செவ்வாய், 24 டிசம்பர், 2024

பெரியார் யார் பக்கம் ?

தந்தை_பெரியார் தான் யார் என்பதை எப்படி சொல்லியிருக்கிறார் என்பதை படியுங்கள்...

நான் ஒரு நாட்டுக்காரனோ, ஒரு இனத்துக்காரனோ, ஒரு மதத்துக்காரனோ, ஒரு ஜாதிக்காரனோ, ஒரு மொழிக்காரனோ கிடையாது... 

உலகில் உள்ள மனிதர்கள் அனைவரும் ஒரு மனித இனத்தை சார்ந்தவர்களே என்கிற அடிப்படையில் வாழ்ந்து வருகின்றவன். 

ஆனால் ஒருநாடு இன்னொரு நாட்டின்மீது ஆதிக்கம் செலுத்தினால் அந்த அடிமைப்படக்கூடிய நாட்டிற்கு ஆதரவாக நின்று ஆதிக்கம் செலுத்தக்கூடிய நாட்டை எதிர்த்து போராடுவேன்.!

அந்த நாட்டிற்குள் மதங்களை ஏற்படுத்திக் கொண்டு ஒரு மதத்தினை, ஒருமதம் ஆதிக்கம் செலுத்தினால் அந்த அடிமைப்படக்கூடிய மதத்திற்கு ஆதரவாக நின்று ஆதிக்கம் செலுத்தக்கூடிய மதத்திற்கு எதிராக போராடுவேன்.!

அந்த மதத்திற்குள் பல ஜாதிகளை ஏற்படுத்திக் கொண்டு ஒரு ஜாதியை, ஒரு ஜாதி ஆதிக்கம் செலுத்தினால் அந்த அடிமைப்படக்கூடிய ஜாதிக்கு ஆதரவாக நின்று ஆதிக்கம் செலுத்தக்கூடிய ஜாதிக்கு எதிராக போராடுவேன்.!

அந்த சின்ன ஜாதிக்காரன் ஒரு தொழிற்சாலையை வைத்து நூறு தொழிலாளர்களை அடிமைப்படுத்தினால் நான் அந்த தொழிலாளர்கள் அருகில் நின்று சின்னஜாதி முதலாளியை எதிர்த்து போராடுவேன்.!

அங்கே பணியாற்றக்கூடிய தொழிலாளி தன்னுடைய வருவாயில்தான் தன் குடும்பம் நடக்கிறது என்று சொல்லி தன் மனைவியை அடிமைப்படுத்தினால் அந்த பெண்ணிற்கு அருகிலே நின்றுகொண்டு அந்த கூலி தொழிலாளியையும் எதிர்த்து போராடுவேன்.!

எனக்கு தேவை யாரும் யாருக்கும் அடிமையில்லை என்பதுதான் என்பதை தவிர வேறொன்றுமில்லை...


நன்றி : இளங்கோ மணிவண்ணன்

ஞாயிறு, 22 டிசம்பர், 2024

பிராமணர்களை பணக்கார முதலாளிகளாக்கிய பெரியார்

 பிராமணர்களை பணக்கார முதலாளிகளாக்கிய பெரியார்



தளபதி ஸ்டாலின் ஆட்சியில் முதல் நூறு நாட்கள்

 


கலைஞரிடம் தோற்ற எம்.ஜி.ஆர்

 


இந்த திமுக என்ன செஞ்சுது?

இந்த திமுக என்ன செஞ்சுது? 



எங்களுக்கு இந்த கலைஞர் கருணாநிதி என்ன செஞ்சார்? 

என பல இளைஞர்கள் சினிமா ரசிகர்கள், விசிலடிச்சான் பிள்ளைகள் இந்த காலத்திலும் பொதுவாக இப்படி சில கேள்விகளைக் கேட்டுக் கொண்டு தான் இருக்கின்றனர்.

பாவம் அவர்கள் அப்பாவிகளாக இருக்கின்றனர். அவங்க அப்பாவோ, தாத்தாவோ, அம்மாவோ, பாட்டியோ வேறொரு நெருங்கிய உறவினர் எப்படி அரசாங்க வேலைக்கு வந்தனர் என்ற வரலாறு தெரியாத அப்பாவிகள்.

குப்பனும், சுப்பனும், கோவிந்தனும் அரசு அதிகாரியானது எப்படி என்று அறிந்து கொள்ளுங்கள் இன்றைய இளைஞர்களே....!!


அது 1972-ம் வருடம்..

கலைஞர் இரண்டாம் முறையாக முதலமைச்சரான காலம்..!


அரசு அலுவலகங்கள் முழுவதும் அவாக்களால் நிரம்பி வழிந்த நேரம்..!


அரசு வேலைக்கு, 

TNPSC ரெக்ரூட்மன்ட் என ஒன்றிருப்பது கூட OBC, BC, SC மாணவர்கள் அறியாத காலமது...!!


ஒரு பொதுப்பணித்துறை டிவிஷனல் அலுவலகத்தை மாதிரிக்கு எடுத்துக் கொள்வோமானால்.., 


அதன் செயற்பொறியாளர் வெங்கட்ராமன்.. 

டிவிஷனல் அக்கௌன்ட்டன்ட் சேஷாத்திரி, 

சூப்பிரண்டண்ட் ஸ்ரீனிவாசன், ஹெட்கிளார்க் ராமானுஜன், 

கிளார்க் பரந்தாமன்.. என இப்படிப் போகும் லிஸ்ட்..!


கடை நிலை ஊழியர் என்னும் 

பியூன் ஒரு தங்கராசாகவோ.. செல்வராசாகவோ.. இருப்பதுவே பெரிய விஷயம்..!


பொ.ப.து விலேயே இந்த நிலை என்றால், மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டுக்குள் வரும் வருவாய்த்துறை ஏனைய பத்திரப்பதிவு, கல்வித்துறை, வாகனப்போக்குவரத்து (RTO), வணிகவரித்துறை.. இவைகளைப் பற்றி சொல்லவே தேவையில்லை.!


கல்விப் பின்புலமில்லாத குடும்பங்களிலிருந்து புதிதாக பட்டப்படிப்பு முடித்து வரும் OBC,BC,SC கிராமப்புற மாணவர்ளுக்கு போதிய வழிகாட்டுதலோ.., பயிற்சியோ.. இல்லாத காரணத்தால்.. 


இந்த அரசு பணிகளுக்கான TNPSC நடத்தும் போட்டித் தேர்வில் வென்று உத்தியோகத்தை பிடிப்பது குதிரைக்கொம்பான விஷயம்..!


இதனை மனதில் கொண்டு 

1972 -ம் வருடம், படித்து முடித்து வேலையில்லா பட்டதாரிகளுக்கு இளைஞரணி (Youth corps) என்னும் ஒரு திட்டத்தை கலைஞர் அறிவிக்கிறார்...!!


அதன் வழி மாதம் 175 ரூபாய் உதவித் தொகை நிர்ணயிக்கப்பட்டு, 

மாவட்ட ஆட்சியரால் OBC,BC,SC

பட்டதாரிகளிடம் விண்ணப்பம் கோரப்பட்டு, மெரிட் மற்றும் சமூக 

நீதி அடிப்படையில் பட்டதாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு.., 


அந்தந்த மாவட்டத்தில் உள்ள 

அரசு அலுவலகங்களில் கௌரவ உதவியாளரராக நியமிக்கப்பட்டனர்...


அதோடு நின்றிருந்தால் #கலைஞர் மற்ற தலைவர்களிலிருந்து வேறுபட்டு சரித்திரம் போற்றும் தலைவராகி இருக்க மாட்டார்...!!


இந்த பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பட்டதாரி இளைஞரணியினர் 

அந்தந்த வருட TNPSC போட்டித் தேர்வில் கலந்து கொள்ள, அவர்களுக்கு முன்கூட்டிய அனுபவம் மற்றும் உத்தியோகத்திற்கென 

தனி மதிப்பெண்கள் வழங்கி 

அவர்கள் அனைவரும் TNPSC-யால்


தேர்ந்தெடுக்கப்பட்டு 

அனைத்து அரசு அலுவலகங்களிலும் 

Group iv, Group ii, Group i என அனைத்துப்பதவிகளிலும் அமர வைக்கப்பட்டனர்..


அதிலிருந்து உடைந்ததுதான் அவாக்களின் அரசு அலுவலக டாமினேஷனும் மேதாவித்தனமும்...

அதன் பின்னரே குப்பனும் சுப்பனும் கோவிந்தனும் அரசு அதிகாரியானது...

கலைஞரை விமர்சிக்கும் இக்கால அரைவேக்காடுகளுக்கு, 


நலிந்த சமூகத்தினரின் முன்னேற்றத்திற்கான 

அவரின் தொலைநோக்குப் பார்வையும்,

சமூக நீதி அக்கறையும் புரிய வாய்ப்பில்லை...


நல்லா கவனிங்க கலைஞர் இருப்பதை பிடுங்கவில்லை. வாய்ப்பை பகிர்ந்தளித்தார்

கலைஞர் என்னும் சூத்திரதாரி...

🖤❤️

Courtesy 

G T Rajendran Rajendran


கலைஞர்_சாதனைகள் 101🔥🔥

செவ்வாய், 3 டிசம்பர், 2024

திராவிட முன்னேற்ற கழகத்தின் வரலாற்றுச் சாதனைகள் 2

திராவிட முன்னேற்ற கழகத்தின் வரலாற்றுச் சாதனைகள்


தளபதி ஆட்சியில் 
பாகம் 2
















இது என் கல்லூரி வகுப்பு தோழர் துங்காவி JRK (மடத்துக்குளம் தொகுதி Ex MLA, மாவட்ட அவைத் தலைவர்) இல்லத் திருமண வரவேற்பு விழா உடுமலை, பொன்னேரியில் 24-11-2024 அன்று நடைபெற்ற போது வருகை புரிந்த விருந்தினர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்ட தாம்பூலப்பையோடு அளிக்கப்பட்ட சிறுநூலின் டிஜிட்டல் பதிவு 



திங்கள், 2 டிசம்பர், 2024

திராவிட முன்னேற்ற கழகத்தின் வரலாற்றுச் சாதனைகள் 1

திராவிட முன்னேற்ற கழகத்தின் வரலாற்றுச் சாதனைகள்


கலைஞர் ஆட்சியில் 

பாகம் 1


















































இது என் கல்லூரி வகுப்பு தோழர் துங்காவி JRK (மடத்துக்குளம் தொகுதி Ex MLA,  மாவட்ட அவைத் தலைவர்) இல்லத் திருமண வரவேற்பு விழா உடுமலை, பொன்னேரியில் 24-11-2024 அன்று நடைபெற்ற போது வருகை புரிந்த விருந்தினர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்ட தாம்பூலப்பையோடு அளிக்கப்பட்ட சிறுநூலின் டிஜிட்டல் பதிவு 

ரஜினியின் குடும்பம்

ரஜினியின் குடும்பம் காமெடி நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் அப்பா ஒய்.ஜி.பார்த்தசாரதி. புகழ்பெற்ற அமெச்சூர் நாடகக் குழுவை நிறுவி நடத்திய நடிகர். ப...