தமிழகத்திற்கு தேவை அதிமுக
தோல்வியில் வெற்றி
திமுகவை ஒழிக்க அவசர கோலத்தில் இந்திரா தூண்டுதலால் உருவாக்கப்பட்ட கட்சி அதிமுக என்றாலும் அதை நிலை பெற்று நிற்க வைத்தது திமுக, திராவிடர் கழகம்
1980 நாடாளுமன்ற வெற்றிக்குப் பின் கலைஞர் நினைத்திருந்தால் அதிமுக கதையை முடித்திருக்கலாம்.
ஆனால் அவர் திட்டமே வேறு
நேரு மரணத்தால் டெல்லி அரசியல் குழப்பங்கள் இந்திரா அரசியல் எதிர்காலத்தை சிக்கலாக்கிய போது அவருக்கு ஆதரவாக நின்ற கலைஞர்
எமர்ஜன்சிக்குப் பின் எதிர்த்தார்
மொரார்ஜி தேசாய் மிரட்டலால் இந்திரா தஞ்சையில் போட்டியிட MGR ஆதரவு கொடுக்காத போதுதான்
இந்திராவுக்கு MGR பச்சோந்திதனம் உறைத்தது.
மீண்டெழுந்த காங்கிரஸ் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க துடித்த போது களம் திமுக vs அதிமுக என மாறி இருந்தது
திமுகவின் அடிப்படை கோட்பாடுகளை MGR மீற முடியாதபடி கலைஞர் கேட் போட்டிருந்தார்
1980 தேர்தலில் MGR தோற்க காரணமே, திமுகவின் ஜாதிவாரி ஒதுக்கீட்டுக்கு எதிராக MGR கொண்டு வந்த EWS தான்.
அதிகம் பகிரப்படாத இன்னொரு சம்பவம்
மாநில சுயாட்சி பற்றி முதல்வர் MGR பேச உதவிய கலைஞரின் சாதுர்யம்
இன்றும் மாநில சுய ஆட்சியின் பைபிள் என்பது கு.ச. ஆனந்தன் எழுதிய புத்தகம்தான்.
அவரிடம் மாநில சுய ஆட்சி குறித்த தகவல்கள் தர உதவமுடியுமா என MGR கேட்டதாக தகவல் கொடுக்கப்படுகிறது.
காரணம், MGR ரசிகர்கள் மட்டும் கொண்ட அ.தி.மு.க.வில் மாநில உரிமைகள் பற்றி தெரிந்த ஆளே இல்லாமல், கு.ச.ஆனந்தனை கூப்பிட்டனர்
ஆனந்தன் முழுமையாக திராவிட முன்னேற்றக் கழகத்தில் இல்லை. ஆனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அபிமானி.
கலைஞர் அவர்களுடைய தொண்டர் அவர், எம்.ஜி.ஆர். சொன்ன உடனே ஆனந்தன் வந்து, கலைஞர் அவர்களிடத்தில் சொல்கிறார். “இந்த மாதிரி எம்.ஜி.ஆர் என்னை கூப்பிட்டு இருக்கிறார். மாநில உரிமைகள் பற்றி பேசுவதற்காக உரை வேண்டும்” என்று!
அப்போது கலைஞர் சொல்கிறார் “அ.தி.மு.க., எம்ஜிஆர் என்று நாம் எதிர் - எதிர் அரசியல் செய்றோம்ன்னு நினைக்காதே ஆனந்தா. இந்த மாநில உரிமையை முதல்வர் MGR பேசப்போகிறார். அதை ரொம்ப சிறப்பா எழுத முடிஞ்ச ஆள், அதைப் பற்றி முழுமையா தெரிஞ்ச ஆள் நீங்கள்தான், அதனாலே அதைப் பற்றி எழுதிக்கொடு” என் சொல்கிறார்.
எவ்வளவு தரமான அரசியல் கலைஞர் செய்திருக்கிறார்
நமக்கு எம்.ஜி.ஆர் எதிரிதான்
ஆனால் டெல்லி நம் துரோகி
நமது மாநில உரிமைகள் பற்றி உரிய இடத்தில் கேட்க வைக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்திருக்கிறார்..
மாநில உரிமைகள் யார் மூலம் கிடைத்தாலும் மக்களின் நலனுக்காக என்று உயரிய எண்ணம் கலைஞரிடம் இருந்திருக்கிறது.
இது மாதிரியான உயரிய சிந்தனைகளால் உலகம் இருக்கும் வரை கலைஞர் பேசப்படுவார்


