புதன், 23 டிசம்பர், 2020

ஏன் திமுகவை ஆதரிக்க வேண்டும்?

 ஏன் திமுகவை ஆதரிக்க வேண்டும்?


தமிழகத்தில் எத்தனையோ கட்சிகள் உண்டு அதற்குள் எத்தனையோ காட்சிகள் உண்டு!

ஆனால் ஒரு கட்சியை ஆதரிப்பவருக்கு அதில் ஏதாவது நன்மைகள் இருக்க வேண்டும்

அவ்வகையில் இன்னென்ன நன்மைகளை ஒரு கட்சி தமிழகத்தில் செய்தது என்றால் அது திமுக மட்டும் தான்

திமுக மீது சில தவறுகள் இருக்கலாம் அதை மேற்கோள்காட்டி பிரச்சாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் "எங்கள் மீது தவறுகள் இருந்திருக்கலாம் ஆனால் அடுத்து எங்கள் ஆட்சி அமையும் பட்சத்தில் நிச்சயம் அத்தவறுகள் நடக்காத வகையில் கவனத்தில் கொள்ளப்படும்" என்று பேசியது குறிப்பிடத்தக்கது.

எடப்பாடி ஆட்சியை கலைக்கும் யுத்தி ஸ்டாலினுக்கு தெரியவில்லை ஆனால் கலைஞர் இருந்திருந்தால் கலைத்திருப்பார் என சிலர் ஏளனம் பேசுகின்றனர் ஆனால் உண்மையில் கலைஞர் அப்படி கலைப்பவர் அல்ல கலைத்தவரும் அல்ல ஸ்டாலினும் அப்படி செய்யாமல் இருப்பதன் மூலமே அவர் ஒரு தலைவராக உயர்ந்து நிற்கிறார்.

ஏனெனில் திமுக அதிகாரத்தில் மட்டுமே அமர உருவான கட்சி அல்ல அது சமூக சீர்திருத்தத்தை முதன்மையாக கொண்ட கட்சி ஆகும் அவ்வகையில் தேர்தல் பக்கமே திமுக தொடங்கிய எட்டு வருடங்களுக்கு பிறகு தான் நுழைந்தது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

திமுக தொண்டர்கள் பிற கட்சிகளை விமர்சனம் செய்வதோடு நிற்காமல் நாம் செய்த சாதனைகளை மக்களுக்கு சொல்லி நினைவூட்டுவது நன்மை அளிக்கும்.

திமுகவின் ஆதார பூர்வமான சாதனை பட்டியல்கள் நீளமானது 

அவ்வகையில் திமுக வலைத்தளத்தில் இடம்பெற்ற ஒரு சில சாதனை பட்டியலை இங்கே பகிர்கிறேன்.

திமுக ஆட்சி சாதனைகள் 1969-1976

1. பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத் திட்டம்

2. இலவசக் கண்ணொளி வழங்கும் திட்டம்

3. குடிசை மாற்று வாரியம்

4. சுற்றுலா வாரியம்

5. குடிநீர் வடிகால் வாரியம்

6. ஆதிதிராவிடர் இலவசக் கான்க்ரீட் வீட்டு வசதித் திட்டம்

7. சிங்காரவேலர் நினைவு மீனவர் இலவச வீட்டு வசதித் திட்டம்

8. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கெனத் தனி அமைச்சகம்

9. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிதிராவிடர் இட ஒதுக்கீடுகளை உயர்த்தியது

10. பேருந்துகள் நாட்டுடைமை, போக்குவரத்துக் கழங்கங்கள் உருவாக்கம்

11. அனைத்துக் கிராமங்களுக்கும் மின் இணைப்புத் திட்டம்

12. விவசாயத் தொழிலாளர்களுக்குக் குடியிருப்பு மனை உரிமைச் சட்டம்

13. சேலம் உருக்காலைத் திட்டம்

14. 15 ஏக்கர் நில உச்சவரம்புச் சட்டம்

15. 1,78,880 ஏக்கர் உபரி நிலம் மீட்கப்பட்டு 1,37,236 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது

16. சிப்காட் தொழில் வளாகங்கள்

17. பூம்புகார் கப்பற் போக்குவரத்துக் கழகம்

18. ஆதரவற்ற குழந்தைகளுக்கு திருக்கோயில்களில் கருணை இல்லங்கள்

19. கை ரிக்‌ஷாவை ஒழித்து சைக்கிள் ரிக்‌ஷாக்கள் வழங்கும் திட்டம்

20. மாற்றுத் திறனாளிகள் நல வாழ்வுத் திட்டம்

21. அஞ்சுகம் அம்மையார் நினைவுக் கலப்புத் திருமனத் திட்டம்

22. அரசு ஊழியர்களுக்குக் குடும்பப் பாதுகாப்புத் திட்டம்

23. பணிக் காலத்தில் உயிரிழக்கும் அரசு ஊழியர் வாரிசுக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி

24. டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமணத் திட்டம்.

25. மாநிலத் திட்டக் குழு உருவாக்கம்

26. காவல்துறை மேம்பாட்டுக்கு காவல் ஆணையம்


திமுக ஆட்சி சாதனைகள் 1989-1991

1. தமிழக அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம், பொங்கல் முன்பணம் உள்ளிட்ட சலுகளைகள்

2. பெண்களுக்கு சொத்துரிமை வழங்கிடத் தனிச் சட்டம்

3. ஏழைப் பெண்கள் பயன்பெறும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவுத் திருமண உதவித் திட்டம் 

4. ஈ.வெ.ரா – நாகம்மையார் நினைவு மகளிர் இலவசப் பட்டப் படிப்புத் திட்டம்

5. ஆதிதிராவிடர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், வருமான வரம்புக்கு உட்பட்ட பிற்படுத்தப்பட்டோரில் பெண்களுக்குப் பட்டப் படிப்புவரை இலவசக் கல்வி

6. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்

7. கர்ப்பிணிகளுக்கு நிதியுதவி வழங்கும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதியுதவித் திட்டம்

8. மகளிர் திட்டத்தின் மூலம் மாநிலமெங்கும் மகளிர் சுய உதவிக் குழுக்கள்

9. வன்னியர், சீர்மரபினர் உட்பட மிகப்பிற்படுத்தப்பட்டோருக்கு 20% தனி இட இதுக்கீடு

10. ஆதிதிராவிடர்களுக்கு மட்டும் 18 விழுக்காடு இட ஒதுக்கீடு நிர்ணயித்து, பழங்குடி இனத்தவருக்கு 1 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு

11. மகளிர்க்கு அரசு வேலை வாய்ப்பில் 30 விழுக்காடு இட ஒதுக்கீடு

12. நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைப்பு


திமுக ஆட்சி சாதனைகள் 1996-2001

1. உயர்கல்வித் துறை உருவாக்கம்

2. நெடுஞ்சாலைத் துறை உருவாக்கம்

3. தகவல் தொழில்நுட்பத் துறை உருவாக்கம்

4. சமூக சீர்திருத்தத் துறை உருவாக்கம்

5. இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை உருவாக்கம்

6. சென்னையில் டைடல் பூங்கா அமைக்கப்பட்டது

7. உள்ளாட்சி அமைப்பில் மகளிர்க்கு 33% இட ஒதுக்கீடு

8. பெரியார் நினைவு சமத்துவபுரத் திட்டம்

9. உழவர் சந்தைத் திட்டம்

10. வருமுன் காப்போம் திட்டம்

11. கால்நடைப் பாதுகாப்புத் திட்டம்

12. பள்ளிகளில் வாழ்வொளித் திட்டம்

13. தாய்மொழி வளர்ச்சிக்குத் தனி அமைச்சகம்

14. விவசாயத் தொழிலாளர் நல வாரியம், தொழிலாளர் நலனுக்கெனத் தனித்தனி நல வாரியங்கள்

15. போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத் திட்டம்

16. தென்குமரியில் 133 அடி உயர அய்யன் திருவள்ளுவர் சிலை

17. கிராமங்கள்தோறும் சிமெண்ட் சாலைகள்

18. கிராமப்புறங்களுக்கு மினிபஸ் திட்டம்

19. ஆட்சிப் பொறுப்பேற்ற 6 மாதங்களுக்குள் தடைபட்டுக் கிடந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கும் கூட்டுறவு அமைப்புகளுக்கும் தேர்தல்

20. வரலாறு காணாத வகையில் ஆறு, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் தூர்வாரும் திட்டம்

21. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு திட்டம்

22. அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்

23. கிராமப்புற பெண்களுக்குத் தொழிற்கல்லூரிகளில் 15 விழுக்காடு இட ஒதுக்கீடு

24. சென்னை கோயம்பேட்டில் ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையம்

25. சேமிப்புடன்கூடிய மகளிர் சிறுவணிகக் கடன் திட்டம்

26. பள்ளிக் குழந்தைகளுக்கு சத்துணவுடன் முட்டை வழங்கும் திட்டம்

27. மதுரை மாநகரில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அமைக்கப்பட்டது

28. மாணவர்களுக்கு இலவசப் பேருந்து பயண அட்டை வழங்கப்பட்டது

29. 10,000 சாலைப் பணியாளர்கள் நியமனம்

30. 13,000 மக்கள் நலப் பணியாளர்கள் மீண்டும் நியமனம்


திமுக ஆட்சி சாதனைகள் 2006-2011

1. கிலோ அரிசி 1 ரூபாய் என மாதம் 20 கிலோ அரிசி வழங்கும் திட்டம்

2. பாமாயில் எண்ணெய், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, மைதா செரிவூட்டப்பட்ட கோதுமை மாவு சிறப்புப் பொது வினியோகத் திட்டத்தின் கீழ் குறைந்த விலையில் மாதந்தோறும் வழங்கும் திட்டம்

3. ஏழை, எளியோர் பயன்பெற ரூ.70 மதிப்புடைய 10 சமையல் பொருட்கள் ‘மானிய விலை மளிகைப் பொருட்கள்’ என ரூ.50க்கு வழங்கப்பட்டது

4. தமிழ்ப் புத்தாண்டை எல்லோரும் கொண்டாட ரூ.1 கோடியே 80 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு அரிசி, பருப்பு, வெல்லம் வழங்கப்பட்டது

5. 22 லட்சத்து 40 ஆயிரத்து 739 விவசாயக் குடும்பங்களுக்கு ரூ.7 ஆயிரம் கோடி கூட்டுறவுக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது

6. கூட்டுறவுக் கடன்களைத் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளின் பயிர்க் கடனுக்கு வட்டி ரத்து செய்யப்பட்டது

7. சாதாரண நெல், குவிண்டால் ஒன்றுக்கு ரூ.850, சன்ன ரக நெல் ரூ.880 என நடுவண் அரசு நிர்ணயித்த விலைகளை உயர்த்தி சாதாரண நெல் விலை ரூ.1,000 எனவும், சன்ன ரக நெல் விலை ரூ.1,050 எனவும் வழங்கப்பட்டது

8. உழுவோரும் நுகர்வோரும் பயன் அடைய 117 உழவர் சந்தைகள் புதுப்பொலிவுடன் தொடங்கப்பட்டது

9. கரும்பு விலை டன் ரூ.811 என்பதை நடுவண் அரசு இரண்டு ஆண்டுகளாக உயர்த்தாமல் இருந்த நிலையில் அதை கழக அரசு ரூ.1,000 ஆக உயர்த்தி போக்குவரத்துக் கட்டணமாக ரூ.90, சர்க்கரைக் கட்டுமான ஊக்கத் தொகை ரூ.30 சேர்த்து கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.1,220  வழங்கப்பட்டது

10. பயிர்க் காப்பீடு திட்டத்தில் 50 விழுக்காடு காப்பீட்டுத் தொகையாக அரசு மானியமாக வழங்கி ஊக்கப்படுத்தியதால் 2008 – 2009ம் ஆண்டில் 8 லட்சத்து 50 ஆயிரம் விவசாயிகள் அரசு மானியம் பெற்று காப்பீடு செய்தனர்

11. பயிர்க் காப்பீடு செய்யும் 25 லட்சம் விவசாயிகளுக்கு மானியமாக ரூ.40 கோடி

12. ஆதிதிராவிட விவசாயிகள் ‘தாட்கோ’ நிறுவனத்தின் மூலம் 31.03.2006-ம் ஆண்டுவரை பெற்ற கடன் தொகை வட்டி உட்பட ரூ.5 கோடியே 25 லட்சம் தள்ளுபடி செய்யப்பட்டது

13. காமராஜர் பிறந்தநாளை, கல்வி வளர்ச்சி நாள் என அரசாணை பிறப்பித்து பள்ளிகளில் கல்வி விழா நடத்தப்பட்டது

14. நில அடமானத்தின் மீது தொழில் செய்ய வழங்கப்பட்ட பண்ணை சாராக் கடன்களுக்கு வட்டி, அபராத வட்டி தள்ளுபடி செய்யப்பட்டு வாங்கியக் கடன் அசல் தொகையை செலுத்தினால் கடன் ரத்து செய்யப்பட்டது

15. தொழிற்கல்விச் சேர்க்கைக்கான இருந்த நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது

16. ஏழை மகளிர்க்கு பட்டப் படிப்புவரை வழங்கப்பட்ட இலவசக் கல்வி முதுகலைப் பட்டப் படிப்புவரை நீட்டிக்கப்பட்டது

17. கழக அரசு விவசாயிகளுக்கு வழங்கும் சலுகைகளால் உணவு தானிய உற்பத்தி 2005 – 2006ல் 61 லட்சம் டன் எனவும், 2008 – 2009ல் 91 லட்சம் டன் எனவும் உயர்ந்தது

18. கோவை, திருச்சி, நெல்லை ஆகிய இடங்களில் 3 புதிய அன்ணா தொழிற்நுட்பப் பல்கலைக் கழகங்கள் தொடங்கப்பட்டன

19. பள்ளிகளில் 12-ம் வகுப்புவரை தமிழ் மொழி கட்டாயப் பாடம் என சட்டம் இயற்றப்பட்டது

20. நூற்றாண்டு கனவை நனவாக்கி செம்மொழித் தமிழாய்வு மையம் சென்னையில் அமைக்கப்பட்டது

21. அரசு ஊழியர்களுக்கு 4 ஆண்டுகளில் 2 லட்ச ரூபாய்வரை நிதியுதவி வழங்கும் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது

22. மக்கள் பயன்பெற உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான முதலமைச்சர் கலைஞரின் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது

23. 45 ஆயிரத்து 943 கிலோமீட்டர் நீளச் சாலைகளில் மேம்பாட்டுப் பணிகள் செய்யப்பட்டன

24. 4 ஆயிரத்து 730 கிலோமீட்டர் நீளம்கொண்ட சாலைகள் இருவழித் தடங்களாக அகலப்படுத்தப்பட்டன

25. தமிழகத்தில் உள்ள சாலைகளில் 551 சிறு மற்றும் பெரிய பாலங்கள் ரூ .557 கோடி செலவில் கட்டப்பட்டன

26. தலவரி, தலமேல்வரி, தண்ணீர்த் தீர்வை அனைத்தும் ரத்து செய்யப்பட்டன

27. சென்னையில், 166 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உலகத்தரம் வாய்ந்த மாநில நூலகம் அமைக்கப்பட்டது

28. சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், 400 கோடி ரூபாய் செலவில் புதிய சட்டமன்ற தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டது

29. அடையாறு பூங்கா திட்டம், 100 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டது

30. 2 லட்சத்து 12 ஆயிரத்து 981 சத்துணவுப் பணியாளர்கள் பயன்பெற காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்கப்பட்டது

31. இராமநாதபுரம் பரமக்குடி கூட்டுக் குடிநீர்த் திட்டம் ரூ.630 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது

32. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் ரூ.1,330 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது

33. ஏறத்தாழ 3 லட்சம் இளைஞர்களுக்கு அரசு அலுவலகங்களில் புதிய வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்பட்டன

34. இஸ்லாமியர் சமுதாயம் மேன்மை பெற, 3.5 விழுக்காடு தனி உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது

35. வேலை வாய்ப்பு அலுவலகங்களில் புதுப்பிக்கத் தவறிய 2 லட்சத்து 70 ஆயிரம் இளைஞர்கள், 2001 முதல் பதிவு மூப்புடன் மீண்டும் புதுப்பித்து பயனடைந்தனர்

36. கடுமையான மாற்றுத் திறன் கொண்டோருக்கான உதவித்தொகை ரூ.200-ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தப்பட்டது. இதன் மூலம் 10 ஆயிரம் பேர் பயனடைந்தனர்

37. கட்டணம் உயர்த்தப்படாமல் ஏற்கெனவே விடப்பட்ட 9,248 புதிய பேருந்துகளுடன், மேலும் 3,500 புதிய பேருந்துகள் இயக்கப்பட்டன

38. அருந்ததியினர் சமுதாயத்தினரின் அவலம் தீர, 3 விழுக்காடு தனி உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது

39. மக்களுக்கு எந்தவொரு மதத்தில் இருந்தும் விடுபட உரிமை வேண்டும் என்பதற்காக, கட்டாய மதமாற்ற சட்டம் ரத்து செய்யப்பட்டது

40. சென்னை மதுரவாயல் – சென்னைத் துறைமுகம் இடையே ரூ.1,655 கோடி மதிப்பீட்டில் பறக்கும் சாலை திட்டம் தொடங்கப்பட்டது

41. ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு வங்கி நிதியுதவியுடன்  14 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட்டது

42. 2 வயது முதல் 15 வயதுவரையுள்ள 73 லட்சம் குழந்தைகள், மாணவ மாணவியருக்கு சத்துணவுடன் வாரம் 3 முறை முட்டையும் வாழைப்பழமும் வழங்கப்பட்டன

43. விவசாயத் தொழிலாளர் நல வாரியம் உட்பட 25  அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் 1 கோடியே  92 லட்சத்து 93 ஆயிரத்து 624 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர்

44. 6,87,319 87 அமைப்புசாரா தொழிலாளர் குடும்பங்களுக்கு 314 கோடியே 74 லட்சத்து 58 ஆயிரத்து 933 ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டது

45. 2 ஆயிரத்து 267 கோடியே 87 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் 1 கோடியே 4 லட்சத்து 42 ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப்பட்டதுடன் மேலும் 25 லட்சம் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்குவதற்காக ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டது

46. ரூ.220 கோடி செலவில் 11 லட்சம் குடும்பங்களுக்கு எரிவாயு இணைப்புடன் இலவச எரிவாயு அடுப்புகள் வழங்கப்பட்டு, ரூ.140 கோடி செலவில் 6 லட்சம் இலவச எரிவாயு அடுப்புகள் வழங்கப்பட்டன

47. 6 லட்சத்து 56 ஆயிரத்து 342 ஏழைக் குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன

48. சென்னைப் பெருநகரின் குடிநீர் பற்றாக்குறையை முற்றிலும் போக்கிட, வடசென்னை மீஞ்சூரில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது

49. மத்திய அரசு அனுமதித்துள்ள 908 கோடி கோடி ரூபாய் நிதியுதவியுடன் தென்சென்னை நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம்

50. மூன்றாவது காவல் ஆணையம் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆர்.பூர்ணலிங்கம் தலைமையில் அமைக்கப்பட்டு, அக்குழு வழங்கிய 444 பரிந்துரைகளில் 278 பரிந்துரைகள் ஏற்கப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டன

51. ஈரோடு, திருப்பூர், வேலூர், தூத்துக்குடி நகராட்சிகள் மாநகராட்சிகளாக நிலை உயர்த்தப்பட்டன

52.  அரியலூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்கள் தோற்றுவிக்கப்பட்டன

53. 50 வயது கடந்தும் திருமணமாகாமல் வறுமையில் வாடும் 6 ஆயிரத்து 444 ஏழைப் பெண்களுக்கு மாதம் 400 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டது

54. மாநகராட்சி, நகராட்சிகளின் நிதிச் சுமையைக் குறைத்து மக்களுக்கு வசதிகள் செய்திட, அவை அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.793 கோடி கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டது

55. தருமபுரியில் 'அரூர்' புதிய கோட்டம், திருவண்ணாமலையில் 'தண்டராம்பட்டு', திண்டுக்கல்லில் 'ஆத்தூர்' புதிய வட்டங்கள்

56. சமத்துவச் சமுதாயம் காணும் நோக்கில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம் நிறைவேற்றப்பட்டு பல்வேறு சாதிகளைச் சேர்ந்த 216 பேருக்கு அர்ச்சகர் பயிற்சிகள் அளிக்கப்பட்டன

57. 1,75,355 நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர்கள், விவசாயக் குடும்பங்களுக்கு 2,10,427 ஏக்கர் இலவச நிலம்

58. தமிழ்வழியில் பயிலும் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்க்கு அரசுப் பள்ளிகளிலும் அரசு உதவிபெரும் பள்ளிகளிலும் சிறப்புக் கட்டணங்கள் ரத்து செய்யப்பட்டன. 

11 லட்சம் மாணவ மாணவியருக்கு 10 மற்றும் 12ம் வகுப்புகளில் அரசுத் தேர்வுக் கட்டணங்கள் ரத்து செய்யப்பட்டன

59. பட்டப்படிப்பு பயிலும் 3 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலை அறிவியல் கல்லூரி மாணவர்களின் கல்விக் கட்டணம் ரத்து செய்யப்பட்டது

60. ஒரத்தநாடு, பெரம்பலூர், வால்பாறை, சுரண்டை, குளித்தலை, லால்குடி, மேட்டூர் ஆகிய இடங்களில் அரசின் புதிய கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டன

61. டெஸ்மா, எஸ்மா சட்டங்களை நீக்கி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பறிக்கப்பட்டிருந்த சலுகைகளை மீண்டும் வழங்கியதுடன் 6வது ஊதியக்குழு அறிக்கையை நடைமுறைப்படுத்தும் நோக்கில் ரூ.4,247 கோடி செலவில் இடைக்கால நிவாரணமாக 3 மாத ஊதியம் மற்றும் நிலுவைத் தொகை வழங்கப்பட்டது

62. அனைத்துச் சாதியினரும் ஒரே இடத்தில் வசிக்க ஏற்கெனவே உருவாக்கப்பட்டுள்ள 145 பெரியார் நினைவு சமத்துவபுரங்களுடம், மேலும் 95 சமத்துவபுரங்கள் அமைத்து 240 சமத்துவபுரங்களையும் தந்தை பெரியார் திருவுருவச் சிலைகளுடன் நிர்மாணிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது

63. நிலவரி, ஏக்கர் ஒன்றுக்குப் புன்செய் நிலங்களுக்கு 15 ரூபாய் என்பது 2 ரூபாய், நன்செய் நிலங்களுக்கு 50 ரூபாய் என்பது 5 ரூபாய் பெயரளவுக்கு வசூலிக்க ஆணை

64. படித்தும் வேலை வாய்ப்பு கிடைக்கப்பெறாத 3,53,488 இளைஞர்களுக்கு 156,15,30,604 ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டது

64. அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.2,033 கோடி செலவில் 10 ஆயிரத்து 96 ஊராட்சிகளில் அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன

65. ரூ.210 கோடி செலவில் 420 பேரூராட்சி, 30 நகராட்சி பகுதிகளில் அடிப்படைக் கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன

66. விழுப்புரம், திருவாரூர், தருமபுரி, சிவகங்கை, பெரம்பலூர் ஆகிய இடங்களில் 5 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன

67. 24 லட்சத்து 82 ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கு, 2 லட்சத்து 99 ஆயிரம் கல்லூரி மாணவர்களுக்கு இலவச பேருந்துப் பயணச் சலுகை

68. மகளிர் சுய உதவிக் குழுக்களைப்போலவே 2006-ம் ஆண்டுக்குப் பிறகு 19 ஆயிரத்து 885 இளைஞர் சுய உதவிக் குழுக்களும், 30 ஆயிரம் நகர்ப்புற சுய உதவிக் குழுக்களும், 10 ஆயிரத்து 772 விவசாயிகள் கூட்டுப் பொறுப்புக் குழுக்களும் ஏற்படுத்தப்பட்டு தேவையான நிதியுதவி வழங்கப்பட்டது

69. படிப்பைத் தொடர இயலாமல் இடையில் நிறுத்திய ஏழை மாணவர்களில், ஆண்டுக்கு 10 ஆயிரம் பேர்வரை வேலை வாய்ப்புகளுக்கேற்ற தொழிற்பயிற்சிகளைச் சமுதாயக் கல்லூரிகள் வழியே பெறுவதற்காக, திறந்தநிலைப் பல்கலைக் கழகம் மூலம், தலா ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்பட்டது

70. 10 லட்சத்து 48 ஆயிரம் மகளிர் உறுப்பினர்களைக் கொண்ட 61, 687 புதிய மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு 3,276 கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்கப்பட்டது

71. முதியோர், ஆதரவற்ற விதவைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை மாதம் ரூ.400 என உயர்த்தப்பட்டது

72. ‘வருமுன் காப்போம் திட்டம்’ மீண்டும் செயல்படுத்தப்பட்டு 9,000 மருத்துவ முகாம்களில் 91 லட்சம் ஏழை எளியோர் பயன்பெற்றனர். மேற்கொண்டு 4,500 முகாம்கள் நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது

73. மூவலூர் இராமாமிர்தம் அம்ம்மையார் திருமணத் திட்ட நிதியுதவி, ரூ.10,000 என்பது ரூ.20,000 என உயர்த்தப்பட்டு 2 லட்சத்து 14 ஆயிரத்து 189 ஏழைப் பெண்கள் பயன்பெற்றனர். மேற்கொண்டு  75 ஆயிரம் ஏழைப் பெண்கள் பயன்பெற ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது

74. கிராமப்புற ஏழைகளுக்கு உடனடி மருத்துவ வசதி கிடைக்கச் செய்திட இ.எம்.ஆர்.ஐ நிறுவனத்துடன் இணைந்து 32 கோடி ரூபாய் செலவில் ‘அதிநவீன அவசர கால மருத்துவ ஊர்தி சேவைத் திட்டம்’ தமிழ்நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டது

75. 1,05,494 கைத்தறி நெசவாளர்களுக்கும் 90,547 விசைத்தறி நெசவாளர்களுக்கும் சிறப்புத் தொகை செலுத்தி மின் இணைப்பு பெற்ற 2,39,511 விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்பட்டது

76. ஏறத்தாழ 2 லட்சத்து 5 ஆயிரத்து 350 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் 37 ஆயிரத்து 595 கோடி ரூபாய் முதலீட்டிலான 29 புதிய தொழிற்சாலைகள் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு அவற்றில் 8 தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன மற்றவை தொடங்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன

77. அருந்தமிழ்ச் சான்றோர் 62 பேரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு, 4 கோடியே 61 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டதுடன் நடப்பாண்டிலேயே மேலும் 25-க்கும் மேற்பட்ட அறிஞர்களின் படைப்புகளை நாட்டுடைமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது

78. ஏழை கர்ப்பிணிப் பெண்கள் ஊட்டச் சத்து பெறவேண்டும் என்பதற்காக ரூ.6,000 வீதம் 12,96,803 ஏழை மகளிர்க்கு 619 கோடியே 66 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டு, மேலும் 4 லட்சம் தாய்மார்கள் பயன்பெற ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது

79.திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, அரியலூர், திருக்குவளை, ராமநாதபுரம், ஆகிய 5 இடங்களில் புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டதுடன் திருவண்ணாமலை, தஞ்சாவூர், திண்டுக்கல், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டன

80. தமிழகத்தில் உள்ள 1,421 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தலா 3 செவிலியர்களைப் பணியமர்த்தி 24 மணி நேரமும் மருத்துவ சேவை அளிக்கப்பட்டதால் 2006ல் நடைபெற்ற மகப்பேறுகளின் எண்ணிக்கை 80,766ல் இருந்து 2008ம் ஆண்டு 2,41,078 ஆக மூன்று மடங்கு உயர்ந்தது

81. மூடிய அறுவை சிகிச்சைக்கு ரூ.20,000. சாதாரண திறந்த அறுவை சிகிச்சைக்கு ரூ.50,000. கடினமான திறந்த அறுவை சிகிச்சைக்கு ரூ.1 லட்சம் என அரசு நிதி உதவி வழங்கும் ‘இளம் சிறார் இதய அறுவை சிகிச்சை திட்டம்’.

மேற்கூறியவை போக திமுக ஆட்சிக்காலத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனை பட்டியல் இன்னும் நிறைய இருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்.


வேண்டும் ஆட்சி மாற்றம் அதற்கு வேண்டும் தி.மு.க

         என்பதை மறவாதீர்! மறந்தும் இருந்து விடாதீர்!

வாசித்தமைக்கு நன்றி தோழர்களே  !

https://t.co/yPJBHVIpS4

நன்றி : Chocks@chockshandle

1 கருத்து:

  1. மிக்க மகிழ்ச்சி சகோதரர் 👍🙏💪👏👌

    அருமையாக ஒரு Blogல் போட்டு பொக்கிசமாக்கியதற்கு...

    நன்றி Twitter நண்பர் Chocks அவர்களுக்கு 🙏

    பதிலளிநீக்கு

ரஜினியின் குடும்பம்

ரஜினியின் குடும்பம் காமெடி நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் அப்பா ஒய்.ஜி.பார்த்தசாரதி. புகழ்பெற்ற அமெச்சூர் நாடகக் குழுவை நிறுவி நடத்திய நடிகர். ப...