை மணந்து பிறகு பிரிந்து விட்டார். ஐஸ்வர்யாவும் சினிமா இயக்குகிறார்.


லதா ரஜினிகாந்தின் இன்னொரு மகள் செளந்தர்யாவும் தயாரிப்பு, இயக்கம்என்று திரைத்துறையில் ஈடுபட்டிருக்கிறார்.

தனுஷின் அண்ணன், செல்வராகவன், தமிழகத்தின் முன்னாள் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமனின் மகள் கீதாஞ்சலியை மணந்து பிறகு பிரிந்து விட்டார்


லதாரஜினிகாந்தின் தம்பி ரவிராகவேந்திராவும் நடிகர்.


ராகவேந்திராவின் மகன் அனிருத், இப்போது பிரபலமான இசையமைப்பாளர்


அனிருத்தின் சித்தி மகன் ரிஷிகேஷும் நடிகரே. ரிஷிகேஷ் 2017-ல் வெளியான 'ரம்' (Rum) திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர்


 ரிஷிகேஷின் அப்பா எஸ்.வி.ரமணன், அந்தகாலத்தில் ரஜினியை பேட்டியெடுத்து தூர்தர்ஷனில் ஒளிப்பரப்பிய பத்திரிகையாளர்.


எஸ்.வி.ரமணின் அப்பா கே.சுப்பிரமணியம், தமிழ் சினிமாவின் ஆரம்பகால இயக்குநர்களில் முக்கியமானவர்.


கே.சுப்பிரமணியத்தின் மகள் புகழ்பெற்ற நடனக்கலைஞர் பத்மா சுப்பிரமணியம்.


கே.சுப்பிரமணியத்தின் இன்னொரு மனைவிக்குப் பிறந்தவர் இசைக்கலைஞர் ‘அபஸ்வரம்’ ராம்ஜி.


கே.சுப்பிரமணியத்தின் இன்னொரு மகளான பாமாவின் மகன்தான் நடன இயக்குநர் ரகுராம் மாஸ்டர்.


ரகுராம் மாஸ்டரின் மனைவி கிரிஜாவும் நடன இயக்குநர்தான்.

கிரிஜாவின் சகோதரிகள் ஜெயந்தி, கலா, பிருந்தா ஆகியோரும் நடன இயக்குநர்களே.


ரகுராம் – கிரிஜா தம்பதியினரின் மகள் நடிகை காயத்ரி ரகுராம். இப்போது பாஜகவில் முக்கியப் பிரமுகராக இருக்கிறார்.


ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் மதுவந்தி, ஜெமினி - சாவித்திரி தம்பதியரின் மகள் டாக்டர் சாமூண்டிஸ்வரியின் மகன் அருணை மணந்திருக்கிறார்.

தலை சுத்துதா?


மன்னார்குடி ஃபேமிலியே தேவலாம் என்றுகூட தோன்றுமே?

ரஜினியை வலுக்கட்டாயமாக அரசியலுக்கு வரச்சொல்லி வற்புறுத்தியது எந்தப் பின்னணி என்று புரிகிறதா?

இதெல்லாம் நமக்கு வெளிப்படையாக தெரிந்த லிங்க். வெளிப்படையாக

தெரியாமல் படர்ந்த வலை எவ்வளவோ?

வைஜயந்திமாலா, தன்னுடைய சுயசரிதையில் தங்கள் குடும்பத்தை மைசூர் பரம்பரை என்கிறார். புகழ்பெற்ற அறிஞர்களும், அர்ச்சகர்களும் இவர்களது முன்னோர்களாம். இவர்களது முன்னோர் வந்தால் மைசூர் அரசர்களே எழுந்து நின்று வரவேற்பார்களாம். ஒருவேளை

ஜெயலலிதாவும் இதே குடும்பத்தின் வேறொரு கிளையில் உதித்தவரோ என்னமோ?

                                        ..........  ..........  ..........  ..........  ..........  ..........

புதன், 18 மார்ச், 2026

மாற்றம் வேண்டுவோர் கவனத்திற்கு

மாற்றம் வேண்டுவோர் கவனத்திற்கு:


தேர்தல் வந்துவிட்டால் ஊடகங்கள் மைக்கை நீட்டி மக்கள் முன் கருத்துக் கேட்பார்கள். அப்போது பொது மக்கள் இந்த ஆட்சி தொடரலாம் என்றோ இல்லை இந்த ஆட்சி வேண்டாம் என்றோ கூறுவார்கள். அதற்கு அவரவர் அவர்தம் நியாயங்களைக் கூறுவார்கள். 

ஆட்சி தொடரவேண்டும் என்று நினைப்பவர்கள் கடந்த ஐந்து/பத்தாண்டு காலத்தில் அரசாங்கள் செய்த நன்மைகள் அரசினால் தமக்கு கிடைத்த பலன்களைச் சொல்லி இதனால் இந்த ஆட்சியே தொடரட்டும் என்பார்கள். 

ஆனால் ஆட்சி மாற்றம் வேண்டும் என்று நினைப்பவர்களில் இரண்டு வகையினர் இருப்பார்கள். 

முதல் வகையினர் கடந்த ஆட்சியின் அவலங்களைச் சொல்லி இதனால்தான் இந்த ஆட்சி வேண்டாமென்கிறோம் என்பார்கள். 
ஆனால் இரண்டாம் வகையினருக்கு இதல்லாம் தெரியாது. அவர்கள் சொல்லும் ஒரே பதில் ‘மாற்றம் வேண்டும்’. 

நிற்க. இப்போது இரண்டு நபர்களைப் பற்றிப் பார்ப்போம். 

முதல் நபர் ஒரு கூலித் தொழிலாளி. மனைவியும் கிடைத்த வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார். பிள்ளைகள் அரசுப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் குடும்பமே தம் வாழ்க்கையில் எதாவது அதிசயம் நிகழ்ந்து இந்த வாழ்க்கை மாறிவிடாதா என்று பிரார்த்தித்துக் கொண்டிருப்பவர்கள். 

இரண்டாவது நபர் ஒரு மெட்ரோ நகரத்தில் ஐந்திலக்க சம்பளம் வாங்கிக் கொண்டிருப்பவர். குடும்பமும் குழந்தைகளும் உண்டு. அவர்களும் அவருடன் அதே மெட்ரோ நகரில்தான் இருக்கிறார்கள். இவர் இந்த நகருக்கும் வேலைக்கும் வந்து 5 ஆண்டுகள் ஆகி விட்டது என்று நினைத்துக் கொள்ளுங்கள். இப்போது இவரிடம் நீங்கள் கேட்டாலும் ‘எந்திரிக்கிறேன் சாப்பிடுறேன் வேலைக்குப் போறேன் தூங்குறேன். லைஃப் ஒரே மாதிரி இருக்கு ப்ரோ. ஒரு சேஞ்ச் வேணும்’ என்றுதான் சொல்லுவார். 

இருவருமே வாழ்க்கையில் மாற்றத்தை எதிர்நோக்கிக் கொண்டிருப்பவர்கள்தான். 

முதலாம்நபர் வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிட வேண்டும் என்பதற்காக மாற்றத்தை எதிர்நோக்குகிறார். 

இரண்டாம் நபருக்கு கேளிக்கை தேவைப்படுகிறது. அதற்காக இரண்டாம் நபர் அவர் வாழ்க்கையில் மாற்றத்தைக் கேட்கவே கூடாது என்றில்லை, வேறொரு கம்பெனிக்கு மாறலாம் ஆனால் அறவே தெரியாத ஒரு வேலைக்கு மாறுவது அவருக்கும் குடும்பத்துக்கும் நன்மை தருமா?

இப்போது மீண்டும் அரசியலுக்கு வருவோம். கமல் மக்கள் நீதி மையம் ஆரம்பித்தபோது இந்த ‘மாற்றம் வேண்டும்’ குரல் மேலெழும்பியது. பெரும்பாலும் மேல்தட்டு மக்கள். அவர்கள் self sustained ஆக இருந்து கொண்டு ஆட்சியில் ஒரு பரீட்சார்த்த முயற்சியை செய்து பார்க்க விரும்பினர். ‘குடுத்துத் தான் பாப்போமே ஏன் புதுசா யாரும் வரக்கூடாதா?’ வரலாம்தான். அண்ணாவுக்குப் பிறகு வந்த கலைஞரும் புதுசுதான். ஜெயலலிதாவுக்குப் பின் வந்த பழனிச்சாமியும் புதுசுதான். 

இப்போது இருக்கும் போன் பழையதாகி விட்டது என்று மாற்ற நினைத்தால்கூட இதை விட பெட்டராக வேண்டும் என்று நினைப்பவர்கள் கூட அரசியலில் அதை நினைப்பதில்லை. காரணம்? நான் நல்லாருக்கேன் எவன் எக்கேடோ கெட்டா எனக்கென்ன. ?

பத்துப்பேர் மாற்றம் வேண்டும் என்று தினமும் சொல்லும் போது நமக்கும் அது தோன்றத்தான் செய்யும். அதுதானே ஊடகத்தின் வேலையாக இருக்கிறது இப்போது. வாழ்க்கைக்கு அறம் என்பது எப்படி அடிப்படையோ ஒரு அரசியல் கட்சிக்கு கொள்கை அப்படி. 

ஒரு நகை வாங்கும் போது கூட ‘நாலு கடைக்கு போங்க. நாலு பக்கமும் எஸ்டிமேசன் ஸ்லிப் வாங்க கம்பேர் பண்ணி அதுக்கப்புறம் தேர்ந்தெடுங்க’ என்று விளம்பப் படுத்துகிறார்கள். 

நான் சொல்வதும் அதேதான். மாற்றம் வேண்டாம் என்று நானும் சொல்லவில்லை. 
மாற்றாக ஒன்றைத் தேடும் போது அந்த மாற்றம் கொண்டு வரப்போகும் நன்மை தீமைகளையும் ஆராயுங்கள் என்றுதான் சொல்கிறேன். 

அனைத்துக் கட்சிகளின் கொள்கைகளைப் படியுங்கள் அதன்பிறகு முடிவு செய்யுங்கள் மாற்றம் வேண்டுமா
வேண்டாமா என்று.

நன்றி. நாஞ்சில் வாழ வந்தார்
18, மார்ச் 2026

ஞாயிறு, 15 மார்ச், 2026

இதுதான் கடைசி தேர்தலா ?

இதுதான் கடைசி தேர்தலா ?


அனேகமாக இதுதான் நாம் சந்திக்கும் கடைசி தேர்தலாகக் கூட இருக்கலாம்.

ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே கட்சி, ஒரே சட்டம் என்று ஒற்றைக் குடையின் கீழ் ஒற்றை ஆட்சி எனும் யூத ஜியோனிசக் கொள்கையை நோக்கி நாம் நகர்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.


நாட்டின் மொத்தமுள்ள 28 மாநிலங்களில்  பாஜக தனியாக 14 மாநிலங்களிலும், அதன் கூட்டணிக் கட்சிகள் (TDP, JD(U), NPP, SKM போன்றவை ) 5-ன் மூலமும் பாஜகவே ஆட்சி செய்கிறது. 

மீதமுள்ள 9 மாநிலங்களில் INC, DMK, AITC, AAP, LDF, ZPM போன்ற எதிர்க்கட்சிகள்/கூட்டணிகள் ஆட்சி செய்கின்றன.

இப்பொழுது 2026 -ல் அஸ்ஸாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், பாண்டிச்சேரி என 4 மாநில, 1 யூனியன் பிரதேசங்களுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது.


இந்த ஐந்தில் கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் இம்மூன்றும்தான் பாஜகவை திணற வைக்கும் நிலையில் உள்ள மாநிலங்கள்.

 கேரளா வைப் பொறுத்தவரை, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாஜக என மும்முனை போட்டி யில் உள்ளது. 

அதையே சாதகமாக்கி பாஜக வளரும். MLA க்களை விலைக்கு வாங்கி ஆட்சியைக் கூடப் பிடிக்கலாம்.

 மேற்கு வங்கத்தில் SIR மூலம் 63 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். 

அங்கு திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், காங்கிரஸ், பாஜக என நான்கு முனைப் போட்டி நடக்கிறது. 

இதுவும் பாஜகவின் பிளான்தான். 

இது பாஜகவுக்கு சாதகமாகவே அமையும்.


தமிழ்நாட்டில் பாஜக, அதிமுகவை கைப்பற்றி விட்ட நிலையில் கிட்டத்தட்ட அனைத்து முக்கிய கட்சிகளும், லெட்டர் பேடு கட்சிகளும் திமுக கூட்டணிக்குள் சென்று விட்டன.

இங்கு பாஜக கூட்டணியில் face value உள்ள பிரமுகர்கள் என யாரும் இல்லை. 

மேலும் இந்தக் கூட்டணியால் அதிமுகவுக்கு சொல்லிக் கொள்ளும்படியான லாபம் இல்லை, சொல்லித்தக்க அளவில் ஓட்டு வங்கி எதுவும் இல்லாத பாஜகவுக்குத்தான் லாபம் என்பது எல்லோருக்கும் தெரியும்.

இதற்காகவே பல வருடங்களாக பாஜக நீண்ட கால திட்டத்தை வகுத்து அதன்படி ரஜினியை முயற்சித்தார்கள். 

அவர் உடல்நிலையை காட்டி ஒதுங்க, சீமான், கமலஹாசன், விஜய் என அடுத்தடுத்து களமிறக்கப்பட்டார்கள்.

சீமானால் பெரிதாக லாபமில்லையென்றாலும் ஓட்டுப் பிரிக்க உதவுகிறார். 

கமலஹாசன் திமுகவில் ஐக்கியமாகி விட்டார்.

அடுத்து களமிறக்கப்பட்ட *விஜய்* க்கு அவரின் ரசிகர்களிடமிருந்து கிடைத்த வரவேற்பைப் பார்த்த பாஜக அவரை சரியாக உபயோகப்படுத்தியே வருகிறது

அவர் கமலஹாசனைப் போல் பாஜகவுக்கு எதிராகவோ அல்லது தனியாகவோ போய் விடக் கூடாது என்பதற்காக, 

கிடைத்த கரூர் சம்பவத்தையும், ஜனநாயகன் பட வெளியீட்டில் தொந்தரவு, மனைவியின் விவாகரத்து விவகாரம், த்ரிஷா விவகாரம், CBI விசாரணை என அடுத்தடுத்து செக் வைத்து மிரட்டி கூட்டணிக்குள் இழுத்துக் கொண்டிருக்கிறது.

குடும்பத்தாரை பணயக் கைதிகள் போல் வைத்துக் கொண்டு தொழிற்சங்க தலைவரை மிரட்டி, தொழிற்சாலை முதலாளி ஊழியர்களின் சம்பள ஒப்பந்தத்தை முடித்துக் கொள்ளும் காட்சிகள் தமிழ் சினிமாவில் பல உண்டு.

அதைத்தான் பாஜக விஜய்யிடம் செய்து கொண்டிருக்கிறது.

 விஜய் கூட்டணிக்கு ஒத்துக் கொண்டால் துணை முதல்வர் / முதல்வர் பதவி என ஆசை காட்டப்படுகிறது.

 இல்லையேல் வழக்கு, தண்டனை என்பதோடு அவர் அரசியல் வாழ்க்கை முடிந்து விடும்.

அப்படி ஒத்துக் கொண்டால் திமுக Vs பாஜக கூட்டணிகள் மோதும். 


சிறுபான்மையினர் ஓட்டு பாஜக கூட்டணிக்கு கிடைக்காது என்பது பாஜகவுக்கு நன்றாக தெரியும்

அதற்காக அது வருந்துவதில்லை. அதை எதிர்பார்ப்பதுமில்லை.

ஒட்டு மொத்த சிறுபான்மையினரும் இந்து கட்சியான பாஜகவை ஒட்டு மொத்தமாக எதிர்க்கிறார்கள். ஆகவே இந்துக்களே ஒன்றுபடுங்கள் என்ற ஒற்றைக் கோஷத்துடன் பெரும்பான்மை இந்துக்களின் குறிப்பிடத்தக்க சதவீத ஓட்டுக்களை பாஜக தனக்கு அறுவடை செய்து கொள்ளும். 

இந்த ஃபார்முலாவில்தான் ஆந்திராவிலும், பல வட மாநிலங்களிலும் பாஜக ஜெயித்தது.

போதாக்குறைக்கு உவைசி போன்ற பாஜகவின் B டீம் ஆட்களே சிறுபான்மை வாக்குக்களைப் பிரித்து பாஜக கூட்டணிக்கு வலு சேர்ப்பார்கள்.

இதைச் சொல்லித்தான் பாஜக, எடப்பாடி மற்றும் விஜய்யிடம் சமாதானம் சொல்லியிருக்கிறது.

போட்டி எப்படி இருந்தாலும் " மிகவும் டஃப்பாக இருக்கிறது " என்ற கருத்து பரவலாக மீடியாக்கள் மூலம் தூவப்படும். 

 மக்கள் மனங்களில் அந்த எண்ணம் ஆழ விதைக்கப்படும்.

மேற்கொண்டு நடக்க வேண்டியதை EVM பார்த்துக் கொள்ளும்.

திமுக கூட்டணிக்குள்ளும் சலசலப்பை பாஜக உருவாக்கும். சில கட்சிகள் தனித்து பிரிந்து கூட போகலாம்.

திமுக வேட்பாளர் தேர்வு முடிந்த பிறகு திமுக கட்சிக்குள்ளேயும் பாஜக சலசலப்பை ஏற்படுத்தும்.

பழைய ஆட்களுக்கே தொடர்ந்து சீட் கொடுத்தால் இளைய தலைமுறையினரும், புதிய இளைஞர்களுக்கு சீட் கொடுத்தால் பெருசுகளும் கோபித்துக் கொள்வர். 

அவர்கள் கோபம் களத்தில் தெரியும். தேர்தல் முடிவுகளிலும் தெரியும். 

கூட்டணிக்குள்ளேயே உட்பூசல்கள் இருக்கும்.

இவற்றைத்தான் பாஜக எதிர்பார்த்து காய் நகர்த்துகிறது.

அவர்கள் நோக்கம் வெல்வதல்ல, மாறாக எதிர்பார்ப்பது ஒவ்வொரு தொகுதியிலும் இழுபறி இருப்பது போல் ஒரு பிம்பம் .

அந்த செயற்கை பிம்பத்தில் தேர்தல் நடக்க EVM அவர்களுக்கு உதவும்.

சட்டசபையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை அமையாமல் இழுபறி நிலையை உருவாக்கும்..

அந்த நிலையில் திமுக கூட்டணிக்குள் இருக்கும் பல MLA க்களை தன் சகல பலத்தாலும் மொத்த விலைக்கு பாஜக வாங்கி விடும். 

பாஜக கூட்டணி ஆட்சியமைக்கும். முதல்வர், துணை முதல்வர் என்ற பதவிக் கனவுகளில் சுற்றிக் கொண்டிருக்கும் எடப்பாடி, விஜய் இருவரையும் ஓரமாக உட்கார வைத்து விட்டு பாஜகவைச் சார்ந்தவர் முதல்வராவார்.

தன்னுடைய கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் MLA க்களும் பாஜகவுக்கு குழுவாக தாவுவார்கள்.

அதிமுகவும், தவெகவும் இத்தோடு அழிந்து காணாமல் போய் விடும்.

59 வருட திராவிட கட்சிகளின் ஆட்சிகளுக்கு முடிவுரை எழுதப்பட்டு தமிழ்நாட்டு மண்ணில் பாஜக வலுவாக கால் ஊன்றிக் கொண்டு தன் இந்துத்துவா கொள்கைகளை எவ்வித தயக்கமும், சமரசமும் இல்லாமல் நிறைவேற்றிக் கொள்ளும்

இதை பாஜக செய்யாது என்று எண்ண வேண்டாம்

தன் கொள்கையோடு ஒத்து இயங்கிய சிவசேனாவை உடைத்து பிரித்தது பாஜக.

45 வருட அரசியல் அனுபவம் கொண்ட பல முறை பீகார் முதல்வராக இருந்த, தற்போதும் தன் கூட்டணியில் முதல்வராக இருக்கும் நிதிஷ்குமாரை இறக்கி விட்டு பீகாரில் பாஜக ஆட்சியில் அமர்ந்திருக்கிறது.

பாஜக நாகரீக அரசியல் எல்லாம் செய்யாது

இந்த நிலையில் எடப்பாடி, விஜய் எல்லாம் பாஜகவுக்கு வெறும சுண்டைக்காய். 

வென்றாலும், தோற்றாலும் எடப்பாடி & விஜய் இவர்களைப் பொறுத்தவரை அவர்களின் அரசியல் வாழ்க்கைகள் முடிக்கப்பட்டு விடும்.

விஜய் மீண்டும் சினிமாவுக்கு போய் விடுவார்

எடப்பாடி பாஜகவில் சேர்ந்து விடுவார்

காங்கிரஸ் அகில இந்திய அளவில் ஏற்கனவே அஸ்தமனமாகி விட்டது

தமிழ்நாட்டில் மிச்சம் இருக்கும் கம்யூனிஸ்ட் போன்ற உதிரிக் கட்சிகளும் பெயரளவில் இயங்கும், சில காணாமல் போகும். சில பாஜகவோடு கலந்து கரைந்து போகும்.


மீதமிருக்கிற திமுகவும் பல வழக்குகளால் அலைக்கழிக்கப்பட்டு முடக்கப்படும் .


குரல் கொடுக்கக் கூட் முடியாத முடியாட்சியைப் போன்ற சர்வாதிகார ஆட்சி அமுலாகும் .  

அப்போது தேசம் முழுவதும் பாஜகவின் கைகளுக்குள் வந்து சேர்ந்திருக்கும்

அதன் பிறகு 

ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே அதிபர், ஒரே சட்டம்தான்

இவை அனைத்தும் நடக்கும் என்பது ஒரு கணிப்புதான் .

ஆனால் நடக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை.

அதனால்தான் சொல்கிறோம்

இதுதான் இந்தியா காணப் போகும் கடைசித் தேர்தலாகக் கூட இருக்கலாம்.


ப.பி

சனி, 14 மார்ச், 2026

வாட்ஸ் அப் - பதில் பகிர்வுகள்

வாட்ஸ் அப் - பதில் பகிர்வுகள்


N'..நமது குழுவில் அரசியல் கருத்துக்கள், எதிர் கருத்துக்கள் பலவும் பகிர்ந்திருக்கிறோம். அது ஜனநாயக கருத்துரிமை .
ஆனால் 2 நாட்களாக நிலைமை மோசமாகிறது.
நாம் கல்லுரித் தோழர்கள் .
நமக்குள் வெவ்வேறு கருத்துக்கள் இருக்கும். 
ஒருமித்த கருத்து என்பது குடும்பத்திற்குள்ளேயே இருக்காத போது குழுவுக்குள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
கட்சிகளின் தலைமைகளுக்கு ள் கருத்து மோதல்கள் வரும். மோதுவார்கள். பேரம் படிந்து சூட்கேஸ் மாறினால், அடுத்த தேர்தலில் கூட்டணி மாறும். எதிர்த்த கருத்துக்கள் யாவும் ஆதரிக்கும் கருத்துக்களாய் மாறும் அதிசயம் அங்கே நடக்கும்.
முறைத்துக் கொண்ட தலைவர்கள் கை குலுக்கிக் கொள்வார்கள்.
எதிர்த்து சண்டை போட்ட தொண்டர்கள் நிலை ? 

வாக்குச் சாமர்த்தியமும் , 
எழுத்துச் சாமர்த்தியமும் இருந்தால் இந்த உலகில் எதையும் நியாயப்படுத்த முடியும் ( கருத்து உபயம்: பாலகுமாரன்)
அதே போல் எதிலும் குறை காணவும் முடியும்.
(உ-ம்) ஆ. ராசாவின் பேச்சு .  
குறுக்கு வழியில் சசிகலா தயவில் பதவிக்கு வந்தவர் என்ற அர்த்தத்தில் கள்ள உறவில் பிறந்த குழந்தை என்று சொன்னது முதல்வரின் தாயைப் பற்றி பேசியதாக பரப்பப்படுகிறது. 
இந்த ஒன்றே உதாரணமாகும் பேச்சில் குறை காண்பதற்கும், பேச்சை நியாயப்படுத்துவதற்கும்.

அரசியலில் நிரந்தர எதிரியுமில்லை , நிரந்தர நண்பனுமில்லை என்றொரு உலக மகா ஃப்ராடுத்தனமான உண்மையை சொல்வார்கள். 
அடித்துக் கொள்கிற தலைவர்கள் சேர்ந்து கொள்வார்கள்.
அது அவர்களின் சுயநலம்
அவர்களுக்காக நாம் ஏன் வாட்ஸ் அப்பில் போராட வேண்டும்? நமக்குள் ஏன் பகைமையுணர்வை பெருக்கிக் கொள்ள வேண்டும்.

எல்லாம் சுயநலம்.
தாய் குழந்தைக்கு பால் கொடுப்பது கூட சுயநலம்தான் என்கிறார் அயன் ராண்ட்.

எல்லோரும் சுயநலத்தில்தான் இயங்குகிறோம்.
அது மதம், ஜாதி, இனம், குடும்பம், சொத்து, பணம், செல்வம், உயிர், உடமை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம், அந்த சுயநலத்தில்தான் இயங்குகிறோம்

எனக்கு பாஜக பிடிக்காது. அது சுயநலத்தால்தான். பாஜக மதவாத கட்சி என்பதால் அல்ல. அது முஸ்லீம் விரோத கருத்துக்கள் கொண்ட கட்சி என்பதால் எனக்குப் பிடிக்காது.
ஏனெனில் மத்தியில் ஆட்சிக்கு வரும் முன்பும் சரி, வந்த பின்பும் சரி பெரும்பாலான செயல்பாடுகள், திட்டங்கள் முஸ்லீம்களை குறி வைத்தே இருக்கிறது.
இன்னும் என் குடியுரிமையை பறிக்க முயற்சிக்கிறது. எதிர்த்து பேசினால் தேச விரோதி என்கிறது. அதனால் எனக்குப் பிடிக்காது.
ஒரு வேளை மற்ற நல்ல விஷயங்கள் செய்திருக்கிறது என்று ஆதரிப்போர் சொல்ல வந்தால் அவர்களிடம் நான் கேட்பது என் குடியுரிமையை சந்தேகப்படுத்தி, முடிந்தால் நாடு கடத்தி, பின் நல்ல திட்டம் கொண்டு வரும் என்றால் நான் ஏன் அதை ஆதரிக்க வேண்டும்.
இங்கே நான் என்பது நான் மட்டுமல்ல என்பதை கவனத்தில் கொள்ளவும்.
இது என் தரப்பு நியாயம், சுயநலம்.

ஆக நண்பர்களே நமக்குள் பிரிவினை வேண்டாம். போட்டி, பொறாமை, காழ்ப்புணர்வு, சச்சரவு வேண்டாம் என நினைக்கிறேன்.
அதற்காக நம்மை இன்னொருவர் கட்டளையிட்டு கட்டுப்படுத்துவதையும் வெறுக்கிறேன்
அவரவர் சுய கட்டுப்பாடு பேணி, ஒத்த நல்ல கருத்துக்களை மட்டும் குழுவில் பகிர்ந்து கொள்வது நல்லது என நான் கருதுகிறேன்
இதிலும் சுயநலம் உண்டு
குழுவில் எல்லோரும் நீடித்து இயங்க வேண்டும் என்பதே அந்த சுயநலம்.

நண்பர்கள் தங்களின் இது பற்றிய மேலான கருத்துக்களை பகிரலாம்

இனியவை உளவாக இன்னாத கூறல் கனியிருப்ப காய் கவர்ந்தற்று
நன்றி
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்
நூர்தீன்


மார்ச் 17, 2022

தமிழ்நாடு - பெயர் வரலாறு

தமிழ்நாடு - பெயர் வரலாறு

தமிழ்நாடு - காமராசர் - பக்தவச்சலம் - அண்ணா.

இந்த வரலாற்றை முழுவதுமாக அறிந்துகொள்ள முதல் இந்திய பிரதமர் நேரு ஆட்சி செய்த 1963 - ம் ஆண்டிற்கு செல்லவேண்டும் அங்குதான் அரசியல் ரீதியான முன்னெடுப்புகள் துவங்கின...

1963-ம் ஆண்டு அப்போதைய `மதராஸ் ஸ்டேட்' மாநிலத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்திட வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து, மாநிலங்களவையில் நடந்த விவாதத்தில் அன்றைய பிரதமர் நேரு "தமிழ்நாடு என்று பெயரை மாற்றுவதால் என்ன லாபத்தை அடையப்போகிறீர்கள்?'' என கேட்க அங்கு தொடங்கியது பிரட்சனை 
அதற்கு கோபமாக பேரறிஞர் அண்ணா "`பார்லிமென்ட்டை 'லோக்சபா' என்றும்... கவுன்சில் ஆஃப் ஸ்டேட்ஸை `ராஜ்யசபா' என்றும் மாற்றியதால்... நீங்கள் என்ன லாபம் அடைந்துவிட்டீர்கள்!'' என பதில் கொடுத்தார் (ராஜ்யசபா லோக்சபா பெயர்மாற்றம் அப்பொழுதுதான் நடந்திருந்தது குறிப்பிட தக்கது).
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தமிழ்நாடு `தமிழ்நாடா'க இருக்கவில்லை. அப்போது அதன் பெயர் மதராஸ் ஸ்டேட்தான். இன்று நமக்கு நம்முடைய மாநிலத்தை 'தமிழ்நாடு' என்று குறிப்பிடுவதில் எந்தத் தயக்கமும் இருக்கவில்லை. ஆனால் 84 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸுக்கு இருந்தது.
'மதராஸ் ஸ்டேட்' என்று அழைக்கப்படுவதையே அன்று ஆட்சி செய்துகொண்டிருந்த காங்கிரஸும் விரும்பியது நேருவும் விரும்பினார் காமராசரும் அமைதிகாத்தார்.
 
இதற்க்கு முன்பே சுதந்திரத்துக்குப் பிறகு, 1956, நவம்பர் 1 அன்று மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன.

அதுவரை `மதராஸ் மாகாணம்' என அழைக்கப்பட்டு வந்த பகுதியில், தமிழர்கள் வாழ்ந்த பகுதி மட்டும் `மத‌ராஸ் ஸ்டேட்' ஆனது. இந்த மாற்றம் குறித்து முன்பே அறிந்திருந்த பெரியார், 1955 அக்டோபர் 10ம் தேதி ஒரு அறிக்கையை வெளியிட்டார்.
அதில் ``தமிழ்நாட்டை விட்டு மலையாளிகள், ஆந்திரர்கள், கன்னடர்கள் பிரிந்து போன பின்பும் கூட தமிழகத்துக்கு 'தமிழ்நாடு' என்று பெயர் இருக்கக்கூடாது எனச் சிலர் சூழ்ச்சி செய்கிறார்கள். அந்தப்பெயரை மறைத்து 'சென்னை நாடு' என்று பெயர் சூட்டவும் போகிறார்கள் என்று தெரிகிறது.
தமிழ், தமிழ்நாடு என்ற பெயர் இந்த நாட்டுக்கு இல்லாதபடி எதிரிகள் சூழ்ச்சி செய்து வெற்றிபெற்றுவிடக்கூடாது'' என்று எழுதினார். அதன் பின் பெரியாரை தொடர்ந்து அண்ணா ம.பொ.சி ஆகியோர் அறிக்கை வெளியிட்டனர். இதற்கிடையில் 1952-ல் பொட்டி ஶ்ரீராமுலு ஆந்திர மாநில கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதமிருந்து உயிர்த்தியாகம் செய்தார். இது விருதுநகரில் காந்தியை போலவே ஆசிரமம் அமைத்து வாழ்ந்து வந்த காந்திய வாதியான சங்கரலிங்கனாரை பெரிதும் பாதித்தது.
அவரும் பொட்டி ஶ்ரீராமுலுவைப் பின்பற்றி, 1956 ஜூலை 27ம் தேதி அன்று 12 கோரிக்கைகளை முன்வைத்து விருதுநகர் தேசபந்து மைதானத்தில் உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். இந்த 12 கோரிக்கைகளில் ஒன்று, 'தமிழ்நாடு' எனப் பெயர்மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கை.
அன்றைய முதல்வர் காமராசரும் பிரதமர் நேருவும் சங்கரலிங்கனாரின் எந்தக் கோரிக்கையையும் ஏற்கவில்லை. இருப்பினும் விடாப்பிடியாக தன் உண்ணாவிரதத்தை வாரக்கணக்கில் தொடர்ந்தார் சங்கரலிங்கனார். இது எல்லாப் பக்கங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஊடகங்கள் எல்லாம் பக்கம் பக்கமாக எழுதின.
நாள்பட சங்கரலிங்கனார் கவலைக்கிடமானார். சங்கரலிங்கனாரின் உடல்நலம் கருதி அன்றைய மூத்த தலைவர்களான காமராசர், ம.பொ.சி, கக்கன், அண்ணா, ஜீவானந்தம் முதலான பலரும் அவரை நேரில் சந்தித்து சமாதானப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டனர். ஆனால் எதுவும் பயன்தரவில்லை.
சங்கரலிங்கனார் விடாப்பிடியாக 75 நாள்கள் உண்ணாவிரதமிருந்து, 1956 அக்டோபர் 13ம் நாளில் உயிர்த்தியாகம் செய்தார். உயிர்விடுவதற்கு முன்பு பழுத்த காங்கிரஸ்காரரான சங்கரலிங்கனார் ஒரு கடிதத்தில் "மக்களுடைய விருப்பத்திற்கு மாறாகச் செயல்படும் காங்கிரஸ் கட்சி ஒழிந்தே தீரும்" என்று எழுதினார்
உயிர்பிரிந்த பின்னும் சங்கரலிங்கனாரின் கோரிக்கைகளில் எதையுமே அன்றைய முதல்வர் காமராசரோ பிரதமர் நேருவோ நிறைவேற்றவில்லை. இதற்குப் பிறகு, தமிழ்நாடு பெயர் மாற்ற கோரிக்கை என்பது பிரதானமான ஒரு பிரச்னையாக உருவெடுத்தது. அதன் பின் 1957-ல் முதன்முறையாகச் சட்டமன்றத்தில் நுழைந்தபோது, பெயர்மாற்றம் கோரிக்கையை முன்வைத்து சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தது. ஆனால், அந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக 42 வாக்குகளே பதிவாயின. எதிர்ப்பாக 127 வாக்குகள் பதிவாகின. ஆனாலும் தொடர்ந்து தமிழ்நாடு கோரிக்கையை தி.மு.க முன்னெடுத்தது.
1961ல் அப்போதைய சோஷலிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்த சின்னதுரை மீண்டும் தமிழ்நாடு பெயர்மாற்ற தீர்மானத்தைச் சட்டமன்றத்தில் முன்னெடுத்தார். இதையொட்டி ம.பொ.சியின் தமிழரசு கட்சி, தமிழகம் முழுக்கப் பல்வேறு போராட்டங்களை நடத்தியது.
காமராஜர், பெயர்மாற்றம் சாத்தியமில்லை என்று அறிவிக்காமல், "அரசின் கடிதப்போக்குவரத்தில் மட்டும் தமிழ்நாடு என்று குறிப்பிடலாம்" என்று சமாதானம் பேசினார். ஆனால், அதை ஒப்புக்கொள்ள யாரும் தயாராக இருக்கவில்லை மீண்டும் அதேஆண்டில் மாநிலங்களவையில் மேற்குவங்கத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் தலைவர் புபேஷ் குப்தா, தமிழ்நாடு பெயர் மாற்ற கோரிக்கையை முன்வைத்து தனிநபர் மசோதாவைக் கொண்டுவந்தார். அதே சமயத்தில் அவையில் உறுப்பினராக இருந்த அண்ணாவும் ``வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகம்” என்ற தொல்காப்பிய வாசகத்தையும், "இமிழ்கடல் வேலியை தமிழ்நாடாக்கின” என்ற சிலப்பதிகாரப் பாடலையும் சுட்டிக்காட்டி பேசினார். இருந்தும் புபேஷ் குப்தாவின் மசோதா தோல்வியைத் தழுவியது!. அதன் பின் தமிழக முதல்வராக வந்த பக்தவச்சலம் அவர்கள் திமுக உருப்பினர் இராம.அரங்கண்ணல் சட்டமன்றத்தில் பெயர்மாற்றத்தை வலியுறுத்தி கொண்டு வந்த தீர்மானத்திற்கு பேரை மாற்றினால் ஒப்பந்தங்களை ஆவணங்களை எல்லாம் மாற்ற வேண்டும்'' என்று மறுத்தார் இதற்கு ஆர்.வெங்கட்ராமன். ``கோல்ட்கோஸ்ட் என்று பெயர் கொண்ட நாடு கானா என மாறிவிட்டதே, அங்கே இந்தச் சிரமங்கள் எல்லாம் இல்லையே'' என்று சுட்டிக்காட்ட தீர்மானம் தோல்வியை தழுவியது.
அதிகாரத்தின் இரும்புக் கதவுகளை உடைக்க தி.மு.கவேதான் அதிகாரத்திற்கு வரவேண்டியிருந்தது. தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு 1967 ஜூலை 18ம் தேதி 'மதராஸ் ஸ்டேட்' என்ற பெயரை ‘தமிழ்நாடு’ என்று மாற்றுவதற்கு அரசியல் சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும்” என்கிற தீர்மானம் அன்றைய முதல்வர் பேரறிஞர் அண்ணாவால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்திலும் இதற்கான சட்ட முன்முடிவு 1968 நவம்பர் 1ல் நிறைவேறியது.அதிகாரபூர்வமாக 1968ம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி பாலர் அரங்கத்தில் பெயர்சூட்டுவிழா நடைபெற்றது. 
பத்தாண்டுகளாக இந்தக் கோரிக்கைக்காக இறுதிவரை போராடிய அண்ணா உடல் நலிவடைந்த நிலையிலும் உற்சாகமாக விழாவில் கலந்துகொண்டார்.

வரலாறு இப்படி இருக்க அண்ணன் சீமான் இதில் காமராசர் செய்ய தவறியதையோ அண்ணா 10 ஆண்டுகள் போராடி பேற்றதையோ சொல்லாமல் பிழைப்புவாத கேவலமான அரசியல் செய்கிறார்.


- தோழர் prabagaran_P
                        ..............,,,,

அக்டோபர் 7, 2021

வியாழன், 19 பிப்ரவரி, 2026

பெரியார் - பிராமணருக்கு எதிரானவரா ?


1964-ஆண்டு கரூர் வந்த பெரியார் அவர்களை காண ஒரு அய்யர் பூணூலை மறைக்க ஒரு துண்டை போர்த்திக் கொண்டு வந்தார்.


இதைக் கண்ட தொண்டர்கள் ஆவேசப்பட்டு, 'உனகென்னையா இங்கே வேலை' என்று கேட்க..


'நான் ராமசாமி நாயக்கரை பார்க்கணும். அது தான் வேலை.' என்றவுடன், 


'அதெல்லாம் பார்க்க முடியாது நீங்கள் திரும்பிப் போங்கள்' என்று சொன்ன சொல் அய்யாவின் காதில் விழுந்தது.


வெகுண்டு வெளியே வந்த அய்யா, நடந்ததைப் புரிந்து கொண்டு, தன் தோழர்களை அழைத்து..


"ஏனப்பா நீங்கள் எல்லாம் சுயமரியாதைக்காரர்கள் தானா? ஒருவர் நம்மைத் தேடி வந்தால் அவரை அழைத்து உபசரிக்க வேண்டாமா? இப்படி நீங்கள் செய்வதால் நம் கொள்கைக்கு எவ்வளவு பெரிய இழுக்கு தெரியுமா? தனிப்பட்ட எந்த ஒரு பார்ப்பனரும் நமக்கு எதிரி கிடையாது" எனக் கண்டிப்பு காட்டி விட்டு..


அய்யா அந்த அய்யரிடம் நடந்ததற்கு மன்னிப்பு கேட்டு, உள்ளே அழைத்து விவரம் கேட்டார்.


வந்தவர் "நாயக்கர்வாள் எனக்கு வயது 65. மனைவி இறந்து விட்டாள். பிள்ளைகள் கிடையாது. எங்கள் வீடு அகலம் 64 அடி. அதில் என் அண்ணன் பங்கு 32 அடி.. 


அதை அவன் உங்கள் கட்சிக்காரருக்கு விற்று விட்டான். வாங்கிய உங்கள் தொண்டர் கொல்லைப்பக்கம் வேலியை கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்தி, இப்போது எனக்கு வெறும் 2 அடி மட்டுமே உள்ளது.


வயதான இந்தக் காலத்தில் அவசரமாக என்னால் கழிவறைக்குக் கூட போக முடியவில்லை.


நான் ஓய்வுபெற்ற ஆசிரியன். எனக்கு பென்ஷன் மாதம் 6 ரூபாய் தான் கிடைக்கிறது. 


உங்களிடம் சொன்னால் நல்லது செய்வீர்கள் என்று என் உறவினர் சொன்னார்.அது தான் வந்தேன்" என்றார்..


இதைக்கேட்டு வேதனைப்பட்ட அய்யா, தொண்டர்களிடம் 'யாரப்பா அந்த அயோக்கியன்' என்று கேட்டார்.. 


'அய்யா இன்று இந்த கூட்டமே அவர் எற்பாடு தான்.'


என்றவுடன்.. கூட்டி வாருங்கள் அவரை என்றார்... 


அந்த தோழர் வந்து நின்றவுடன் அய்யா அவரிடம்...


"நீங்க நாளைக்கே வேலியை அவிழ்த்துக் கட்டி, அவருக்கு 32 அடி கொடுக்கணும். அதிலுள்ள மரம் எதையும் வெட்டக் கூடாது. அவருக்கு ஒரு பைசா கூட செலவு வைக்கக் கூடாது.


எந்த ஒரு சாக்குபோக்கு சொல்லியும் இந்த காரியத்தைத் தள்ளிப் போடக் கூடாது.போ.."

-என்றார்.. 


10 நாட்கள் கழித்து அந்த அய்யர் சென்னை சென்று அய்யா அவர்களுக்கு கூடை நிறையப் பழங்கள் வாங்கிக் கொண்டு, நேரில் பார்த்து நன்றி கூறினார்.. 


பழங்களை வாங்க மறுத்த பெரியார், 


"நீங்கள் செய்தது தவறு. தப்பு செஞ்சவன் என் கட்சிக்காரன். அதற்கு ஏன் நீங்கள் எனக்குப் பழம் தரணும்? இது போன்ற செயல்களால் தான் லஞ்சம் ஆரம்பமாகிறது. 


நீங்கள் நன்றி சொல்ல ஒரு அஞ்சலட்டை போதுமே? உங்கள் 6 ரூபாய் வருமானத்தில் ரயில் வண்டிக்கு 3 ரூபாய், இந்தப் பழங்கள் 20 ரூபாய் இருக்கும் இப்படிச் செய்யலாமா?" 


-என்று சொல்லி அவருக்கு 30 ரூபாய் கொடுத்து, வாசல் வரை வந்து அனுப்பியவர்


அவர் தான் #பெரியார்..

ரஜினியின் குடும்பம்

ரஜினியின் குடும்பம் காமெடி நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் அப்பா ஒய்.ஜி.பார்த்தசாரதி. புகழ்பெற்ற அமெச்சூர் நாடகக் குழுவை நிறுவி நடத்திய நடிகர். ப...