எல்லாருமே திமுகவை தான் திட்டுவார்கள்
புது கட்சி ஆரம்பிப்பவர்கள், ஊழல் எதிர்ப்பு அரசியல் எடுப்பவர்கள், சில முற்போக்கு அரசியல் அமைப்புக்கள் எல்லாருமே திமுகவை தான் திட்டுவார்கள். தமிழகம் 'சீரழிந்த'தற்கு காரணம் கலைஞர் தான் என்பார்கள்
ஆனால்..
நேற்று பேசிய தவெகழக தலைவர் விஜய், பாஜக, திமுகவை எதிரியாக்கினார். திமுகவை எதிர்க்க ஊழல் தான் காரணம் என்றார். (வேறு காரணமே இல்லாதது போல). ஆனால் ஊழல் எதிர்ப்பு பேசிய விஜய் அதிமுக பற்றி எதும் பேசவில்லை. அதிமுக டம்மியாக எல்லாம் ஆகவில்லை. 30% வாக்குகளை கொண்டுள்ள கட்சி அது.
தமிழ்நாட்டை அதிகம் ஆண்ட கட்சியான அதிமுகவை விமர்சிக்க மாட்டார்கள். கலைஞரை பொது தலைவராக ஏற்காதவர்கள் எம்ஜிஆரை எப்போதோ காமராஜர் வரிசையில் சேர்த்துவிட்டனர்.
எம்ஜிஆர் ஆட்சியில் ஊழல் நடந்தது, விவசாயி துப்பாக்கிச்சூடு நடந்தது, பழங்குடியினர் பாதிக்கப்பட்டனர்.
முதன் முதலில் சாதி பார்த்து வேட்பாளர் நிறுத்தியது, TASMAC கொண்டு வந்தது, எமர்ஜென்சியை கண் மூடி ஆதரித்தது. அன்றே EWS கொண்டு வந்தது எல்லாம் எம்ஜிஆர் தான். ஆனால் இதை எல்லாம் யாரும் பேசுவது இல்லை.
மத்தியில் யார் ஆட்சி அமைந்தாலும் ஓடி ஓடி ஆதரவு தெரிவித்தவரும் இந்த செம்மலே
சில நாடக அரங்கேற்றத்துக்கு பிறகு அரியணை ஏறிய ஜெயா காலத்தில் நடக்காத அராஜகங்கள் இல்லை வாச்சாத்தியிலும் வீரப்பன் வேட்டையிலும் நடந்த மனித உரிமை மீறல், ஆட்சியர் மீதான ஆசிட் வீச்சு. இந்துத்துவ ஆதரவு போக்கு
இந்தியாவிலேயே ஊழல் குற்றத்துக்காக பதவி விலகி சிறை சென்ற முதல் ஆள் ஜெயா தான்
அம்மா இருக்கும் போது ஒருத்தனும் வாய் திறக்கல என பெருமை பீற்றுவார்கள்.
இதில் என்ன பெருமை?
இரும்புக்கரம் கொண்டு எல்லாரையும் அடக்கியது தான் அந்த அம்மாவின் சாதனை. அமைச்சர்களை அடிமைகளாக்கியது, அத்தனை ஊழல், வன்முறை, இது தான் ஜெயாவின் ஆட்சி.
அமைச்சர்களை அடிமைகயாக்கியதன் விளைவை 2016ல் சந்தித்தோம் யார் என்றே தெரியாத முதல்வர், தர்மயுத்த நாடகங்கள், சசிகலா அத்தியாயம், தொடர்ந்து மோடியின் ப்யூனாக நடந்த எடப்பாடி என தமிழகமே சந்தி சிரித்து போனது
ஆனால் இதெல்லாம் யார் கண்ணுக்கும் தெரியாது.அது தான் அதிமுகவின் privilege 7)
புள்ளிவிவரங்களை எடுத்து பார்த்தாலே தெரியும் யார் ஆட்சியில் தமிழகத்தின் சமூக பொருளாதாரம் கல்வி மருத்துவம் என எல்லா துறையும் வளர்ந்தது என்று. கலைஞரின் தொலைநோக்குப் பார்வை தான் தமிழக வளர்ச்சிக்கு காரணம்.
ஆனால் அதை யாரும் பேச மாட்டார்கள்
அன்றைக்கு கலைஞரின் மாநில சுயாட்சிக்கு எதிராக இந்திரா பல வேலைகள் செய்தார். அவர் மரணம் வரை பார்ப்பன பனியா ஊடகங்கள் திட்டி தீர்த்தன. கலைஞர் ஏதோ ஒரு வழியில் குறைந்தபட்சம் தன் கொள்கைகளை அரியணையில் ஏற்றிவிடுவார். அதனாலேயே கலைஞரை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் திட்டி தீர்த்து விடுவர்
கலைஞர், திராவிட எதிர்ப்பு என்ற புள்ளியில் எல்லாரும் அதிமுகவை மறைமுகமாக தூக்கி பிடித்து விடுவர். ஜெயா என்றால் அவாள்களுக்கு இன்னும் சந்தோஷம். இதனால் தான் கன்று வரை அதிமுக பற்றிய கெட்ட செய்திகள் காதில் வராமல் இருக்கிறது
இந்த narrative இன்று வரை தொடர்கிறது.
இன்னொரு காரணம். அதிமுக முழுதும் கொள்கையை தலைமுழுகிவிட்டது. குறைந்தபட்ச அறத்துடன் உள்ள திமுக வாது சமூகநீதியோடு அது சொன்னப்படி நடந்து கொண்டாக வேண்டும். இதனாலும் அதிகம் திமுக விமர்சனத்துக்கு உள்ளாகிறது. நியாயம் தான்.
ஆனால் பார்வையும் விமர்சனமும் சமமாக இருக்க வேண்டும்.
திமுக கறைபடியாத கரங்கள் எல்லாம் இல்லை. இன்றைய திமுக எல்லாவற்றுக்கும் மேலான மேட்டுக்குடி போக்கில் உள்ளது. ஆனால் அதிமுகவின் வெளிப்படையான பண்ணையார் போக்கை யாரும் விமர்சிப்பது கிடையாது.
தமிழ்நாட்டில் ஊழல் ஒழிப்பை பேசவேண்டுமானால் அதிமுகவையும் சேர்த்து தான் பேசவேண்டும்.
தலித் சிந்தனையாளர்களும் சரி, அரசியல் அறிவுஜீவிகளும் சரி, அதிமுகவை கண்டுகொள்ள மாட்டார்கள். இது தான் அன்று தொடங்கி இன்று வரை அதிமுகவின் privilege.
எல்லாத்தையும் மேல இருக்கவன் பாத்துப்பான்னு திமுக கணக்குல எழுதாம கட்டிலுக்கு கீழ இருக்க அதிமுக பேர் ல கொஞ்சம் எழுதுங்கடா
ஆளுங்கட்சி திமுகவை விமர்சிக்க ஒரு வலுவான ஆள் வேண்டும். விஜய், ஊழல் குடும்ப அரசியல் என மேம்போக்காக விமர்சிக்காமல் திமுகவின் சாதிய, மேட்டுக்குடி தனத்தை விமர்சித்தால் நன்று.
அப்போது தான் திமுகவின் மனநிலையும் மாறும்.
நன்றி: Gypsy Che - ட்விட்டரில்




.jpg)
.jpg)
