பாஜக-வின் தேர்தல் ஏமாற்று நாடகம்
இந்திய மக்கள் ஒருவகையில் நூதனமாகவே ஏமாற்றப்பட்டுள்ளார்கள்..
சமீபத்திய 2024 தேர்தல் முடிவு என்பது மக்கள் அளித்துள்ள தீர்ப்புக்கு எதிர் மாறானதே...
ஓட்டு மிசின் மீது மக்களுக்கு உள்ள அவ நம்பிக்கையை போக்குவதற்காகவே நம்மை மட்டும்மல்ல தேர்தல் வெற்றி தோல்வி கணக்கில் மக்களை ஏமாற்றுவதற்காகவே
தமிழகம் கேரளம் போன்ர சில மாநிலங்களை மக்கள் அளித்த தீர்ப்பே சரியானது என்று அனைவரும் நம்ப வைக்கப்பட வேண்டும் என்பதற்காகவே தமிழகத்தை கேரளத்தை விட்டுவிட்டு கடந்த தேர்தலில் செய்த ஓட்டு மிசின் மோசடி போல இந்த முறை மக்களை ஏமாற்ற முடியாது மக்களுக்கு தேர்தல் மீது முழுமையாக நம்பிக்கையை இழந்துவிடுவார்கள் என்பதை நன்கு உணர்ந்த தேர்தல் ஆணையம் போட்டுக்கொடுத்த சரியான திட்டம் என்பதைவிட இண்டியா கூட்டணி கட்சிகளை மட்டும்மல்ல நாட்டு மக்களையுமே ஓட்டு மிசின் தில்லு முல்லு மீது திசை திருப்புவதற்காக நடத்தப்பட்ட நாடகமே தெலுங்கான சந்திரபாபு வெற்றியும் ஜெகன் மோகன் ரெட்டியின் வரலாற்று தோல்வியும்.
இன்னும் ஆழமாக உற்று நோக்கி பார்த்தால் நன்கு புரியும் வெற்றி பெறவே முடியாத சந்திர பாபுவை நாங்கள் வெற்றி பெற வைக்கின்றோம்..
நீ நாடாளுமன்ற தேர்தல் கணக்கில் எங்களோடு உடன்படு என்கின்ர அடிப்படையிலயே சந்திரபாபுவை பாசக பட்டை தீட்டியுள்ளார்கள்..சந்திரபாபு நாயுடு பட்டை தீட்டப்பட்ட பாசகவின் ஏஜெண்ட்..
அதே போல நிதிஸ்குமாரும் இவரகள் பாசகவிற்கு எந்நேரம் கையசைத்தாலும் கையாட்டக்கூடிய சாவி கொடுக்கப்பட்ட பொம்மைகளே...
இண்டியா கூட்டணி எதிர் கட்சி வரிசையில் கூட அமரட்டும்.
ஆனால் பாசக மற்றும் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றுள்ள குறிப்பிட்ட தொகுதிகளில் மட்டும் வாக்கு பதிவு செய்துள்ள வாக்குகள் மற்றும் அதன் படிவங்கள் சரியாக இருக்க கூடிய ஒப்புகை சீட்டுக்களை முழுமையாக சரி பார்த்து மட்டும் ஒரு நூறு தொகுதிகளில் இண்டியா கூட்டணி கட்சிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து சரி பாருங்கள் இந்த தேர்தல் நியாயமானதாகவே தேர்தல் ஆணையம் நடத்தினார்களா? இல்லை மோசடியாக நடத்தினார்களா? என்று...
ஏற்கனவே முடிவு செய்து எழுதப்பட்ட வெற்றி தோல்வி கணக்கிற்கு மீண்டும் இண்டியா கூட்டணி கட்சி ஏமாற்றம் தேர்தல் ஆணையத்தின் கூட்டு சதியால் ஏமாற்றப்பட்டுள்ளது.தற்பொழுது பாசக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைப்பார்கள் அய்யா..
ஆறு மாதங்களை கூட தாண்டாது அதற்குள் இவர்களுக்கு ஆதரவு கொடுத்துள்ள நிதிஸ்குமார் சந்திரபாபு நாயுடு இருவருமே ஒரு சேர தாங்கள் வழங்கிய ஆதரவினை வாபஸ் வாங்குகின்றோம் என்று பாசகவின் ஆட்சியை கவிழ்ப்பார்கள்..
மீண்டும் ஓர் தேர்தல் வரும். அதில் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களின் சட்ட மன்ற தேர்தலும் சேர்ந்தே அறிவிக்கப்படும்...இப்போ சரியாக புரிகின்றதா?. உங்களுக்கு ஒரே நாடு ஒரே தேர்தல் கணக்கு..
அவ்வாறு நடைபெறக்கூடிய தேர்தல் ஆர்எஸ்எஸ் கட்சி துவங்கப்பட்ட தேதிக்கும் முன்னதாகவே இந்த தேர்தல்கள் நடத்திஊ முடிக்கப்படும்..
ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் அடுத்த 2025- ம் ஆண்டு மிக பிரமாண்டமாக இந்தியாவில் கொண்டாடப்பட உள்ளது. அந்த நிகழ்ச்சி கொண்டாட்டத்திற்கு முன்னதாகவே இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் நடைபெற்று முடிக்கப்பட்டுவிடும்.
அனைத்து தொகுதிகளிலும் தனிப்பெருனபான்மையுடன் ஏற்கனவே பாசக சொன்ன 400 சீட் இலக்கை பெருவார்கள் அப்பொழுது நீங்கள் யாருமே சொல்ல முடியாது ஓட்டு மிசினில் மோசடி செய்துவிட்டார்கள் என்று.
இதுதான் நடக்கும் இதுதான் ஆர்எஸ்எஸ் அஜண்டா..அதன் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் இந்தியா இந்துக்கள் நாடாக முறையாக அறிவிக்கப்படும்..
இதுதான் நடைபெரும்..இந்த நிகழ்வு சற்று கற்பனையாகவோ? மிகைப்படுத்தப்பட்டதாகவோ? தங்களுக்கு தெரியலாம் .ஆனால் அதுதான் உண்மை.
நாட்டு மக்களை மட்டுமல்ல இண்டியா கூட்டணி கட்சிகளையும் தற்பொழுது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் வெற்றியில் இண்டியா கூட்டணி 350 தொகுதிகளுக்கும் மேல் பெற்று தனி பெருன்பான்மையில் ஆட்சியமைக்க வேண்டியதை தடுத்தும். 100 சீட்டுக்களை கூட தாண்ட முடியாத பாசக கூட்டணியை ஊடகங்களை வைத்து ஊதி பெரிதாக்கி மக்களது நியாயமான தீர்ப்பை இப்படி மாற்றி எழுதியுள்ளார்கள்..
உண்மையிலயே இண்டியா கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தோல்வியுற்றுள்ள அனைத்து தொகுதிகளையுமே விவிபேட் எண்ணிக்கையை வெற்றி தோல்வியை சரி பார்த்து உறுதிபடுத்துங்கள்
பிறகு ஆட்சியமைப்பதா?..அல்லது..வலுவான எதிர் கட்சி வரிசையில் அமர்வதா?..இல்லையா?. என்பது குறித்து யோசிக்கலாம்..
தோழர் வைகை சரவணன் சிவகங்கை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக